பின்பற்றுபவர்கள்

திங்கள், 27 ஜூலை, 2015

எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் பி.சுசீலா பாடிய பாடல்கள் - Part 4



1965-ல் மெல்லிசை மன்னர்கள் இசையில் பி.சுசீலா பாடல்களின் தொகுப்பு.

      மெல்லிசை மன்னர்களின் இசையால் மக்கள் மெய்மறந்து இருந்த நேரத்தில் தான் அவர்கள் பிரிந்து தனித்தனியாக இசை அமைக்க முடிவு செய்தார்கள். அவர்கள் இணைந்து கடைசியாக இசை அமைத்த படம் 1965-ல் வெளிவந்த  எம்.ஜி.யாரின் “ஆயிரத்தில் ஒருவன்” ஆகும். 
      
     1965-ல் விஸ்வநாதன்-ராமமூர்த்தி இணைந்து ஆயிரத்தில் ஒருவன், வெண்ணிற ஆடை, எங்க வீட்டு பிள்ளை, வாழ்க்கைப்படகு, கை கொடுத்த தெய்வம், குழந்தையும் தெய்வமும், பணம் படைத்தவன், பஞ்சவர்ணக்கிளி, பழனி, பூஜைக்கு வந்த மலர், பூமாலை, சாந்தி, வாழ்க்கை வாழ்வதற்கே, மகனே கேள் போன்ற படங்களில் இசை அமைத்தார்கள். எம்.எஸ்.வி தனியாக “கலங்கரை விளக்கம்”, “நீல வானம்”. “ஆனந்தி”, “நீ”, “ஹலோ மிஸ்டர் ஜமிந்தார்”, “குழந்தையும் தெய்வமும்” போன்ற படங்களுக்கும் இசை அமைத்தார்.
                 வெண்ணிற ஆடை படம் ஜெயலலிதாவின் முதல் படம். அதே படத்தில் நிர்மலாவும் அறிமுகமானார். இன்று வரை அவர்  “வெண்ணிற ஆடை நிர்மலா” என்ற பெயரில் அழைக்கப்படுகிறார். இருவருக்கும் வெண்ணிற ஆடையில் பி.சுசீலா பின்னணி பாடினார்.  ஜெயலலிதாவுக்காக “கண்ணன் என்னும் மன்னன் பேரை சொல்ல சொல்ல”, “அம்மம்மா காற்று வந்து”, “நீராடும் கண்கள் இங்கே”, “ என்ன என்ன வார்த்தைகளோ” பாடல்களையும், நிர்மலாவுக்காக “ஒருவன் காதலன் ஒருத்தி காதலி” பாடலையும் பாடினார் பி.சுசீலா. இருவருமே நீண்ட நாட்களாய் திரை உலகில் ஜொலித்தார்கள். ( ஜெயலலிதா முதலில் நடித்த Chinnada Gombe” என்ற கன்னடப்படத்திலும் அவருக்கு பி.சுசீலா தான் பின்னணி பாடினார். ) இக்கால கட்டத்தில் பியானோ இசை பின்னணியுடன் பாடும் பாடல்கள் அடிக்கடி வந்தன. “என்ன என்ன வார்த்தைகளோ” பாடலும் பியானோ இசை பின்னணியில் ஒலித்த பாடல். மிக அழகான மெல்லிசையை கொடுத்திருப்பார்கள் மெல்லிசை மன்னர்கள். பி.சுசீலாவும் அனுபவித்து பாடி இருப்பார். “நீராடும் கண்கள் எங்கே” பாடல் பற்றி வைரமுத்து அவர்கள் “இந்த குளத்தில் கல்லெறிந்தவர்கள்” புத்தகத்தில் இப்படி எழுதி இருக்கிறார். ““நீராடும் கண்கள் எங்கே” பாடலில் அந்த ஏகார சங்கதியில் அதிர்வுகளை அலையாய் பரப்புவீர்களே” அதில் எந்த ஈரமான மனதும் இறந்து பிழைக்குமா பிழைக்காதா?”... உணர்ந்து எழுதி இருக்கிறார் கவிஞர். இந்த மாதிரி புதிய விஷயங்களை பெரும்பாலும் பி.சுசீலாவின் குரலிலேயே வர வைத்திருப்பார் மெல்லிசை மன்னர். “அம்மம்மா காற்று வந்து” பாடலும் மிக பிரபலம். எடுத்த உடனேயே உச்ச ஸ்தாயியில் துவங்கும் பாடல். பாடலிலும், நடிப்பிலும் இளமை துள்ளும். “கண்ணன் என்னும் மன்னன் பேரை” பாடல் காலம் கடந்தும் ஜெயித்த பாடல். இப்பாடலில் குரல் க்ளாரிட்டி, வார்த்தை சுத்தம் ஆகியவை குறிப்பிட்டு பாராட்டப்பட வேண்டியவை. அதைப்போல்  ஜெயலலிதா அவர்களின் இளமை துள்ளலும் பாடலுக்கு பெரும் பலம் சேர்த்தது. எல்லையில் நம் ராணுவ வீரர்களை கலை திறமையால் மகிழ்விக்க சிவாஜி தலைமயில் ஒரு குழு சென்றது. அங்கே ஆடியோ  சரியாக வேலை செய்யாததால் எம்.எஸ்.வி இசையில் பி.சுசீலா பாட ஜெயலலிதா நடனம் ஆட ஒரு லைவ் பார்க்கும் நிறைவை ராணுவ வீரர்களுக்கு அளித்தனர்.   
         ஜெயலலிதா எம்.ஜி.ஆர் அவர்களுடன் நடித்த முதல் படம் “ஆயிரத்தில் ஒருவன்”. எல்லா பாடல்களுமே சூப்பர் ஹிட் பாடல்கள். பி.சுசீலா இப்படத்தில் “பருவம் எனது பாடல்”, “ஆடாமல் ஆடுகிறேன்”. “உன்னை நான் சந்தித்தேன்”, “நாணமோ இன்னும் நாணமோ” என நான்கு பாடல்களை பாடினார். துள்ளும் இளமையுடன் ஜெயலலிதா அறிமுகமாகும் “பருவம் எனது பாடல்” பாடல் கண்ணுக்கு விருந்தான பாடல். “உன்னை நான் சந்தித்தேன்” பாடல் இன்றைய தலைமுறையும் கவர்ந்த பாடல். எம்.ஜி.ஆர் ரசிகர்கள் மட்டும் அல்ல எல்லோரையும் கவர்ந்த பாடல் அது. எம்.ஜி.ஆர் மறைந்து அவருக்காக நடந்த இரங்கல் நிகழ்ச்சியில் இப்பாடலை பி.சுசீலா பாடும் போது கண்கலங்கினாராம். “ஆடாமல் ஆடுகிறேன்” பாடல் முழு சக்தியையும் திரட்டி பாட வேண்டிய பாடல். சுசீலாம்மாவும், ஜெயலலிதாவும் கலக்கியிருப்பார்கள். அன்னை பெற்றாள் பெண்ணென்று அதனால் தானே துயர் இன்று" போன்ற துயரமான வரிகள். இப்படத்தில் இடம் பெற்ற ஒரே டூயட் “நாணமோ இன்னும் நாணமோ” தான். என்ன ஒரு பாடல்!! மிக பிரமாதமான டூயட்டுகளில் இதற்கும் ஒரு இடம் உண்டு. ஆயிரத்தில் ஒருவன் படம் தெலுங்கில் "Kathanayakudu Katha" என்ற பெயரில் மொழி மாற்றம் செய்யப்பட்டது. 
         “எங்க வீட்டு பிள்ளை” படத்தின் பாடல்கள் எல்லாமே ஹிட். டி.எம்.எஸ், பி.சுசீலா இணைந்து பாடிய  “குமரிப்பெண்ணின் உள்ளத்திலே” , “பெண் போனால் இந்த” போன்ற பாடல்கள் மிகவும் பிரபலம் ஆகின. பி.சுசீலாவும் எல்.ஆர்.ஈஸ்வரியும் இணைந்து பாடிய “மலருக்கு தென்றல் பகை ஆனால்” பாடல், மிகவும் அருமையான பாடல்.
          “பணம் படைத்தவன்” படத்தில் “அந்த மாப்பிள்ளை காதலிச்சான்”, “மாணிக்க தொட்டில் இங்கிருக்க”, “தன்னுயிர் பிரிவதை பார்த்தவர் இல்லை” என எல்லாமே அருமையான பாடல்கள்.  இப்படம் தெலுங்கில் "Kaalachakram" என்ற பெயரில் மொழி மாற்றம் செய்யப்பட்டது.



     
     
         
    
                     

     
   
           





         பஞ்சவர்ணக்கிளி படத்தில் பாரதிதாசனின் “தமிழுக்கும் அமுதென்று பேர்” பாடல் இடம் பெற்றது. 1964-ல் பாரதிதாசன் காலமானார். அவர் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இப்பாடல் அமைந்து விட்டது. இப்பாடலின் இசை அமைப்பையும், பி.சுசீலாவின் தமிழ் உச்சரிப்பையும் அவர் கேட்டிருந்தால் சந்தோஷத்தில் பூரித்திருப்பார். இப்பாடல் தமிழுக்கும், தமிழர்களுக்கும் பெருமை சேர்க்கும் பாடல். “கண்ணன் வருவான் கதை சொல்லுவான்” பாடலும் மிகவும் பிரபலம். சந்தோஷமாகவும், சோகமாகவும் ஒலிக்கும் இப்பாடல் கே.ஆர்.விஜயாவுக்கு நல்ல பெயர் பெற்று தந்தது. “அழகன் முருகனிடம் ஆசை வைத்தேன்” பாடல் இன்னொரு பிரமாதமான பாடல். பி.சுசீலாவுக்கு மிகவும் பேர் பெற்று தந்த பாடல்களில் இதுவும் ஓன்று.
               வாழ்க்கைப்படகு படத்தில் “உன்னைத்தான் நான் அறிவேன்” (விரிவான விளக்கம்) பாடல் பிராமாதமான பாடல். இப்பாடல் சோகமாகவும் ஒலித்தது. “ஆயிரம் பெண்மை மலரட்டுமே” பாடல் கஸல் இசை வடிவத்தில் அமைக்கப்பட்டது. ஏற்கனவே அக்பர் படத்தில் இவ்வகை பாடல்களை பி.சுசீலா பாடி இருக்கிறார். “தங்க மகள் வயிற்றில்“ என கருவில் இருக்கும் குழந்தைக்காக கூட கண்ணதாசன் ஒரு பாடலை எழுதி, மெல்லிசை மன்னர்கள் இசை அமைப்பில்  பி.சுசீலா பாடினார். “என்றும் சுமங்கலி  நீயம்மா” என்ற பாடல் குறிப்பிட தக்க பாடல்.
            வாழ்க்கை வாழ்வதற்கே படத்தில் “ஆத்தோரம் மணலெடுத்து” பாடல் குறிப்பிடத்தக்க பாடல். “நான்பாடிய பாடல் மன்னவன் கேட்டான்” பாடல் இன்னொரு சிறப்பான் பாடல். “அவன் போருக்குபோனான்”, “நெஞ்சத்தில் இருப்பது என்ன என்ன”, “ஆடக்காண்பது காளையர் உள்ளம்”, “அழகு ரசிப்பதற்கே” என எல்லா பாடல்களுமே குறிப்பிட படத்தக்க பாடல்கள்.
            சாந்தி படத்தில் “செந்தூர் முருகன் கோவிலிலே” ஒரு அருமையான முருகன் பக்திப்பாடல். பி.பி.எஸ் உடன் இணைந்தும் “செந்தூர் முருகன்” பாடலை பாடி இருப்பார் பி.சுசீலா. மறக்க முடியாத பாடல்.“நெஞ்சத்திலே நீநேற்று வந்தாய்” பாடல் மயிலறகால் வருடுவது போல் சுகமான அப்பாடல். “ஊரெங்கும்மாப்பிள்ளை ஊர்வலம்” இன்னொரு அருமையான பாடல்.
            “கை கொடுத்த தெய்வம்” படத்தில் “குலுங்க குலுங்க சிரிக்கும் சிரிப்பில்” கொஞ்சம் வித்தியாசமான பாடல். கிண்டலும் கேலியுமாய் கே.ஆர்.விஜயா பாடும் “ஆஹா மங்கள மேளம் பொங்கி முழங்க” பாடலும் கேட்க இனிமையானது.
              மெல்லிசை மன்னர்கள் கூட்டணியில் “கட்டை விரல் வெல்லக்கட்டி” (பூமாலை), “உன்னைப்பார்த்துபழித்த கண்கள்” (மகனே கேள்), "உள்ளத்துக்குள்ளே ஒளிந்திருப்பது" & "வட்ட வட்ட பாறையிலே" (பழனி). "மையேந்தும் விழியாட" & "உன்னை ஊர் கொண்டு அழைக்க" (பூஜைக்கு வந்த மலர்) போன்ற பாடல்களும் இவ்வருடத்தில் பிரபலமான பாடல்கள்.



     
     
         
    
                     

     
   
           





 இனி எம்.எஸ்.விஸ்வநாதன் தனியாக இசை அமைத்த பாடல்கள் ...
   
           எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்கள் தனியாக இசை அமைத்த முதல் படம், எம்.ஜி.ஆர் நடித்த “கலங்கரை விளக்கம்” ஆகும். இப்படத்தில் தமிழுக்கு பெருமை சேர்க்கும் விதமாக பாரதிதாசனின்  “சங்கே முழங்கு சங்கே முழங்கு” பாடலுக்கு இசை அமைத்திருந்தார் எம்.எஸ்.வி அவர்கள். சீர்காழியும், பி.சுசீலாவும் உணர்வு பூர்வமாக பாடி இருப்பார்கள். இப்போதும் தமிழர் ஒற்றுமையை காண்பிக்க வேண்டிய நேரங்களில் பல மேடைகளில் இப்பாடல் ஒலிக்கிறது. டி.எம்.எஸ், பி.சுசீலா இணைந்து பாடிய “பொன்னெழில்பூத்தது புது வானில்” இன்னொரு அருமையான பாடல். “என்னை மறந்ததேன் தென்றலே” ரொம்ப சிரமமான பாடல். வலியும், பிரிவும், சோகமும் ஒன்றாய் குரலில் தெரியும் வண்ணம் அருமையாய் பாடி இருப்பார்கள்.
              குழந்தையும் தெய்வமும் படத்தில் ஜமுனா, கீதாஞ்சலி, குட்டி பத்மினி என மூவருக்கும் பி.சுசீலா பின்னணி பாடினார்.  “குழந்தையும் தெய்வமும்குணத்தால் ஒன்று” பாடல் மிகவும் பிரபலம் ஆனது. “பழமுதிர் சோலையிலே” பாடல் அழகான செமி-கிளாசிகல் நடனப்பாடல். இன்னுமொரு முருகன் பாடலும் கூட. அழகழகான சங்கதிகள் பாடல் முழுவதும் இறைந்து கிடக்கும். “அன்புள்ள மான் விழியே” கடிதம் எழுதுவது போல அமைந்த இனிமையான பாடல். நல்ல கம்போசிஷன். இதே பாடல் “அன்புள்ள மன்னவனே” என சோகமாகவும் ஒலிக்கும். “நான் நன்றி சொல்வேன்” இன்னொரு inஇமையான பாடல் .
            சிவாஜி நடிப்பில் வெளிவந்த “நீல வானம்” திரைப்படத்தில் “சொல்லடா வாய் திறந்து அம்மாவென்று” பாடல் இனிமையான தாலாட்டுப்பாடல். “ஓஹோஹோ ஓடும் எண்ணங்களே” பாடலை  பி.சுசீலாவின் குரலுக்காவே கேட்டுக்கொண்டே இருக்கலாம். 
          சாவித்ரி நடிப்பில் வெளிவந்த “ஹலோ மிஸ்டர் ஜமிந்தார்” படத்தில் பெண்மையின் பெருமை உரைக்கும் “இளமைகொலுவிருக்கும்” பாடல் பிரமாதமாக இருக்கும். “ஹலோ மிஸ்டர் ஜமிந்தார் ஹவ் டூ யூ டூ” ரொம்ப ஜாலியான பாடல்.
           ஒரு பாடலை மென்மையாக கையாளும் விதத்தை ஆனந்தி படத்தில் இடம் பெற்ற “கண்ணிலே அன்பிருந்தால்” பாடலை கேட்டு கற்றுக்கொள்ளலாம், அவ்வளவு இனிமையாக இருக்கும் அந்த பாடல். ஜெயலலிதா நடிப்பில் வெளிவந்த “நீ” படத்தில் ஒலிக்கும்  “வெள்ளிக்கிழமை விடியும் வேளை” பாடலும் மங்களகரமான பாடல். 


     
     
         
    
                     

     
   
           










  1965 –ஆம் வருட பாடல்களை பார்த்தால் பெருபாலான பாடல்கள் ஹிட் அல்லது சூப்பர் ஹிட் பாடல்கள் தான்.

YearLangMovieSongs
1965Tamilaanandhi[1]sorgathil irunthu naragam
1965Tamilaanandhiunnai adaindha manam 
1965TamilaanandhikannilE anbirunthaal
1965Tamilaayirathil oruvanAdamal Adugiren
1965Tamilaayirathil oruvanNaanamo Innum Naanamo
1965Tamilaayirathil oruvanparuvam enathu paadal
1965Tamilaayirathil oruvanunnai naan santhithen
1965Tamilenga veetu pillaikumari pennin ullathile
1965Tamilenga veetu pillaimalarukku thendral pagai
1965Tamilenga veetu pillaipenn ponal intha penn ponal
1965Tamilhello mr.zameendar[2]hello mr.zameendar
1965Tamilhello mr.zameendarilamai koluvirukkum
1965Tamilhello mr.zameendarthottathu pooavi thottavar
1965Tamilkaikodutha deivamaahaa mangala melam pongi
1965Tamilkalankarai vilakkam[3]ennai maranthathen thendrale
1965Tamilkalankarai vilakkamponnezhil poothathu
1965Tamilkalankarai vilakkamsange muzhangu
1965Telugukatha nayakudu katha Adaleka
1965Telugukatha nayakudu katha Paruvamo oka paata
1965Telugukatha nayakudu katha o raja naa raja
1965Telugukatha nayakudu katha Raanivo nerajaanavo
1965Tamilkuzhandhaiyum dheivamum[4]pazhamudhir chOlayilE
1965Tamilkuzhandhaiyum dheivamumanbuLLa maanvizhiyE
1965Tamilkuzhandhaiyum dheivamumanbuLLa mannavanE (Pathos)
1965Tamilkuzhandhaiyum dheivamumkuzhanthayum deivamum 
1965Tamilkuzhandhaiyum dheivamumnaan nantri solvEn enthan
1965Tamilmagane kelunnaip paarthu pazhitha
1965Tamilmagane kelkaaNaadha inbam
1965Tamilnee[5]santhosham vanthaal 
1965Tamilneevellikizhamai vidiyum vElai 
1965Tamilneela vanam[6]mangala mangayum maapillayum
1965Tamilneela vanamOhoho Odum ennangaleOdOdi
1965Tamilneela vanamsolladaa vaai thirandhu amma 
1965Tamilpanam padaiththavanandha maappillai kaadhalichaan
1965Tamilpanam padaiththavanmaanikka thottil angirukka
1965Tamilpanam padaiththavanthannuyir pirivadhai paarthavar
1965Tamilpanjavarnakilikannan varuvaan kadhai (sad)
1965Tamilpanjavarnakilikannan varuvan kadhai 
1965Tamilpanjavarnakilipoo manakkum kanniyarkkum
1965Tamilpanjavarnakilisathiyam sivam sundaram
1965Tamilpanjavarnakilithamizhukkum amuthendru pEr
1965Tamilpazhanivatta vatta paaRaiyilE
1965TamilpazhaniuLLathukkuLLE oLindhu
1965Tamilpoojaikku vantha malaraararO.. kattai viral vellakkatti
1965Tamilpoojaikku vantha malarmaiyendum vizhiyaada
1965Tamilpoojaikku vantha malarunnai oor kondu azhaikka 
1965Tamilpoomaalaikattai viral vellakkatti kannam
1965TamilshanthiChenthoor murugan -duet
1965TamilshanthiChenthoor murugan koyilile
1965TamilshanthiNenjathile nE netru vanthai
1965Tamilshanthioorengum maapillai
1965TeluguSingapoor CIDKanne pedavi mudduloliki kala
1965TeluguSingapoor CIDPaatha gnaapakamediyo 
1965TeluguSingapoor CIDPaadananduvemi Ormi choopavemi
1965Tamilvaazhkai padaguazhagai rasippatharkku
1965Tamilvaazhkai padaguentrum sumangali 
1965Tamilvaazhkai padaguom endru solluvom
1965Tamilvaazhkai padagupoo choodi pottum
1965Tamilvaazhkai padaguunnaithaan naan arivEn
1965Tamilvaazhkai padaguunnaithaan naan arivEn-sad
1965Tamilvaazhkai padaguaayiram penmai 
1965Tamilvaazhkai padagukaadhal manappenn
1965Tamilvaazhkai padaguthanga magal vayittil
1965Tamilvaazhkai vaazhvatharkeaathoram manaleduthu
1965Tamilvaazhkai vaazhvatharkeAthoram manaleduthu (sad)
1965Tamilvaazhkai vaazhvatharkeavan pOrukku pOnAn
1965Tamilvaazhkai vaazhvatharkeazhagu rasippatharke
1965Tamilvaazhkai vaazhvatharkenenjathil iruppadhu enna 
1965Tamilvaazhkai vaazhvatharkeaada kaanbadhu kanniyar
1965Tamilvaazhkai vaazhvatharkenaan paadiya paadal 
1965Tamilvennira adaiAmmamma kAtru vanthu 
1965Tamilvennira adaienna enna vaarthaigalo
1965Tamilvennira adaikannan ennum mannan pErai
1965Tamilvennira adaineeraadum kangal inge 
1965Tamilvennira adaioruvan kaadhalan


( தொடரும் .... )

(Part-1) (Part-2) (Part-3) (Part 5)



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக