பின்பற்றுபவர்கள்

செவ்வாய், 4 ஆகஸ்ட், 2015

எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் பி.சுசீலா பாடிய பாடல்கள் - Part 6




  1968, 1969   ஆகிய வருடங்களில் எம்.எஸ்.வி இசையில் பி.சுசீலா பாடிய பாடல்களின் தொகுப்பு..
                       எந்த ரெடிமேட் வசதியும் இல்லாத காலத்திலேயே வருடத்திற்கு 20 படங்களுக்கு மேல் அதுவும் படத்துக்கு பத்து அல்லது பனிரெண்டு பாடல்கள் என இசை அமைத்து சாதனை புரிந்தவர் எம்.எஸ்.வி அவர்கள்.... எண்பதுகளில் ஒரு வழக்கம் இருந்தது. கேட்சியாக ஒரு டியுனை பிடித்து விட்டு அதை ரெண்டு மூன்று முறை பாடலாகவும் . குறைந்த பட்சம் 10 முறையாவது பி.ஜி.எம்மிலும் ஒலிக்க விட்டு, படம் விட்டு வெளியே வரும் போது அந்த டியூன் மனதில் தங்கும் படி செய்து விடுவார்கள். மற்றவை எல்லாமே டப்பா பாடல்களாக இருக்கும். ஆனால் எம்.எஸ்.வி அந்த மாதிரி சீப்பான வழி முறைகளை கையாண்டதே இல்லை. ஒவ்வொடு டியுனிலும் ஏதாவது ஒரு புது விஷயம் இருக்கும். அதே போல் மார்க்கெட் இருக்கிறதே என்பதற்காக வதவதவென படங்களை ஒத்துக்கொண்டு ஏனோ தானோ என இசை அமைத்து தயாரிப்பாளர்களை போண்டி ஆக்குவதையும் அவர் செய்ததே இல்லை.
             எம்.எஸ்.வியின் இசையில் இது தான் ஸ்பெஷல் என சொல்லவே முடியாது. சில இசை அமைப்பாளர்களுக்கு  கிராமிய இசை identity என்றால் சிலருக்கு வெஸ்டேர்ன் இசை தான் Identity. ஆனால் எம்.எஸ்.வி எந்த கட்டுக்குள்ளும் அடங்காத காட்டாறு மாதிரி. எந்த வகை இசையாக இருந்தாலும் அவரது ஸ்டாம்ப் இருக்கும். சிலர் கிராமிய இசைக்கு  அவர்களே Authority மாதிரி பேசுவதால் எம்.எஸ்.வி இசை அமைத்த கிராமிய பாடல்களை மட்டும் விவாதத்திற்கு எடுத்துக்கொள்கிறேன்.. “தாழையாம் பூ முடிச்சு” மாதிரி ஒரு கிராமியப்பாடல் இது வரை வந்திருக்கிறதா? “கேட்டுக்கோடி உறுமி மேளம்” மாதிரி கிராமிய இசையையும், வெஸ்டர்ன் இசையையும் வைத்து ஒரு Fusion இது வரை வந்திருக்கிறதா? “”அடி என்னடி ராக்கம்மா” மாதிரி full ஃபோர்ஸுடன் ஒரு குத்துப்பாட்டு வந்திருக்கிறதா? “முத்துக்குளிக்க வாரீகளா” மாதிரி தூத்துக்குடி ஸ்லாங்கில் ஒரு folk வந்திருக்கிறதா?  "நாங்க புதுசா கட்டிக்கிட்ட சோடி தானுங்க” போல ஒரு குறவன் குறத்தி பாடும் பாட்டு வந்திருக்கிறதா? “ஆடலுடன் பாடலைக்கேட்டு ரசிப்பதிலே” போல ஒரு பஞ்சாபி folk-ஐ இப்படி ரசிக்கும்படி யாராவது தந்திருக்கிறார்களா? "தங்க ஜரிக  சேலை" ராஜன் (தெருக்கூத்து) போல ஒரு தெருக்கூத்து பாடலை இவ்வளவு நேர்த்தியாக யாராவது தந்திருக்கிறார்களா? “சாந்து போட்டு தளதளங்க” என சிவகங்கை மண்மணம் வீசும் பாடல் வந்திருக்கிறதா? “ஆறோடும் மண்ணில் எங்கும்நீரோடும்” என உழவன் வாழ்வை சொல்லும் பாடல் போல் வந்திருக்கிறதா?  "அழகான மலையாளம் மலையாள கரையோரம்" என குறி சொல்லும் பாடல் இத்தனை அழகோடு வந்திருக்கிறதா? "ஊமைப் பெண்ணல்லோ" என்று மலையோர பெண்ணுக்கும் அவர் பாடல் கொடுத்திருக்கிறார். கடலுக்கு மீன் பிடிக்க செல்லும் மீனவன் வாழ்வையே  "தரை மேல் பிறக்க வைத்தான்" பாடலில் கொண்டு வந்து விடுவார்.  “கல்யாண வளை ஓசை கொண்டு” போல வயல்காட்டில் கஞ்சி கொண்டு செல்லும் பெண்ணுக்கும் பாடல் கொடுத்திருக்கிறார்.  “ஆத்தக்கடக்க வேணும் அக்கரைக்கு போக வேணும்” என ஒரு ஓடப்பாடல் கொடுத்திருக்கிறார். "இளநி இளநி" போல லோக்கலாக பாடல் கொடுத்து இருக்கிறார். கல்யாண பொண்ணு கண்ணான கண்ணு ( வளையல் காரன்), ஓடுது பார் நல்ல படம் ( பயாஸ்கோப்)  என பலருக்கும் அவர் பாடல் கொடுத்திருக்கிறார்.  தண்ணீர் குடங்களை தலையில் வைத்து அதன் சுமை தெரியாமல்  இருக்க பாடிக்கொண்டே நடக்கும் கிராமத்து பெண்ணின் குரலுடன், பானையை தட்டும் சத்ததையும், நடக்கும் பொழுது கேட்கும்  சருகு சத்தத்தையும் மட்டுமே வைத்து "மானத்திலே மீனிருக்க மதுரையிலே நானிருக்க" என்ற பாடலைப்போல் அத்தனை யதார்த்தமாக ஒரு கிராமியப்பாடல் வந்திருக்கிறதா?  வலியையும் வறுமையையும் மட்டுமே சுமந்து வாழும் பெண்ணின் குரலோடு, ஒன்றிரண்டு தாளக்கருவிகளுடனும் ஒலிக்கும்  "கண்ணான பூமகனே" போன்ற தாலாட்டு வந்திருக்கிறதா? வறண்ட பூமியில் வாழும் பெண்ணின் கையில் ஓரிரு மழைத்துளி விழுந்ததும், திரளும் மேகத்தை பார்த்து  "மழை வருது" என துள்ளிக்கொண்டே ஓடும் பெண்ணின் சந்தோஷம் "மேகம் திரளுதடி" பாடலில் ஒலிக்குமே .. அதைப்போல் இன்னொரு பாடல் வந்திருக்கிறதா? (இக்காட்சியை பின்னாளில் லகான் படத்தில் உபயோகித்து இருந்தார்கள் )  இவற்றை போல் சில பாடல்கள் பின்னால் வந்திருந்தாலும் பெரும்பாலான இசையை அவர் முன்னாலேயே கொடுத்து விட்டார். அரைத்த மாவையே பல முறை அரைத்து போட்டதையே திரும்ப திரும்ப போட்டு சுய விளம்பரத்தில் வாழும் இசை அமைப்பாளர்கள் மத்தியில் இத்தனை வகையான கிராமியப்பாடல்களை தந்து விட்டு எப்போதாவது அவர் தற்பெருமை பேசி  இருக்கிறாரா? நிறைகுடம் ததும்பாது என்பதற்கு அவர் ஒரு பெரிய உதாரணம் !!  அதைப்போல் இன்னொரு குறிப்பிட படத்தக்க விஷயம், பாடலுக்கேற்ற பாடகர்களை தேர்ந்து எடுத்து பாட வைத்தது. 
    இனி விஷயத்துக்கு வருவோம்..... 
                1968-ம் ஆண்டில் இந்த கூட்டணியில் இரு பாடல்களுக்கு மிக முக்கியத்துவம் உண்டு. ஒன்று ஒளிவிளக்கு படத்தில் இடம் பெற்ற “இறைவா உன் மாளிகையில்” பாடல். எம்.ஜி.ஆர் அவர்கள் அமெரிக்காவில் சிகிச்சை பெற்ற போது அவர் நலன் பெற வேண்டி. எல்லா தியேட்டரிலும், டீக்கடைகளிலும் ஒலித்த பாடல் இது. எம்.ஜி.ஆர் அவர்களும் பூரண உடல் நலத்துடன் திரும்பி வந்தார். மேகங்கள் கண்கலங்கும் என பாடும் போது அந்த குரலிலேயே ஒரு ஆற்றாமை, சின்ன விசும்பல் தெரியும். மின்னல் வந்து துடிதுடிக்கும் என பாடும் போது அந்த குரலிலேயே துடி துடிப்பு தெரியும். உன்னுடனே வருகின்றேன், என்னுயிரை தருகின்றேன் என பாடும் போது அந்த குரலிலேயே ஒரு தீர்க்கம் தெரியும்.. இறைவா நீ ஆணையிடு என இறைவனுக்கே ஆணையிடும் அந்த குரலின் வீரியம் பி.சுசீலாவுக்கு மட்டுமே உரித்தானது. முழு மனதுடன், ஒரு உயிருக்காக மன்றாடும் அந்த ஆத்மார்த்தமான துடிப்பு, அடி வயிற்றில் இருந்து எழும் அந்த குரலில் அப்படியே வெளிவரும். அது தான் அன்றைய தமிழக மக்களின் குரல்! Hats Off, Susheelamma ! அந்த உணர்வை அப்படியே தனது இசையால் வெளிக்கொணர்ந்த எம்.எஸ்.வி அவர்களுக்கும் இன்னொரு பெரிய “Hats Off!!”..
                இன்னொரு பாடல் உயர்ந்த மனிதன் படத்தில் இடம் பெற்ற  “பால் போலவே வான் மீதிலே” பாடல். இவ்வருடத்தில் தான் மத்திய அரசு பெண்களுக்கான தேசீய விருதை கொடுக்க ஆரம்பித்தது. அந்த முதல் விருதை இப்பாடலுக்காக பி.சுசீலா பெற்றுக்கொண்டார். இப்பாடலை ஒலிப்பதிவு  செய்யும் போதே எம்.எஸ்.வி அவர்கள் பி.சுசீலாவுக்கு விருது கிடைக்க வாய்ப்பு இருக்கிறது என அனுமானமாக சொல்லி இருக்கிறார். அது பலித்தது. லதா மங்கேஷ்கர் அவர்கள் இந்தியாவின் ஈடு இணையற்ற பாடகி என முழு இந்தியாவும் ஏற்றுக்கொண்ட நிலையில் முதல் தேசீய விருதை பி.சுசீலா பெற்றுக்கொண்டது பலருடைய கவனத்தையும் ஈர்த்திருக்க வேண்டும். அந்நிலையில் ஏ.வி.எம் அவர்களும். கொலம்பியா ரிக்கார்டிங் நிறுவனமும் சேர்ந்து பி.சுசீலாவுக்கு ஒரு விழா எடுத்தார்கள். அதற்காக  லதா மங்கேஷ்கர் அவர்கள் சென்னைக்கு வந்து, விழாவில் கலந்து கொண்டு பி.சுசீலாவை பரிசளித்து வாழ்த்தினார்கள். நாம் தேடிப்போய் வாழ்த்து வாங்குவது ஒரு வகை. அவர்கள் தேடி வந்து வாழ்த்துவது இன்னொரு வகை. நல்ல குணமும், தரமும் இருந்ததால் மட்டுமே பி.சுசீலா விஷயத்தில் இது சாத்தியம் ஆயிற்று.  இவ்விழாவில் பெரும்பாலான இசை அமைப்பாளர்களும், பாடகர் பாடகியர்களும் கலந்து கொண்டு பி.சுசீலாவை வாழ்த்தினார்கள். இப்படம் "Hrudayamunna manishi" என்ற பெயரில் தெலுங்கில் மொழி மாற்றம் செய்யப்பட்டது. 
     இதே வருடம் தமிழ் நாட்டின் மாநில விருதும் பால் போலவே பாடலுக்கும், “பிருந்தாவனத்துக்கு வருகின்றேன்” பாடலுக்கும் சேர்த்து பி.சுசீலாவுக்கு வழங்கப்பட்டது.
     இனி இவ்வருடத்தில் எம்.எஸ்.வி இசையில் பி.சுசீலா பாடிய படங்களின் தொகுப்பை பார்க்கலாம். 1968-ல் “பாமா விஜயம்”, “என் தம்பி”, “எங்க ஊரு ராஜா”, “கலாட்டா கல்யாணம்”, “கல்லும் கனியாகும்”, “கணவன்”, “கண்ணன் என் காதலன்”, “குடியிருந்த கோவில்”, “லக்ஷ்மி கல்யாணம்”, “நீலகிரி எக்ஸ்ப்ரஸ்”, “நிமிர்ந்து நில்”. “ஒளி விளக்கு”, “பால்குடம்”, “புதிய பூமி”, “ராஜா”, “ரகசிய போலிஸ்”, “தாமரை நெஞ்சம்”, “உயர்ந்த மனிதன்”, “உயிரா மானமா” போன்ற எம்.எஸ்.வி இசை அமைத்த படங்களில் பி.சுசீலா பாடினார்.
            குடியிருந்த கோயில் திரைப்படத்தில் “ரோஷனாரா பேகம்” என்ற பெண் கவிஞரை முதன் முதலாக திரை இசை உலகுக்கு அறிமுகப்படுத்தினார் எம்.எஸ்.வி அவர்கள். டி.எம்.எஸ், பி.சுசீலா இணைந்து பாடிய “குங்கும பொட்டின் மங்கலம்” என்ற அந்தப்பாடலும் மிகவும் பிரபலம் ஆனது. அதே போல் பஞ்சாபி ஸ்டைல் இசையில் “ஆடலுடன் பாடலைக்கேட்டு” பாடலைக்கொடுத்து அதையும் ஹிட் ஆக்கினார் எம்.எஸ்.வி அவர்கள். எம்.ஜி.ஆரும், எல்.விஜயலக்ஷ்மியும் கலக்கி இருப்பார்கள்.  இதைப்போலவே “நீயே தான்எனக்கு மணவாட்டி” பாடலும் பெரிய ஹிட்.
         கண்ணன் என் காதலன் படத்தில் “சிரித்தாள் தங்க பதுமை”, “கண்கள் இரண்டும் விடி விளக்காக” பாடல்களும் பிரபலமான பாடல்கள். அதே போல் கணவன் படத்தில் “மயங்கும் வயது, மடிமேல் விழுந்து”. “நீங்க நினச்சா நடக்காதா” போன்ற டூயட்டுகளும் பிரபலம் ஆகின. ஒளி விளக்கு படத்தில் குறவன் குறத்தி பாடுவது போல் அமைந்த “நாங்க புதுசா கட்டிக்கிட்ட ஜோடி தானுங்க” பாடலும் மிக பிரபலம் ஆனது.
     

           புதிய பூமி படத்தில் டி.எம.எஸ் உடன் இணைந்து “சின்னவளை முகம் சிவந்தவளை”. “விழியே விழியேஉனக்கென்ன வேலை” பாடல்களையும் எல்.ஆர்.ஈஸ்வரியுடன் இணைந்து “நான் தாண்டி காத்தி” என்ற பாடலையும் நெத்தியிலே போட்டு வச்சேன் என்ற தனிப்பாடளியும் பாடினார் பி.சுசீலா.. எல்லா பாடல்களுமே சிறப்பான பாடல்கள்.
              ரகசிய போலிஸ் படத்தில் “கண்ணே கனியே முத்தே மணியே”, “சந்தனம் குங்குமம் கொண்ட தாமரைப்பூ”, “என்னபொருத்தம் நமக்குள் என்ன பொருத்தம்” போன்ற ஜோடிப்பாடல்களையும் “உன்னை எண்ணி என்னைமறந்தேன்” என்ற தனிப்பாடலையும்  பாடினார். ஒரே வருடத்தில் எம்.ஜி.ஆர் நடித்த படங்களிலேயே எத்தனை ஹிட் கொடுத்திருக்கிறார் மெல்லிசை மன்னர்.!!!



     
     
         
    
                     

     
   
           



     
     
         
    
                     

     


         சிவாஜி நடிப்பில் வெளிவந்த என் தம்பி படத்தில் பி.சுசீலாவின் குரலில் ஒலித்த  “தட்டட்டும் கை தழுவட்டும்” பாடல் ஒரு வெஸ்டர்ன் இசைப்பாடல். அழகாக பாடி இருப்பார் பி.சுசீலா அவர்கள். “ஐய்யய்யா மெல்லத்தட்டு” இன்னொரு இனிமையான பாடல்.  பி.சுசீலாவும் டி.எம்.எஸ் இணைந்து பாடிய “அடியே நேற்று பிறந்தவள் நீ” பாடலும் குறிப்பிட படத்தக்கது. அதற்கு நேர்மாறாக முழுக்க முழுக்க கிராமிய பின்னணியில் வந்த  “எங்க ஊர் ராஜா” படத்தில் “ஏழு கடல் சீமை அதை” பாடலும்  “பரமேஸ்வரி ராஜேஸ்வரி நல்வாழ்வு தருவாயடி” பாடலும் கூட பிரபலம் ஆயின.. இதற்கு நேர்மாறாக பக்தி மணம் ததும்பும் பாடல்கள் “லக்ஷ்மி கல்யாணம்” படத்தில் இடம் பெற்றது.  “ராமன் எத்தனை ராமனடி” பாடல் ராம நவமி காலங்களில் மட்டும் அல்ல எப்போதும் தவறாமல் ஒலிக்கும் பாடல்.. ஒரு ராமன் பாடலும், ஒரு  கிருஷ்ணன் பாடலும் ( "பிருந்தாவனத்துக்கு வருகின்றேன்" ) பாடலும் அதே படத்தில் ஹிட் ஆகின..  
       இவ்வருடம் வெளிவந்த இன்னொரு சூப்பர் ஹிட் படம் “கலாட்டா கல்யாணம்”. அதில் எல்லா பாடல்களுமே இளமை ததும்பும் விதத்தில் இசை அமைக்கப்பட்டிருக்கும். “நல்ல இடம் நீ வந்த இடம்”, “எங்கள் கல்யாணம் கலாட்டா கல்யாணம்”, “மெல்ல வரும் காற்று” என எல்லாமே ஹிட் பாடல்கள்.
     சிவாஜி, வாணிஸ்ரீ நடிப்பில் வெளிவந்த “உயர்ந்த மனிதன் படத்தில் “பால் போலவே” பாடலைத்தவிர “அத்தானின்முத்தங்கள்”, “என் கேள்விக்கென்ன பதில்” போன்ற  பிரபலமான பாடல்கள்  இடம் பெற்றன. “வெள்ளிக்கிண்ணம் தான் தங்க கைகளில்” பாடலில் ஆலாபனைகளால் அசத்துவார் பி.சுசீலா அவர்கள்.  ராஜா படத்தில் “நீ வர வேண்டும்என்று எதிர்பார்த்தேன்” மற்றும் “கங்கையிலே ஓடம் இல்லையோ” பாடல்கள் ஹிட்டான பாடல்கள்.
        இவ்வருடம் பாலச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த  “தாமரை நெஞ்சம்”, பாமா விஜயம் போன்ற படங்களிலும் எம்.எஸ்.வி இசையில் பி.சுசீலா பாடினார். தாமரை நெஞ்சம் படத்தில் இடம் பெற்ற “தித்திக்கும் பாலெடுத்து” பாடல் இன்னும் பிரபலமாகி இருக்க வேண்டிய பாடல். ஒவ்வொரு வார்த்தைக்கும் எக்ஸ்ப்ரஷன் கொடுத்து கம்போஸ் செய்திருப்பார் எம்.எஸ்.வி அவர்கள். திருமணத்துக்கு முன்பு பெண் பார்ப்பதில் இருந்து. மணவறை செல்வது வரையிலான நிகழ்வுகளை பாடலில் சொல்வார் கவிஞர். “பெண் பார்க்க மாப்பிள்ளையும் பெற்றோரும் வரும் போது மண்பார்த்து ... அடி எடுத்து... “ என வரிகள் வரும். மண் பார்த்து என பாடும்  போது, மண்ணை பார்த்து நடப்பது போல் அப்படியே குரலை மெதுவாக்கி, மெல்ல நடப்பது போல் மண் .. பா..ர்த்..து. அடி எடு..த்து...” என  அப்படியே அள்ளிக்கொண்டு போகும் பாடல். ஒவ்வொரு வார்த்தைக்கான எக்ஸ்ப்ரஷனும் பாடலில் அவ்வளவு அழகாய் வந்திருக்கும். அதே போல் இன்னொரு குறிப்பிடத்தக்க இடம் “என்னேரேம் எது நடக்கும் எப்போது மணம் முடியும் .. முள்ளோடு ... மலராக....“ அத்தனை அருமையாக கம்போஸ் செய்து பி.சுசீலாவை பாட வைத்திருப்பார். இதே பாடல் வாணிஸ்ரீ முதலிரவு அறையில் நுழையும்  போதும் ஒலிக்கும்.... எக்ஸ்ப்ரஷன் எக்ஸ்ப்ரஷன் என  டி.வி.யில் உளறிக்கொட்டும் ஜட்ஜ்கள் இந்த பாடலையும் கொஞ்சம் கேட்கலாம். இப்பாடல் தவிர “ஆலயம் என்பதுவீடாகும்” பாடலும்  மிக நல்ல பாடல். இப்படத்திலும் பி.சுசீலாவும், எல்.ஆர்.ஈஸ்வரியும் இணைந்து “அடி போடிபைத்தியக்காரி” என்ற சிச்சுவேஷன் பாடலை பாடி இருக்கிறார்கள்.
        பாமா விஜயம் படத்தில் “வரவு எட்டணா செலவு பத்தணா” பாடல் மிகவும் பிரபலம் ஆனது. அன்றைய நடுத்தர குடும்பங்களின் வாழ்க்கை முறையை இப்பாடலை வைத்தே தெரிந்து கொள்ளலாம். “நினைத்தால்சிரிப்பு வரும்” பாடல் பி.சுசீலாவின் versatile Singing-க்கு இன்னொரு உதாரணம். ரொம்பவும் அழகான பாடல். திரை உலகில் எப்போதாவது தான் மூன்று அல்லது நான்கு பாடகிகள் இணைந்து பாடும் பாடல்கள் வருவதுண்டு. இப்படத்தில் அப்படி ஒரு அருமையான பாடலாக அமைந்தது தான் பி.சுசீலா. எல்.ஆர்.ஈஸ்வரி மற்றும் சூலமங்கலம் பாடிய “ஆணி முத்து வாங்கி வந்தேன்” பாடல். “எண்ணி வைத்தேன், ஏழெட்டு முத்துக்கள் காணவில்லை” என ஒருத்தி பாட, இன்னொருத்தி “ஏறிட்டு நான் அதை பார்க்கவில்லை” என பாட்டிலேயே பதில் சொல்வாள். இந்த மாதிரி ஒரே வீட்டில் இருக்கும் நெருங்கிய உறவுகளுக்குள் சின்ன சின்ன சந்தேகம், சண்டைகள் வந்து போவதை அவ்வளவு அழகாக எழுதி இருப்பார் கவிஞர். காட்சியை மீறாத, பிரமாதமான இசை என்றால் மிகை இல்லை. பாமா விஜயம் படம் தெலுங்கிலும் “Bhale Kodalu” என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. இப்பாடலை தெலுங்கில் “Challaniilli chakkani papaluஎன  பி.சுசீலா, எஸ்.ஜானகி, எல்.ஆர்.ஈஸ்வரி மூவரும் இணைந்து பாடினார்கள்.
    பால் குடம் படத்தில் ஒலித்த  “முழு நிலவின் திருமுகத்தில் களங்கமில்லையோ ” பாடல் மிகவும் அருமையான பாடல். இன்னொரு காட்சியில் “முழு நிலவின்” பாடல் சோகமாகவும் ஒலிக்கும். எஸ்.பி.பியும் பி.சுசீலாவும் இணைந்து பாடிய “மல்லிகைபூ வாங்கி வந்தேன்” பாடலை தனது முதல் பாடலாக சில நேர் முகங்களில் குறிப்பிட்டு இருக்கிறார் எஸ்.பி.பி.
    கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் இயக்கத்தில் வெளி வந்த “உயிரா மானமா” படத்தில் “கொடியில் இரண்டு மலருண்டு” பாடல் பிரமாதமாய் இருக்கும். அதே படத்தில் “ஆத்திரத்தில் துடுப்பெடுத்தாய்” என்ற ஒரு சொலோவும் குறிப்பிடப்படத்தக்கது. “குழந்தைக்காக” படத்தில் “தை மாத மேகம் அதுதரையில் ஆடுது” என்ற அழகான தாலாட்டு இடம் பெற்றது.  
       இவை தவிர ஏ.எல்.ராகவன் சொந்தமாக தயாரித்த “கல்லும் கனியாகும்” படத்தில் “நேரம் மாலை நேரம்” பாடலும், “நிமிர்ந்து நில்” படத்தில் “தேடி வரும் தெய்வ சுகம்” மற்றும் “ஒத்தையடி பாதையிலே” பாடல்களும் குறிப்பிட படத்தக்கவை.



     
     
         
    
                     

     
   
           



     
     
         
    
                     

     
   
           





                   1969-ல் எம்.எஸ்.வி இசை அமைப்பில் “சாந்தி நிலையம்”, “கண்ணே பாப்பா”, “நம் நாடு”. “சிவந்த மண்”, “அன்பளிப்பு”, “தெய்வமகன்”, “அன்னையும் பிதாவும்”. கௌரி கல்யாணம், கன்னிப்பெண், “நான்கு சுவர்கள்”, “ஓடும் நதி”, “தங்கைக்காக”, “திருடன்”, “நில் கவனி காதலி” போன்ற தமிழ் படங்களிலும் “satthekalapusattaiah”, “Sipayi chinnaiah”, “adarsha pellillu” போன்ற தெலுங்கு படங்களிலும் பி.சுசீலா பாடினார்.
     “சாந்தி நிலையம்” படத்தில் குழந்தைகளை மையப்படுத்திய சில பாடல்களுக்கு இசை அமைத்தார் எம்.எஸ்.வி . “இறைவன்வருவான்” பாடல் பல மேடைகளிலும் ஆரம்ப பாடலாக ஒலிப்பதை கேட்டிருக்கலாம். "இறைவன் வருவான்" பாடல் இரு முறை படத்தில் ஒலிக்கும். அதை போல் “செல்வங்களே தெய்வங்கள் வாழும் நெஞ்சங்களே”, “கடவுள் ஒரு நாள் உலகை காண” என எல்லா பாடல்களுமே குழந்தைகளை மையப்படுத்திய பாடல்கள். எல்லாமே ஹிட். அதை தவிர எஸ்.பி.பி, பி.சுசீலாவுடன் பாடிய “இயற்கை என்னும் இளைய கன்னி” பாடலும் பட்டி தொட்டி எங்கும் பிரபலம் ஆகியது. சில மேடைகளில் இதையும் தனது முதல் பாடலாக குறிப்பிட்டு இருக்கிறார் எஸ்.பி.பி.
           அதே போல் “கண்ணே பாப்பா” படமும் குழந்தையை மையப்படுத்தி எடுக்கப்பட்ட படம். “கண்ணே பாப்பா என் கனிமுத்து பாப்பா” என்ற பாடல் மிகவும் பிரபலம் ஆனது.  கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாட “சத்திய முத்திரை கட்டளை கேட்டது” என்ற இனிமையான பாடலும் பி.சுசீலாவின் குரலில் இப்படத்தில் இடம் பெற்றது. ஆனால் என்னைக்கவர்ந்த பாடல் என்றால் அது “தென்றலில் ஆடை பின்ன” பாடல் தான். “காலமிது காலமிது”, “தித்திக்கும் பாலெடுத்து” பாடல்கள் போல் இதுவும் ஒரு அர்த்தம் பொதிந்த, நிறைய எக்ஸ்ப்ரஷன் இருக்கிற, அடிக்கடி மூட் மாறிக்கொண்டே இருக்கிற பாடல். ஆனால் அதிகம் கவனிக்கப்படாமல் போன பாடல். ஒரு பெண் தான் ஏமாந்த கதையை பல கட்டங்களாக பிரித்து இப்பாடலிலேயே சொல்லி விடுவது போல் பாடல் அமைந்தது. காதல். ஆசை, தாபம், ஏமாற்றம், பரிதவிப்பு, தடுமாற்றம், ஆற்றாமை என பல உணர்வுகளை உள்ளடக்கிய பாடல். மிக அருமையான கம்போசிஷன். அதை அழகாக தனது குரலில் பிரதிபலிப்பார் பி.சுசீலா. அவார்டுக்கு தகுதியான பாடல். அதிகம் கவனிக்க படாமல் போனது ஏன்  என்று தெரியவில்லை.
       நம் நாடு படத்தில் “ஆடை முழுதும் நனைய நனைய” என குதூகலிக்கும் குரலில் ஒரு பாடல். ஒரு சிலிர்ப்பு, துள்ளல், ஆட்டம், கொண்டாட்டம் என பாடலே ஜொலிக்கும். ஜெயலலிதா அவர்களும் அழகாக ஆடி இருப்பார்கள். குதூகலம் என்ற பெயரில் செயற்கையாக எக்ஸ்ப்ரஷன் என்ற பெயரில் அலட்டாமல், மிக இயற்கையாக  அந்த துள்ளலை பாடலில் கொண்டு வந்திருப்பார் பி.சுசீலா. எம்.ஜி.ஆரை புகழ்ந்து பாடும் பாடலாக அமைந்த “வாங்கய்யா வாத்தியாரய்யா” பாடலும் மிகவும் பிரபலம். பின்னாளில் எம்.ஜி.ஆரின் அரசியல் மேடைகளில் இப்பாடல் அதிகமாக ஒலித்தது.
     ஸ்ரீதரின் இயக்கத்தில் வெளிவந்த “சிவந்த மண்” திரைப்படம் மிகவும் பெரிய பட்ஜெட்டில் மிகுந்த எதிர்பார்ப்போடு வந்த படம். எதிர் பார்த்த வெற்றி அடையவில்லை என கூற கேட்டிருக்கிறேன். ஆனால் பாடல்கள் எல்லாஎம் வெற்றி பாடல்கள். “ஒரு ராஜா ராணியிடம்”, “சொல்லவோ சுகமானகதை சொல்லவோ” , “ஒரு நாளிலே உறவானதே” என பி,சுசீலாவின் குரலில் ஒலித்த எல்லா பாடல்களுமே மக்களை சென்றடைந்தன.
       தங்கைக்காக படத்தில் “தாயின் முகம் இங்குநிழலாடுது” பாடல் சிறந்த பாடல். தெய்வ மகன் படத்தில் பி.சுசீலா பாடிய “கூட்டத்திலேயார் தான் கொடுத்து வைத்தவரோ”, “காதலிக்க கற்றுக்கொள்ளுங்கள்” ஆகிய இரு பாடல்களுமே துள்ளலிசை பாடல்கள். இப்படம் "koteeswarudu" என்ற பெயரில் தெலுங்கில் மொழி மாற்றம் செய்யப்பட்டது. பின்னாளில் இப்படம் நடிகர் கிருஷ்ணா நடிப்பில் ரீமேக் செய்யப்பட்டது.   
      அன்பளிப்பு படத்தில் “கோபாலன் எங்கே உண்டோ”, “வள்ளி மலை மான்குட்டி எங்கே போறே” போல் கிராமியபாடல்களை வழங்கினார் எம்.எஸ்.வி. அன்னையும் பிதாவும் படத்தில் “மலரும் மங்கையும் ஒரு ஜாதி” பாடல் குறிப்பிட படத் தக்கது.


     
     
         
    
                     

     
   
           



     
     
         
    
                     

     
   
           





       இவ்வருடம் “Sipayi Chinnaiah” “satthekalapu sattaiah” போன்ற நேரடி தெலுங்கு படங்களுக்கும் இசை அமைத்தார் எம்.எஸ்.வி அவர்கள். கே.பாலச்சந்தர் டைரக்ஷனில் வெளிவந்த  satthekalapu sattaiah”  படத்தில் “Nannu evaro thakiri”  பாடல் குறிப்பிட தக்க பாடல். “Sipayi Chinniah” படத்தில் “Nava dati poyindiபாடலுக்கு “அம்மாடி பொண்ணுக்கு தங்கமனசு” பாடலின் டியூனை உபயோகித்தார். சோகமான அப்பாடலை கண்டசாலா, பி,சுசீலா இணைந்து பாடினர். தவிர Padava vachindi pilla pilla”, “naa raju navvalu” , “Naa naava kadhili”, “Thajaga undhi” என எல்லாமே குறிப்பிட தக்க பாடல்கள். 

List of Songs :



YearLangMovieSongs
1968Telugubhale kodalluaasthi mooredu
1968Telugubhale kodalluchallani illu
1968Telugubhale kodalluvade vadante vade
1968Tamilbhama vijayamvaravu ettaNaa selavu
1968Tamilbhama vijayamninaithal sirippu varum
1968Tamilbhama vijayamaanimuthu vaangi vanthen
1968Tamilen thambiadiye netrup piRandhavaLe
1968Tamilen thambiayyayyA mellath thattu
1968Tamilen thambiThattattum kai thazhuvattum
1968Tamilenga oor rajaEzhu kadal sEmai
1968Tamilenga oor rajaparamESwari raajEswari
1968Tamilgalatta kalyanamengal kalyanam galatta
1968Tamilgalatta kalyanammannan oruvan 
1968Tamilgalatta kalyanammella varum kaatru solli 
1968Tamilgalatta kalyanamnalla idam nE vantha idam
1968Tamilkallum kaniyagumnEram maalai nEram
1968Tamilkanavanmayangum vayadhu madimEl
1968Tamilkanavanneenga nenacha nadakkatha
1968Tamilkannan en kadhalanchirithal thanga padhumai
1968Tamilkannan en kadhalankangalirandum vidivilakaga
1968Tamilkudiyiruntha koilKunguma pottin mangalam
1968Tamilkudiyiruntha koilNeeye than enakku manavaati
1968Tamilkudiyiruntha koilaadaludan paadali kettu
1968TamilkuzhanthaikkagaAnbinaal endrum
1968Tamilkuzhanthaikkagathai madha megam adhu[1]
1968TamilkuzhanthaikkagaThottu paarungal pattu poovai
1968Tamillakshmi kalyaanambrindavanathukku varugintren
1968Tamillakshmi kalyaanamraman ethanai ramanadi
1968Tamilnimirndhu nilothayadi paathayile atha mava
1968Tamilnimirndhu nilthEdi varum dheiva - ver 2
1968Tamilnimirndhu nilthEdi varum dheiva sugam
1968Tamiloli vilakkunaanga pudhusaa kattikkitta
1968Tamiloli vilakkuIraiva un maaligayil
1968Tamilpaal kudamMuzhu nilavin thiru mugathil
1968Tamilpaal kudamMalligai Poo vaangi vanthen
1968Tamilpaal kudammuzhu nilavin-sad
1968Tamilpudhiya bhoomichinnavaLai mugam 
1968Tamilpudhiya bhoomiNaan thaandi kaathi 
1968Tamilpudhiya bhoomiNethiyile pottu vechen
1968Tamilpudhiya bhoomivizhiye vizhiye Unakkenna 
1968TamilraajaaGangayile Odam illayo
1968Tamilraajaanee varavENdum ena naan
1968Tamilragasiya police 115enna porutham namakkul
1968Tamilragasiya police 115kannE kaniyE muthE maNiyE
1968Tamilragasiya police 115Santhanam kungumam konda
1968Tamilragasiya police 115unnai enni ennai maranthEn
1968Tamilthaamarai nenjamadi pOdi paithiyakkAri
1968Tamilthaamarai nenjamAlayam enbadhu Vedagum
1968Tamilthaamarai nenjamkavidhai
1968Tamilthaamarai nenjamthithikkum paal eduthu
1968Tamilthaamarai nenjamvaanai maranthu
1968Tamilthaamarai nenjamthithikkum paal -ver2
1968Tamiluyarntha manidhanathanin muthankal
1968Tamiluyarntha manidhanen kelvikkenna bathil
1968Tamiluyarntha manidhanpaal polave (naalai indha)
1968Tamiluyarntha manidhanvellikinnam thaan
1968Tamiluyira manamaathirathil thuduppeduthai
1968Tamiluyira manamakodiyil iraNdu malaruNdu
1969Teluguadarsha pellillu(D)theeyaga paadana
1969Teluguadarsha pellillu(D)poo balaye sukumariye
1969Teluguadarsha pellillu(D)happy happy
1969Teluguadarsha pellillu(D)edhe madhuramaina
1969Tamilanbalippugopaalan enge undo
1969TamilanbalippukaattukkuLLE kuruvi oNNu
1969Tamilanbalippumaathulam pazhathukku
1969TamilanbalippuvaLLi malai maankutti engE 
1969Tamilannaiyum pithavumiraiva unakkoru kelvi
1969Tamilannaiyum pithavummalarum mangayum oru
1969Tamildeiva magankaadhalikka katru kollungal
1969Tamildeiva maganKootathile yaar than koduthu
1969Tamilkanne papakanne papa  en kanimuthu 
1969Tamilkanne papathendralile aadai pinna
1969Tamilkanne papasathiya muthirai kaatalai ittathu
1969Tamilkanni pennadi yendi asattu penne
1969Tamilkanni pennathaikku otha kannu indha
1969Tamilnaangu suvargalninaithaal naan vaanam sendru
1969Tamilnam naduaadai muzhuthum nanaya
1969Tamilnam naduvaangayya vaathiyaarayya
1969Tamilnil kavani kadhalijillendru kaatru vandhadhO
1969Tamilnil kavani kadhaliraja kutty naan
1969Tamilodum nadhikaalamagal madiyinile 
1969Tamilodum nadhimuruga -kundrathil kOvil 
1969Tamilodum nadhivaa andha ulagathin oru 
1969Teluguprema manasulu (D)ananda bhava veedi
1969Teluguprema manasulu (D)ne bhavinche nava yuivathi
1969TelugusatthekalapusattaiahNanu yevaro choosiri
1969Telugusatthekalapusattaiahpadaharella vayase
1969Tamilshanthi nilayamIraivan varuvan avan entrum
1969Tamilshanthi nilayamIraivan varuvan avan -ver2
1969Tamilshanthi nilayamIyarkai ennum ilaya kanni
1969Tamilshanthi nilayamkadavul oru naal ulagai kaana
1969Tamilshanthi nilayamselvangale deivangal vaazhum
1969Telugusipayi chinnaiahaanavadhadi poyindhi(happy)
1969Telugusipayi chinnaiahaanavadhadi_poyindhi-sad
1969Telugusipayi chinnaiahNaa raaju navvulu
1969Telugusipayi chinnaiahPadava vacchinde pilla
1969Telugusipayi chinnaiahThajaga undhi
1969Tamilsivantha mannOru naalile ennavam
1969Tamilsivantha mannOru Raja Raniyidam
1969Tamilsivantha mannsollavO sughamaana kadhai 
1969Tamilthangaikkagathaayin mugham ingu 
1969Tamilthangaikkagaazhage neeyoru kadhai
1969Tamilthirudanen aasaiennodu  salangai
          
தொடரும் .....

( Part 5 ) .. ( Part 7 )   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக