1970. 1971, 1972 ஆகிய வருடங்கில் எம்.எஸ்.வி இசையில் பி.சுசீலா பாடிய பாடல்களின் தொகுப்பு..
எம்.ஜி.ஆர் நடிப்பில் வெளிவந்த “எங்கள் தங்கம்” படத்தில் இடம் பெற்ற “தங்க பதக்கத்தின் மேலே” பாடல் ஒரு சூப்பர் ஹிட் பாடல். சில வருடங்களுக்கு முன்னால் அது ரீமிக்ஸ் செய்யப்பட்டது நினைவிருக்கிறது. “நான் அளவோடு ரசிப்பவன்” பாடலும் குறிப்பிடத்தக்க பாடல். “தேடி வந்த மாப்பிள்ளை” படத்தில் “மாணிக்க தேரில் மரகத கலசம்”, “இடமோ சுகமானது” மற்றும் “அட ஆறுமுகம் இதுயாருமுகம்” பாடல்கள் ஹிட் பாடல்கள்.
நிலவே நீ சாட்சி படத்தில் “தை மாத பொங்கலுக்கு” என்ற தாலாட்டு பாடல் அருமையாக இருக்கும். அதே போல் “நிலவே நீ சாட்சி” பாடலும் தேனாறு ஒழுகி வருவதை போல் இருக்கும். “நிலவே நீ சாட்சி” பாடல் சோகப்பாடலாகவும் ஒலித்தது.
தெலுங்கில் வெற்றி பெற்ற “Mooga manasulu” படத்தை “பிராப்தம்” என்ற பெயரில் சாவித்திரி தயாரித்தார். இப்படத்தின் தோல்வி அவர் வாழ்க்கையையே மாற்றி விட்டது என்றாலும், பாடல்கள் சிறப்பாக வந்தன. டி.எம்.எஸ், பி.சுசீலா குரல்களில் ஒலித்த “சொந்தம் எப்போதும் தொடர் கதை தான்” பாடல் மிகவும் பிரபலம் ஆனது. அது போல “சந்தனத்தில் நல்ல வாசம் எடுத்து” பாடலும் பிரமாதமாக இருக்கும். “Mooga Manasulu” படத்தில் “Godari Gattundi” என்ற ஒரு சூப்பர் ஹிட் பாடல் இருந்தது. அதை வேறு டியூனில் வேறு பாடகியை வைத்து பாட வைத்தார் எம்.எஸ்.வி அவர்கள். போதிய அளவு ரீச் ஆனதா என்று தெரியவில்லை. “இரு துருவம்” படத்தில் “ தேரு பாக்க வந்திருக்கும் சித்திர பெண்ணே” பாடல் கிராமத்து குத்துப்பாடல். “ராத்திரி நடந்ததை நினைச்சாக்க” பாடல் கொஞ்சம் விரஹபாவம் ததும்பும் பாடல். “தர்மம் எங்கே” படத்தில் “பள்ளி அறைக்குள் வந்த புள்ளி மயிலே” பாடல் ஓரளவு பிரபலமான் பாடல்.
1970-ம்
ஆண்டில் தான் “தமிழ் தாய் வாழ்த்து”க்கு எம்.எஸ்.வி இசை அமைத்தார். டி.எம்.எஸ் மற்றும் பி.சுசீலா குரலில் ஒலிக்கும் இப்பாடல் தான் இன்று வரை பெரும்பாலான அரசு
விழாக்களிலும், பள்ளிகளில் அசெம்ப்ளி நேரத்திலும் ஒலிக்கிறது.
1970-ல் தமிழக அரசுக்கென ஒரு
பாடல் வேண்டும் என தீர்மானம் எடுக்கப்பட்டது. அதற்காக “மனோன்மணீயம் சுந்தரானார்” எழுதிய “நீராறும் கடலுடுத்த நில மடந்தைக்கெழிலொழுகும்” என்ற பாடலை கலைஞர் அவர்கள் தேர்வு செய்தார், அப்பாடலுக்கு அருமையாகவும்,
எல்லோரும் பாடும் விதத்தில் எளிமையாகவும் இசை அமைத்தார் எம்.எஸ்.வி அவர்கள். அன்றிருந்த சூழ்நிலையில் பலரும் பாட மறுத்த இப்பாடலை டி.எம்.எஸ், பி.சுசீலாவை வைத்து பாட வைத்து ஒரு அழியாப்பாடலை கொடுத்தார் எம்.எஸ்.வி, தமிழ் மொழி இருக்கும் வரை இப்பாடலும் இருக்க வேண்டும் என ஆசைப்படுவோம்...
அதே போல் தமிழ் நாட்டில் பள்ளிகளில் ஒலிக்கும் "ஜனகனமன" பாடலும் கூட எம்.எஸ்.வி இசை அமைத்து டி.எம்.எஸ் , பி.சுசீலா பாடியது தான். ஜனகன மன பாடலுக்கு இந்தியா முழுவதும் ஒரே டியூன் தான் என்றாலும் நாம் பள்ளிகளில் கேட்பது எம்.எஸ்.வி இசையில் வந்த பாடல் தான்.
அதே போல் தமிழ் நாட்டில் பள்ளிகளில் ஒலிக்கும் "ஜனகனமன" பாடலும் கூட எம்.எஸ்.வி இசை அமைத்து டி.எம்.எஸ் , பி.சுசீலா பாடியது தான். ஜனகன மன பாடலுக்கு இந்தியா முழுவதும் ஒரே டியூன் தான் என்றாலும் நாம் பள்ளிகளில் கேட்பது எம்.எஸ்.வி இசையில் வந்த பாடல் தான்.
எம்.எஸ்.வி தமிழ் மொழி
இலக்கியங்களில் இருந்து அவ்வப்போது பாடல்களை உபயோகித்தே வந்திருக்கிறார். சில
பாடல்கள் சாகா வரம் பெற்றவை என சொல்லும் அளவுக்கு இசையால் உயிரூட்டி இருக்கிறார்.
“சிந்து நதியின் மிசை நிலவினிலே” பாடலுக்கு இது வரை எத்தனை பேர் இசை அமைத்து
பாடினார்கள் என தெரியாது. ஆனால் தமிழக மக்களுக்கு “சிந்து நதியின் மிசை” பாடல் என்றால்
அது எம்.எஸ்.வி இசை அமைத்து, டி,எம்,எஸ் குரலிலும், சிவாஜி நடிப்பிலும் வெளிவந்த
பாடல் தான். பாடலின் வரிகள் அப்படியே மனதில் நிற்கும் படி தெளிவாக இசை அமைத்து ,
டி.எம்.எஸ்ஸின் குரலில் உயிரோடு உலவ விட்டிருப்பார். பாலச்சந்தரின் பல படங்களில்
பாரதியார் பாடல்கள் உபயோகபடுத்தப் பட்டிருக்கும். வறுமையின் நிறம் சிவப்பு படத்தில்
“நல்லதோர் வீணை செய்தே”, “தீர்த்தக்கரை தனிலே கண்ணம்மா” பாடல்களுக்கும் அருமையான
இசையை கொடுத்திருப்பார்.
பாரதி தாசன் எழுதிய
“தமிழுக்கும் அமுதென்று பேர்”, “சங்கே முழங்கு”, “யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி
போல்” என சில அருமையான பாடல்களுக்கும் இசை அமைத்து இருக்கிறார். இன்று எங்கெல்லாம்
தமிழர்களுக்கு பிரச்சனை வருகிறதோ, எங்கெல்லாம் ஒற்றுமை தேவைப்படுகிறதோ அங்கெல்லாம்
தமிழர் குரலாய் ஒலிக்கும் பாடல் தான் “சங்கே முழங்கு” ! “பொங்கும் தமிழருக்கு
இன்னல் விளைத்தால், சங்காரம் நிஜம் என்று சங்கே முழங்கு”.. என்ற வரிகளின் வீரியத்துக்கு
கொஞ்சமும் குறையாத இசை, வீரம் ததும்பும் குரல்கள் என பாடலுக்கு சாகாவரம் கொடுத்தது
எம்.எஸ்.வி அவர்களின் இசை என்றால் மிகை இல்லை. தமிழின் வீரம் சொல்லும் பாடல் “சங்கே
முழங்கு” என்றால், அதன் அழகை சொல்வது “தமிழுக்கும் அமுதென்று பேர்” பாடல் தான்.
“தமிழ் எங்கள் இளமைக்கு பால்” என பாடி விட்டு பி.சுசீலா பாடும் ஆலாபனை கேட்க கேட்க சுகமானது. ஒவ்வொரு வரிகளையும், தேனில் முக்கிய
பலாச்சுளை போல் இனிமை கலந்து இசையாய் தந்திருப்பார் எம்.எஸ்.வி அவர்கள் என்றால் மிகை இல்லை. தலைமுறைகள் தாண்டி நிற்கும் இப்பாடலுக்கு பி.சுசீலாவின் குரல் தேனாபிஷகேம் செய்யும்.!! 80-களில் “காலம் மாறுது” என்ற
ஒரு படம் வந்தது. அதில் “யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதானது எங்கும்காணோம்” என்ற பாரதி தாசனின் கவிதைக்கு இனிமை சேர்த்து இருப்பார்கள்
எம்.எஸ்.வியும், பி.சுசீலா அவர்களும். அதே போல் வாய்ப்புகள் கிடைக்கும்
பொழுது இலக்கியங்களில் இருந்தும் பாடல்களை
உபயோகித்து இருக்கிறார். எம்.எஸ்.வி இசையமைத்த “அருட் ஜோதி தெய்வம் எனை ஆட்டுகின்றதெய்வம்” என்ற வள்ளலார் பாடலை பாலமுரளி கிருஷ்ணாவின் குரலில் கேட்பது ஒரு சுகமான அனுபவம். ராமு படத்தில் “பாலும் தெளி தேனும்” என ஒரு தேவாரப்பாடலை பி.சுசீலாவின்
குரலில் ஒலிக்க விட்டிருப்பார். இப்படி அங்கங்கே அவர் தமிழ் சேவையையும் செய்தே
வந்திருக்கிறார்.
இனி விஷயத்துக்கு வருவோம்....
1970-ஆம்
வருடம் எம்.எஸ்.வி இசை அமைத்த “எங்க மாமா”. “எங்கள் தங்கம்”, “எங்கிருந்தோ
வந்தாள்”. “காவிய தலைவி” “மாலதி”, “ நிலவே நீ சாட்சி”. “பாதுகாப்பு”, “ராமன்
எத்தனை ராமனடி”, “சொர்க்கம்”, “தேடி வந்த மாப்பிள்ளை”, “வீட்டுக்கு வீடு”, “வெள்ளி
ரதம்”, “எதிர் காலம்” போன்ற படங்களில் பி.சுசீலா பாடினார்.
காவியத்தலைவியில் சில பாடல்கள்
கஸல், முஜ்ரா போல வட இந்திய இசையை சார்ந்து அமைக்கப்பட்டன. “என் வானத்தில் ஆயிரம்வெள்ளி நிலவு” பாடல் முஜ்ரா வகையாக தோன்றுகிறது. முஜ்ரா என்றால், கதக் நடனமும், கஸல்
வகை பாடல்களும் சேர்ந்த கலவை என
சொல்லலாம். . ஹிந்தியில் வெற்றிபெற்ற “Mamatha” திரைப்படத்தின்
தமிழாக்கம் என்பதால் கதையின் ஒரு பகுதி வட
இந்தியாவில் நடப்பது போல் காண்பிக்கப்பட்டது. அதற்கு பொருத்தமான இசையை அளித்தார்
எம்.எஸ்.வி அவர்கள். “என் ஆடையை பார்க்கையில் வேகம் வரலாம், என் ஆட்டத்தை பார்க்கையில் மோஹம் வரலாம்”
என ஆடிக்கொண்டே “என் வாழ்க்கையை கேட்ட பின் கண்ணீர் வரலாம்” என்று முடிக்கும் போது அந்த கதாபாத்திரத்தின் தன்மை பாடலில்
தெரிந்து விடும். கஸல் ஸ்டைலில் “முல்லை மலர் விரித்த மஞ்சம் உண்டு” என்று பாடி
விட்டு ஒவ்வொரு வரியின் முடிவிலும் அதற்கேற்றாற்போல் ஒரு ஆலாபனை செய்யும்
பி.சுசீலாவின் அதீத திறமைக்கு இந்த பாட்டு இன்னொரு உதாரணம். இதே வகையில் அமைந்த “பெண்பார்த்த மாப்பிள்ளைக்கு கண்ணீரும் தெரியவில்லை” பாடலும் அபாரமான பாடல். (விளக்கமான
உரை. Courtesy: MSV Times) “மாலை இட்ட பாவியிடம் மஞ்சளுக்கு மகிமை இல்லை”
என ஒரே வரியில் அவள் நிலையை சொல்லி விடுவார் கவிஞர். ஏன் இப்பாடல்களுக்கு விருது
கிடைக்கவில்லை என்பது பெரிய ஆச்சரியம்..! இதே படத்தில் வரலக்ஷ்மி அவர்களுடன்
இணைந்து பாடிய “கவிதையில் எழுதிய காவிய தலைவி” பாடலும் சிறப்பான் பாடல். அருவி
போல் விழும் சங்கதிகள் இப்பாட்டுக்கு பலம் எனலாம். படத்தில் இடம் பெற்ற “கையோடு கைசேர்க்கும் காலங்களே” பாடல் மிகவும் இனிமையான பாடல். ஆனால் படத்தின் ஹைலைட்
என்றால் “ஒரு நாள் இரவு, பகல் போல் நிலவு” பாடல் தான். அம்மா மகள் என இரு
கதாபாத்திரங்களிலும் சௌகார் நடிக்க இரு கதாபாத்திரங்களுக்கும் பி.சுசீலாவே
பாடினார். சிறு வயதில் பிரிந்த தனது தாயை நினைத்து “என்னுயிர் தாயே நீயும் சுகமா,
இருப்பது எங்கே சொல் என்றேன்” என மகள் பாட, ஒளிந்திருந்து மகளை கவனிக்கும் தாய், ஒரு
கட்டத்தில் தன்னை மறந்து “கண்ணா சுகமா, கிருஷ்ணா சுகமா” என தன்னை அறியாமல் பாட ,
சூழ்நிலையை, எதையோ சொல்லி சமாளிப்பார் ஜெமினி. ஆனால் அந்த தருணத்தில் இரு
குரல்களுக்கும் கொடுக்கும் வித்தியாசத்தை கவனத்து கேளுங்கள். மகளுக்கு பாடும்
பொழுது கூட குரலில் ஒரு “Roundness” இருக்கும். கொஞ்சம் இளமை இருக்கும். தாயை
தேடும் பரிதவிப்பு, சோகம் எல்லாம் இருக்கும். ஆனால் அம்மா கதாபாத்திரத்துக்கு பாட
ஆரம்பித்த உடன் குரலில் ஒரு கனிவு, நெகிழ்ச்சி , பொங்கி பீறிடும் பாசம், பிரிவின்
ஆற்றாமை, கொஞ்சம் மெச்சுரிட்டி என குரலில் அப்படி பல வித்தியாசங்களை
காண்பித்திருப்பார். எக்ஸ்ப்ரஷன் என்பது இப்படி பாடலோடு பின்னிப்பிணைந்து
இருந்தால் தான் பாடல் நீண்ட காலம் நிற்கும் என்பதற்கு இப்பாடல் ஒரு உதாரணம்.
எம்.எஸ்.வி அவர்களை இப்பாடலின் இசைக்காக எத்தனை பாராட்டினாலும் தகும்.
“ராமன் எத்தனை ராமனடி”
படத்தில் “ரயில் ஓடும் ஓசையை சந்தமாக வைத்து "சித்திரை மாதம் பவுர்ணமி நேரம்” என
பி.சுசீலாவின் குரலில் ஒரு இனிமையான பாடலை
கொடுத்திருப்பார் எம்.எஸ்.வி அவர்கள். படத்தில் குறிப்பிடத்தக்க இன்னொரு பாடல்,
“நிலவு வந்து பாடுமோ” என்ற சிச்சுவேஷன் பாடல். பார்ட்டியில் குடித்து விட்டு
பாடச்சொல்லும் கணவன் பேச்சை மறுக்க முடியாமல் பாடுவாள் அவள் !. அந்த மூடுக்கு ஏற்ற
பாடல் இல்லை என்பதால் அவள் காலில் மிதிப்பான் அவன். உடனேயே அந்த வலியோடு “ஹோ..
ஹொஹ் ஹொஹ் ஹோ “ என பி.சுசீலாவின் குரலில் அபாரமான ஒரு ஹம்மிங் வரும்.. சுவிட்ச்
போட்டது போல் உடனேயே அந்த டியுனை “வெஸ்டர்ன்” இசையாக மாற்றி விடுவார் எம்.எஸ்.வி
அவர்கள்.. “போகட்டும் மனது போல போகட்டும்” என கவிஞரும் வரிகளை பொருத்தமாக எழுதி
இருப்பார். இது அவரின் கிரியேட்டிவிட்டிக்கு ஒரு அருமையான உதாரணம். இதே போல் ஒரு
சூழ்நிலையில் தான் சொர்க்கம் படத்தில் “ஒரு முத்தாரத்தில் முப்பது முத்து” பாடலும்
ஒலிக்கும். அருமையான பாடல் அது.
“எங்கிருந்தோ
வந்தாள்” படத்தில் இன்னொரு புதிய
முயற்சியாக சிரிப்பையே ஸ்வரம் பிரித்தார் எம்.எஸ்.வி அவர்கள். டி.எம்.எஸ் ஸ்வரம்
பாட அதற்கு ஏற்றாற்போல் சிரிப்பார் பி.சுசீலா. "சிரிப்பில் உண்டாகும் ராகத்திலே" பாடலை எப்படி பாடினார் என்பது ஆச்சரியமாக
விஷயம்!!! . “சிப்பி இருக்குது முத்தும் இருக்குது” பாடலுக்கு முன்னோடி
இப்பாடல் எனலாம். டி.எம்.எஸ் குரலில் பிரபலமாகிய “நான் உன்னை அழைக்கவில்லை” பாடல்
பி.சுசீலாவின் குரலிலும் இன்னொரு சூழ்நிலையில் ஒலித்தது. “எங்க மாமா” படத்தில்
வெஸ்டர்ன் ஸ்டைலில் ஒலித்த “பாவை பாவை தான்” பாடல் பிரமாதமாக இருக்கும். “என்னங்க சொல்லுங்க” என்ற இன்னொரு பாடலும் குறிப்பிடப்படத்தக்கது.
எம்.ஜி.ஆர் நடிப்பில் வெளிவந்த “எங்கள் தங்கம்” படத்தில் இடம் பெற்ற “தங்க பதக்கத்தின் மேலே” பாடல் ஒரு சூப்பர் ஹிட் பாடல். சில வருடங்களுக்கு முன்னால் அது ரீமிக்ஸ் செய்யப்பட்டது நினைவிருக்கிறது. “நான் அளவோடு ரசிப்பவன்” பாடலும் குறிப்பிடத்தக்க பாடல். “தேடி வந்த மாப்பிள்ளை” படத்தில் “மாணிக்க தேரில் மரகத கலசம்”, “இடமோ சுகமானது” மற்றும் “அட ஆறுமுகம் இதுயாருமுகம்” பாடல்கள் ஹிட் பாடல்கள்.
நிலவே நீ சாட்சி படத்தில் “தை மாத பொங்கலுக்கு” என்ற தாலாட்டு பாடல் அருமையாக இருக்கும். அதே போல் “நிலவே நீ சாட்சி” பாடலும் தேனாறு ஒழுகி வருவதை போல் இருக்கும். “நிலவே நீ சாட்சி” பாடல் சோகப்பாடலாகவும் ஒலித்தது.
இவை தவிர மாலதி படத்தில்
“கற்பனையோ கை வந்ததோ”, பாதுகாப்பு படத்தில் இடம் பெற்ற நடனப்பாடலான “வர சொல்லடி அவனை வரச்சொல்லடி”, எதிர்காலம் படத்தில் “மஜா மஜா மஜா மாப்பிள்ளை”, வெள்ளி ரதம்
படத்தில் “கலைமகள் அலைமகள்” பாடலும் குறிப்பிட படத்தக்க பாடல்கள்.
1971-ஆம்
ஆண்டில் ”சவாலே சமாளி” படத்தில் இடம் பெற்ற “சிட்டுக்குருவிக்கென்ன கட்டுப்பாடு””
பாடலுக்காக இன்னொரு தேசீய விருது பி.சுசீலாவை தேடி வந்தது. துள்ளலும்,
சந்தோஷமுமாய் ஜெயலலிதா வயல் வெளியில் ஓடிக்குத்தித்து நடனமிடும் பாடல் காட்சி
பார்க்க இளமையாய் இருக்கும்.. “ரரர ரரரர ரரர ரரரர...” என பி.சுசீலா பாடும் அழகே
தனி.
1971-ல்
எம்.எஸ்.வி இசையில் வெளிவந்த “சவாலே சமாளி”, “மூன்று தெய்வங்கள்”, “தர்மம் எங்கே”,
“இரு துருவம்”, “ப்ராப்தம்”, “தேனும் பாலும்”, “சுமதி என் சுந்தரி”, “ஒரு தாய்
மக்கள்”, “நீரும் நெருப்பும்”, “ரிக்ஷாக்காரன்”, “அவளுக்கென்று ஓர் மனம்”,
“சூதாட்டம்”. “சுடரும் சூறாவளியும்”, “உத்தரவின்றி உள்ளே வா” போன்ற தமிழ்
படங்களிலும் “thallina minchina thalli” என்ற தெலுங்கு படத்திலும் பாடினார்
பி.சுசீலா.
மூன்று தெய்வங்கள் படத்தில் “வசந்தத்தில் ஓர் நாள்” பாடல், ஒரு அழகான செமி-கிளாசிகல் பாடலாகும்.. சின்ன சின்னதாய் நிறைய சங்கதிகள்,
வார்த்தைகளுக்கு ஏற்றாற் போல் எக்ஸ்ப்ரஷன், தெளிவான உச்சரிப்பு என பிரமாதப்படுத்தி
இருப்பார் பி.சுசீலா. அவர் பாடிய மிகவும் கஷ்டமான பாடல்களில் இதுவும் ஒன்று.
எம்.எஸ்.வி அவர்களை தவிர இப்படி ஒரு பாடலை வெறும் யாரும் கம்போஸ் பண்ணவே முடியாது எனலாம்.
இப்படத்தில் “தேன் மழையிலே மாங்கனி நனைந்தது”, “முள்ளில்லா ரோஜா” போன்ற
முத்தான பாடல்கள் இடம் பெற்றன.
“சுமதி என் சுந்தரி”
படத்தில் இடம் பெற்ற “ஓராயிரம் நாடகம் ஆடினாள்” பாடலின் இசை ஒரு வித்தியாசமான
முயற்சி எனலாம். மிகவும் விரைவான, அருவி போல் கொட்டும் சங்கதிகளுடன் பாடல் ஆரம்பமே
பிரமாதமாய் இருக்கும். “பாவனை காட்டினாள்” என பி.சுசீலா பாடும் அழகே தனி. இன்னமும்
பிரபலம் ஆகி இருக்க வேண்டிய பாடல். “ஆலயமாகும் மங்கை மனது” என ஒரு மங்களகரமான
பாடலும் மிகவும் பிரபலம் ஆனது. “ஒரு தரம் ஒரே தரம்”, “கல்யாண சந்தையிலே பெண்பார்க்கும்” பாடல்கள் குறிப்பிட படத்தக்கவை.
அவளுக்கென்று ஓர் மனம் படத்தில் "மங்கையரில் மகாராணி" பாடல் பிரபலமான பாடல். அதே போல் "மலர் எது என் கண்கள் தான் என்று" பாடலும் குறிப்பிட தக்க பாடல்.
அவளுக்கென்று ஓர் மனம் படத்தில் "மங்கையரில் மகாராணி" பாடல் பிரபலமான பாடல். அதே போல் "மலர் எது என் கண்கள் தான் என்று" பாடலும் குறிப்பிட தக்க பாடல்.
“உத்தரவின்றி
உள்ளே வா” பாடல் பாடல்களும் தனித்துவம் வாய்ந்தவை.. “காதல் காதல் என்று பேச கண்ணன் வந்தானோ” பாடல் குரலினிமையாலேயே ஜெயித்த பாடல் எனலாம்.. அந்த அளவுக்கு குரலை
எப்படி பயன் படுத்த வேண்டுமோ அப்படி பயன் படுத்தி இருப்பார் எம்.எஸ்.வி. “நீராட நீ செல்லும் யமுனா நதி” என பாடுவதை கேட்கும்
போதே காதில் தேன் சொட்டும். அதே போல் “மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி”, “உன்னைத் தொடுவது இனியது” பாடலும் மிகவும் இனிமையான பாடல்கள்.
தெலுங்கில் வெற்றி பெற்ற “Mooga manasulu” படத்தை “பிராப்தம்” என்ற பெயரில் சாவித்திரி தயாரித்தார். இப்படத்தின் தோல்வி அவர் வாழ்க்கையையே மாற்றி விட்டது என்றாலும், பாடல்கள் சிறப்பாக வந்தன. டி.எம்.எஸ், பி.சுசீலா குரல்களில் ஒலித்த “சொந்தம் எப்போதும் தொடர் கதை தான்” பாடல் மிகவும் பிரபலம் ஆனது. அது போல “சந்தனத்தில் நல்ல வாசம் எடுத்து” பாடலும் பிரமாதமாக இருக்கும். “Mooga Manasulu” படத்தில் “Godari Gattundi” என்ற ஒரு சூப்பர் ஹிட் பாடல் இருந்தது. அதை வேறு டியூனில் வேறு பாடகியை வைத்து பாட வைத்தார் எம்.எஸ்.வி அவர்கள். போதிய அளவு ரீச் ஆனதா என்று தெரியவில்லை. “இரு துருவம்” படத்தில் “ தேரு பாக்க வந்திருக்கும் சித்திர பெண்ணே” பாடல் கிராமத்து குத்துப்பாடல். “ராத்திரி நடந்ததை நினைச்சாக்க” பாடல் கொஞ்சம் விரஹபாவம் ததும்பும் பாடல். “தர்மம் எங்கே” படத்தில் “பள்ளி அறைக்குள் வந்த புள்ளி மயிலே” பாடல் ஓரளவு பிரபலமான் பாடல்.
மஞ்சுளா கதாநாயகியாக
அறிமுகமாகிய படம் “ரிக்ஷாக்காரன்”. அதில் டி.எம்.எஸ், பி.சுசீலா பாடிய “அழகிய தமிழ் மகள் இவள்” பாடல் மிகவும் பிரபலமான பாடல். “பொன்னழகு பெண்மை சிந்தும் புன்னகை என்ன” பாடல் கேட்க இனிமையாக இருக்கும். இதை தவிர “பம்பை உடுக்கை கட்டி”
என்ற பாடலும் “குறிப்பிட படத்தக்கது. இத்திரைப்படம் “Rikshaw Ramudu” என்ற
பெயரில் தெலுங்கிலும் மொழி மாற்றம் செய்யப்பட்டது. “ஒரு தாய் மக்கள்” படத்தில்
“கண்ணன் எந்தன் காதலன்”, “ஆயிரம் கண்ணுக்கு விருந்தாகும்” போன்ற பாடல்கள் ஹிட்
ஆனது. “நீரும் நெருப்பும்” படத்தில் “மாலைநேர தென்றல் என்ன பாடுதோ”. “கன்னி ஒருத்தி மடியில்” போன்ற பாடல்கள் ஹிட் ஆனவை.
சூதாட்டம் படத்தில் “விளக்கேற்றி வைக்கிறேன்” பாடல் மங்களகரமான பாடல். கேட்க நிறைவாக இருக்கும். “ஆடுகின்ற
கைகளுக்கு” பாடலும் குறிப்பிட தக்க பாடல். தேனும் பாலும் படத்தில் “ஒருவனுக்கு ஒருத்தி என்றே” பாடல் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் பாடல். சுடரும் சூறாவளியும்
படத்தில் “அன்பு வந்தது எனை ஆள வந்தது” பாடலும் அருமையான பாடல்.
1972-ம்
ஆண்டில் எம்.எஸ்.வி இசை அமைத்த “கெளரவம்”.
“ஞான ஒளி”, “இதோ எந்தன் தெய்வம்”, “காசே தான் கடவுளடா”, “கண்ணா நலமா”, “குறத்தி
மகன்”, “மிஸ்டர் சம்பத்”, “நீதி”, “பட்டிக்காடா பட்டணமா?”. “பிள்ளையோ பிள்ளை”, “ராமன்
தேடிய சீதை”, “சங்கே முழங்கு”, “தங்க துரை”, “திக்கு தெரியாத காட்டில்”, “என்ன
முதலாளி சௌக்கியமா” போன்ற தமிழ் படங்களிலும், “மந்த்ரக்கோடி” என்ற மலையாள
படத்திலும் பி.சுசீலா பாடினார்.
“கண்ணா நலமா” படத்தில் மன்னர் சாலமனின் கதையை “பெற்றெடுத்த உள்ளம் என்றும் தெய்வம் தெய்வம்” என பாடலாக்கினார் கண்ணதாசன் அவர்கள். டி.எம்.எஸ்
தனியாக பாடும் ஒரு பாடலும், டி.எம்.எஸ் மற்றும் பி.சுசீலா இணைந்து பாடும் ஒரு
பாடலும் இடம் பெற்றது. இந்த மாதிரி பாடல்களை கையாளுவதில் எம்.எஸ்.வி கை தேர்ந்தவர்
என்பதால் எல்லோரும் ரசிக்கும் வகையில் ஒரு பாடலை உருவாக்கி வெற்றி பெறவும்
வைத்தார். இப்படத்தில் “நான் கேட்டேன் அவன் தந்தான் தாலாட்டும் தாய் ஆனேன்” என்ற பாடலும்
பிரமாதமாக இருக்கும். படத்தில் சந்தோஷமாகவும், சோகமாகவும் அங்கங்கே ஒலிக்கும். குறத்தி மகன் படத்தில் "குறத்தி வாடி என் சுப்பி" என ஒரு குத்துப்பாட்டு கலக்கலாக இருக்கும்.
காசே தான் கடவுளடா
படத்தில் “இன்று வந்த இந்த மயக்கம்” பாடல் மிகவும் பிரபலம். பாடலில் ஏதோ ஒரு
மயக்கம் இருக்கும். “அவள் என்ன நினைத்தாள்” பாடலும் குறிப்பிட படத்தக்கது.
சிவாஜி நடித்த படங்களில் சில பாடல்களை
பார்க்கலாம். “கெளரவம்” படத்தில் “யமுனா நதி இங்கே” பாடல் மக்களை கவர்ந்த பாடல். “ஞான
ஒளி” படத்தில் “மண மேடை மலர்களுடன் தீபம்” பாடல் பிரமாதமாக இருக்கும். “அம்மாக்கண்ணு சும்மா சொல்லு” பாடல் குறிப்பிடத்தக்க பாடல். நீதி படத்தில் “எங்களது பூமி காக்க வந்த சாமி”, “ஓடுது பார் நல்ல படம்”, “என்ன வினோதம் பாரு” போன்ற பாடல்கள்
குறிப்பிட படத்தக்கவை. “பட்டிக்காடா
பட்டணமா” படத்தில் “முத்துச்சோலை பச்சைக்கிளிகள்” பாடல் கவனத்தை ஈர்த்த பாடல்.
எம்.ஜி ஆர் படங்களில் “ராமன்
தேடிய சீதை” படத்தில் இடம் பெற்ற “நல்லது கண்ணே கனவு கனிந்தது” பாடல் ஹிட்டான
பாடல். “பொறுமையிலே பூமகளாய்” குறிப்பிட படத்தக்க பாடல். இதே படத்தில் ஒரு
மூதாட்டிக்கு கூட குரல் குரல் கொடுத்திருப்பார் பி.சுசீலா, “வள்ளிக்கணவன் பேரை வழிப்போக்கன் சொன்னாலும்” என துவங்கும் பாடலை கேட்டு சொல்லுங்கள். சங்கே முழங்கு
படத்தில் “இரண்டு கிளிகள் பேசும் மொழியில்”, “தமிழில் அது ஒரு இனிய கலை” போன்ற
பாடல்கள் ஹிட் ஆகின.
மு,க,முத்து நடிப்பில் வெளிவந்த
“பிள்ளையோ பிள்ளை” படத்தில் “மீனாட்டம் கண்கொண்ட மீனாட்சி” பாடலும் “மூன்று தமிழ் தோன்றியதும் உன்னிடமோ” பாடலும் பிரபலமான பாடல்கள்.
இக்கால கட்டத்தில் எஸ்.பி.பியும்
பி.சுசீலாவும் இணைந்து பாடிய பல பாடல்கள் வெளி வந்தன. “ஆரம்பம் யாரிடம் உன்னிடம் தான்” (Mr..சம்பத்),
கேட்டதெல்லாம் நான் தருவேன் ( திக்கு தெரியாத காட்டில்), "அம்பிகை நேரில் வந்தாள்” (இதோ எந்தன் தெய்வம்) போன்றவை குறிப்பிடத்தக்க பாடல்கள்.
கேரளாவில் பிறந்திருந்தாலும் எம்.எஸ்.வி அவர்கள்
1971-வரை மலையாள படங்களுக்கு இசை அமைக்கவில்லை. அதன் பின்னரும் அவ்வப்போது தான்
இசை அமைத்து வந்தார். இவ்வருடம் “Manthrakodi” என்ற
திரைப்படத்தில் “kilukathe kilungunna”, “kathir mandapamorukki njan” ஆகிய பாடல்களை பாடினார் பி.சுசீலா.
|
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக