பின்பற்றுபவர்கள்

சனி, 8 ஆகஸ்ட், 2015

எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் பி.சுசீலா பாடிய பாடல்கள் - Part 8


1973, 1974, 1975 ஆகிய வருடங்களில் எம்.எஸ்.வி இசையில் பி.சுசீலா பாடிய பாடல்களின் தொகுப்பு........
             இளையராஜாவின் ரசிகர்கள் அல்லது அவருக்கு சாதகமாக பேச விரும்புவர்கள் எப்போதும் சொல்லும் ஒரு விஷயம்.. “இளையராஜா வருவதற்கு முன் மக்கள் ஹிந்திப்பாடல்களை விரும்பினார்கள். இளையராஜா வந்த பின் தான் தமிழ் இசையை மீண்டும் ரசிக்க துவங்கினார்கள்” என்பதே.. இதை அந்த கால கலைஞர்கள் யாரும் மறுத்து எழுதியதாகவும் தெரியவில்லை.  “Yaadon ki bharath”, “Bobby”, “sholey”  போல சில ஹிந்தி படங்களின்  பாடல்கள் தமிழகத்தையும் கலக்கியது உண்மை தான். அதே போல் இளையராஜா வந்த பின் கூட “Ek Tujhe keliye” பாடல்கள் தமிழகத்தை கலக்கியது. ஹிந்தி மட்டும் அல்லாமல் தெலுங்கு படமான "சங்கராபரணம்" படத்தின் பாடல்கள் தெலுங்கிலேயே" வெளிவந்து வெற்றி பெற்றன. "Tezaab",  “Maine pyar kiya”, “qayamat se qayamat tak” போல பின்னரும் ஹிந்தி பட பாடல்கள் தமிழகத்தில் பிரபலம் ஆகின. "Ek do deen", "choli ke peeche kya hai" பாடல்கள் மிகப்பெரிய ஹிட் ஆகின. எப்போதுமே இந்த மாதிரி ஹிந்தி பாடல் பாடல்களையும், ஆங்கில பாடல்களையும் ரசிக்கும் கூட்டம் இருந்து கொண்டே தான் இருந்திருக்கிறது. ஆனால் ஏதோ ஒரு உள்நோக்கத்துடன் இளையராஜா வருவதற்கு முன் மட்டுமே ஹிந்தி பாடல் பாடல்கள் தமிழகத்தில் ஒலித்தது போல் ஒரு மாயையை உருவாக்குகிறார்கள் என நினைக்க தோன்றுகிறது..  இது சரியா என கொஞ்சம் அலசி பார்க்கலாம். .
          எனக்கு தெரிந்த வரை எம்.ஜி ஆர் நடித்த எல்லா படங்களின் பாடல்களுமே எப்பவுமே ஹிட் தான். “நாளை நமதே”  பாடல்கள் அந்த கால கட்டத்தில் தான் தமிழகமெங்கும் ஒலித்தது. அதில் எந்த பாடல் சோடை போனது? “உரிமைக்குரல்” பாடல்கள் ஒலிக்காத கிராமங்களே தமிழகத்தில் இருக்காது. “உலகம் சுற்றும் வாலிபன்” பெற்ற வெற்றியில் பெரும்பங்கு இசைக்கும் உண்டு. “பட்டிக்காட்டு பொன்னையா”, “நேற்று இன்று நாளை”, நினைத்ததை முடிப்பபன்”, “இதயக்கனி”. “மீனவ நண்பன்”, மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் வரை அவர் பாடல்கள் சோடை போனதும் இல்லை, தோற்றதும் இல்லை. உணமையை சொல்ல வேண்டுமானால், அந்த பாடல்கள் தான் அவரை முதல் அமைச்சர் ஆக்கியது என்று சொல்ல வேண்டும்.
        சிவாஜி நடிப்பில் வெளி வந்த “பொன்னூஞ்சல்”, “சிவகாமியின் செல்வன்”. “அன்பே ஆருயிரே”, “வைர நெஞ்சம்” “பாரத விலாஸ்”, “டாக்டர் சிவா”, “எங்கள் தங்க ராஜா”, “வாணி ராணி”. “பாட்டும் பரதமும்” “அவன் தான் மனிதன்” என பல படங்களின் பாடல்கள் ஹிட் ஆனவை தான்.
     பாலச்சந்தரின் “அபூர்வ ராகங்கள்”, “அரங்கேற்றம்”, “சொல்லத்தான் நினைக்கிறேன்”, “வெள்ளி விழா”, “அவள் ஒரு தொடர்கதை” போன்ற படங்களின் பாடல்களை விடவா தமிழகத்தில் ஹிந்தி பாடல்கள் பிரபலம்? தெய்வம் தந்த வீடு, ஏழு ஸ்வரங்களுக்குள், மல்லிகை என் மன்னன் மயங்கும், வெற்றி மீது வெற்றி வந்து என்னைச்சேரும்" போன்ற  பாடல்களை எல்லாம் ஹிட் இல்லை என்று சொல்வார்களோ? யாரும் பதில் சொல்லவில்லை என்றால் சொன்ன பொய்களையே திரும்ப திரும்ப  சொல்வார்களோ? .  "Yaadon ki Bharath" மற்றும்  "நாளை நமதே" படங்களின் தமிழக ( ரிக்கார்ட் ) விற்பனையை ஆதாரத்துடன்  வெளியிட்டால் ஒத்துக்கொள்ளலாம். 
       

              இனி 1973-ல் இருந்து 1975-ஆம் வருடம் வரையில்  எம்.எஸ்.வி இசை அமைத்த படங்களில் பி.சுசீலா பாடிய பாடல்களை பார்ப்போம். “ Yadon ki barath” படம் தான் தமிழில் நாளை நமதே” என ரீமேக் செய்யப்பட்டது. இப்படத்தை தெலுங்கில் ரீமேக் செய்த போது  ஹிந்தி பட டியூன்களை அப்படியே உபயோகித்து இருப்பார்கள். ஆனால் எம்.எஸ்.வி அவர்கள் காப்பி அடிக்க மறுத்து விட்டு எல்லா பாடல்களுக்கும் தனது சொந்த டியூனையே உபயோகித்தார். வழக்கமாக டி.எம்.எஸ் உடன் டூயட் பாடும் பி.சுசீலா அவர்கள் இப்படத்தில் கே.ஜே.ஜேசுதாசுடன் இணைந்து மூன்று பாடல்களை பாடினார். “நீல நயனங்களில்ஒரு நீண்ட கனவு வந்தது” பாடல் வெள்ளி நீரோடை போல் அவ்வளவு தெளிவாகவும், இனிமையாகவும் இருக்கும்.  “என்னை விட்டால் யாரும்இல்லை கண்மணியே”, “காதல் என்பது  காவியம்ஆனால்” போல எல்லாமே பிரமிக்க வைக்கும் பாடல்கள். அத்துடன் ராஜஸ்ரீ குழந்தைகளுடன் பாடும் “அன்பு மலர்களே" பாடலும் ஹிட்டான பாடல்.
      நஷ்டத்தில் இருந்த  ஸ்ரீதருக்கு உதவும் விதத்தில் எம்.ஜி.ஆர் நடித்த படம் தான் உரிமைக்குரல். இப்படத்தில் ஜேசுதாஸ் மற்றும் பி.சுசீலாவின் குரலில் ஒலித்த “விழியே கதை எழுது” பாடல் இன்றளவும் ஹிட்.. ஜேசுதாசும், அவர் மகனும் கூட அடிக்கடி மேடைகளில் பாடும் பாடல் இது. இதைப்போன்ற அபூர்வமான  டூயட்டுகள் எப்போதாவது ஒரு முறை தான் வரும். இதே படத்தில் டி.எம்.எஸ், பி,சுசீலா குரல்களில் ஒலித்த “கல்யாண வளையோசை கொண்டு” பாடலும் பட்டி தொட்டி எங்கும் பிரபலம் ஆனது.
       உலகம் சுற்றும் வாலிபன் படத்தில் இடம் பெற்ற எல்லா பாடல்களுமே சூப்பர் டூப்பர் ஹிட் பாடல்கள். டி.எம்.எஸ், பி.சுசீலா  பாடிய “பச்சைக்கிளி முத்துச்சரம்” பாடல் அன்றைய Trend-setter பாடல்களில் ஒன்று.  டி.எம்.எஸ், பி.சுசீலா இணைந்து பாடிய “லில்லி மலருக்கு கொண்டாட்டம்” பாடல் இன்னொரு இளமை விருந்து. அதே நேரம் ஜேசுதாஸ், பி.சுசீலா இணைந்து பாடிய “தங்க தோணியிலே தவழும் பெண்ணழகே” பாடல் மென்மையான காதல் உணர்வை தட்டி எழுப்பும் இனிமையான பாடல். அழகழகான எக்ஸ்ப்ரஷன்களுடன் “நினைக்கும் போது தனக்குள் சிரிக்கும் மாது” என்ற  பாடல் பி.சுசீலாவின் குரலில் இனிமையாய் ஒலித்தது. Oh my Darling உலகம் சுற்றும் வாலிபனோடு” போன்ற பாடல்களும் இப்படத்தில் பி.சுசீலாவின் குரலில் இடம் பெற்ற சிறப்பான பாடல்கள்.
                 “நேற்று இன்று நாளை” படத்தில் “இன்னொரு வானம் இன்னொரு நிலவு”, “நெருங்கி  நெருங்கி பழகும் போது”, “நீ என்னென்ன சொன்னாலும் கவிதை" போன்ற பாடல்கள்” சிறப்பான பாடல்கள். எல்லலாமே ஹிட் ஆனவை. இதயக்கனி படத்தில் “இன்பமே உந்தன் பேர் பெண்மையோ”, “தொட்ட இடமெல்லாம்” ஆகிய  பாடல்கள் மிகவும் பிரபலம் ஆகிய பாடல்கள். “நினைத்ததை முடிப்பவன்” படத்தில் “ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து”. “நீ தொட்டு பேசினால்” மற்றும் “கொள்ளை இட்டவன் நீ தான்” பாடல்களும் பிரபலமான பாடல்களே. சிரித்து வாழ வேண்டும் படத்தில் “உலகமெனும் நாடக மேடையில்” பாடல் குறிப்பிட படத்தக்கது.




     
     
         
    
                     

     
   
    


     
     
         
    
                     

     


       எம்.எஸ்.வி இசை அமைத்து சிவாஜி நடித்த படங்களில் பி.சுசீலா பாடிய பாடல்களை பார்ப்போம். பொன்னூஞ்சல் படத்தில் இடம் பெற்ற “ஆகாய பந்தலிலே பொன்னூஞ்சல் ஆடுதம்மா” பாடல் மிகவும் பிரபலமான பாடல். அதை தவிர நல்ல காரியம் சீக்கிரம் நடக்கட்டும்”. “முத்துச்சரம் சூடி வரும் வள்ளிக்கண்ணுக்கு” போன்ற பாடல்களும் மனம் கவர்ந்தவை. “நிகரேது எனக்கு நிகரேது” என்ற நடனப்பாடலும் படத்தில் இடம் பெற்றது.  1975-ல் வெளிவந்த “பாட்டும் பரதமும்” படத்தில் “சிவகாமி ஆட வந்தால்” பாடல் ஒரு போட்டிப்பாடல். பாடல் முழுதும் கணீர் என ஒலிக்கும். “மாந்தோரண வீதியில்” இன்னொரு இனிமையான பாடல். “சிவகாமியின் செல்வன்” படத்தில் “என் ராஜாவின் ரோஜாமுகம்” , “இனியவளே என்று பாடி வந்தேன்”, “மேள தாளம் கேட்கும் காலம்” போல எல்லாமே ஹிட்டான பாடல்கள். பாரத விலாஸ் படத்தில் இடம் பெற்ற “இந்திய நாடு என் வீடு” பாடல் இப்போதும் எல்லா சுதந்திர தின, குடியரசு தின நாட்களில் ஒலிக்கிறது. அதே போல் “நாப்பது வயதில் நாய்க்குணம்” என்றொரு அழகான காமெடிப்படலும் ஹிட் ஆனது.  “ராஜபார்ட் ரங்கதுரை” படத்தில் இடம் பெற்ற “மதன மாளிகையில் மந்திர மாலைகளாம்” பாடலும் பிரபலமான பாடல். அன்பைத்தேடி படத்தில் “புத்தி கெட்ட பொண்ணு ஒண்ணு” பாடல் குறிப்பிட படத்தக்கது. தாய் படத்தில் பெருந்தலைவர் காமராஜர் அவர்களை புகழ் பாடும் “நாடாள வந்தாரு” பாடல் குறிப்பிட படத்தக்கது. தவிர “எங்க மாமனுக்கும் மாமிக்கும் கல்யாணம்” என்ற பாடலும் பிரபலம் ஆனது. “தங்க பதக்கம்” படத்தின் வெற்றிக்கு இசையும் ஒரு முக்கிய காரணம். “நல்லதொரு குடும்பம்,பல்கலை கழகம்” என்ற பாடல் மிகவும் பிரபலமான பாடல். “அன்பே ஆருயிரே படத்தில்” “ராஜவீதி பவனி வருவது”, “மாலை சூட வந்த மங்கை” போன்ற பாடல்கள் குறிப்பிட படத்தக்கது. “அவன் தான் மனிதன்” படத்தில் “அன்பு நடமாடும் கலைக்கூடமே” பாடலும் பட்டி தொட்டி எங்கும் பிரபலம் ஆன பாடல். “மன்னவன் வந்தானடி” படத்தில் “காதல்ராஜ்ஜியம் எனது”, டாக்டர் சிவா படத்தில் “காதல் சரித்திரத்தை படிக்க ”, வைர நெஞ்சம் படத்தில் “செந்தமிழ் பாடும் சந்தன காற்று”. “என் மகன்” படத்தில் “பொண்ணுக்கென்னஅழகு” ஆகிய பாடல்களும் இக்கால கட்டத்தில் பிரபலமான பாடல்கள்.




     
     
         
    
                     

     
   
           



     
     
         
    
                     

     

     


     
     
            பாலச்சந்தர் இயக்கிய படங்களில் சொல்லத்தான் நினைக்கிறேன், அவள் ஒரு தொடர் கதை, நான் அவனில்லை, மன்மத லீலை போன்ற படங்களில் பி.சுசீலா பாடினார். 
      மணிப்பயல் படத்தில் “தங்க சிமிழ் போல் இதழோ”, பூக்காரி பத்தில் “முத்துப்பல் சிரிப்பென்னவோ”, சொல்லத்தான் நினைக்கிறேன் படத்தில் “பல்லவி ஒன்று மன்னன் கேட்க”, சொந்தம் படத்தில் “கண்ணு பட போகுது கட்டிக்கடிசேலையை”, அக்கரை பச்சை படத்தில் “பொதிகை மலை சந்தனமே”, “எங்கள் குல தெய்வம்” படத்தில் “எங்கள் குல தெய்வம் நாகம்மா”, கண்மணி ராஜா படத்தில் “ஓடம் கடல் ஓடும்”.. “ காதல் விளயாட கட்டிலிடு கண்ணே”, மாணிக்க தொட்டில் படத்தில் “ராஜாத்தி பெற்றெடுத்தாள் ராஜகுமாரன்”, பணத்துக்காக படத்தில் “மௌனம் இங்கே நிம்மதி”, பெண் ஒன்று கண்டேன் படத்தில் “காத்திருந்தேன் கட்டி அணைக்க”, ரோஷக்காரி படத்தில் “முல்லை மலர்களின் ஆராதனை”, திருடி படத்தில் “நிலவு வந்து வானத்தையே திருடிக்கொண்டது”, திருமாங்கல்யம் படத்தில் “பொன்னான மனம் எங்கு போகின்றது”, தாய் வீட்டு சீதனம் படத்தில் “காலத்தை வெல்லும் இன்ப காதல் வாழ்க”, தீர்க்க சுமங்கலி படத்தில் “ஆயிரம் ஆயிரம் ஆண்டின் முன்னே”, “தீர்க்க சுமங்கலி வாழ்கவே”, வாழ்ந்து கட்டுகிறேன் படத்தில் “காவிரி நகரினில் கடற்கரை ஓரத்தில்” என பல நல்ல பாடல்கள் பி.சுசீலாவின் குரலில் பிரபலம் ஆகின.

                
                    மேற்குறிப்பிட்ட அத்தனை  பாடல்களும் எம்.எஸ்.வி இசையில் பி.சுசீலா பாடி ஹிட் ஆன பாடல்கள். டி.எம்.எஸ் அவர்களும் இதைப்போல்  நிறைய ஹிட்ஸ் கொடுத்தார். எஸ்,பி,பி, ஜேசுதாஸ், வாணி, எல்.ஆர்.ஈஸ்வரி என மற்ற பாடகர்களின் பாடல்களும் நிறைய ஹிட் ஆகின. இதை தவிர கே.வி.எம், சங்கர் கணேஷ், வி,குமார் என மற்ற இசை அமைப்பாளர்களும் தங்கள் பங்குக்கு நிறைய ஹிட்ஸ் கொடுத்தனர். இத்தனை ஹிட்ஸ் இருந்தும் ஹிந்தி பாடல்களை தான் மக்கள் கேட்டனர் என்பதை என்னால் நம்ப முடியவில்லை. என் சிறுவதிலேயே இப்பாடல்களை ரேடியோவிலும், பண்டிகைகள், விழாக்களில் அடிக்கடி கேட்டிருக்கிறேன். 
      இவ்வருடங்களில் எம்.எஸ்.வி அவர்கள் மலையாளத்தில் இசை அமைத்த படங்களில்  பி.சுசீலாவும் பின்னணி பாடினார். “Pani theeradhdha veedu” படத்தில் “Aniyam Aniyam poikaiyil” பாடல் தனியாகவும், மாதுரியுடன் ஒரு டூயட் ஆகவும் ஒலித்தது. நந்திதா போஸ் என்ற நடிகை  இப்பாடல் காட்சியில்  நடித்திருப்பார். 1966-ல் தமிழில் வெளியான “ராமு” படம் “Babumon” என்ற பெயரில் 1974-ல் தயாரிக்கப்பட்டது. அதற்க்கும் எம்.எஸ்.வி தான் இசை. அதில் “வள்ளுவ நாட்டிலே புள்ளுவத்தி”, “பத்ம தீர்த்தக்கரையில்” என இரண்டு இனிய பாடல்களை பாடினார் பி.சுசீலா. “Ajayanum Vijayanum” என்ற படத்தில் “Varsha meghame kaala varsha meghame”  என்ற பாடலை பாடினார் பி.சுசீலா அவர்கள். “Ayiram janmangal” என்ற மலையாள படத்தில் “Achan naaleyor appooppan” என்ற பாடலையும் பாடினார். இதே படம் தமிழிலும் தயாரிக்கப்பட்டது.
        தெலுங்கில் “Memu Manushulame”, Premalu pellillu”, “manamdha leela”,  “lakshmi Nirdoshi” போன்ற படங்களில் எம்.எஸ்.வி இசையில் பாடினார் பி.சுசீலா.


     
     
         
    
                     

     
   
           



     
     
         
    
                     

     



LIST OF SONGS ....
YearLanguageMoiveSongs
1973Tamilbharatha vilasinthiya naadu en vEdu
1973Tamilbharatha vilasnaappadhu vayadhil
1973Tamilengal thaairaamanin naayagi kambanin 
1973Tamilmamiyar vijayamchaan pillayanalum
1973Tamilmanippayalthanga chimizh pol
1973Tamilmanippayalyendiayamma thukku
1973Telugumemu manushulameYemantunnadhi ee gali
1973Telugumemu manushulamesiggole siggu
1973Telugumemu manushulamegummalangadi gummalangadi
1973Telugumemu manushulamenenu evvaro nuvvu
1973Tamilnalla mudivumama veetu kalyanathula
1973Tamilpaasa deepamkanavu kanndEn kanna
1973MalayalamPaNi Theeratha veeduaniyam aniyam poigayil 
1973MalayalamPaNi Theeratha veeduaniyam aniyam poigayil-solo
1973Tamilponnoonjalmuthucharam choodi varum 
1973Tamilponnoonjalnigarethu enakku nigarethu
1973Tamilponnoonjalaagaaya_panthalile_ver2
1973TamilponnoonjalAgaya panthalile ponnoonjal
1973Tamilponnoonjalnalla kaariyam seekiram
1973TamilpookkariMuthuppal chirippennavO
1973Tamilraajaapart rangadhuraimadhana maaLigaiyil
1973Tamilsollaththan ninikkirenpallavi ontru mannan kEtka
1973Tamilsondhamkannu pada pogudhu
1973Tamilsondhamnalla thaan yosikkireenga
1973Tamilsondhammaanam than perithendru 
1973Tamilsondhampaaloota vazhiyilladha
1973Tamilulagam sutrum valibanthangathoniyile thavazhum
1973Tamilulagam sutrum valibanninaikum podhu ha
1973Tamilulagam sutrum valibanO My Darling
1973Tamilulagam sutrum valibanlilly malarukku koNdaattam
1973Tamilulagam sutrum valibanpachchaikkiLi muthuch charam
1974Tamilakkarai pachaiilladha porul mEdhu
1974Tamilakkarai pachaipodigaimalai chandaname
1974Tamilanbai thedibuthi ketta ponnu oNNu
1974Tamilathaya mamiyaanthaya mamiya
1974Tamilaval oru thodar kadhaiAdumadi thottil ini
1974MalayalamBabuMonpadmatheertha karayil
1974MalayalamBabuMonvalluva nattile pulluvathi
1974Tamilen maganponnukkenna azhagu
1974Tamilengal kula deivamengal kula deivam
1974Tamilengal kula deivamengal kula deivam-ver2
1974TelugugowravamYemuna theerana
1975Tamilidhayakanithotta idamellam
1974Tamilkanmani rajakaadhal vilayada kattilidu
1974Tamilkanmani rajaOdam kadal odum
1974Tamilmanikkath thottilraajathi petreduthaal 
1974Tamilmanikkath thottilRaajathi petreduthaal (sad)
1974Telugumanmadha leelakushalamena kurradana
1974Tamilnaan avanillai(old)naan chinnanchiru pillai
1974Tamilnetru intru nalaiinnoru vaanam
1974Tamilnetru intru nalainee ennenna sonnaalum 
1974Tamilnetru intru nalainerungi Nerungi  
1974Tamilpanaththukkagamounam ingE nimmadhi 
1974Tamilpanaththukkagayaarummillai inge
1974Tamilpenn ontru kandenkaathirunthen katti
1974Tamilpenn ontru kandennee edhu ninaippaayO
1974Telugupremalu pelliluchiliki chiliki
1974Telugupremalu pelliluevarunnaru paapaa
1974Telugupremalu pelliluYevaruneevu nee roopam
1974Telugupremalu pellilumanasulu murise
1974Tamilroshakkaariaanandha mayakkam 
1974Tamilroshakkaarimegathukkum
1974Tamilroshakkaarimullai malargalin aaraadhanai
1974Tamilsamayalkaranunakkum vishayam
1974Tamilsirithu vazha vendumUlagamenum naadaga
1974Tamilsivakamiyin selvanen rojavin roja mugham
1974Tamilsivakamiyin selvanen rojavin roja -sad
1974Tamilsivakamiyin selvanIniyavale entru paadi vanthen
1974Tamilsivakamiyin selvanmELa thaaLam kEtkum kaalam
1974Tamilthaaichinnakkutti azhagaip paathu
1974Tamilthaaienga maamanukkum 
1974TamilthaainaadaaLa vandhaaru
1974Tamilthanga pathakkamnallathoru kudumbam
1974Tamilthirudinilavu vanthu vaanathai
1974Tamilthirudipoga mudinthaal
1974TamilthirumangalyamPonnana manam engu
1974TamilthirumangalyamThirumangalyam kollum
1974Tamilthirumangalyamyogam nalla yogam
1974Tamilurimaik kuralkalyaaNa vaLaiyOsai 
1974Tamilurimaik kuralvizhiye kadhai ezhthu
1975Malayalamajayanum vijayanumvarsha meghame kaala 
1975Tamilanaiyaa vilakkumoham adhu muppadhu
1975Tamilanbe aaruyirekamadenuvum somabanamum
1975Tamilanbe aaruyiremaalai sooda vantha 
1975Tamilanbe aaruyireosai varamal
1975Tamilanbe aaruyireRajaveedhi bavani 
1975Tamilanbe aaruyiresaattiya kathavu 
1975Malayalamaval oru thudarkathaaadumadi
1975Tamilavandhan manidhananbu nadamAdum kalai
1975MalayalamDharmakshethre kurukshetre chanchalitha
1975MalayalamDharmakshethre kurukshetre lovely lilly
1975Tamildoctor sivakaadhal sarithirathai 
1975TamilidhayakaniInbame undhan per
1975Telugulakshmi nirdhoshiroju roju
1975Tamilmannavan vanthanadikaadhal rajiyam enathu
1975Tamilnaalai namadheennai vittaal yaarum
1975Tamilnaalai namadhekaadhal Enbadhu 
1975Tamilnaalai namadhenaalai namadhe
1975Tamilnaalai namadheNeela Nayanagalil
1975Tamilninaithadhai mudippavanKollayittavan nE than
1975Tamilninaithadhai mudippavanNee thottu pesinaal 
1975Tamilninaithadhai mudippavanOruvar mEdhu oruvar
1975Tamilpattum bharadhamummaanthorana veedhyil mElangal
1975Tamilpattum bharadhamumsivakaami aadavandhaal 
1975Tamilthaai veetu seathanamkaalathai vellum inba
1975Tamiltherga sumangalidheerga sumangali vaazhgavE
1975Tamiltherga sumangaliAyiram Ayiram aandin
1975Malayalamullasa yathranrithasala thurannu
1975Tamilvaazhnthu katugirenkaaviri nagarinil kadarkarai 
1975Tamilvaazhnthu katugirenKotti kidakkuthu kaniyirandu
1975Tamilvaira nenjamsenthamizh paadumchandana
1976Malayalamaaayiram Janmangal achan naleyorappooppan


தொடரும் :

(Part 7 )..... ( Part 9)


4 கருத்துகள்:

  1. கலை, இந்தக் கருத்தை நான் சொல்லப்படும் இடங்களில் எல்லாம் மறுத்திருக்கிறேன். சமீபத்தில் கூட ஒரு பதிவில்.. https://mathimaran.wordpress.com/2015/07/14/msv-1101/#comment-15504

    இதில் நான் கேட்ட மறுகேள்விகளுக்கு விடையே இல்லை. :)))))))))))))))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

      நீக்கு
    2. நன்றி ராகவன்.!. உங்கள் கருத்தும் என் கருத்தும் ஒன்று தான்.. அதே தான் கொஞ்சாம் ஆதாரத்துடன் எழுதினேன்.

      நீக்கு
  2. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு