பின்பற்றுபவர்கள்

செவ்வாய், 11 ஆகஸ்ட், 2015

எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் பி.சுசீலா பாடிய பாடல்கள் - Part 9

1976  முதல் 1980 வரையிலான பாடல்களின் தொகுப்பு .

       1976-ல் எம்.எஸ்.வி இசையில் “சித்ரா பௌர்ணமி”, “கிரக பிரவேசம்”. “ரோஜாவின் ராஜா”,  “மேயர் மீனாட்சி”, “மூன்று முடிச்சு”, “மன்மத லீலை”, “நீதிக்கு தலை வணங்கு”. “உழைக்கும் கரங்கள்”, “வீடு வரை உறவு”, “பேரும் புகழும்”, “பணக்கார பெண்”, “ஓ மஞ்சு”, “முத்தான முத்தல்லவோ”, “மகராசி வாழ்க”, “லலிதா”, “இதயமலர்”, “வாழ்வு என் பக்கம்”  போன்ற தமிழ் படங்களிலும் “அந்துலேனி கதா, ஹீரோ-76 ஆகிய தெலுங்கு படங்களிலும் “Kurravum sikshayum”. “Panchami”, “Rajayogam”, “themmadi velappan”, Saranam ayyappa”. “yaksha gaanam” போன்ற மலையாள படங்களிலும் பி.சுசீலா பாடினார்.
      “நீதிக்கு தலை வணங்கு” படத்தில் “கனவுகளே ஆயிரம் கனவுகளே”, “பார்க்க பார்க்க சிரிப்பு வருது” பாடல்கள் பிரபலமான பாடல்கள். உழைக்கும் கரங்கள் படத்தில் “ஆடிய பாதங்கள் அம்பலத்தில்”, “நான் மாட கூடலிலே” பாடல்கள் குறிப்பிட படத்தக்கவை. ரோஜாவின் ராஜா படத்தில் “ஜனகனின் மகளை மணமகளாக”, “ அலங்காரம் கலையாத சிலை ஒன்று கண்டேன்”, “ரோஜாவின் ராஜா கள்ளும் இல்லை” போன்ற பாடல்கள் பிரபலம் ஆகின. “ஜனகனின் மகளை” பாடல் சோகமாகவும் ஒலித்தது.  கிரகபிரவேசம் படத்தில் “எங்க வீட்டு ராணிக்கிப்போ இளமை திரும்புது” பாடல் அடிக்கடி வானொலியில் கேட்கும் பாடல். சித்ரா பவுர்ணமி படத்தில் “வந்தாலும் வந்தானடி ராஜா”, “செந்தூர பொட்டின் நளினம்” பாடல்கள் குறிப்பிட படத்தக்கவை. “ஒரு கொடியில் இரு மலர்கள்” படத்தில் இடம் பெற்ற “கண்ணனின் சன்னதியில்” பாடல் அருமையான பாடல். தமிழில் ஸ்ரீதேவி கதாநாயகியாக அறிமுகமான  மூன்று முடிச்சு படத்தில் பி.சுசீலா, எல்.ஆர்.ஈஸ்வரி பாடிய  “நான் ஒரு கதாநாயகி” பாடல்  குறிப்பிட தகுந்த பாடல். ஸ்ரீதேவிக்கு முதல் படத்தில் பின்னணி பாடிய பெருமையும் பி.சுசீலாவுக்கு கிடைத்தது.  மன்மத லீலை படத்தில் “சுகம் தானா சொல்லு கண்ணே” பாடல் பிரபலமான பாடல். “மேயர் மீனாட்சி” படத்தில் “எவளோ ஒரு பெண்ணாம்”, “கண்டேன் கல்யாண பெண் போன்ற மேகம்” ஆகிய பாடல்கள் அடிக்கடி வானொலியில் கேட்கும் பாடல்கள். முத்தான முத்தல்லவோ படத்தில் “பாலாபிஷேகம் செய்யவோ”, “புன்னை மரம் ஓன்று” ஆகிய பாடல்கள் கேட்க இனிமையானவை. லலிதா படத்தில் அதிகம் பிரபலம் ஆகாமல் போல அருமையான பாடல் ஒன்று இடம் பெற்றது. “வசந்தங்கள் வரும் முன்னே மழை வந்ததே, மழைக்கால மேகங்கள் கரைகின்றதே”.. இப்பாடல் எம்.எஸ்.வியின் குரலிலும், பி,சுசீலாவின் குரலிலும் தனித்தனியாக ஒலித்தது.
        “Anthuleni katha” என்ற தெலுங்கு  படத்தில் voogutundi neeinta பாடல் மிகவும் பிரபலம் ஆனது. “அவள் ஒரு தொடர்கதை”யின் தெலுங்கு வடிவம் தான் “Anthiuleni katha” என்ற. திரைப்படம்.   ஆடுமடி தொட்டில் இனி” பாடலை அப்படியே உபயோகப்படுத்தாமல் டியூனையும் மாற்றி இருந்தார் மெல்லிசை மன்னர்.  “வைர நெஞ்சம்” படம் தெலுங்கில் “Hero-76” என்ற பெயரில் மொழிமாற்றம் செய்யப்பட்டது.
    “Kuravum sikshayum”  என்ற மலையாள படத்தில் “Kannanam unni kannilunni” பாடலை நீண்ட நாட்களுக்கு பின், பி.லீலாவும், பி.சுசீலாவும் இணைந்து பாடினர். அருமையான தாலாட்டுப்பாடல். Yaksha gaanam  படத்தில் “then kinnam ponnkinnam” பாடலும் குறிப்பிட படத்தக்கது.



     
     
         
    
                     

     
   
    


     
     
         
 

                   

                 1977-ம் வருடம் எம்.எஸ்.வி இசையில் “ஊருக்கு உழைப்பவன்”, “இன்று போல் என்றும் வாழ்க”, “அண்ணன் ஒரு கோவில்”, “அவன் ஒரு சரித்திரம்”, “இளைய தலைமுறை”, “நாம் பிறந்த மண்”, “தேவியின் திருமணம்”, “எல்லாம் அவளே”, “என்ன தவம் செய்தேன்”. “Gaslight மங்கம்மா”, “ நீ வாழ வேண்டும்”, “பெண்ணை சொல்லி குற்றமில்லை”, “பெருமைக்குரியவள்”, “தனிக்குடித்தனம்” போன்ற தமிழ் படங்களிலும், “Chialkamma Cheppindi”, “Dharmatmudu”, “Morotodu”, “Naa laaga endaro”, “Raagalu Dweshalu” போன்ற தெலுங்கு படங்களிலும் “Parivarthanam”, “Hridayame sakshi”. “Amme anupame”, “Akshayapathram” போன்ற மலையாள படங்களிலும் பி.சுசீலா பாடினார்.
       1977-ல் தான் “Naa Laaga Endaro” தெலுங்கு படத்துக்காக ஆந்திர மாநில விருது பி.சுசீலாவுக்கு கிடைத்தது. ( ஆந்திர மாநிலத்தில் 1976-ம் ஆண்டு முதல் தான் பாடகிகளுக்கு விருது  வழங்க துவங்கினார்கள். முதல் விருது கூட “Daana Veera soora karna” படத்துக்காக பி.சுசீலாவுக்கு தான் கிடைத்தது. இதே வருடம் “Siri Siri Muvva”  படத்துக்காக தேசீய விருதும் கிடைத்தது. ) “Naa Laaga endaro “  படத்தில் “Kalyanini kanulunna”  பாடலுக்கு தான் விருது கிடைத்தது. அதை தவிர Anubhavalaku”,  “are are bullamma” போன்ற பாடல்களும் குறிப்பிட படத்தக்கவை. பாட்டும் பாரதமும் படம் ““Raagalu Dweshalu” என்ற பெயரில் மொழி மாற்றம் செய்யப்பட்டது. “Chilakamma Cheppindi” படத்தில் “Chitti Chitti Cheppallara”  கேட்க இனிமையான பாடல்.
       ஊருக்கு உழைப்பவன் படத்தில் ஜேசுதாஸ், பி.சுசீலா பாடிய “அழகெனும் ஓவியம் இங்கே” மிகவும் இனிமையான பாடல். “இன்று போல் என்றும் வாழ்க” படத்தில் “இதயத்தில் இருந்து இதழ்கள் வரை”, “வெல்கம் ஹீரோ, ஹேப்பி மேரேஜ்” போன்ற பாடல்கள் பிரபலம் ஆனவை.
       அண்ணன் ஒரு கோயில் படத்தில் சுமித்ரா பாடும் “அண்ணன் ஒரு கோயில் என்றால்” பாடல் அண்ணன் தங்கை பாசத்தை சொல்லும் அழகான பாடல். அவன் ஒரு சரித்திரம் படத்தில் “வணக்கம் பலமுறை சொன்னேன்” பாடலை பி.சுசீலாவின் சிறந்த பாடல்களில் ஒன்றாக குறிப்பிடலாம். பாடலில் வார்த்தைகள், உச்சரிப்பு, உணர்வுகள் என ஒரு முழுமை தெரியும், ஆரம்பத்தில் ஒலிக்கும் அந்த ஆலாபனை புதுமையாகவும், இனிமையாகவும் இருக்கும். வெஸ்டர்ன் இசையுடன் ஆரம்பிக்கும் இசை அப்படியே நம் மரபு சார்ந்த இசையாக இவர் குரல் ஒலித்தவுடன் மாறி விடும். அருமையான இசைக்கோர்வை.. டி.எம்.எஸ், பி.சுசீலா பாடிய இன்னொரு பாடலான “என் மனது ஒன்று தான்” பாடலும் மிக இனிமையான பாடல்.  இளைய தலைமுறை படத்தில் “ஒரு நாள் இரவு தனிமையில் இருந்தேன்”, “கேட்டாயே ஒரு கேள்வி” போன்ற பாடல்கள் குறிப்பிடத்தக்க பாடல்கள்.  “நாம் பிறந்த மண்” படத்தில் “அன்னை பகவதிக்கு தன்னை கொடுத்துவிட்டு” அருமையான பக்திப்பாடல். அதே போல் பி.சுசீலாவும், வாணி ஜெயராமும் இணைந்து பாடும் “தாய் பாடும் பாட்டு தானே தாலாட்டு பாட்டு” குறிப்பிடத்தக்க பாடல்.  

    தேவியின் திருமணம் படத்தில் “ஸ்ரீதேவி வரம் கேட்கிறாள்”, “முத்து வந்தது முத்து வந்தது மூன்று உலகை “ ஆகிய பாடல்கள் குறிப்பிடத்தக்க பாடல்கள். என்ன தவம் செய்தேன் படத்தில் “ஏதோ ஒரு நதியில் நான் இறங்குவதைப்போலே” பாடல் இனிமையான பாடல். பெண்ணை சொல்லி குற்றமில்லை படத்தில் “விரல் மீட்டாமல் இருக்கின்ற வீணை” பாடலும் நல்ல பாடல். பெருமைக்குரியவள் படத்தில் “ என் மனது ஒன்று தான்” பாடல் அடிக்கடி ரேடியோவில் ஒலிக்கின்ற பாடல். அதே படத்தில் “நிறைந்து வாழ்க நீடூழி வாழ்க” பாடலும் குறிப்பிட படத்தக்கது.. தனிக்குடித்தனம் படத்தில் “ஒரு அசடாட்டம் என் ஆமபடயான் அழுதா பிடிக்காது” பாடல் அப்படியே அய்யராத்தை அப்படியே நினைவு படுத்தும். “நோக்கும் நேக்கும் என்னடா தெரியும்” என இன்னொரு நகைச்சுவையான பாடலை பி.சுசீலா கலக்கு கலக்கு என்ற கலக்கி இருப்பார். 



     
     
         
    
                     

     

 

         

          1978-ல் எம்.எஸ்.வி இசையில் “மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன்”, “என்னைப்போல் ஒருவன்”, “ஜெனரல் சக்கரவர்த்தி”. “சீர்வரிசை”, “சங்கர் சலீம் சைமன்”. “வருவான் வடிவேலன்”, “ஸ்ரீராம ஜெயம்”. ஆயிரம் ஜென்மங்கள்”, “அக்னி பிரவேசம்”, “அவள் தந்த உறவு”. “குங்குமம் கதை சொல்கிறது”., “ஸ்ரீ காஞ்சி காமாட்சி”, “தங்க ரங்கன்” போன்ற தமிழ் படங்களிலும் “Maro Charithra”, “Simhabaludu”  போன்ற தெலுங்கு படங்களிலும் “Viswaroopm, Sundarimarude Swapnangal”,  “Snehathinte mukhangal”, “Madhurikkunna Rathri” ஆகிய மலையாள படங்களிலும் பி.சுசீலா பாடினார்..
          எம்.ஜி.ஆர் நடித்த கடைசிப்படம் “மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன்” ஆகும். அதில் “வீரமகன் போராட” என்ற பாடலை பாடினார் பி.சுசீலா அவர்கள். என்னைப்போல் ஒருவன் படத்தில் “வேலாலே விழிகள்” பாடல் அருமையான பாடல். ஜெனெரல் சக்ரவர்த்தி படத்தில் “ஒ மை டியர் டாக்டர்” பாடல் குறிப்பிட படத்தக்கது. சீர்வரிசை படத்தில் “கண்ணனை நினைக்காத நாளில்லையே”,பஞ்சாங்கம் பார்த்து சொல்லவோ” பாடல்கள் பிரபலம் ஆனவை. சங்கர் சலீம் சைமன் படத்தில் “வந்தாளே ஒரு மகராசி” பாடல் குறப்பிடப்படத்தக்கது. வருவான் வடிவேலன் படத்தில் கிளைமாக்ஸில் ஒலிக்கும் “பத்து மலைத்திரு முத்துக்குமரனை” பாடல் அருமையான பக்திபாடல். அதைதவிர “Joyful Singapore, Colorful Malaysiaபாடலும் படத்தில் பி.சுசீலாவின் குரலில் இடம் பெற்றது.  ஸ்ரீராமராஜ்யம் படத்தில் இடம் பெற்ற “வெள்ளிச்சலங்கை துள்ளிக்குலுங்க” பாடல் ஓரளவு பிரபலமான பாடல். தங்க ரங்கன் படத்தில் அ.தி.மு.க கட்சிப்பாடலாக “இரட்டை இலை அது பச்சை இல்லை” என்ற பாடல் ஒலித்தது.
    தெலுங்கில் “Maro Charithra” படத்தில் இடம் பெற்ற “Ye theega puvvunoபாடல் மிகவும் பிரபலமான பாடல். இப்பாட்டின் இடையில் வரும் வசனங்களை கமலஹாசன் தான் பேசி இருப்பார். இதே படம் மலையாளத்திலும் “thirakkil ezhuthiya kavitha” என்ற பெயரில் மொழி மாற்றம் செய்யப்பட்டது. இப்பாடல் மலையாளத்தில் Ariyaatha pushpavum” என்று ஒலித்தது.




     
     
         
    
                     

     

 

         

     1979-ம் ஆண்டில் எம்.எஸ்.வி இசையில் வெளிவந்த “நினைத்தாலே இனிக்கும்”, “நீல மலர்கள்”, “நீதிக்கு முன் நீயா நானா”. “ஒரே வானம் ஒரே பூமி”, சிவப்புக்கல் மூக்குத்தி, சுப்ரபாதம், “முன் ஒரு காலத்தில்”. “கிழக்கும் மேற்கும் சந்திக்கின்றன”, “செல்லக்கிளி” போன்ற  தமிழ் படங்களிலும் “Ezham kadalinakkare”,  “pathivratha” ஆகிய மலையாள படங்களிலும். “Andamaina Anubavam”. “Janma Hakku”, “idhi katha kaadhu”, “kukkakatuku cheppudebba போன்ற தெலுங்கு படங்களிலும் பி.சுசீலா பாடினார்.
      நினைத்தாலே இனிக்கும் படத்தில் “யாதும் ஊரே யாவரும் கேளிர்” மிகவும் பிரபலமான பாடல். மீண்டும் எம்.எஸ்.வி யார் என இப்படம் நிரூபித்தது. நீதிக்கு முன் நீயா நானா படத்தில் இடம் பெற்ற “ஆசையுள்ள மாப்பிள்ளைக்கு தூது செல்ல யாரிருக்கா” பாடல் அருமையான பாடல். நீல மலர்கள் படத்தில் “மாதம் ஒரு பூ மலரும் அல்லிப்பூ” என்ற இனிமையான  தாலாட்டு பாடல் இடம் பெற்றது. இது இன்னொரு சூழ்நிலையில் சோகமாகவும் ஒலித்தது. அதைத்தவிர “தாயறிந்த கோழிக்குஞ்சு நீயடா” என இன்னொரு பாடலும் இடம் பெற்றது. ஒரே வானம் ஒரே பூமி படத்தில் “சொர்கத்திலே நாம் அடி எடுத்தோம்” பாடலும் பிரபலமான பாடல். இப்பாடல் தான் மலையாளத்தில் “ஸ்வர்கத்தின் நந்தன மதுவனத்தில்” என “ஏழாம் கடலினக்கரே” படத்தில் ஒலித்தது.  சிவப்புக்கல் மூக்குத்தி  படத்தில் “மங்கள மலைமகள்” என்ற பாடலை பி.சுசீலாவும், வாணி ஜெயராமும் பாடினார்கள். 
              அன்புள்ள அத்தான் படம் கண்ணதாசனின் மகன் “கலைவாணன் கண்ணதாசன்” தயாரிப்பில் உருவான படம்.  படத்தில் பி.சுசீலா பாடிய “ஆழக்கடல் நீந்தி வந்தேன்” பாடலுக்கு 1980-ன் மாநில விருது கிடைத்தது. மிகவும் அருமையான பாடல். ஏன் பிரபலம் ஆகவில்லை என்பது ஆச்சரியமான விஷயம்.  அதே படத்தில் பி.ஜெயச்சந்திரன் அவர்களுடன் பாடிய “பாவை மலர் மொட்டு” பாடலும் குறிப்பிட படத்தக்க து. 
           நினைத்தாலே இனிக்கும் படம் தெலுங்கில் “Andamaina Anubhavam” என்ற பெயரிலும் வெளியிடப்பட்டது. “யாதும் ஊரே” பாடல் “Hello Nestham”  என தெலுங்கில் ஒலித்தது. பாலச்சந்தரின் “அவர்கள்” என்ற தமிழ் படத்தில் பி.சுசீலா பாடவில்லை அனால் அத்தன் தெலுங்கு பதிப்பான “Idhi katha kaadhu”  படத்தில் Jola paata paadi” ( தமிழில் “இப்படி ஓர் தாலாட்டு பாடவா” பாடல்), “sarigamalu Galagalalu” என  இரண்டு இனிமையான பாடல்களை பாடினார் பி.சுசீலா. “kukka katuku cheppu debba படத்தில் Emandi Emanukokandi” பாடல் இனிமையான பாடல்.
  

     
     
         
    
                     

     


          
             1980-ல் எம்.எஸ்.வி இசை அமைத்த “வறுமையின் நிறம் சிவப்பு”. “ஒரு கை ஓசை”, “தர்ம ராஜா”, “ரத்த பாசம்”, “மேகத்துக்கும் தாகமுண்டு”, “சுஜாதா”, “பொல்லாதவன்”, “உங்களில் ஒருவன்”, பம்பாய் மெயில்-109,  தாய் பிறந்தாள், அழைத்தால் வருவேன் போன்ற தமிழ் படங்களிலும். “Akali Rajyam”, “ammayi mogudu mamaku yamudu”,  “chuttaalunnaru jagratha”,  “yeshu prabhuvu”  போன்ற தெலுங்கு படங்களிலும் “Thirakkil ezhuthiya kavitha”, “lorry” போன்ற மலையாள படங்களிலும் பாடினார் பி.சுசீலா
.

         வறுமையின் நிறம் சிவப்பு” படத்தில் இடம் பெற்ற “ரங்கா ரங்கைய்யா எங்கே போனாலும்” பாடல் குறிப்பிடத்தக்க பாடல். இந்த படம் தெலுங்கில் “Akali Rajyam” என்ற பெயரில் வெளியானது. “ரங்கா ரங்கைய்யா” பாடல்  Gussa Rangayya” என தெலுங்கிலும் ஒலித்தது.  ரஜினி நடித்த பொல்லாதவன் படத்தில் “சின்னக்கண்ணே சித்திரக்கண்ணே கேளம்மா” பாடல் பிரபலமான பாடல். பாக்யராஜ், அஸ்வினி நடித்த ஒரு கை ஓசை படத்தில் “முத்து தாரகை வான வீதி வர” பாடலும் ஓரளவு பிரபலமான பாடல் தான்.  “தர்ம ராஜா” படத்தில் “வான வில்லை போலிருக்கும் வண்ண வண்ண” என்ற அப்பாடல் அவ்வப்போது கேட்கும் பாடல். ரத்த பாசம் படத்தில் இடம் பெற்ற “என் உள்ளம் என்கின்ற வானத்திலே” பாடல் ஓரளவு பிரபலம் ஆனா பாடல். “பசுமை நிறைந்த நினைவுகளே” பாடலைப்போல் கல்லூரி நிறைவு நாளில் பாடும் பாடலாக அமைந்தது, சுஜாதா படத்தில் இடம் பெற்ற “எங்கிருந்தோ வந்த பறவைகளே” பாடல். அதே படத்தில் “கானலிலே மீன் வேட்டை” பாடலும் கேட்க இனிமையான பாடல்.  மேகத்துக்கும் தாகமுண்டு படத்தில் இடம் பெற்ற “மரகத மேகம் சிந்தும்” பாடல் நல்ல தரமான பாடல்.




     
     
         
    
                     

     

 

         


List of Songs :
YearLanguageMovieSongs
1976Teluguanthuleni kathavoogutundi neeinta
1976Tamilchithra pournamiSenthoora pottin nalinam
1976Tamilchithra pournamivanthalum vanthandi
1976Tamilgraha pravesamEnga vEtu raanikkippa ilamai
1976Teluguhero-76karthika masamidi
1976Teluguhero-76ragamu pade
1976Tamilidhaya malaren chella killi sirikka
1976Tamilidhaya malarmanjal mugathile 
1976Tamilidhaya malarThaazhampookai
1976Malayalamkuttavum sikahayumkannanam unni kannil unni
1976Tamillalithavasanthangal varum munne
1976Tamilmaharasi vazhgaathaani mandapathil 
1976Tamilmaharasi vazhgakandha muruga
1976Tamilmaharasi vazhgasathiyame vellum
1976Tamilmanmadha leelaisugam thaana sollu 
1976Tamilmayor meenatchievalO oru pennaam aval 
1976Tamilmayor meenatchiKanden kalyana penn 
1976Tamilmoontru mudichunaan oru kadhanayagi
1976Tamilmuthana muthallavopaalaabishegam seyyavo
1976Tamilmuthana muthallavopunnai maram ontru
1976Tamilneedhikku thalai vananguKanavugale aayiram 
1976Tamilneedhikku thalai vananguPaarkka Paarkka sirippu 
1976Tamiloh manjuintha vilaiyaatu
1976Tamiloh manjuUlagam oru kavidhai
1976Tamiloru kodiyil iru malargalkannanin sannadhiyil 
1976Tamilpanakkara pennIyarkai ezhil
1976MalayalamPanchamivannathikkil vayadi
1976Tamilperum pugazhumnalla pErOdu pugazh petra 
1976Malayalamraajayogammuthukkudakeezhil
1976Tamilrojavin rajaalangaaram kalaiyaadha
1976Tamilrojavin rajajanakanin magalai mana
1976Tamilrojavin rajajanakanin magalai -sad
1976Tamilrojavin rajarOjavin raaja kallum illai 
1976Malayalamsaranam ayyappaponnambala nada 
1976Malayalamthemmadi velappanvayanaadan kaavile 
1976Tamiluzhaikkum karangalaadiya paadhangal ambalathil
1976Tamiluzhaikkum karangalnaanmaada koodalilE
1976Tamilvaazhvu en pakkamtheerthathil vizhuntha
1976Tamilveedu varai uravuazhagaana koyil katta
1976Tamilveedu varai uravumaanikka veenayin 
1976Malayalamyaksha gaanamthenkinnam poonkinnam
1977Malayalamakshayapathrampriyamulla chettan
1977Malayalamamme anupameneerada gandharva kanyakal
1977Tamilannan oru koilannan oru koil entral thangai
1977Tamilannan oru koilOngi ulagaLandha uthaman
1977Tamilavan oru sariththiramvanakkam pala murai sonnen
1977Tamilavan oru sariththiramen manadhu ondrudhaan
1977Teluguchilakamma cheppindichitti chitti chepallara
1977Tamildeviyin thirumanamoonjal adiya ullangal 
1977Tamildeviyin thirumanamsridevi varam ketkiraal
1977Tamildeviyin thirumanammuthu vanthathu
1977TelugudharmathmuduNee kanalandu
1977Tamilellam avalekulirukku bayanthavan
1977Tamilenna thavam seithennaan intru kEttadhoru 
1977Tamilenna thavam seithenEtho oru nadhiyil 
1977Tamilgaslight mangammaponnu kudicha ennadi
1977MalayalamHridayame Sakshimanassupole jeevitham
1977Tamililaya thalaimuraiaRai koduthAl theriyum 
1977Tamililaya thalaimuraikettaayE oru keLvi
1977Tamililaya thalaimuraioru naaL iravu
1977Tamilindru pol endrum vazhgaidhayathil irundhu
1977Tamilindru pol endrum vazhgawelcome hero happy
1977Telugumorotodubabu babu babu
1977TelugumorotoduEe Pillana grovi
1977TelugumorotoduNela thappenamma
1977Telugunaalaaga endaroanubhavalaku
1977Telugunaalaaga endaroare are bullamma
1977Telugunaalaaga endarokalyanini kanulunna
1977Tamilnaam pirantha manannai bhagavathikku 
1977Tamilnaam pirantha manthaai paadum paattu 
1977Tamilnee vaazha vendumanthi varum nerathile 
1977Tamiloorukku uzhaippavanazhagenum oviyam inge
1977MalayalamParivarthanammazhavillal makara sandhya
1977Tamilpennai solli kutramillaivElum mayilum thunayai
1977Tamilpennai solli kutramillaiviral meetaamal irukintra
1977Tamilperumaikkuriyavalen manadhu ontru thaan 
1977Tamilperumaikkuriyavalgangai karai kannan 
1977Tamilperumaikkuriyavalniraindhu vaazhga 
1977Teluguraagaalu dweshaalumanoharamaina
1977Teluguraagaalu dweshaalujagadamba naatyamaada
1977Tamilthani kudiththanamnokkum nekkum
1977Tamilthani kudiththanamoru asadaattam
1977TamilvELankannialaikadalin Osayile 
1977TamilvELankanniamma devanin thAye 
1978Tamilaayiram janmangalnaan aadatha aattam
1978Tamilagnipravesamkalyaana pennpole 
1978Tamilagnipravesamnaan oru rasigan
1978Tamilaval thantha uravumanjal itta nilavaaka
1978Tamilaval thantha uravuanthi varum nerathile
1978Tamilennai pol oruvanvelale vizhigal
1978Tamilgeneral chakravarthyO my dear doctor
1978Tamilkungumam kadhai solgirathumadhu oru kaalai
1978Tamilkungumam kadhai solgirathuoru pudhiya padagan
1978MalayalamMadhurikkunna Rathrirajani hemantham
1978Tamilmaduraiyai meeta sundarapandiyanveeramagan poraada
1978TelugumarocharithraYe theegha poovunu
1978Tamilseer varisaikannanai nianikkatha
1978Tamilseer varisaiPanchangam pathu sollava
1978Tamilshankar salem simonvanthale oru maharasi
1978Telugusimhabaluduchoopulatho
1978Telugusimhabaluduee ghanta ganna ganna
1978TelugusimhabaluduOh cheli chali chali
1978Telugusimhabaluduyendammo churukkumandi
1978Malayalamsnehathinte mukhangalarayarayarayo kinkini
1978Malayalamsnehathinte mukhangalelamanikkadu chutti 
1978MalayalamSnehathinte Mukhangalgangayil theerthamadiya-bit
1978MalayalamSnehathinte Mukhangal gangayil theerthamadiya[1]
1978MalayalamSnehathinte Mukhangal aarariro en janmasabhalyam[2]
1978MalayalamSnehathinte Mukhangal en jenma shabalya
1978Tamilsri kanchi kamatchithendral paadum raagam
1978Tamilsri ramajayamveLLich chalangai thulli 
1978Malayalamsundari marude swapnangal ore medayil oru sayyayil
1978Malayalamsundari marude swapnangal janmam thediyathinu
1978Tamilthanga ranganirattai ilai
1978Tamilthanga ranganUdhadugalil unadhu peyar
1978Tamilvaruvan vadivelanJoyfull singapore colorful 
1978Tamilvaruvan vadivelanPathu malaithiru muthu
1978Malayalamviswaroopamezhu swarnathalika
1978Malayalamviswaroopampushpangal archikkum
1979Teluguandamaina anubhavamHello nesthem
1979Tamilchella kilimadhurai mEnatchi 
1979Teluguedhi katha kadhuJola paata padi
1979Teluguedhi katha kadhusarigamalu galagalalu
1979MalayalamEzham kadalinakkareswargathin nandana
1979Telugujanma hakkuedalE sudhalayE
1979Telugujanma hakkuKalyana vaibohamE
1979Tamilkizhakkum merkum santhikknitranamalai mel amarnthu
1979Telugukukkakatuku cheppudebbaemandi emianukokandi
1979Tamilmun oru kalathilnallarukkum
1979Tamilmun oru kalathilotta panayila
1979Tamilneedhikku mun neeya naanaaasaiulla maapillaikku
1979Tamilneedhikku mun neeya naanamalaithenunga naan malai
1979Tamilneela malargalmadham oru poo (sad)
1979Tamilneela malargalmadham oru poomalarum
1979Tamilneela malargalthayarintha kozhikunju
1979Tamilninaithale inikkumyaadum oore yaavarum kelir
1979Tamilore vanam ore bhoomisorgathile naam adi eduthom
1979MalayalamPathivrithainiyoru naalil
1979Tamilsivappukkal mookuthimanagala malai magaL
1979Tamilsri devi karumari ammanarul maari pozhigintra 
1979Tamilsri devi karumari ammanmanjal kungumam niraintha
1979Tamilsuprabhathamunnai thaan
1980Teluguakali rajyamGussa rangaiah konjam
1980Teluguammayi mogudu mamaku yamuduvuraka lesi paruvu lesi
1980Teluguathaku yamudu ammayiki moguduchoodara choodara
1980Tamilazhaithaal varuvensonthangal
1980Tamilbombai mail 109kattuven kaiyil
1980Teluguchuttalunaarujagrathaammi o lammi
1980TeluguchuttalunaarujagrathaChikkavulera naa konda
1980Teluguchuttalunaarujagrathakokkoroko bhamani
1980TeluguchuttalunaarujagrathaRavaiah ramesam
1980TeluguchuttalunaarujagrathaRekhalu thodigi
1980Tamildharma rajavaanavillai pOlirukku vanna
1980Tamiljesusyudaya ezhil yudaya
1980Malayalamlorrykanni poovinnu kalyanam
1980Tamilmegathukkum thaagamunduMaragatha megam inge
1980Tamilmegathukkum thaagamundumegathukkum thaagamundu
1980Tamiloru kai osaiMuthuTharagai vaana
1980Tamilpollathavanchinna kannE chithirakkannE
1980Tamilratha paasamen ullam enkintra vaanathile
1980Tamilsujathaengiruntho vantha 
1980Tamilsujathakanalile meenvettai
1980Tamilthaai piranthaalkannanukku per sootti[3]
1980Malayalamthirakal ezhuthiya kavithaariyaatha pushpavum 
1980Tamilungalil oruvannaan unna nenache
1980Tamilvarumayin niram sivappurangaa rangayya enge 
1980Teluguyesu prabhuvuyehudiya 


தொடரும் .
 (Part 8 ).. ( Part 10)




1 கருத்து: