பின்பற்றுபவர்கள்

ஞாயிறு, 2 ஆகஸ்ட், 2015

எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் பி.சுசீலா பாடிய பாடல்கள் -Part 5


1966, 1967 ஆண்டுகளில் எம்.எஸ்.வி இசையில் பி.சுசீலா பாடிய பாடல்கள்.



    அறுபதுகளின் ஆரம்பத்தில் இருந்தே கவனித்து வந்தோமானால் சில குறிப்பிட்ட வகையான பாடல்கள், அவ்வப்போது படங்களில் இடம் பிடித்திருப்பதை கவனிக்கலாம். குறிப்பாக  விளையாட்டை மையப்படுத்திய பாடல்கள் பல வெளிவந்தன. சாதாரணமாக ஆண்களின் வீர விளையாட்டுகளான சிலம்பம், வில்வித்தை, கபடி போல பெண்களுக்கும் சோழி, டென்னிஸ் போல பல விளையாட்டுக்கள் இருந்தன. இதற்கு வாடியம்மா வாடி, பறக்கும் பந்து பறக்கும், “நான் தாண்டி காத்தி” போல பல பாடல்களை உதாரணமாக சொல்லலாம். எண்பதுகளுக்கு பின் அவருக்கு மார்க்கெட் இருந்திருந்தால் கிரிக்கெட் விளையாட்டை கூட பாடலாக்கி இருப்பார்.        
          இன்னொரு குறிப்படத்தக்க வகை என்றால், இரு பெண்குரல் மற்றும் ஆண்குரல் பாடல்களை சொல்லலாம்.  ஐம்பதுகளில் கூட இவ்வகை பாடல்கள் நிறைய வந்தாலும் பெரும்பாலும் அவை நடனப்பாடல்களாகவோ, நகைச்சுவை பாடல்களாகவோ இருந்தன. ஆனால் இவை அதிகமாக நெருங்கிய தோழிகள், அக்கா தங்கை நாத்தனார், ஓரகத்திகள் போன்ற நெருங்கிய உறவுகள்  பல சூழல்களிலும் பாடுவது போல் அமைந்திருந்தது. மெல்லிசை மன்னர் அவர்கள் இவ்வகை பாடல்களை நிறைய கம்போஸ் செய்து, பி.சுசீலா மற்றும் எல்.ஆர்.ஈஸ்வரி குரல்களில் இவற்றை வெற்றி பெறவும் வைத்தார். “உனது மலர் கொடியிலே”, “தூது செல்ல ஒரு தோழி இல்லை என” (விளக்கமான தொகுப்பு) போல பல உதாரணங்களை சொல்லலாம்.  பின்னாளில் “மல்லிகை பூச்சரம் மஞ்சளின் மோகனம்” என மாமியார் மருமகள் உறவில் இனிமை கூட்டும் பாடல் கூட அவர் இசை தான். 80-களுக்கு பிறகு இவ்வகை பாடல்கள் எப்போவதாவது தான் வெளி வந்தன.
       இனி 1966-ம் வருடம் எம்.எஸ்.வி இசையில் பி.சுசீலா பாடல் வெளிவந்த பாடல்களின் தொகுப்பை பார்ப்போம்.
   1966-ல் “அன்பே வா”, “சந்திரோதயம்”, “நாடோடி”, “நான் ஆணையிட்டால்”, “பறக்கும் பாவை”, “பெற்றால் தான் பிள்ளையா”, “சித்தி”. “ராமு”, “எங்க பாப்பா”, “கௌரி கல்யாணம்”, “கொடி மலர்”, “மோட்டார் சுந்தரம் பிள்ளை”. “தட்டுங்கள் திறக்கப்படும்”,  “குமரிப்பெண்“, “நம்ம வீட்டு லக்ஷ்மி”  போன்ற தமிழ் படங்களிலும் “Letha Manasulu”, Aada brathuku” போன்ற தெலுங்கு படங்களிலும் எம்.எஸ்.வி  இசை  அமைப்பில் பாடினார் பி.சுசீலா அவர்கள்.
             “அன்பே வா” படத்தில் “லவ் பேர்ட்ஸ், லவ் பேர்ட்ஸ்” பாடலை இளமையும், இனிமையும் தொனிக்க ஹஸ்கி வாய்ஸில் பாடி இருப்பார் பி.சுசீலா. ஹஸ்கி வாய்ஸில் பாடினாலும் வார்த்தைகள் தெளிவாக புரியும். அந்த அளவு டெக்னாலஜி வளராத காலத்தில் முழுவதும் குரல் பயிற்சியாலேயே அதை செய்திருப்பார் பி.சுசீலா. சரணம் வரும் போது அப்படியே முழு உற்சாகத்துடன் பறக்கும் அந்த குரல். இன்றளவும் பிரபலம் “லவ் பேர்ட்ஸ்” பாடல். “ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்பாடலும் மிக மிக பிரபலம். எம்.ஜி.ஆர், சரோஜாதேவி ஜோடிப்பாடல்களில் பெரும்பாலான மக்களை கவர்ந்த பாடல் இந்த பாடல். மெல்லிசை மன்னர் ரொம்ப குஷி மூடில் இருந்திருப்பாரோ என்னவோ, சாரியட் வண்டி ஓடும் சத்ததுடன் ஆரம்பித்து, பாடல் முழுவதையும் இசையால் ஆக்கிரமிப்பார். கவிஞர் வாலியின் வரிகளில் “நான் பார்த்ததிலே அவள் ஒருத்தியை தான்” பாடல் அருமையான காதல் பாடல். ஒரு காதலன் காதலியை இதை விட அதிகமாக ஐஸ் வைத்து விட முயுமா என்ன ? டி.எம்.எஸ், பி.சுசீலா குரல்களில் இனிக்கும் இன்னொரு ஜோடிப்பாடல் இது. சரோஜாதேவி தனியாகப்பாடும்  “வெட்கமில்லை, நாணமில்லை” பாடல், இளமை ததும்பும் பாடல்.  ஜாலியும் கேலியுமாக ஒலிக்கும் “ஏ நாடோடி நாடோடி” பாடலும், அதன் வித்தியாசமான இசை அமைப்பும் குறிப்பிட படத்தக்கவை.
       அதே போல் இவ்வருடம் வெளிவந்த “நாடோடி” பட பாடல்கள் எல்லாமே மக்கள் மனம் கவர்ந்த பாடல்களாய் அமைந்தன. டி.எம்.எஸ், பி.சுசீலா பாடும் “அன்றொரு நாள் இதே நிலவில்” பாடல் கேட்க அத்தனை சுகமாய் இருக்கும்!. “வானும் நதியும் மாறாமல் இருந்தால், நானும் அவளும் நீங்காமல் இருப்போம்” என கண்ணதாசன் பாட்டிலேயே அதீதமான நெருக்கத்தை கொண்டு வந்து விடுவார். “அன்றொரு நாள்” பாடல் பி.சுசீலா, எல்.ஆர்.ஈஸ்வரி குரல்களிலும் இனிமையாய் ஒலித்தது. அதே போல் “உலகமெங்கும் ஒரே மொழி” பாடலும் இளமையான காதல் பாடல். வாலி எழுதிய “நாடு அதை நாடு” பாடலை டி.எம்.எஸ்ஸும், பி.சுசீலாவும் வரிகளுக்கு உயிர் கொடுக்கும் வகையில் பாடி இருப்பார்கள். ஒவ்வொரு வரியும் அருமையாய் இருக்கும். ( பாலைவனம் என்ற போதும் நம்நாடு, பாறை நிலம் கூட நம் எல்லைக்கோடு  .. உண்மைதானே !! ).. இவை தவிர “ரசிக்கத்தானே இந்த அழகு”, “கண்களினால் காண்பதெல்லாம்”, “திரும்பி வா ஒளியே திரும்பி வா”, “பாடும் குரல் இங்கே” என எல்லாமே ஹிட் பாடல்கள்.

      இதைப்போல் இசையால் வென்ற இன்னொரு படம் “பெற்றால் தான் பிள்ளையா”?. டி.எ.எஸ் குரலில் ஒலித்த “நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி” பாடலின் இன்னொரு வடிவம் சீர்காழி. பி.சுசீலா குரல்களில் “நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி” என சந்தோஷமாகவும், கொஞ்சம் சோகமாகவும் ஒலித்தது. அதைப்போலவே டி.எம்.எஸ் குரலில் ஒலித்த “செல்லக்கிளியே மெல்ல பேசு” பாடல் மிக பிரபலம் ஆனது . ““செல்லக்கிளியே மெல்ல பேசு”  பாடல் பி.சுசீலாவின் குரலிலும் மென்மையான சோகத்தாலாட்டாய் ஒலித்தது. டி.எம்.எஸ் , பி.சுசீலா குரல்களில் ஒலித்த  “கண்ணன் பிறந்தான் எங்கள் கண்ணன் பிறந்தான்” மிகவும் இனிமையான பாடல். இன்றளவும்எ ஹிட் ஆன பாடல். .எம்ஜி..ஆர் படத்தில் துள்ளலான பாடல் இல்லாமலா !! “சக்கரைக்கட்டி ராசாத்தி” பாடல் அப்படி ஒரு ஜாலியான பாடல்.


     
     
         
    
                     

     
   
           





     எம்.ஜி.ஆர், சரோஜாதேவி நடிப்பில் வெளிவந்த இன்னொரு படம் “நான் ஆணையிட்டால்” ஆகும்.  இதில் பி.சுசீலா பாட எம்.எஸ்.வி அவர்களே ஹம்மிங் செய்யும் “கொடுக்க கொடுக்க இன்பம் பிறக்குமே” என்னும் பாடல் குறிப்பிடத்தக்க பாடல். “பாட்டு வரும், உன்னை பார்த்துக்கொண்டிருந்தால் பாட்டு வரும்” பாடல் மிக பிரபலமான பாடல். "அதை கேட்டுக்கொண்டிருந்தால் ஆசை வரும்".. உண்மை தானே.. கேட்க கேட்க சலிக்காத பாடல்கள் தானே அவை..  “நான் உயர உயர போகிறேன்”, “ஓடி வந்து மீட்பதற்கு” என எல்லாமே தரமான பாடல்கள்.
       இதே வருடம் வெளிவந்த இன்னொரு எம்.ஜி.ஆர் படம் “பறக்கும் பாவை”. இதில் “யாரைத்தான் நம்புவதோ பேதை நெஞ்சம்” பாடல் மிகவும் சிரமமான பாடல். “வேட்டை ஆடும் மான் ஆனேன், வித்தை காட்டும் பொருள் ஆனேன்” என பாடல் முழுவதும் தத்துவம் பொழியும்  கண்ணதாசனின் வரிகளை குறிப்பிட்டே ஆகவேண்டும். வழக்கம் போல் எம்.ஜி.ஆர் படங்களில் ஒலிக்கும் இனிமையான டூயட்டுகள் இப்படத்திலும் இடம் பெற்றன. “கல்யாண நாள் பார்க்க சொல்லலாமா”, “நிலவென்னும் ஆடை” , “உன்னைத்தானே, ஏய் உன்னைத்தானே” என எல்லாமே ஹிட் பாடல்கள்.
          இதே வருடம் எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவுடன் இணைந்து நடித்த படம் “சந்திரோதயம்” ஆகும். “சந்திரோதயம் ஒரு பெண்ணானதோ” பாடல் இப்போது கூட பிரபலம் தான். பாடலும், வரிகளும், பாடும் அழகும் குறிப்பாக  நடுவில் வரும் பி.சுசீலாவின் ஆலாபனைகளும் பாடலை அப்படியே மக்கள் மனதில் நிலைக்க செய்து விட்டன. “எங்கிருந்தோ ஆசைகள்” இன்னொரு பிரபலமான டூயட். பி.சுசீலாவின் குரலில் ஒலித்த “கெட்டி மேளம் கொட்டுற கல்யாணம்” பாடலும் குறிப்பிட படத்தக்கது.
        சிவாஜி நடித்த “மோட்டார் சுந்தரம் பிள்ளை” என்ற ஒரே ஒரு படத்துக்கு மட்டுமே இவ்வருடம் எம்.எஸ்.வி இசை அமைத்தார். பி.பி.எஸ், பி.சுசீலா குரல்களில் ஒலித்த  “காத்திருந்த கண்களே” பாடல் இனிமையான டூயட். ஜெயலலிதா தனது சகோதரிகளுடன் பாடும் “துள்ளி துள்ளி விளையாட துடிக்குது மனசு” பாடலும் எல்லோர் கவனத்தையும் கவர்ந்தது. பி.சுசீலா, எல்.ஆர்.ஈஸ்வரி, சூலமங்கலம் என மூன்று பாடகிகள் இணைந்து பாடிய பாடல். பி.சுசீலா ஏன் டாப்பில் இருந்தார் என பாடலை உற்றுக்கேட்டாலே தெரிந்து விடும்.  கல்லூரி மேடை நாடகமாக ஒலிக்கும்   “காதல் என்றால் என்ன” பாடலில் “Hello mr.Advocate,  I want to file a suit” என ஆங்கிலத்திலும் ரெண்டு வரி பாடி இருப்பார் பி.சுசீலா வரிகள். ஒரு மிக்ஸ் போல பல வகையான இசை வடிவங்களையும்  இப்பாடலில் கேட்கலாம்.
     இவ்வருடத்தில் ஒரு முக்கியமான படம் என்றால் அது “சித்தி” படம் தான். இப்படத்தில் தான் “காலமிது காலமிது கண்ணுறங்கு மகளே” பாடல் இடம் பெற்றது. ஒரு பெண் பிறந்ததில் இருந்து இறக்கும் வரை கடந்து வரும்  பல கட்டங்களை ஒரே பாட்டில் சொல்லியிருப்பார் கவிஞர் கண்ணதாசன். காதலால் தூக்கம் போகும், கவலையாலும் தூக்கம் போகும், குழந்தையால் தூக்கம் போகும், இரவிலும் தூக்கம் போகும், முதுமையாலும் தூக்கம் போகும். இதில் சந்தோஷமும் உண்டு, கவலையும் உண்டு. அதை குறைந்த வரிகளிலேயே தெளிவாக எழுதி இருப்பார் கண்ணதாசன் அவர்கள். அதை ஒவ்வொரு சூழ்நிலைக்கு ஏற்றவாறும் இசை மாலையாக்கி இருப்பார் மெல்லிசை மன்னர். தனது பாடும் திறனால் அதை அந்த வரிகளை உணர்ந்து  பிரமாதமாய் பாடி இருப்பார் சுசீலா. முதலில் இப்பாடலை பி.சுசீலாவால் பாட முடியாத சூழல் இருந்தது. அக்காலத்தில் எல்லா பாடகிகளும் பாடிக்கொண்டு தான் இருந்தார்கள். வாய்ப்புக்காக அலைந்து திரிந்தவர்கள் பலர். ஆனால், இயக்குனர். இந்த பாடலுக்கு தேவையான உயிரை வேறு பாடகிகளால் கொண்டு வர முடியாது என திண்ணமாய் நம்பினார். அதற்காக  இயக்குனர் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் உட்பட முழு செட்டும் சில மாதங்கள் பி.சுசீலாவுக்காக காத்திருந்து பி.சுசீலாவை பாட வைத்தது. பி.சுசீலா அந்த காத்திருப்பிற்கும் சேர்த்து வட்டியும், முதலுமாய் எக்ஸ்ப்ரஷனில் பின்னி எடுத்திருப்பார். ஒரு பாடகியின் திறமை மேல் நம்பிக்கை வைத்து ஒரு பாடலுக்காக ஒரே செட்டே காத்திருந்தது வரலாறு. இதே பாடல் இன்னொரு சூழ்நிலையில் கூட படத்தில் “பாடும் கன்னி” என்ற வரிகளுடன் துவங்கும். “சங்கினால் பால் கொடுத்து”  என ஒரு விருத்தமும், “தண்ணீர் சுடுவதென்ன” என்ற டூயட்டும் கூட படத்தில் இடம் பெற்றது.
      அதே போல் இவ்வருடம் வெளி வந்த “ராமு” பட பாடல்களும் சிறப்பானவை. “நிலவே என்னிடம் நெருங்காதே” பாடல் துவங்கும் முன் கே.ஆர்.விஜயா படுக்கையில் படுத்துக்கொண்டு, “நித்திரையில் வந்து நெஞ்சில் இடம் கொண்ட உத்தமன் யாரோடி தோழி” என இரு வரிகளை பாடுவார். பின்னணி இசையே இல்லாமல் செந்தேன் போல் ஒலிக்கும் அக்குரல் சுசீலாவின் குரல் தான். “பச்சை மரம் ஒன்று” பாடல் குழந்தைகளும் கூட பாடும் வகையில் கம்போஸ் செய்யப்பட்ட எளிமையான ஆனால் மிக இனிமையான டியூன். பி.சுசீலா பிரமாதப்படுத்தி இருப்பார். இன்றும் அப்பாடலை  ஒலிக்க விட்டால் மக்கள் நின்று ஒரு முறை கேட்டு செல்வார்கள். “பச்சை மரம் ஒன்று” பாடல் இன்னொரு முறை கே.ஆர்.விஜயா பாடுவது போல் ஒலிக்கும். கே.ஆர்.விஜயாவுக்காக குரல் கொடுத்த “முத்துச்சிப்பி மெல்ல மெல்ல திறந்து வரும்” பாடல் முக்கனிகளையும் பிழிந்தது போல் இனிமையான பாடல். “அம்மம்மா அப்பப்பா தித்திக்கும் சேதி வரும்..” என்ன இனிமை! .. என்ன இனிமை.. !! இவை தவிர தேவாரப்பாடலான “பாலும் தெளி தேனும்” என்ற விநாயகர் துதியும் படத்தில் இடம் பெற்றது. ஒரு சின்ன பிட் பாடலாக பாரதியாரின் “சுட்டும் விழிச்சுடர் தான் கண்ணம்மா” படத்தில் பி.சுசீலாவின் குரலில் ஒலிக்கும். முழுவதும் கிடைத்தால் நன்றாக இருக்கும்.
    இக்கால கட்டத்தில் நிறைய முருகன் பாடல்களுக்கு எம்.எஸ்.வி இசை அமைத்து  இருந்தார். “சரவண பொய்கையில் நீராடி”, “அழகன் முருகனிடம்  ஆசை வைத்தேன்”, “பழமுதிர் சோலையிலே”, “மனமே முருகனின் மயில் வாகனம்” என அடுக்கிக்கொண்டே போகலாம். எல்லாமே அபாரமான பாடல்கள். அதே வரிசையில் “கௌரி கல்யாணம்” படத்தில் இடம் பெற்ற  “திருப்புகழை பாட பாட வாய் மணக்கும்” பாடலும் சேர்ந்து கொண்டது. பி.சுசீலாவும், சூலமங்கலமும் இணைந்து பாடிய மங்களகரமான பாடல் இது. இதே படத்தில் “வரணும் வரணும் மகாராணி”, “தொட்டது போல் கனவு கண்டேன்”, “மாமன் மகளே மணிக்குயிலே” போன்ற பாடல்களும் மக்கள் கவனத்தை ஈர்த்தன.
     தட்டுங்கள் திறக்கப்படும் படத்தில் “கல்யாண பந்தல் அலங்காரம்”, “ஊர் பாடும் தாலாட்டு”, “தித்திப்பது அது எது” பாடல்கள் குறிப்பிடத்தக்க பாடல்கள்.
      “நம்ம வீட்டு லக்ஷ்மி” படத்தில் “வழி வழியே வந்த தமிழ்”, “வந்து விடு வட்டமிடு”, “வருக மலர்களின் ராணி” மற்றும் “யாரிடம் யாரிடம் பாடம் கேட்கலாம்” போன்ற பாடல்கள் குறிப்பிட படத்தக்கவை.
      கொடிமலர் பட பாடல்களும் பிரபலமானவை. “மலரே நீ சொல்ல ஒரு மொழியும் இல்லை” பாடலை குறிப்பிட்டு சொல்லலாம். சோகப்பாடலாக  இருந்தாலும் சுகமான பாடல். “சிட்டாக துள்ளி துள்ளி வா” பாடல் இன்றைய கால கட்டத்திற்கு ஏற்றது போல் ஒரு ஸ்பீடான பாடல். இக்கால கட்டத்தில் பல குளியல் பாடல்கள் ஆபாசமில்லாமல் பாடப்பட்டு வெளிவந்தன. காஞ்சனா தோழிகளுடன் பாடிக்கொண்டே குளிக்கும் “கண்ணாடி மேனியடி” அவ்வகைப்பாடல் தான்.
     எங்க பாப்பா படத்தில் “ஒரு மரத்தில் குடி இருக்கும் பறவைகளே ”, குமரிப்பெண் படத்தில் “தேனிருக்கும் மலரினிலே” பாடல்களும் குறிப்பிட பட தக்கவை.
     நெஞ்சில் ஓர் ஆலயம் படம் தெலுங்கில் “மனசே மந்திரம்” என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. எம்.எஸ்.வி தான் தெலுங்கிலும் இசை அமைத்தார். “Annadhi neevena” (சொன்னது நீ தானா). Allaaru muddu kade ( முத்தான முத்தல்லவோ)  பாடல்களுக்கு அதே டியுனை உபயோகித்த எம்.எஸ்.வி அவர்கள் என்ன நினைத்து என்னை பாடலின் தெலுங்கு வடிவமான “yemanukkoni” பாடலுக்கு டியூனை மாற்றி அதையும் பிரபலமாக்கினார்.
    குழந்தையும் தெய்வமும் படம் “letha Manasulu” என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. Pillalu devudu challani vare (குழந்தையும் தெய்வமும்), Andala oh chilaka (அன்புள்ள மான் விழியே), Ee puvvulalao oka (நான் நன்றி சொல்வேன் ) போல எல்லா பாடல்களும் பிரபலம் ஆகின. தமிழில் எம்.எஸ்.ராஜேஸ்வரி பாடிய “கோழி  ஒரு கூட்டிலே” பாடலின் தெலுங்கு வடிவத்தை “kodi oka konaloஎன  பி.சுசீலா பாடினார். பழமுதிர் சோலையிலே பாடலை அப்படியே பயன் படுத்தாமல் அந்த சூழ்நிலைக்கு Makkuva teerchara muvva gopalaஎன தெலுங்கு கீர்த்தனையை உபயோகித்தார் எம்.எஸ்.வி. 


     
     
         
    
                     

     
   
           









           இனி 1967-ம் வருடம் எம்.எஸ்.வி இசையில் பி.சுசீலா பாடல் வெளிவந்த பாடல்களின் தொகுப்பை பார்ப்போம்
       1967-ம் வருடம் எம்.எஸ்.வி இசையில் காவல்காரன், இரு மலர்கள், ஊட்டி வரை உறவு, நெஞ்சிருக்கும் வரை, தங்கை, அனுபவி ராஜா அனுபவி, அனுபவம் புதுமை, பவானி, “எங்களுக்கும் காலம் வரும்”, “அன்பு வழி”, “ஞாயிறும் திங்களும்”, “பெண் என்றால் பெண்”, செல்வ மகள் போன்ற தமிழ் படங்களிலும் “Aada Brathuku”, “Anubavinchu Raja Anubavinchu”, “Nuvve” ஆகிய தெலுங்கு படங்களிலும் பி.சுசீலா பாடினார்.
          காவல்காரன் படத்தில் “கட்டழகு தங்கமகள் திருநாளோ” பாடல் மிகவும் பிரபலமான பாடல். அதற்கு இணையாக டி.எம்.எஸ் அவர்களுடன் பாடிய “நினைத்தேன் வந்தாய்”, “மெல்லப்போ மெல்லப்போ” பாடல்களும் பிரபலம் ஆகின.
          அழுகை படங்களாக எடுத்துக்கொண்டிருந்த ஸ்ரீதர், காதலிக்க நேரமில்லை படத்துக்கு பின் காமெடி படங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க ஆரம்பித்திருந்தார். “ஊட்டி வரை உறவு” அவ்வகைப்படமே!. படத்தின் எல்லா பாடல்களுமே ஃபிரெஷ் ஆக இருக்கும்.   வெஸ்டர்ன் இசையுடன் ஒலிக்கும்      தேடினேன் வந்தது” பாடல் மிக நளினமாக இருக்கும். பி.சுசீலாவின் குரல் பாடலுக்கு தனி ப்ளஸ்.. இப்பாடலையும் வேறு ஒரு பாடகிக்கு கொடுக்கும் படி ஸ்ரீதர் விரும்பினார். ஆனால் இசை அமைப்பாளர் போராடி தனது பாடலை பாடலை காப்பாற்றிக்கொண்டார். டி.எம்.எஸ், பி.சுசீலா குரல்களில் ஒலித்த “பூமாலையில் ஓர் மல்லிகை” பாடல் ஒரு இசை விருந்து எனலாம். அழகழகான ஹம்மிங்களும், சரளமான சங்கதிகளும், இருவரின் குரலினிமையும் சேர்ந்து பாடலை சாகாவரம் பெற்ற பாடல்களில் ஒன்றாக்கின. இதற்கு கண்ணதாசனின் வரிகளும் ஒரு பெரிய காரணம். “ஹேப்பி இன்று முதல் ஹேப்பி” பாடலைக்கேட்டாலே ஆனந்தம் பொங்கி வரும். அவ்வளவு சந்தோஷமான, துள்ளலான இசை !! அதே போல் “அங்கே மாலை மயக்கம் யாருக்காக” பாடலும் இன்னோர் இசை விருந்து. இக்கால கட்டங்களில் எம்.எஸ்.வி சாதாரணமாக இசை அமைத்தால் கூட அப்பாடல்களில் நிறைய சின்ன சின்ன நுணுக்கங்கள் நிறைந்தே இருந்தன. ஒரு பாடலை கூட சுமார் என கூறி விட கூடாது என கடுமையாக உழைத்திருக்கிறார்.
             ஸ்ரீதரின் நெஞ்சிருக்கும் வரை படத்தில் தான் டி.எம்.எஸ், பி.சுசீலாவின் பெஸ்ட் டூயட்டுகளில் ஒன்றான “முத்துக்களோ கண்கள்” பாடல் இடம் பெற்றது. என்ன வரிகள் !! என்ன ஒரு நளினம் !! எத்தனை சங்கதிகள் !!! ஒவ்வொரு எழுத்தாக அனுபவித்து இசை அமைதிருப்பார் மெல்லிசை மன்னர். தங்கள் பங்குக்கு குரலால் அதை மெருகேற்றி இருப்பார்கள் ஏழிசை வேந்தரும், இன்னிசை அரசியும்!.. பி.சுசீலா பாடிய  “எங்கே நீயோ நானும் அங்கே உன்னோடு” என்கின்ற பாடல் மறக்க முடியாத இன்னொரு பாடல், “காதல் என்றால் சேயாவேன். கருணை எனறால் தாயாவேன்” போன்ற அற்புதமான வரிகள் பாடல் முழுவதும் இறைந்து கிடக்கும். அதன் அழகு கெடாமல் இசை அமைத்த மன்னரையும். அந்த உணர்வுகளை சரியாக குரலில் கொண்டு வந்த பி,சுசீலாவையும் எத்தனை பாராட்டினாலும் தகும். தமிழ் இசை வரலாற்றில் இப்பாடலுக்கு நிச்சயம் ஒரு அழியாத இடம் உண்டு. ஆனால் இப்படத்தில் ஒலித்த “கண்ணன் வரும் நேரமிது” பாடல் தான் என்னைக்கவர்ந்த பாடல். எம்.எஸ்.வி இசை அமைத்த மிக அருமையான பாடல்களில் இதுவும் ஒன்று என்பேன்.. ஆரம்பத்தில் ஒலிக்கும் ஆலாபனையில் இருந்து பாடல் முழுதும் பி.சுசீலாவின் குரல் ராஜ்ஜியம் தான். அனாயசமாக மேலே போகும். அப்படியே கீழே வரும், கொஞ்சும், துள்ளும், மயக்கும், ஏங்கும்... “முத்தம் கொண்ட கன்னம், மோகம் கொண்ட உள்ளம், இன்னும் இன்னும் என்று என்னை தொல்லை செய்யும்”.. இந்த வரிகளை 80-களின் இசை அமைப்பாளர்களிடமும். பாடகர்களிடமும் கொடுத்து பாருங்கள்.. தங்களின் அருவெறுப்பான முக்கல் முனகல்களால் விரசத்தின் எல்லைக்கே இவ்வரிகளை அனுப்பி இருப்பார்கள். ஆனால் இங்கே இந்த பாடலை  கேளுங்கள்.. எங்கேயாவது நெருடுகிறதா? குவாலிட்டி எப்பவுமே குவாலிட்டி தான்..
         சிவாஜி நடிப்பில் வெளிவந்த “இரு மலர்கள்” திரைப்படத்தின் இசை மிகவும் பிரபலமானது. டி.எம்.எஸ், பி.சுசீலா இணைந்து பாடிய  “மன்னிக்க வேண்டுகிறேன்” பாடல் மிகவும் பிரபலமான பாடல். “மன்னிக்க வேண்டுகிறேன்” பாடல் சோகமாகவும் இன்னொரு சூழ்நிலையில் ஒலித்தது. “வெள்ளிமணி ஓசையிலே” பாடல் மங்களகரமான பாடல். “அன்னமிட்ட கைகளுக்கு” பாடல் ஒரு சிச்சுவேஷன் பாடல். இன்றைய சூழலுக்கு கூட இப்பாடலின் வரிகள் பொருந்தும். குழந்தையை விட்டு விட்டு, வேலை நிமித்தமாக வெளியூரில் பணி புரியும் பெண்கள் மனதில் இப்படிப்பட்ட எண்ணங்கள் தான் ஓடும்.  “அன்னமிட்ட கைகளுக்கு அன்பு செய்த கண்களுக்கு உன்னை விட்டு போவதற்கு எண்ணமில்லை மகளே”...!! அருமையாக பாடி இருப்பார் பி.சுசீலா. படத்தில் இடம் பெற்ற இன்னொரு சிச்சுவேஷன் பாடலான “கடவுள் தந்த இரு மலர்கள்” பாடலை பி.சுசீலாவும், எல்.ஆர்.ஈஸ்வரியும் இணைந்து பாடி இருப்பார்கள். “காற்றில் உதிர்ந்த வண்ணமலர், கண்ணீர் சிந்தும் சின்ன மலர், ஆற்றில் சென்று சேர்ந்ததம்மா, அலைகள் கொண்டு போனதம்மா”  என ஒரு பெண்ணின் வாழ்க்கையை நாளே வரிகளில் வடித்து விடுவார் வாலி. “மகாராஜன் ஒரு மகாராணி” பாடல் இன்னொரு குறிப்பிட படத்தக்க பாடல். டி.எம்.எஸ், பி.சுசீலாவுடன் இணைந்து ஷோபா சந்திரசேகர்  ( நடிகர் விஜய் அவர்களின் தாயார்) இப்பாடலை பாடி இருப்பார். இது தான் அவரது அறிமுக பாடல் என்பது விசேஷம். தங்கை படத்தில் “சுகம் சுகம் அது துன்பமான இன்பமானது” பாடல் கேட்க சுகமான பாடல்.
        செல்வமகள் பாடலில் “குயிலாக நானிருந்தென்ன” என பி.சுசீலாவின் குரலுக்கு பொருத்தமான வரிகளை எழுதி இருப்பார் கவிஞர். அதே படத்தில் “ஏ பறந்து செல்லும்” பாடலும் குறிப்பிட படத்தக்கது.
            “பவானி” படத்தில் “நான் பாடும் பாட்டிலே விண்மீனும் தூங்குமே” என ஒரு சூப்பரான தாலாட்டு பாடல் இடம் பெற்றது. இது வரை கேட்காதவர் ஒரு முறை மறக்காமல் கேளுங்கள்.  “இந்த நிலவை நான் பார்த்தால் அது எனக்கெனவந்தது போலிருக்கும்” என மெல்லிய காதல் பாடலும் இப்படத்தில் பி.சுசீலாவின் குரலில் ஒலித்தது.
             பாலச்சந்தர் இயக்கிய “அனுபவி ராஜா அனுபவி” படத்திலும்  “அனுபவி ராஜா அனுபவி” என்று கேலியாக பாடும் பாடலும், “மான் என்று பெண்ணுக்கொரு பட்டம் கொடுத்தான்" என்ற பாடலும் இடம் பெற்றது. இப்படம் “Anubavinchu Raja Anubavinchu” என்ற பெயரில் தெலுங்கிலும் டப் செய்யப்பட்டது.
            “பெண் என்றால் பெண்” திரைப்படத்தில் “சிரித்தாலும் கண்ணீர் வரும்” . “தேடி தேடி காத்திருந்தேன்” பாடல்களும் “ஞாயிறும் திங்களும்” படத்தில் “பட்டிலும் மெல்லிய பெண் இது”, “கானகத்தில் நீரெடுத்து” பாடல்களும் “அன்பு வழி” படத்தில் “பத்துப்பாடல்முத்துப்போலே” பாடலும், அனுபவம் புதுமை படத்தில் “கனவில் நடந்ததேனோ கல்யாணஊர்வலம்”, “சுகம் எங்கே சொல்லவா” பாடலும் குறிப்பிட தக்க பாடல்கள்.
           “Aada brathuku” படம் வாழக்கைப்படகு படத்தின் ரீமேக் ஆகும். அதே டியூன்கள் தான் தெலுங்கிலும் உபயோகிக்கப்பட்டன.


     
     
         
    
                     

     
   
           



     
     
         
    
                     

     
   
           





List of Songs in 1966 and 1967 .

   
YearLangMovieSongs
1966Tamilanbe vaalove birds love birds
1966Tamilanbe vaanaan paarthadhilE avaL
1966Tamilanbe vaaporattamye nadodi nadodi
1966Tamilanbe vaaraajavin paaravi
1966Tamilanbe vaavetkam illai naanam illai
1966Tamilchandhrodhayamchandhrodhayam oru penn
1966Tamilchandhrodhayamengirundho aasaigaL
1966Tamilchandhrodhayamketti mElam kottura kalyaanam
1966Tamilchiththichanginaal paal koduthaal
1966Tamilchiththikaalamidhu kaalamidhu 
1966Tamilchiththipaadum kanni(kalamidu-sad)
1966TamilchiththithaNNEr suduvadhenna
1966Tamilenga paappaoru marathil kudiyirukkum
1966Tamilgowri kalyanammaaman magaLE maNikkiLiyE
1966Tamilgowri kalyanamthirupugahzhai paada paada
1966Tamilgowri kalyanamthottathu pol kanavu kanden
1966Tamilgowri kalyanamvaranum varanum maharani
1966Tamilkodi malarchittaaga thuLLi thuLLi vaa
1966Tamilkodi malarkannanukku Enindha sirippu
1966Tamilkodi malarmalarE nee solla oru mozhiyum
1966Tamilkodimalarkannaadi mEniyadi thaNNeeril
1966Tamilkumari pennthenirukkum malarinile
1966Teluguletha manasuluAndala oh chilaka(sad)
1966Teluguletha manasuluAndala oh chilaka (happy)
1966Teluguletha manasuluEe povulalo oka kammadanam
1966Teluguletha manasuluKodi oka konalo
1966Teluguletha manasuluMakkuva theerchara muvva
1966Teluguletha manasuluPillalu devudu challani vare
1966Teluguletha manasuluaapadha mokkula
1966Teluguletha manasuluEdu kodala pai
1966Telugumanase mandiramallaaru muddu kade-sad
1966Telugumanase mandiramallaaru muddu kade
1966Telugumanase mandiramAnnadhi nee vena
1966Telugumanase mandiramyemanukoni
1966Telugumanase mandiramannemu punnemum
1966Telugumanase mandiramtulli tulli
1966Tamilmotor sundarampillaikaadhal entral enna
1966Tamilmotor sundarampillaiKaathiruntha kangale
1966Tamilmotor sundarampillaiKaathiruntha kangale(movie version)
1966Tamilmotor sundarampillaiThulli thulli vilayada thudikkuthu
1966Tamilnaadodiantoru naal idhe nilavil
1966Tamilnaadodiantoru naal idhe nilavil (F)
1966Tamilnaadodikangalinaal kaanbadhellaam
1966TamilnaadodiNaadu aathai Naadu
1966TamilnaadodiNayaganin kOyilile(paadum kural)
1966TamilnaadodiRasikkathane intha azhagu
1966TamilnaadodiThirumbi vaa Uyire
1966Tamilnaadodiulagam engum orE mozhi
1966Tamilnaan aanaiyittaalkodukka kodukka inbam
1966Tamilnaan aanaiyittaalnaan uyara uyara pOgiREn
1966Tamilnaan aanaiyittaalodi vanthu meetpatharku(mehangal)
1966Tamilnaan aanaiyittaalpaatu varum paatu varum
1966Tamilnaan aanaiyittaalkarumbinil thEn vaitha
1966Tamilnamma veetu lakshmivanthuvidu vattamidu
1966Tamilnamma veetu lakshmivaruga malargalin rani
1966Tamilnamma veetu lakshmivazhi vazhiye vantha thamizh
1966Tamilnamma veetu lakshmiYaaridam yaaridam paadam
1966Tamilparakkum pavaikalyaaNa naaL paarkka 
1966Tamilparakkum pavainilavennum aadai koNdaaLO
1966Tamilparakkum pavaiunnaithane Yei unnaithane
1966Tamilparakkum pavaiyaaraithaan nambuvathO
1966Tamilpetral thaan pillaiyachellakkiLiyE mellap pEsu
1966Tamilpetral thaan pillaiyakannan piRandhaan engaL
1966Tamilpetral thaan pillaiyanalla nalla pillaigalai nambi
1966Tamilpetral thaan pillaiyasakkarakkatti raajaathi
1966Tamilpetral thaan pillaiyasakkarakkatti raajaathi-movie-ver
1966Tamilpetral thaan pillaiyayaarO dhavamirundhu yaarO
1966Tamilraamupachai maram ontru ichai kili rendu
1966Tamilraamumutuchippi mella mella piranthu
1966Tamilraamunilave ennidam nerungathe(sad)
1966Tamilraamupachai maram ontru ichai kili (sad)
1966Tamilraamusuttum vizhichudar (short)
Tamilraamupaalum theli thenum
1966Tamilthattungal thirakkapadumthithippadhu edhu adhuvO
1966Tamilthattungal thirakkapadumkalyaana pandhal alangaaram
1966Tamilthattungal thirakkapadumoor paadum thaalaattu[1]
1966Tamilthattungal thirakkapadumpennukku pennukku ennadi
1967Teluguaada brathukuAha andhamu chindhe
1967Teluguaada brathukupiliche na madilo
1967Teluguaada brathukupreme neeku mangalyam
1967Teluguaada brathukuvasthade vasthade
1967Teluguaada brathukuvishainchina




1967Tamilanbu vazhipathup paadal muthuppole
1967Tamilanubavam pudhumaikanavil nadanthatho
1967Tamilanubavam pudhumaisugam engE sollavaa
1967Tamilanubhavi raja anubhavianubhavi raaja anubhavi
1967Tamilanubhavi raja anubhavimaan endru pennukkoru 
1967Teluguanubhavinchu raja anubhavinanubhavinchu raja
1967Teluguanubhavinchu raja anubhavinmaatallo mallelo 
1967Tamilbhavaniindha nilavai naan paarthaal
1967Tamilbhavaninaan padum paattilE 
1967Tamilengalukkum kalam varumkalla paarvai kannukku inbam
1967Tamilgnayirum thingalumpattilum mellia penn idhu
1967Tamiliru malargalAnnamitta kaigalukku
1967Tamiliru malargalmaharaja oru maharani
1967Tamiliru malargalVelli mani Osayile ullamenum
1967Tamiliru malargalKadavul thantha iru malargal
1967Tamiliru malargalmannikka vEndukirEn ungal
1967Tamiliru malargalmannikka vEndukirEn ungal(pathos)
1967Tamilkaavalkaarankattazhagu thanga magal
1967Tamilkaavalkaaranmellap pO mellap pO
1967TamilkaavalkaaranninaithEn vandhaai 
1967Tamilnenjirukkum varaiEnge nEyo naanum ange unnodu
1967Tamilnenjirukkum varaikannan varum neramidhu 
1967Tamilnenjirukkum varainenje neeyum
1967Tamilnenjirukkum varaimuthukkalo kangal_movie_ver
1967Tamilnjayirum thingalumkaanagathil neereduthu
1967Tamilnjayirum thingalumvanna malar
1967TeluguNuvve (nee)Shukravaarapu udayam muggulu 
1967TeluguNuvve (nee)Aanandame gaadhaa madhuvulu 
1967Tamilooty varai uravuangE maalai mayakkam
1967Tamilooty varai uravuhappy intru muthal happy
1967Tamilooty varai uravupoo maalayil or malligai
1967Tamilooty varai uravuthEdinEn vanthathu
1967TeluguPellante bhayamgettimelam
1967TeluguPellante bhayamaasalatho aadene
1967TeluguPellante bhayamchandrodayam oka pilla
1967Tamilpenn endraal pennthEdi thEdi kaathirunthEn
1967Tamilpenn endraal pennsirikkum ulagil mayakkam 
1967Tamilpenn endraal pennsirithaalum kanneer varum
1967Tamilpenn endraal pennun kannukku naan patta kadan
1967Tamilselva magalkuyilaga naanirunthenna
1967Tamilselva magalye paranthu sellum 
1967Tamilthangaisugam sugam adhu 


தொடரும் ...

(Part4) (Part6 )   




                  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக