சங்கர் கணேஷ்
அவர்களுடன் பி.சுசீலாவின் இசை பயணம்
1973-இல் சங்கர் கணேஷ் அவர்கள்
இசை அமைத்த “அம்மன் அருள்”. “கோமாதா என் குலமாதா”. “இறைவன் இருக்கின்றானா”.
“ராதா”. “நத்தையில் முத்து”. வாக்குறுதி, “வந்தாளே மகராசி”,
“வீட்டுக்கு வந்த மருமகள்” போன்ற படங்களில் பி.சுசீலா பாடி இருந்தார். இதில்
அம்மன் அருள் படத்தில் “சாட்சி சொல்ல அன்று தெய்வம்”. “ஒன்றே ஓன்று நீ தர வேண்டும்”
போன்ற பாடல்கள் ஓரளவு பிரபலம் ஆகிய பாடல்கள். “கோமாதா என் குல மாதா” படத்தில் இடம்
பெற்ற பாடல்கள் எல்லாம் பி.சுசீலாவின் குரலில் மட்டுமே ஒலித்தன. தமிழில் “கற்பகம்”.
“கோமாதா என் குலமாதா” மற்றும் “ஆனந்த தாண்டவம்(1986)”
படங்களில் பி.சுசீலாவின் குரல் தவிர வேறு குரல் இல்லை என்பது கவனிக்கப்பட வேண்டிய
ஒன்று. சில படங்களில் ஒரே பாடல் இடம் பெற்று அதை ஒருவரே பாடி இருக்கும் போது
டைட்டிலில் ஒருவர் பெயர் தான் வரும். ஆனால் இப்படங்களில் பல பாடல்கள் இடம் பெற்று
அதை ஒரு பெண்குரல் மட்டுமே பாடியது தனிச்சிறப்பு.
அதிலும் ஆனந்த தாண்டவம் படத்தில் 22 பாடல்கள்
பி.சுசீலாவின் குரலில் மட்டுமே ஒலித்தது. கோமாதா என் குல மாதா படத்தில் பசுவின்
பெருமை கூறும் “அன்பு தெய்வம் நீ எங்கள் என்னை வடிவம் நீ” பாடல் பிரபலம் ஆனது.
தவிர “மணக்கோலம் பார்க்க வந்தேன் மணமகளானேன்” என்ற சிச்சுவேஷன் பாடலும் மிகவும்
பிரபலம் ஆனது. மாட்டு வண்டி ஓட்டிக்கொண்டே பாடுவது போல் அமைந்த “பொழுதுக்கு முன்னே”
பாடலுடன் சேர்த்து மொத்தம் ஐந்து பாடல்கள் பி.சுசீலாவின் குரலில் இடம் பெற்றன.
ராதா படத்தின் பாடல்கள் சங்கர் கணேஷின்
தரத்துக்கு சான்று. “கடவுள் மீது ஆணை”
பாடல் மிக அருமையான வரிகளுடன் சிறப்பாக அமைந்த பாடல். “உன்னை எதிர் பார்த்தேன்
கண்ணா நீ வாராய்” என்ற பாடலின் அருமையான வரிகளை சுசீலாவின் தெளிவான குரல் இன்னும்
ஒரு படி மேலே உயர்த்தி இருக்கும். பி.சுசீலாவின் ஒரு முறையாவது கேட்க வேண்டிய பாடல்
என நினைக்கிறேன். இதே படத்தில் “ஆடியிலே பெருக்கெடுத்து ஆடி வரும் காவேரி” என
ஆடிப்பெருக்கு விழாவுக்காக அமைக்கப்பட்ட பாடல் ஓன்று இடம் பெற்றது. இப்போது
ஆடிப்பெருக்கு நேரத்தில் டிவியிலும், ரேடியோக்களிலும் ஒலிப்பதை கேட்கலாம்.
( ஆடியிலே பெருக்கெடுத்து )
நத்தையில் முத்து படம் கே.ஆர்.விஜயாவின் நூறாவது
படம். தன்னை அறிமுக படுத்திய கே.எஸ்.ஜி அவர்களே 100வது
படத்தையும் இயக்க வேண்டும் என கே.ஆர்.விஜயா கேட்டு நடித்த படம் இது. இதில் “அம்மம்மா எனக்கு அதிசய நெனப்பு தோணுது” என்ற ஒரு பாடலை பாடினார் பி.சுசீலா. சித்தி படத்தில் இடம் பெற்ற “தண்ணீர்
சுடுவதென்ன” பாடல் காட்சி ஏனோ மனதில் வந்து போனது. ஆனாலும் பாடலில் வித்தியாசம்
தெரிந்தது. அங்கங்கே ஹஸ்கி வாயிசில் பி.சுசீலா சிலிர்ப்பான எக்ஸ்ப்ரஷன்கள் கொடுத்திருப்பார்.
வந்தாளே மகராசி படத்தில் “ஜெயலலிதாவின்
துணிச்சலை சொல்லும் விதமாக “அட தட்டி கேட்க ஆளில்லாமல் கெட்டு
போச்சு நாடு ” என துவங்கும்
ஒரு நாட்டிய நாடக பாடலை பாடி இருந்தார் பி.சுசீலா அவர்கள். வாக்குறுதி படத்தில் “கண்ணே தேடி வந்தது யோகம் ”, “பாடங்களை சொல்லி விடவா”. “தண்ணீரில் மேனி” போன்ற பாடலகள் பி.சுசீலாவின் குரலில் இடம்
பெற்றன. "வீட்டுக்கு வந்த மருமகள்" படத்தில் இடம் பெற்ற “பெண்ணுக்கு சுகம் என்பதும்” பாடலும் குறிப்பிட பட தக்கது.
( பெண்ணுக்கு சுகம் என்பதும் )
1974-ஆம் வருடம்
டாக்டரம்மா, பத்து மாத பந்தம், சொர்கத்தில் திருமணம், வெள்ளிக்கிழமை விரதம், கௌரி,
கை நிறைய காசு, ஒரே சாட்சி. போன்ற சங்கர் கணேஷ் இசை அமைத்த படங்களில் பி.சுசீலா
பாடினார். டாக்டரம்மா படத்தில் “கண்ணருகே வெள்ளிநிலா” “கண்கள் மலரட்டுமே”,
“செல்வங்கள் தேடி வந்தது” போன்ற பாடல்கள் கேட்க சுகமான பாடல்கள்.
( கண்ணருகே வெள்ளிநிலா )
“பத்து மாத பந்தம்” படத்தில் “பூமாலை ஓன்று பூவோ இரண்டு” பாடலை நீண்ட வருடங்களுக்கு பின் ஜிக்கியும், பி.சுசீலாவும் இணைந்து
பாடினர். ஐம்பதுகளில் “மண்ணுலகெல்லாம் பொன்னுலகாக” பாடலில் கேட்ட அதே குரல் வளமும்
இனிமையும் இப்போதும் மாறாமல் ஒலித்தது. டிஎம்எஸ்-பி.சுசீலா பாடிய “கண்ணுக்கும் நெஞ்சுக்கும் இங்கு காட்சி உண்டல்லோ” என்ற பாடலில் சரோஜாதேவி அவர்கள் கல்லூரி பெண்ணாக நடித்திருக்கிறார்.
அவரும் சினிமாவுக்கு வந்து கிட்ட தட்ட 20 வருடங்கள் ஆகி இருந்த
நிலையில் அவரை கல்லூரி பெண்ணாக மக்கள் ஏற்றுக்கொண்டது குறிப்பிட படத்தக்கது.
படத்தில் இன்னொரு குறிப்பிட தக்க பாடல் “ஆத்தோரம் மாமா”. ஆனால்
இப்படத்தில் மீண்டும் ஜிக்கி-AM ராஜா ஜோடியை பாட
வைத்து “எதை கேட்பதோ எதை சொல்வதோ” என்று ஒரு அருமையான பாடலை கொடுத்தார் சங்கர்
கணேஷ் அவர்கள்.
வெள்ளிக்கிழமை விரதம் மிகப்பெரிய
வெற்றிப்படம். சங்கர் கணேஷ் இசையில் எல்லா பாடல்களும் பிரபலம் ஆகின.. “தேவியின்திருமுகம் தரிசனம் தந்தது”. “ஜிலு ஜிலு குளுகுளு”, “ஆசை அன்பு இழைகளினாலே” என
எல்லாமே ஹிட்ஸ். “எதையோ நினைத்ததுண்டு” என்ற பாடலும் குறிப்பிட படத்தக்கது.
சொர்க்கத்தில் திருமணம் படத்தில் “நானா பாடினால்”. “உன்னைத்தானே” போன்ற பாடல்கள்
கேட்கலாம் ரகம்.
1975-இல் அன்பு ரோஜா, இது
இவர்களின் கதை. ஒரு குடும்பத்தின் கதை. “பட்டிக்காட்டு ராஜா. தங்கத்திலே வைரம், “கதவை
தட்டிய மோகினி பேய்”. “நம்பிக்கை நட்சத்திரம்” போன்ற சங்கர் கணேஷ் இசை அமைத்த
படங்களில் பாடினார் பி.சுசீலா. இதில் “ஏனடா கண்ணா இந்த பொல்லாத்தனம்”, “பால் நிலவுநேரம்” ( அன்பு ரோஜா) ஆனந்த இல்லம் (இது இவர்களின் கதை). “மகாராஜன் வந்தான்”, “கற்பனையில்மிதந்தபடி” (ஒரு குடும்பத்தின் கதை) “கண்ணன்யாரடி”, “கொஞ்சும் கிளி வந்தது” (பட்டிக்காட்டு ராஜா) போன்ற பாடல்கள் மக்கன்
கவனத்தை ஈர்த்தவை.
List of Songs between 1973-1975
தொடரும்...
List of Songs between 1973-1975
1973 | Tamil | amman arul | ontre ontru nee thara |
1973 | Tamil | amman arul | saatchi solla antru deivam |
1973 | Tamil | iraivan irukkintran | azhage un peyar |
1973 | Tamil | komatha en kulamatha | anbu deivam nee engal annai |
1973 | Tamil | komatha en kulamatha | mana kolam paarkka vanthen |
1973 | Tamil | komatha en kulamatha | pattum padamal |
1973 | Tamil | komatha en kulamatha | pozhudhukku munnE |
1973 | Tamil | komatha en kulamatha | varuga varuga thalaiva |
1973 | Tamil | nalla mudivu | kaatu roja mugathai |
1973 | Tamil | nalla mudivu | maamaa veetu kalyanathila |
1973 | Tamil | nalla mudivu | mullai poo pola irandu |
1973 | Tamil | nalla mudivu | nee intri naanillai [1] |
1973 | Tamil | nathayil muthu | Ammamma enakku |
1973 | Tamil | raadha | kanna.. Unnai edhirpaarthen |
1973 | Tamil | raadha | ontralla irandalla |
1973 | Tamil | raadha | Adiyile perukkeduthu |
1973 | Tamil | raadha | hari hari giridari |
1973 | Tamil | raadha | Kadavul meethu aanai |
1973 | Tamil | vaakkuruthi | kannE thEdi vanthathu |
1973 | Tamil | vaakkuruthi | paadangaLai sollida vaa |
1973 | Tamil | vaakkuruthi | thanneeril meni |
1973 | Tamil | vanthale maharasi | ada thatti ketka oru |
1973 | Tamil | veetukku vantha marumagal | pennukku sugam enbathum |
1974 | Tamil | doctoramma | kannarugE velli nilaa |
1974 | Tamil | doctoramma | kanngaL malarattumE |
1974 | Tamil | doctoramma | selvangal thEdi vanthadhu |
1974 | Tamil | gowri | Gokula krishnan |
1974 | Tamil | kai niraya kasu | dei vaada raaja |
1974 | Tamil | kai niraya kasu | kaalam en pakkam |
1974 | Tamil | nalla mudivu | nee intri naanillai -sad[2] |
1974 | Tamil | ore saatchi | vilai pesum kanngaL allavO |
1974 | Tamil | paththu madha bandham | kannukkum nenjukkum ingu |
1974 | Tamil | paththu madha bandham | aathooru maamaa pottaaru |
1974 | Tamil | paththu madha bandham | poo maalai ontru pookkalo |
1974 | Tamil | sorgathil thirumanam | naan paadinaal |
1974 | Tamil | sorgathil thirumanam | unnaithaane nee |
1974 | Tamil | vellikkizhamai viradham | aasaianbu izhaigaLinAlE |
1974 | Tamil | vellikkizhamai viradham | dEviyin thirumugam |
1974 | Tamil | vellikkizhamai viradham | jilu jilu O kuLu kuLu |
1974 | Tamil | vellikkizhamai viradham | edhayO ninaithathundu |
1975 | Tamil | anbu roja | enada kanna intha |
1975 | Tamil | anbu roja | neey llamal |
1975 | Tamil | anbu roja | paal nilavu neram |
1975 | Tamil | anbu roja | pannirendu mani |
1975 | Tamil | idhu ivargalin kadhai | aanandha illam naan kannda |
1975 | Tamil | idhu ivargalin kathai | idathu kann adaikkadi |
1975 | Tamil | idhu ivargalin kathai | panguni entraalum |
1975 | Tamil | kathavai thattiya mohini peai | sirithu sirithu sivakka |
1975 | Tamil | nambikkai natchathiram | muthuchcharame |
1975 | Tamil | oru kudumbathin kadhai | maharaajan vanthaan |
1975 | Tamil | oru kudumbathin kadhai | karpanayil midhnathapadi |
1975 | Tamil | pattikkattu raja | kannan yaaradi kalvan |
1975 | Tamil | pattikkattu raja | kanneer yenadi |
1975 | Tamil | pattikkattu raja | konjum kili vanthathu |
1975 | Tamil | thangathile vairam | antha pakkam paarthal |
தொடரும்...