சங்கர் கணேஷ்
அவர்களுடன் பி.சுசீலாவின் இசை பயணம்
சங்கர் கணேஷ் அவர்கள் பல வருடங்கள் எம்.எஸ்.வியிடம் உதவியாளர்களாக பணி ஆற்றியவர்கள் என்பதால் டி.எம்.எஸ்
மற்றும் பி.சுசீலா அவர்களுடன் ஓரளவு நல்ல அறிமுகம் இருந்தது. அதனால் சங்கர் கணேஷ்
இசை அமைத்த முதல் படமான “மகராசி”
படத்திலேயே எல்லா பாடல்களையும் டி.எம்.எஸ் மற்றும் பி.சுசீலா இணைந்து பாடினர்.
“ஆண் தொடாத கன்னி பெண்ணை”, “வாழ்வில் புது மணம் மணம்” போன்ற பாடல்கள் ஓரளவு நல்ல
அறிமுகத்தை கொடுத்தன.
அதை தொடர்ந்து வெளிவந்த “ஆயிரத்தில்
இருவர்”, “மயிலாடும் பாறை மர்மம்” போன்ற படங்களிலும் இசை சுமாராகவே அமைந்தது. அதை
தொடர்ந்து “அக்கா தங்கை” படத்தில் “ஆடுவதுவெற்றி மயில்”, “ குருவிகளா குருவிகளா” என ஒரு கல்லூரி பின்னணியில் சில பாடல்கள்
இடம் பெற்றன.
1970-இல் வெளிவந்த கண்ணன்
வருவான் படத்தில் இடம் பெற்ற “பூவினும் மெல்லிய பூங்கொடி” பாடல் சிறந்த பாடல்களில்
ஓன்று. அதே போல் “காலம் வெல்லும் படத்தில்” இடம் பெற்ற “எல்லோரும் திருடர்களே”
பாடல் பி.சுசீலாவின் Versatility-க்கும் சங்கர் கணேஷின் திறமைக்கும் இன்னொரு சான்று.
மாணவன் படத்தில்
எல்லா பாடல்களுமே ஹிட் ஆன பாடல்கள். “விசிலடிச்சான்
குஞ்சுகளா”. “கல்யாண ராமனுக்கும்”, “சின்ன சின்ன பாப்பா வாப்பா சேதியை கேளப்பா” போன்ற பாடல்கள் இனிமையாக அமைந்தன. அதை
தொடர்ந்து வந்த “ராணி யார் குழந்தை” படத்திலும் “சின்ன சின்ன
பாப்பா சிங்கார பாப்பா ” என்ற
குழந்தைகளுக்கான பாடலும் கேட்க இனிமையாக அமைந்தன.
.
“தேன் கிண்ணம்” படத்தில் இடம் பெற்ற “தேன் கிண்ணம் தேன் கிண்ணம் பருவத்தில்பெண் ஒரு தேன்கிண்ணம்” பாடலும் இன்னொரு மறக்க முடியாத பாடல்.
1972-ஆம் வருடம் சங்கர்
கணேஷுக்கு திருப்புமுனை வருடம் என்று சொல்லலாம். “இதய வீணை”, “நான் ஏன் பிறந்தேன்”,
“புகுந்த வீடு”, “தாய்க்கு ஒரு பிள்ளை”. “வரவேற்பு”. “பொன்மகள் வந்தாள்”, “ஹலோ
பார்ட்னர்”. “அஸ்திவாரம்”. “அவள்”, “கண்ணம்மா”. “அன்னை அபிராமி” என பல படங்களுக்கு
இசை அமைத்தனர். இதய வீணை “பொன்னந்தி மாலை பொழுது”, “நீராடும் அழகெல்லாம்” பாடல்களை
பற்றி சொல்லவே தேவை இல்லை. பட்டி தொட்டி எல்லாம் ஹிட் ஆனா பாடல்கள். அதை போல் “நான்
ஏன் பிறந்தேன்” படத்தில் “உனது விழியில் எனது பார்வை”, “என்னம்மா சின்ன பொண்ணு”
பாடல்களும் ஹிட் ஆனது. அதே போல் “புகுந்த
வீடு” படத்தில் “நான் உன்னை தேடுகிறேன், நாள் தோறும் பாடுகிறேன்” பாடல் பிரபலம் ஆனது. “கண்ணன் பிறந்த வேளையிலே அந்த
தேவகி இருந்தால் காவலிலே” பாடல் குறிப்பிடத்தக்க பாடல்.
அவள் படத்தில் இடம் பெற்ற “அடிமை நான்ஆணையிடு” பாடல் பி.சுசீலாவால் எந்த விதமான பாடலையும் பாட முடியும் என்பதற்கு
இன்னொரு உதாரணம். சின்ன சின்னதாய் நிறைய எக்ஸ்ப்ரஷன்கள் நிறைந்த மயக்கும் பாடல். இன்னமும்
ஹிட் ஆகி இருக்கலாம் என தோன்றும். “ஹலோ பார்ட்னர்” படத்தில் “கன்னங்கள் சிவப்பது
எதனாலே” பாடல் குறிப்பிடத்தக்க பாடல். தாய்க்கு ஒரு பிள்ளை படத்தில் “கல்யாண ராமன்
கோலம் கொண்டான்”, “நான் காதல் கிளி” என சில நல்ல பாடல்கள் இடம் பெற்றன. “பொன்மகள்
வந்தாள்” படத்தில் “எந்தன் தேவனின் பாடல்என்ன?” பாடல் கேட்க இனிமையான டூயட். கண்ணம்மா படத்தில் “தென்ன மர தோப்புக்குள்ள”
என்ற டூயட் கிராமிய மணம் வீசும் வண்ணம் அமைந்தது. வரவேற்பு படத்தில் “பொன்வண்ண
மாலையில்” குறிப்பிட பட தகுந்த பாடல்.
அன்னை அபிராமி என்ற பக்தி படத்துக்கும் இசை
அமைத்தார் சங்கர் கணேஷ் அவர்கள். அதில் பி.சுசீலா கிட்டத்தட்ட 13 பாடல்களை பாடினார். எல்லா பாடல்களும் தரமான பாடல்களே. “மாகாளி மகமாயி சாமுண்டி”,
“இல்லை என்பான் யாரடா”,
“அகரமுகமாகி அதிபனுமாகி
அதிகமுமாகி”, “வருக
வான் மழையே”. “ கண்ணாலே
கோபுரங்கள் காண வேண்டும்” போல பல
பாடல்கள் கவனத்தை ஈர்த்த பாடல்கள்.
1967 | Tamil | F | maharasi | aalaip paarthaal |
1967 | Tamil | F | maharasi | aan thodaatha kanni |
1967 | Tamil | F | maharasi | oh oh thottu pesungal |
1967 | Tamil | F | maharasi | pesi pesiye |
1967 | Tamil | F | maharasi | vaazhvil puthu maNam |
1967 | Tamil | F | aayirathil iruvar | paruvam kavithaiyaga |
1967 | Tamil | F | aayirathil iruvar | sethuko sethukko |
1967 | Tamil | F | naan yar theriyuma | ninaithaal maNakkum kidaithaal |
1967 | Tamil | F | naan yar theriyuma | vidiyum mattum pesalaam |
1968 | Tamil | F | mayiladum parai marmam | mayiladum paarai |
1968 | Tamil | F | mayiladum parai marmam | vegam miguntha |
1969 | Tamil | F | akka thangai | Aduvathu vetrimayil minnuvathu |
1969 | Tamil | F | akka thangai | kuruvigala kuruvigala ullaasa |
1969 | Tamil | F | kadavul thantha selvam | naana aadugiren |
1970 | Tamil | F | kaalam vellum | ennaanga sammandhi |
1970 | Tamil | F | kaalam vellum | Ellorum thirudargale |
1970 | Tamil | F | kannan varuvan | nilavukku povom |
1970 | Tamil | F | kannan varuvan | poovinum melliya poongodi |
1970 | Tamil | F | kannan varuvan | kannan varuvan intru kannan |
1970 | Tamil | F | maanavan | Visiladichaan kunjugaLa |
1970 | Tamil | F | maanavan | Kalyana ramanukkum kannana |
1970 | Tamil | F | maanavan | chinna chinna paapa |
1971 | Tamil | F | kettikkaran | paarthEn paarkkaatha azakE |
1971 | Tamil | F | kettikkaran | then sotta sirikkum |
1971 | Tamil | F | raani yaar kuzhanthai | raja en mohathai |
1971 | Tamil | F | raani yaar kuzhanthai | chinna chinna |
1971 | Tamil | F | raani yaar kuzhanthai | chinna chinna papa(sad) |
1971 | Tamil | F | raani yaar kuzhanthai | enge kidaikkum |
1971 | Tamil | F | then kinnam | kadhalo kadhal |
1971 | Tamil | F | then kinnam | Then Kinnam Then |
1972 | Tamil | F | annai abhirami | agaramumaagi |
1972 | Tamil | F | Annai abhirami | annai enathannai |
1972 | Tamil | F | Annai abhirami | pesatha deivamellam |
1972 | Tamil | F | Annai abhirami | ilangai vendhan aasaiyaal |
1972 | Tamil | F | annai abhirami | kannale gOpurangaL |
1972 | Tamil | F | Annai abhirami | ariyanaiyil poy irunthu |
1972 | Tamil | F | Annai abhirami | seerkonda vadhanangal |
1972 | Tamil | F | Annai abhirami | sirappinai purinthathale |
1972 | Tamil | F | Annai abhirami | maanilathil kaamatchi |
1972 | Tamil | F | Annai abhirami | vazhum uyirai |
1972 | Tamil | F | Annai abhirami | sambo sankara mahadeva |
1972 | Tamil | F | Annai abhirami | vettaiku vanthanaya |
1972 | Tamil | F | Annai abhirami | maakaali |
1972 | Tamil | F | asthivaaram | punnagai minnidum |
1972 | Tamil | F | asthivaaram | annan alla thanthai |
1972 | Tamil | F | aval | adimai naan anaiyidu |
1972 | Tamil | F | aval | boys and girls |
1972 | Tamil | F | aval | Geetha oru naal pazhagum |
1972 | Tamil | F | hello partner | kannangal sivappathu |
1972 | Tamil | F | idhaya veenai | neeradum azhagellam |
1972 | Tamil | F | idhaya veenai | ponnandhi maalaipozhuthu |
1972 | Tamil | F | kannamma | adhiga nAtkaL nenjOdu |
1972 | Tamil | F | kannamma | thennamara thOppukkuLLE |
1972 | Tamil | F | naan en piranthen | ennamma chinna ponnu |
1972 | Tamil | F | naan en piranthen | unadhu viziyil enadhu |
1972 | Tamil | F | ponmagal vandhaal | endhan devanin paadal |
1972 | Tamil | F | ponmagal vandhaal | maalai soodum naalai |
1972 | Tamil | F | pugundha veedu | kannan pirantha vElayile |
1972 | Tamil | F | pugundha veedu | naan unnai thedugirEn |
1972 | Tamil | F | pugundha veedu | neeye sollu enge |
1972 | Tamil | F | thaaikku oru pillai | kalyana raaman kolam |
1972 | Tamil | F | thaaikku oru pillai | maadhulai muthukkal |
1972 | Tamil | F | thaaikku oru pillai | naan kaadhal kili |
1972 | Tamil | F | thaaikku oru pillai | vaazha vendum manam |
1972 | Tamil | F | varaverppu | pon vanna maalayil |
தொடரும் ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக