பின்பற்றுபவர்கள்

ஞாயிறு, 26 மார்ச், 2017

சங்கர் கணேஷ் இசையில் பி.சுசீலா பாடிய பாடல்கள் - 3




சங்கர் கணேஷ் இசையில் “டி.எம்.எஸ்” பி.சுசீலா பாடிய சில இனிமையான ஜோடிப்பாடல்களை பார்ப்போம்.

  


  சங்கர் கணேஷுக்கு கிடைத்த மிக பெரிய ஹிட் இந்த பாடல். எம்.ஜி.ஆர் நடத்த பாடல் காட்சி என்பதால் பட்டி தொட்டி எங்கும் பிரபலம் ஆன பாடலிது.
  


உனது விழியில் எனதுபார்வை ( நினைத்ததை முடிப்பவன் )
     
     இன்னொரு அருமையான மெலடி. சங்கர் கணேஷுக்கு நல்ல பெயர் வாங்கி கொடுத்தன இப்பட பாடல்கள். 


என்னம்மா சின்னபொண்ணு ( நினைத்ததை முடிப்பவன் )



ஆசை அன்பு இழைகளினாலே ( வெள்ளிக்கிழமை விரதம் )

      தேவர் பிலிம்ஸ் தயாரித்த திரைப்படங்களில் எல்லாம் பெரும்பாலான பாடல்கள் பி.சுசீலாவின் குரலில் ஒலிக்குமாறு பார்த்துக்கொள்வார். அது குன்னக்குடியாக இருந்தாலும் இளையராஜாவாக இருந்தாலும் சரி தேவர் இருந்த வரை அவர் படங்களில் பி.சுசீலாவின் குரலை பயன் படுத்தினார்.  அதனால் தான் என்னவோ சங்கர் கணேஷ் இசை அமைத்த எல்லா தேவர் பிலிம்ஸ் படங்களிலும் பி.சுசீலா பாடி இருந்தார். 

தேவியின் திருமுகம் தரிசனம்தந்தது ( வெள்ளிக்கிழமை விரதம் )

    பாம்பை முன்னிலை படுத்தி எடுத்த வெள்ளிக்கிழமை விரதம் மிக பெரிய ஹிட். பாடல்களும் ஹிட்.


நீ மேகம் ஆனால் என்ன ( தாயில்லா குழந்தை )

   

பருத்தி எடுக்கையிலே என்னை ( ஆட்டுக்கார அலமேலு )

   அன்னக்கிளியில் இளையராஜாவின் கிராமிய இசை கலந்த பாடல்கள் வெற்றி பெற்றதை தொடர்ந்து அதன் தொடர்ச்சியாக பல படங்கள் கிராமிய கதைகளை தாங்கி வந்தன. ஒரு ஆட்டை முன்னிலை படுத்தி தேவர் தயாரித்த "ஆட்டுக்கார அலமேலு" மிக பெரிய ஹிட். இப்படம் தெலுங்கிலும் "Pottelu punnamma" என்ற பெயரில் தயாரிக்க பட்டது. பாடல்கள் மிக பெரிய ஹிட்களாக அமைந்தன.



தாகம் தீர்ந்ததடி அன்னமே ( ஆட்டுக்கார அலமேலு )







    ரஜினிகாந்த் அவர்கள் தேவர் பிலிம்ஸ்க்காக நடித்த ஆரம்ப கால படங்களில் ஓன்று 
"தாய் மீது சத்தியம்". இதில் டி.எம்.எஸ் ரஜினிக்காக பின்னணி பாடினார். ஓரளவு பொருத்தமாகவே இருக்கிறது. 



பாபு பாபு பாபு இங்கேகோபு கோபு ( தாய் மீது சத்தியம் )



வடிவேலன் மனசு வச்சான்மலர வச்சான் ( தாயில்லாமல் நானில்லை )
     கமல் தேவர் பிலிம்சுக்காக நடித்த படங்களில் "தாயில்லாமல் நானில்லை" படமும்  ஒன்று. அன்றைய கால கட்டத்தில் மிக  பெரிய ஹிட்டுகளில் ஓன்று. சங்கர் கணேஷ் அடுத்த தலைமுறைக்கும் தன்னால் இசை அமைக்க முடியும் என நிரூபித்த பாடல தான் "நடிகனின் காதலி" பாடல். வடிவேலன் மனசு வச்சான் பாடலும் மிக பிரபலம் ஆகிய பாடல் தான் .  


    ஒரு மேடை நாடகம் பாடல் வடிவில் இடம் பெற்றது. கமல் தி.எம்.எஸ்ஸின் கம்பீர குரலுக்கு ஈடு கொடுக்க முடியாமல் சமாளிப்பது நன்றாகவே தெரிகிறது. 



அவன் தொடாத பூக்கள் ( சிவப்பு மல்லி )

   ரொம்பவே  வித்தியாசமான பாடல். ஒரு படத்தில் முக்கியமான திருப்பம் இந்த ஒரு பாடலிலேயே காட்சி படுத்தப்பட்டது. ராமராஜன் கதாநாயகனாக அறிமுகமானது 1986-இல் என்றாலும் இப்படத்திலும் ஒரு சிறிய ரோலில் தளி காட்டி இருக்கிறார். இபாடல் காட்சியிலும் அவர் நடித்திருக்கிறார்.  



ஆத்தங்கரையினிலே தென்னங்காத்து (எதிர் வீட்டு ஜன்னல்)
     சுதாகர் ராதிகா நடித்த ஆரம்ப கால படங்களில் ஒன்று "எதிர் வீட்டு ஜன்னல்".. இது ஒரு நல்ல கிராமிய பாடல். 






  கே,ஆர்.விஜாயவின் நூறாவது படம் "நத்தையில் முத்து". கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் படங்களுக்கு வழக்கமாக இசை அமைக்கும் எம்.எஸ்.வியை தவிர்த்து சங்கர் கணேஷுக்கு KSG இந்த வாய்ப்பை அளித்தது ஆச்சரியம். இப்படத்தில் ஒரு பாடல் தவிர மீதி பாடல்களை கே.ஆர்.விஜயாவுக்காக  "ராதா ஜெயலக்ஷ்மி" பாடியிருப்பது இன்னொரு ஆச்சரியம்.  இருந்தாலும் இப்பாடல் மனதை கவரும் வகையில் இனிமையாகவே இருக்கிறது. 

List of Duest by TMS and P.Sushela in Shanker Ganesh Music.

1967Tamilmaharasipesi pesiye
1967Tamilmaharasivaazhvil puthu maNam
1967Tamilmaharasiaalaip paarthaal 
1967Tamilnaan yar theriyumaninaithaal maNakkum kidaithaal
1967Tamilnaan yar theriyumavidiyum mattum pesalaam
1968Tamilmayiladum parai marmammayiladum paarai
1969Tamilakka thangaiAduvathu vetrimayil minnuvathu
1969Tamilakka thangaikuruvigala kuruvigala ullaasa
1970Tamilkannan varuvannilavukku povom
1970TamilmaanavanVisiladichaan kunjugaLa
1970Tamilkaalam vellumennaanga sammandhi
1971TamilkettikkaranpaarthEn paarkkaatha azakE
1971Tamilkettikkaranthen sotta sotta sirikkum
1972Tamilasthivaarampunnagai minnidum
1972Tamilasthivaaramannan alla thanthai
1972Tamilidhaya veenaiponnandhi maalaipozhuthu
1972Tamilkannammathennamara thOppukkuLLE
1972Tamilnaan en piranthenennamma chinna ponnu
1972Tamilnaan en piranthenunadhu viziyil enadhu 
1972Tamilpugundha veeduneeye sollu enge 
1972Tamilvaraverppupon vanna maalayil
1973Tamilamman arulsaatchi solla antru deivam 
1973Tamilnathayil muthuAmmamma enakku adhisaya
1973TamilvaakkuruthikannE thEdi vanthathu
1973TamilvaakkuruthipaadangaLai sollida vaa
1973Tamilveetukku vantha marumagalpennukku sugam enbathum
1974Tamilpaththu madha bandhamkannukkum nenjukkum ingu
1974Tamilpaththu madha bandhamaathooru maamaa pottaaru
1974Tamilsorgathil thirumanamnaan paadinaal
1974Tamilsorgathil thirumanamunnaithaane nee
1974Tamilvellikkizhamai viradhamaasaianbu izhaigaLinAlE
1974Tamilvellikkizhamai viradhamdEviyin thirumugam
1974Tamilvellikkizhamai viradhamjilu jilu O kuLu kuLu
1976Tamilore thanthaimaanikkath ther ontru
1976Tamilthaayilla kuzhanthaiidhu oru thiruppam
1976Tamilthaayilla kuzhanthaivellikkizhamai idhu 
1976Tamilthaayilla kuzhanthainee mEgam aanaal enna
1977Tamilaattukkaara alameludhaagam theernthathadi 
1977Tamilaattukkaara alameluparuthi edukkayile 
1977Tamilsorgam naragamirandu kiligal sErnthu 
1977Tamilsorgam naragammallu vEti madichi kattum
1977Tamilsorgam naragampoovum pottum ingE 
1978Tamilthaai meedhu sathiyambabu babu babu enge
1978Tamilthaai meedhu sathiyamneram vanthachu nalla yogham
1978Tamilpunniya bhoomimanja pattu vepillai
1979Tamilthaayillaamal naanillaikadal ellam kondal
1979Tamilthaayillaamal naanillaivadivElan manasu vachaan
1979Tamilthaayillaamal naanillaivanakkam vanakkam
1979Tamilsakka podu podu rajamanaikka ther
1980Tamiledhir veetu jannalaathankarayile
1981Tamiljaathikkoru nedhiyethamadi yetham idhu 
1981Tamilsivappu mallioorukkulle-drama
1981TamilSivappu malliavan thodatha pookkal
1982Tamilnenjangalachchappadum anbuk kiLi
1982Tamiloorum uravumnalla padikkanum
1982Tamilthunailife is a game
1988Tamilkalyaana valayosaikattiya kottai

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக