பின்பற்றுபவர்கள்

செவ்வாய், 27 ஆகஸ்ட், 2013

பி.சுசீலா - திருப்பாவை- பக்தி பாடல்கள் வரிசை - 6

ஆண்டாள் திருப்பாவை 
ஆண்டாள் தமிழத்தில் 8ம் நூற்றாண்டில் வாழ்ந்த வைணவ ஆழ்வார்களுள் ஒருவர். வைணவம் போற்றும் 12 ஆழ்வார்களில் இவர் ஒருவரே பெண்ணாவார். ஆண்டாள், திருப்பாவைநாச்சியார் திருமொழி என்னும் இரண்டு பாடற் தொகுதிகளை இயற்றியுள்ளார்.வைணவ சமய நூல்கள் கூறும் இவரது வரலாறு, இறைவன் மீது இவர் கொண்டிருந்த காதலை விளக்கும் வித்தியாசமான ஒரு வரலாறாகும்.

                                                ஒரு குழந்தையாக, ஆண்டாள், துளசிச் செடியின் கீழ் கிடந்தபோது, மதுரைக்கு அண்மையிலுள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் என்னும் ஊரில் வசித்துவந்த விஷ்ணுசித்தர் (பெரியாழ்வார்) என்னும் அந்தணர் ஒருவரால் கண்டெடுக்கப்பட்டாள். இவ்வந்தணர்திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலுக்கு மலர்கள் கொய்து கொடுப்பதைத் தமது கடமையாகக் கொண்டவர். தனக்கெனக்குடும்பம் எதுவும் இல்லாதிருந்த நிலையிலும், குழந்தை தனக்கு இறைவனால் வழங்கப்பட்ட கொடை எனக் கருதி வளர்த்து வரலானார். அவர் அக்குழந்தைக்கு இட்ட பெயர் கோதை.
இளம் வயதிலேயே சமயம், தமிழ் என்பன தொடர்பில் தனக்குத் தெரிந்த அனைத்தையுமே விஷ்ணுசித்தர் கோதைக்குச் சொல்லிக் கொடுத்தார். இதனால் கோதை, இளம் வயதிலேயே கண்ணன் மீது மிகுந்த பக்தியுணர்வு கொண்டவராயும், தமிழில் நல்ல திறமை கொண்டவராகவும் இருந்தார். சிறு வயதிலேயே கண்ணன் மீதிருந்த அளவற்ற அன்பு காரணமாக அவனையே மணம் செய்துகொள்ள வேண்டுமென்ற எண்ணத்தையும் வளர்த்துக்கொண்டார். தன்னைக் கண்ணனின் மணப்பெண்ணாக நினைத்துப் பாவனை செய்துவந்தார். கோயிலில் இறைவனுக்கு அணிவிப்பதற்காக விஷ்ணுசித்தர் தொடுத்து வைத்திருக்கும் மாலைகளை ஒவ்வொரு நாளும் அவருக்குத் தெரியாமல் தான் அணிந்து கண்ணனுக்கு ஏற்றவளாக தானிருக்கிறோமா என்று கண்ணாடியில் பார்த்து மகிழ்ந்து பின்னர் திரும்பவும் கொண்டுபோய் வைத்துவந்தார். இதனால் கோதை சூடிய மாலைகளே இறைவனுக்கும் சூடப்பட்டன. ஒருநாள் இதனை அறிந்து கொண்ட விஷ்ணுசித்தர் கோதையைக் கடிந்துகொண்டார். அவள் சூடிய மாலையை ஒதுக்கிவிட்டுப் புதிய மாலை தொடுத்து இறைவனுக்கு அணிவித்தார். அன்றிரவு இறைவன் அவரது கனவில் தோன்றி கோதை அணிந்த மாலைகளே தனக்குப் உகப்பானவை எனவும் அவற்றையே தனக்குச் சூடவேண்டுமென்றும் கேட்டுக்கொண்டாராம். இதனாலேயே "சூடிக்கொடுத்த சுடர்க்கொடி" என்றும் இறைவனையே ஆண்டவள் என்ற பொருளில் ஆண்டாள் என்றும் போற்றப்படுகிறார்.
கோதை மண வயதடைந்த பின்னர் அவளுக்காக ஒழுங்கு செய்யப்பட்ட திருமண ஏற்பாடுகளை மறுத்து, திருவரங்கம் (ஸ்ரீரங்கம்) கோயிலில் உறையும் இறைவனையே மணப்பதென்று பிடிவாதமாக இருந்தார். என்ன செய்வதென்று அறியாது கவலையுடனிருந்த விஷ்ணுசித்தருடைய கனவில் தோன்றிய இறைவன், கோதையை மணப்பெண்ணாக அலங்கரித்து திருவரங்கம் கோயிலுக்கு அழைத்துவருமாறு பணித்தாராம். குறித்த நாளன்று கோயிலுக்கு அழைத்துச் செல்லப்பட்ட கோதை, கருவறைக்குள் சென்று இறைவனுடன் கலந்துவிட்டாள் என்பது கதை.

ஆண்டாள் தனது 15ஆம் வயதில் இறைவனுடன் இரண்டறக் கலப்பதற்கு முன் திருப்பாவை, நாச்சியார் திருமொழி என்னும் இரண்டு நூல்களை இயற்றியுள்ளார்.இவ்விரு நூல்களும் அதன் இலக்கிய செழுமைக்கும், தத்துவம்,பக்தி ஆகியவற்றிக்காக மிகுந்து போற்றப்படுகின்றது.
இவரது முதல் படைப்பான திருப்பாவை 30 பாடல்களைக் கொண்டுள்ளது. இத் திருப்பாவையில் ஆண்டாள் தன்னை ஆயர்பாடியில் வாழும் கோபிகையாக நினைத்துக் கொண்டு பாடப்பெற்ற பாட்டுகளின் தொகுப்பாகும்.

நன்றி : விக்கிபீடியா

திரை இசையில் திருப்பாவை பாடல்கள் : 

வருடம்  பாடல்  படம்  இசை 
1968 மார்கழி திங்கள்  திருமால் பெருமை  கே.வி.மகாதேவன் 
1968 வாரணமாயிரம் சூழ  திருமால் பெருமை  கே.வி.மகாதேவன் 
1973 மாலே மணிவண்ணா  திருமலை தெய்வம்  குன்னக்குடி 


தனிப்பாடல்கள் : 


பாடல்  படம் 
அம்பரமே தண்ணீரே  ஸ்ரீ ஆண்டாள் திருப்பாவை 
அங்கன்மா ஞாலத்து  ஸ்ரீ ஆண்டாள் திருப்பாவை 
அன்றி உலகம்  ஸ்ரீ ஆண்டாள் திருப்பாவை 
பூடரை வெல்லும் சீர்  ஸ்ரீ ஆண்டாள் திருப்பாவை 
சிட்டஞ்சிறு காலில்  ஸ்ரீ ஆண்டாள் திருப்பாவை 
ஏலே இளங்கிளியே  ஸ்ரீ ஆண்டாள் திருப்பாவை 
ஏற்ற காலங்கள்  ஸ்ரீ ஆண்டாள் திருப்பாவை 
கனைத்திளங் காட்டெருமை  ஸ்ரீ ஆண்டாள் திருப்பாவை 
கறவைகள் பின்சென்று  ஸ்ரீ ஆண்டாள் திருப்பாவை 
கன்று கறவை  ஸ்ரீ ஆண்டாள் திருப்பாவை 
கீசு கீசென்று எங்கும்  ஸ்ரீ ஆண்டாள் திருப்பாவை 
கீழ்வானம் வெள்ளென்று  ஸ்ரீ ஆண்டாள் திருப்பாவை 
கோதை நாச்சியார்  ஸ்ரீ ஆண்டாள் திருப்பாவை 
குத்து விளக்கெரிய  ஸ்ரீ ஆண்டாள் திருப்பாவை 
மாலே மணிவண்ணா  ஸ்ரீ ஆண்டாள் திருப்பாவை 
மார்கழி திங்கள் மதி  ஸ்ரீ ஆண்டாள் திருப்பாவை 
மாரி மலை  ஸ்ரீ ஆண்டாள் திருப்பாவை 
மாயனை மண்ணு  ஸ்ரீ ஆண்டாள் திருப்பாவை 
முப்பத்து மூவர்  ஸ்ரீ ஆண்டாள் திருப்பாவை 
நாயகனாய் நின்ற  ஸ்ரீ ஆண்டாள் திருப்பாவை 
நோற்று சுவர்க்கம்  ஸ்ரீ ஆண்டாள் திருப்பாவை 
ஓங்கி உலகளந்த  ஸ்ரீ ஆண்டாள் திருப்பாவை 
தூமணி மாடத்து  ஸ்ரீ ஆண்டாள் திருப்பாவை 
உண்டு மடக்களிப்பன்  ஸ்ரீ ஆண்டாள் திருப்பாவை 
உங்கள் புழக்கடை  ஸ்ரீ ஆண்டாள் திருப்பாவை 
வையத்து வாழ்வீர்கள்  ஸ்ரீ ஆண்டாள் திருப்பாவை 
வங்ககடல் கடைந்து  ஸ்ரீ ஆண்டாள் திருப்பாவை 
குலம் தரும் செல்வம்  தெய்வீக வழிபாடு 
கதிரவன் குணதிசை   தெய்வீக வழிபாடு 
ஒருத்தி மகனாய் பிறந்து    தெய்வீக வழிபாடு 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக