பின்பற்றுபவர்கள்

புதன், 19 ஆகஸ்ட், 2015

எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் பி.சுசீலா பாடிய பாடல்கள் - Part 10

1981 முதல் 2009 வரையிலான பாடல்களின் தொகுப்பு.


.               1981-ல் வெளியான தண்ணீர் தண்ணீர் படம் அக்காலத்தில் Trend-Setter  படம் எனலாம். அரசியல் வாதிகளிடம் இருந்து நிறைய எதிர்ப்புகளை சம்பாதித்த படம் என்றாலும் அதுவே பப்ளிசிட்டி ஆகி படம் நல்ல வெற்றியை பெற்றது. பாடல்களும் மிகவும் பிரபலம் ஆகின. படத்தில் "தலையில் இரு குடம், இடுப்பில் ஒரு குடம்" என தண்ணீர் சுமந்து வரும் ஒரு பெண், பாரம் தெரியாமல் இருக்க “மானத்திலே மீன் இருக்க மதுரையிலே நான் இருக்க” என்கிற தெம்மாங்கு பாடலை பாடிக்கொண்டே வருவாள். நடக்கும் பொழுது எழும் சருகு சத்தம், மண் பானையில் அவள் தட்டும் சத்தம் என ஓரிரு வாத்தியங்களை மட்டுமே உபயோகித்து, எம்.எஸ்.வி அவர்கள், அப்பாடலை அழகாக செதுக்கியிருப்பார். தமிழில் அப்பாடலை பாடியது கஸ்தூரி என்ற பாடகி ஆவார்.. “தண்ணீர் தண்ணீர்” படம் “தாகம் தாகம்” என தெலுங்கிலும் வெளிவந்தது. அதில் இப்பாடலின் தெலுங்கு வடிவத்தை “Manasaina Maradalani” என பி.சுசீலா பாடினார். பி.சுசீலாவின் அனுபவம் இப்பாடலை ஒரு படி உயர்த்தி இருப்பதை உணரலாம். படத்தின் முக்கியமான கட்டத்தில் இடம் பெற்ற “கண்ணான பூமகனே” பாடல் மனதைப்பிழியும் பாடல்களில் ஒன்று. மிக குறைந்த வாத்தியங்களுடன் பி.சுசிலாவின் குரல் மட்டுமே பிரதானமாய் ஒலிக்கும் படி பாடலை அமைத்து, அதுவும் பல்லவிக்கும் சரணத்துக்கும் இடையில் கேட்கும் இசையை குறைத்து தொடர்ச்சியாக பாடலை பாட வைத்திருப்பார்.  “கண்ணே மணியே ” என பாடும் தாலாட்டுகளுக்கு மத்தியில் “ஊத்து மலை தண்ணீரே” என தன குழந்தையை தாலாட்டும் தாயின் குரலில் தண்ணீருக்காக தவிக்கும் அந்த கிரமாத்தின் ஏக்கத்தை மிக அருமையாய் விளக்கி இருப்பார் வைரமுத்து . “காயப்பட்ட மாமன் இன்று கண்ணுறக்கம் கொள்ளவில்லை, சோகப்பட்ட மக்களுக்கு சோறு தண்ணி செல்லவில்லை” என சூழ்நிலைக்கு ஏற்றவாறு அருமையான வரிகளும், வரிகளை உள்வாங்கி பாடும் பி.சுசீலாவின் குரலும் பாடலுக்கு தனிச்சிறப்பை ஏற்படுத்திக் கொடுத்தன. இப்பாடலுக்கு ஏன் விருது கிடைக்கவில்லை என்பதை விருதுக் கமிட்டியிடம் தான் கேட்க வேண்டும். விருதுக்கு தகுதியான எந்த விஷயம் இல்லை இப்பாடலில் !!? இப்பாடல் தெலுங்கிலும் thaataku bommarinta” என ஒலித்தது.
            “கீழ்வானம் சிவக்கும்” படத்தில் இடம் பெற்ற “கண் கண்ட தெய்வமே” பாடல் பிரபலமான பாடல். சிவாஜியும் சரிதாவும் மாமனார் மருமகளாக நடித்த படம். மாமனார் ஒரு ஊமைப்பெண்ணின் வாழ்வை கெடுத்து  விட்டு நாடகமாடுவதாய் நினைக்கும் சரிதா, சந்தேகத்துடன் பாடுவது போன்ற சூழ்நிலையில் இப்பாடல் ஒலித்தது. பி.சுசீலாவின் குரலிலே அந்த சந்தேகமும், டி.எம்.எஸ் குரலில் சமாளிப்பும்  தெரியும்படி அழகாக இசை அமைத்து இருப்பார் எம்.எஸ்.வி அவர்கள். எண்பதுகளில் சரிதாவுக்கு பி.சுசீலாவின் குரல் அருமையாக பொருந்தியது எனலாம். ரசித்து கேட்க வேண்டிய பாடல்.  கல்தூண் படத்தில் இடம் பெற்ற “சிங்கார சிட்டு தான்” பாடலை டி.எம்.எஸ்ஸும், பி.சுசீலாவும் கோவைத்தமிழில் பாடி இருப்பார்கள். “சிறுவாணி தண்ணீரு என்ற புள்ள” என்ற கோவையின் சிறப்பான “சிறுவாணி தண்ணீரை” கூட குழந்தையை தாலாட்ட பயன் படுத்தி இருப்பார்கள். இப்பாடல்களை மக்கள் பெருமளவில் ரசிக்காதது குறையே.  “மாடி வீட்டு ஏழை படத்தில் “அன்பு எனும் நல்ல தேன் கலந்து நான் கொடுத்தேன் இந்த நல் விருந்து” பாடல் மிகவும் இனிமையான பாடல். அந்த வரிகளும் பி.சுசீலாவின் குரலுக்காகவே எழுதப்பட்டது போல் அத்தனை பொருத்தமாக இருக்கும். “அன்பு எனும் நல்ல தேன் கலந்து இங்கு பி.சுசீலா தந்த இசை விருந்து” என பாடலாம்.  அதே படத்தில் எஸ்.பி.பியுடன் பாடிய “படகு வீடுகளில் பச்சைக்கிளிகள்” பாடலும் குறிப்பிட படத்தக்கது. சத்திய சுந்தரம் படத்தில் சிவாஜி, கே,ஆர்,விஜயா இருவரும்  காமடி கலந்த ரோலில் நடித்திருப்பார்கள். அதில் இடம் பெற்ற “ஊருக்கு நல்லதொரு உபகாரம்” பாடல் குறிப்பிட தகுந்த பாடல். ஒரு குடும்பத்தை சீர் செய்ய சிவாஜியும், கே.ஆர்.விஜயாவும் மார்டன் தோற்றத்தில் வந்து ஆடிப்பாடும் “My Name is Sundaramoorthy”  பாடலை கேட்பதோடு நிறுத்திக்கொள்ளலாம். அமர காவியம் படத்தில் “வாய்யா ராசா வாசல் திறந்திருக்கு” பாடல் சுமாரான பாடல்.
     கோடீஸ்வரன் மகள் படத்தில் “சுஜாதா ஐ லவ் யூ சுஜாதா” பாடல் இப்பாடல் வெளிவந்த கால கட்டங்களில் ஓரளவு பிரபலமாக இருந்தது. அதே படத்தில் “உள்ளத்தில் ஒரு ஊஞ்சல்” பாடலும் குறிப்பிட படத்தக்க பாடல் ஆகும்.  சுஜாதா நடித்த “பாடிப்பறந்த குயில்” படத்தில் “அவனுக்கு தான் தெரியும்” பாடல் மிக நல்ல பாடல். அதே படத்தில் இடம் பெற்ற “நான் ஒரு ரகசியத்தை சொல்லவோ” பாடலும் குறிப்பிட படத்தக்கது. சந்திரசேகர் நடித்த “பட்டம் பதவி” படத்தில் எஸ்.பி.பியுடன் பி.சுசீலா பாடிய “வானத்தை பார்த்திருந்தேன் அதில் வண்ணம்” பாடல் இனிமையான பாடல். கமல், ஸ்ரீபிரியா நடித்த சவால் படத்தில் இடம் பெற்ற “தெரியும் தெரியும் விஷயம் தெரியும்” பாடல் ஓரளவு பிரபலமான பாடல். தெலுங்கில் வெளியான “tolikodi koosindi” என்ற படத்தில் “Eppudo edho choosi”  பாடல் பிரபலம் ஆனது. அத்திரைப்படம் தமிழில் “எங்க ஊர் கண்ணகி” என்ற பெயரில் தமிழில் வெளியானது. அது தமிழில்  “இதை தான் ரொம்ப ரசிச்சேன்” என எஸ்.பி.பி, பி.சுசீலா  குரல்களில் ஒலித்தது.
     இக்கால கட்டத்தில் பக்திப்படங்களும் வெளி வர துவங்கின. தெய்வ திருமணங்கள், தேவி தரிசனம் போன்ற எம்.எஸ்.வி இசை அமைத்த படங்களில் பி.சுசீலா பாடினார். “சமயபுர தாயே”, “நான் தாண்டி நீ”, “வானமும் பூமியும்” போன்ற பாடல்கள் குறிப்பிட படத்தக்கவை.
     அதைப்போல் தெலுங்கிலும் அவ்வப்போது இசை அமைத்தார்  எம்.எஸ்.வி அவர்கள். “Oorikichchina Mata”, “seethalu”, “tholikodi koosindi” இவ்வருடத்தில் எம்.எஸ்.வி இசையில் பி.சுசீலா பாடிய தெலுங்கு படங்கள் ஆகும்.
  

     
     
         
    
                     

     
   
    


     
     
         
    1982-ஆம் வருடம் வெளி வந்த அக்னி சாட்சி படத்தில்  “வணக்கம் முதல் வரியை”  பாடலில் கடிதத்தை பாடலாக்கி அதை அதன் ஒரிஜினாலிட்டி கெடாமல் இசை அமைத்தார் எம்.எஸ்.வி அவர்கள். பி.சுசீலா அவ்வளவு அழகாக பாடி இருப்பார்.!! “அடியே கண்ணம்மா அமைதி என்னம்மா” பாடலும் மிகவும் அழகான பாடல். ரஜினி, ஸ்ரீதேவி  நடித்த போக்கிரி ராஜா படத்தில் இடம் பெற்ற “விடிய விடிய சொல்லித்தருவேன்” பாடல் மிகவும் பிரபலம் ஆகிய பாடல்.
      சிவாஜி நடித்த படங்களில் “ஹிட்லர் உமாநாத்” படத்தில் இடம் பெற்ற “நம்பிக்கையே மனிதனது சாதனம்” பாடல் குறிப்பிட படத்தக்கது. தளர்ந்த நேரத்தில் நம்பிக்கை ஊட்டக்கூடிய பாடல். “வா கண்ணா வா” படத்தில் “புஷ்பங்கள் பால் பழங்கள்”, “கண்ணிரண்டில் மை எழுதி”, “கண்ணா மணி வண்ணா” பாடல்கள் அக்கால கட்டத்தில் ஓரளவு பிரபலம் ஆகிய பாடல்கள். தியாகி படத்தில் “முல்லைப்பூவென நான் பெற்ற பிள்ளை”, “ தொட்டில் கட்டும் யோகம் ஒன்றை” போன்ற பாடல்கள் கேட்கலாம் ரகம். கருடா சௌக்கியமா படத்தில் “சந்தன மலரின் சுந்தர வடிவில்” பாடலும் பரவாயில்லை ரகம். “ஊருக்கு ஒரு பிள்ளை” படத்தில் “முத்து மணி சிரிப்பிருக்க”, “புரியாத வெள்ளாடு” போன்ற பாடல்களும் அவ்வப்போது ரேடியோவில் ஒலித்த பாடல்கள். இப்பாடல்களில் ரசிகர்கள் எதிர்பார்த்த எந்த புதுமையுமே இல்லாமல் எப்போதும் கேட்கக்கூடிய பாடல்கள் போலவே அமைந்ததால் பெரிய அளவில் ரீச் ஆகவில்லை என்பது  எனது அபிப்பிராயம். மகேந்திரன் கதாநாயகனாக நடித்த “பரீட்சைக்கு நேரமாச்சு” படத்தில் “மல்லிகை பூச்சரம் மஞ்சளின் மோகனம்” என மாமியார் மருமகள் உறவை சொல்லும் ஒரு அழகான பாடல் இடம் பெற்றது. பி.சுசீலாவும் வாணி ஜெயராமும் இணைந்து பாடி இருப்பார்கள்.
       தேவியின் திருவிளையாடல் படத்தில் “கண்ணபுர ஊராத்தா” பாடல் பிரமாதமான பாடல். பி.சுசீலாவின் குரல் அப்பாடலுக்கு அத்தனை அழகாக பொருந்தும். கே.எஸ்.ஜி டைரக்ஷனில் ஜெயசித்ரா, சுஜாதா நடிப்பில் வெளியான படம் “நாயக்கரின் மகள்” ஆகும். அப்படத்தில், பி.சுசீலாவும், வாணி ஜெயராமும் இணைந்து  பாடிய “ஆடல் பாடல் ஊடல் கூடல் எதிலும் நாங்கள் ராணி” போன்ற ஒரு கவ்வாலி ஸ்டைல் பாடல் அருமையாக இருக்கும். சுமதி என்ற படத்தில் இடம் பெற்ற “சிங்கார மணிமுத்து” பாடல் அருமையான தாலாட்டு பாடல்.  நான் குடித்துக்கொண்டே இருப்பேன்”  படத்தில் “அந்திவேளை வந்த போது” பாடலை எழுதிய கங்கை அமரன் அவ்வப்போது பேட்டிகளில் அதைப்பற்றி குறிப்பிடுவார்.
    1982-ல் “Bhagya Lakshmi”,  “Nijam Chepithe Nerama”, “O aadadi O Mogudu”,  “pellidu pillalu”. “prema nakshatram” , Sita devi”, “Parvathi malli puttindi”  போன்ற தெலுங்கு படங்களில் எம்.எஸ்.வி இசையில் பி.சுசீலா பாடினார். இதில் “Bhagya Lakshmi” படத்தில் ஒலித்த “Krishna sastry Kavithala” பாடலை குறிப்பிட வேண்டும் என நினைக்கிறேன். தமிழின் அழகை சொல்லும் “தமிழுக்கும் அமுதென்று பேர்” பாடலை இனிய இசையாக தமிழுக்கு தந்த எம்.எஸ்.வி, பி.சுசீலா கூட்டணி, அதற்கு இணையாக  தெலுங்கு மொழிக்கு கொடுத்த பரிசு என இதை சொல்லலாம். “கிருஷ்ண சாஸ்த்ரி கவிதலா, கிருஷ்ணவேணி பொங்குலா” என துவங்கும் பாடலும் கேட்க அத்தனை இனிமையாக இருக்கும். அது மட்டும் அல்ல, அப்படத்தின் பாடல்களான “முரளி கிருஷ்ணா ராரா”, “முவ்வலு பலிக்கேனுரா” ஆகிய பாடல்களுக்கும் சிறந்த இசையை அளித்தார் எம்.எஸ்.வி அவர்கள். 
     இக்கால கட்டத்தில் குறிப்பிட பட வேண்டிய ஒரு விஷயம் இருக்கிறது. தமிழை பொறுத்த வரை வாணி ஜெயராமின் வருகைக்கு பின், எம்.எஸ்.வி இசையில் பி.சுசீலாவுக்கான வாய்ப்புகள் குறையத்துவங்கின. பெரும்பாலான படங்களில் பாடல்கள் இருந்தாலும் அது ஒன்று அல்லது இரண்டு என்ற அளவிலேயே இருந்தது. படங்களில் மொத்த பாடல்களின் எண்ணிக்கையும் நான்கு அல்லது ஐந்து என்ற குறைந்ததும் அதற்கு ஒரு காரணம் என்றாலும், தமிழில் எம்.எஸ்.வி இசையில் வாணியின் ஆதிக்கம் கொஞ்சம் உயர்ந்தே இருந்தது.  ஒரு விஷயம் குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால், எம்.ஜி,ஆர் படங்களில் பி.சுசீலா பாட ஆரம்பித்த பின் ஒரு படத்தில் கூட பி.சுசீலா பாடாமல் இருந்ததில்லை. ஆனால் ஸ்ரீதர் டைரக்ஷனில், எம்.எஸ்.வி இசை அமைத்த “மீனவ நண்பன்” படத்தில் பி.சுசீலா பாடவில்லை. அதுவும் எம்.எஸ்.வி இசையில்....!!!! அதைப்போலவே சிவாஜியின் 200-ஆவது படமான “திரிசூலம்” படத்திலும் பி.சுசீலாவுக்கு வாய்ப்புகள் அளிக்கவில்லை. ஆனால் தெலுங்கு படங்களுக்கு இசை அமைக்கும் பொழுது எல்லா பாடல்களுமே பி.சுசீலாவை சென்றடைந்தது. இந்த வருடத்தில் பார்த்தால் கூட “Bhagyalakkshmi” ( 5 Songs), Nijam chepthe nerama ( 3 songs), Pellidu pillalu ( 6 songs), “Prema nakshatram ( 4 songs), sita devi ( 2songs) என பாடல்களின் எண்ணிக்கை அதிகமாகவே இருந்தது.
             இதே வருடம்  “அங்குரம்” “பஞ்ச பாண்டவர்” என்ற மலையாள படங்களுக்கும் “Eradu Rekhagalu” என்ற கன்னட படத்திலும் எம்.எஸ்.வி இசையில் பாடினார் பி.சுசீலா அவர்கள். “Eradu Rekhagalu” படம் தமிழில் வெளியான “இரு கோடுகள்” படத்தின் ரீமேக் ஆகும். சௌகார் வேடத்தில் சுஹாசினியும், ஜெயந்தி வேடத்தில் கீதாவும் நடித்தார்கள். “புன்னகை மன்னன் பூவிழி கண்ணன்” பாடலுக்கான சிச்சுவேஷன், எம்.எஸ்.வி இசையில் Navarathri Sanjeyali “ என ஒலித்தது. ஸ்ரீப்ரியா கதாநாயாகியாக நடித்த மலையாள படமான “Ankuram” படத்தில் பி.ஜெயச்சந்திரனும் பி.சுசீலாவும் இணைந்து பாடிய Thuyilunaru Kudilukale”  என்ற நடனப்பாடல் இடம் பெற்றது. இது கேரளா கலாச்சாரத்தின் ஒரு பாகமான “கை கொட்டிக்களி” என்ற நடன வடிவம் என நினைக்கிறேன்.



     
     
         
    
                     

     
   
    



     
     
         


                 

     1983-இல் வெளிவந்த சந்திப்பு படத்தில் “ஆனந்தம் விளையாடும் வீடு”,  “சோலாப்பூர் ராஜா கோலாப்பூர் ராணி”  பாடல்கள் குறிப்பிடத்தக்க பாடல்கள் எனலாம். மிருதங்க சக்ரவர்த்தி படத்தில் இடம் பெற்ற “அடி வண்ணக்கிளியே” பாடல் மிக தரமான பாடல். தங்கள் வயதுக்கேற்ற மாதிரி கே.ஆர்.விஜயாவும், சிவாஜியும் நடித்த படங்களில் இதுவும் ஒன்று. கே.ஆர்.விஜயா மரண படுக்கையில் இருக்கும் பொழுது அவர்கள் பாடும் இப்பாடல் மனதைப்பிசையும் வண்ணம் எடுக்கப்பட்டிருக்கும். “நாலு பேருக்கு நன்றி” படத்தில் “என் இதய ராணி தேகம்” பாடல்  கேட்கலாம் ரகம். கோமல் சுவாமிநாதன் படைப்பில் வெளிவந்த “ஒரு இந்திய கனவு” படத்தில் “ஓடக்கரையில் ஒரு புளிய மரம்” கேட்க இனிமையான பாடல் என்றாலும் அந்த அளவு பிரபலம் ஆகவில்லை. இவ்வருடம் “யாமிருக்க பயமேன்” என்ற பக்திப்படத்துக்கும் இசை அமைத்தார் எம்.எஸ்.வி அவர்கள். “வந்தேன் முருகா பத்து மலை”, “கூப்பிட்ட குரலுக்கு”, “யாமிருக்க பயமேன்” போன்ற சில பாடல்களை அப்படத்தில் பாடினார் பி.சுசீலா. “யுத்த காண்டம்” என்ற படத்தில் “யுத்த காண்டம் வென்றது” என்ற பாடல் இடம் பெற்றது. 
    இவ்வருடம் தெலுங்கில் கே.பாலச்சந்தரின் இயக்கத்தில் சரிதா நடிப்பில் கோகிலம்மா என்ற படம் குறிப்பிட படத்தக்கது. வாய்பேச முடியாத ஊமையாக, வீட்டு வேலைகள் செய்து, ஏச்சும் பேச்சும் வாங்கி பிழைக்கும் பெண்ணாக சரிதாவின் கதாபாத்திரம் அமைந்தது. ஒரு கட்டத்தில் அவளது காதலனும் கைவிட்டு விட, “ போடீ போகட்டும் போடீ” என சொல்லி மனதுக்கு தைரியம் சொல்லிகொல்வாள். இதே படம் தான் தமிழில் “இவள் ஒரு தமிழச்சி” என மொழி மாற்றம் செய்யப்பட்டது. இப்படத்தில் “போடீ போகட்டும் போடீ” ( “Ponee pothe ponee” in telugu ) பாடலில் அவள் மொத்த வலியையும் குரலில் கொண்டு வந்து விடுவார் பி.சுசீலா அவர்கள். இப்படத்தில் இடம் பெற்ற  “நீயோ மணிக்குயில் முழக்கம்” (Neelo valapula vasantham) மற்றும் “Komma Meedha koyila” பாடல்கள் தெலுங்கில் மிகவும் பிரபலமாகின. தமிழில் “நீயோ மணிக்குயில் முழக்கம்” எப்போதாவது கேட்கும் பாடல்.
       1984-ல் வெளிவந்த திருப்பம் படத்தில்  “ராகங்கள் என் ஜீவிதங்கள்”  என ஒரு அருமையான பாடல் இடம் பெற்றது. தன்னை  விட்டு பிரிந்து சென்ற காதலனை நீண்ட வருடங்களுக்கு பின் சந்திக்கும் ஒரு மேடைப்பாடகியின் உள்ள குமுறல் பாடலில் தொனிக்கும் வண்ணம் வரிகள் அமைந்திருக்கும். பி.சுசீலா 80-களில் பாடிய அருமையான பாடல்களில் இதுவும் ஒன்று என்பேன். ஆனால் போதிய அளவு பிரபலம் ஆகவில்லை.
      1985-ல் வெளிவந்த “ஜனனி” படத்தில் “மன்னிக்க மாட்டாயா”  என்ற பாடல் மிகவும் அருமையான பாடல். ரொம்ப சுமாரான படம் என்பதால் படம் ஓடவே இல்லை. அதனால் இப்பாடலும் கவனிக்க படமால் போயிற்று. இப்பாடலை ஒரு முறை கேட்டு பாருங்கள். பி.சுசீலாவின் குரலில் தெரியும் feel  உங்களை இப்பாடலை கட்டாயம் ரசிக்க வைக்கும். சுகமான ராகங்கள் படத்தில் “ஆத்தக்கடக்க வேணும் அக்கரைக்கு போக வேணும்” பாடல் அருமையான கிராமியப்பாடல். ஓடத்தில் போய்க்கொண்டே சிவகுமாரும், சரிதாவும் பாடும் பாடல் கேட்க இனிமையாக இருக்கும். அதே போல் “மூணாம்பிறையைப் போல” பாடலும் குறிப்பிட தகுந்த பாடல். “அவள் சுமங்கலி தான்” திரைப்படத்தில் “பொன்மணி பூமகள் வண்ணக்கரங்களில்” என்றார் பாடல் “வளைகாப்பு” நிகழ்ச்சிக்கான பாடல் ஆகும். மூக்கணாங்கயிறு படத்தில் கே.ஆர்.விஜயா மேடையில் பாடுவது போல் அமைந்த  “தலைவா நீ இங்கு வர வேண்டும்” பாடல் ரசிக்க தகுந்த பாடல். ஆனந்த கண்ணீர் படத்தில் “அம்மா நீ வாழ்க” குறிப்பிடத்தக்க பாடல்.


1986-ல்வெளிவந்த படங்களில் “நிலவே மலரே” படத்தின் பாடல்கள் பிரபலமாகின. இத்திரைப்படத்தில் இடம் பெற்ற “மண்ணில் வந்த நிலவே”  பாடல் மிகவும் பிரபலம் ஆனது. மண்ணில் வந்த நிலவே பாடல் சோகமாகவும் ஒலித்தது. கிளைமாக்சில் இடம் பெற்ற “சுதந்திர நாட்டின் அடிமைகளே” பாடலும் குறிப்பிடத்தக்கக பாடல். இத்திரைப்படம் “Muddu Bidda” என்ற பெயரில் தெலுங்கிலும் வெளியானது. மண்ணில் வந்த நிலவே என்ற பாடல் “Chandamama Raavey” என தெலுங்கில் பி.சுசீலாவின் குரலில் ஒலித்தது. இத்திரைப்படம் மலயாளத்தில் “Priyamvadakkoru Pranayageetham” என்ற பெயரில் மொழி மாற்றம் செய்யப்பட்டது. அப்படத்தில் “மண்ணில் வந்த நிலவே பாடல்  “மண்ணில் வெண்ணிலவே” என பி.சுசீலாவின் குரலிலேயே ஒலித்தது.
         எஸ்.ஏ.சந்திரசேகர் தயாரிக்கும் அல்லது இயக்கும் படங்களில் ஒரு பாடலையாவது பி.சுசீலாவை பாட வைப்பதை வழக்கமாக கொண்டிருந்தார்.  (இளையராஜா இசை விதிவிலக்கு). இதை அவரது சட்டம் ஒரு இருட்டறை படத்தில் இருந்தே கவனித்து வந்தால் தெரியும். இவ்வருடம் அவர் இயக்கத்தில் வெளிவந்து, எம்.எஸ்.வி இசை அமைத்த “நிலவே மலரே” தவிர “வசந்த ராகம்” படத்திலும் பி.சுசீலாவை பாட வைத்தார். விஜயகாந்த், ரஹ்மான், சுதா சந்திரன் என மூவரும் நடித்த முக்கோண காதல் கதையின் முக்கியமான கட்டத்தில் “நான் உள்ளதை சொல்லட்டுமா” என்ற பாடல் இடம் பெற்றது. இப்படத்தில் குறிப்பிடத்தக்க பாடல் இது எனலாம்.
    எம்.எஸ்.வி மற்றும் இளையராஜா சேர்ந்து இசை அமைத்த “மெல்ல திறந்தது கதவு” படத்தில் SPB, பி.சுசீலா பாடிய “தில் தில் தில் மனதில்” பாடலும் இவ்வருடத்தில் தான் வெளிவந்து தான் பிரபலம் ஆனது. எம்.எஸ்.வி இசை அமைத்த “மீண்டும் பல்லவி” என்ற படத்தில் “சுகந்தம் மணக்கின்ற வசந்தம்”. “பூமி நிறஞ்சிருக்கு” ஆகிய பாடல்கள் குறிப்பிட படத்தக்கவை.

    அக்னி சாட்சி படம் “Radhamma Kapuram”  என்ற பெயரில் தெலுங்கிலும் வெளியானது. “andindi uttaram”, “challani radhamma”,  “naa kadupu pantaki” ஆகிய பாடல்கள் குறிப்பிட படத்தக்கவை. “Disco Samrat” என எம்.எஸ்.வி இயக்கத்தில் ஒரு தெலுங்கு படம் வெளிவந்தது.   அதில் பி.சுசீலாவின் குரலில் “Kanne vayasu”, “ Lokham oogenule” என இரு பாடல்கள் படத்தில் இடம் பெற்றன.


     
     
         
    
                     

     
   
    




     
     
         


                 
      
   1987-ல் வெளிவந்த “காலம் மாறுது” படத்தில் தமிழ் மொழியின் பெருமை  உணர்த்தும்  “தமிழே தமிழே என்னுயிர் தமிழே”  என்ற  அருமையான பாடல் இடம் பெற்றது. அதே போல் அப்படத்தில் பாரதிதாசன் எழுதிய “யாமறிந்த மொழிகளிலே” பாடலும் கேட்க இனிமையாக இருக்கும். அதிக அளவில் ரீச் ஆகாததற்கு படத்தின் தோல்வி ஒரு முக்கிய காரணம். கூட்டு புழுக்கள் படத்தில் இடம் பெற்ற “இந்த மல்லிகை பூவுக்கு கல்யாணம்” பாடலும் அருமையான பாடல். கல்யாண வயதை கடந்த பெண் தனது  கனவில் திருமணம் செய்து கொள்வது போன்ற சூழ்நிலையில் பாடல் வரும். எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கிய படங்களில் ஒன்றான “சட்டம் ஒரு விளையாட்டு” படத்தில் “ஒரு பிருந்தாவனம் எங்கள் வீடானது” ஒரு நல்ல குடும்ப பாடல் எனலாம். அக்கால கட்டத்தில் ஓரளவு பிரபலம் ஆன பாடலிது. தாலி தானம் படத்தில் “ஒரு புல்லாங்குழல் என்னை அம்மா எனும்” பாடலை வாணி ஜெயராமுடன் இணைந்து பாடி இருப்பார் பி.சுசீலா அவர்கள். “எனக்கு நானும் உனக்கு நீயும்” என்ற இன்னொரு பாடலும் கேட்க இனிமையாக இருக்கும். ரேவதி நடிப்பில் “தெய்வ மகள்” என்றொரு படம் இவ்வருடம் வெளியானது. அதில் “உன்னை ஓன்று கேட்கவோ” பாடல் கேட்க இனிமையான பாடல். “எப்பொழுதும் உன் நினைவே”,உன் நீல விழியாட” போல வேறு பாடல்களும் படத்தில் இடம் பெற்றன. வந்த சுவடே தெரியாமல் மறைந்த படங்களில் இதுவும் ஒன்று. இதே வருடம் வெளிவந்த “முப்பெரும் தேவியர்” என்ற பக்தி படத்தில் “திருமால் அழகா” என்ற பாடலும் கேட்க இனிமையாக இருக்கும். “வேலுண்டு வினையில்லை” என்ற பக்தி படத்திலும் “முத்துக்குமரனை” என்ற பாடலை பாடினார் பி.சுசீலா அவர்கள்.
        எம்.ஜி.ஆர் அவர்கள் மரணத்துக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் “பொன்மன செம்மலுக்கு அஞ்சலி” என்ற பெயரில் ஒரு இசை அஞ்சலி செலுத்தினார் எம்.எஸ்.வி அவர்கள். அதில் “வீணை அறுந்ததம்மா” என்ற பாடலை பாடினார் பி.சுசீலா அவர்கள்.
     1988-ல் வெளிவந்த 3D படமான Super-boy என்ற படம் தமிழ், தெலுங்கு கன்னடம் என்ற மூன்று மொழிகளிலும் தயாரானது. அதில் “உன்னைத்தேடி தென்றல் வர வேண்டும்” என்ற பாடலை ராஜ்குமார் பாரதியுடன் இணைந்து பாடினார் பி.சுசீலா அவர்கள். இப்பாடல் தெலுங்கில் “Velugai neevai” எனவும் கன்னடத்தில் “Hoovey Neenu Nagudira beku” எனவும் ஒலித்தது.  இவை தவிர “Laila”, “Devi Vijayam”,  “Triloka Sundari”, “Madura meenakshi” போன்ற தெலுங்கு படங்களிலும் எம்.எஸ்.வி இசை அமைப்பில் பி.சுசீலா பாடினார்.  வேலுண்டு வினையில்லை படம் தான் தெலுங்கில் “Madura Meenakhi என்ற பெயரில் மொழி மாற்றம் செய்யப்பட்டது.
        1989-ம் வருடம் வரம் படத்தில் இடம் பெற்ற “மகனே மகனே கண்ணுறங்கு”  என்ற தாலாட்டு பாட்டுக்காக தமிழ்நாடு அரசின் விருது பி.சுசீலாவுக்கு கிடைத்தது. அது அவர் பெற்ற மூன்றாவது மாநில விருது. ஏன் அதிக மாநில விருதுகள் பி.சுசீலாவுக்கு கிடைக்கவில்லை எனபது ஒரு ஆச்சரியமான விஷயம். 1969-ல் தான் விருதுகளை வழங்க ஆரம்பித்தார்கள். அப்புறம் மூன்று வருடங்கள் விருது கொடுத்து விட்டு சில வருடங்கள் விருது வழங்குவதை நிறுத்தி வைத்தார்கள். திரும்பவும் சில வருடங்கள் கொடுத்து விட்டு சில வருடங்கள் நிறுத்தி வைத்தார்கள். அதனால் பி.சுசீலாவின் பீக் என்று சொல்லக்கூடிய வருடங்களில் விருது மிக குறைந்த அளவிலேயே வழங்கப்பட்டு இருக்கிறது.
            1990-ல் நியாயங்கள் ஜெயிக்கட்டும் என்ற படத்தில் “ஆனை  கட்டி போரடிக்கும் திராவிட நாடு” என்ற பாடலை மனோ மற்றும் சித்ராவுடன் இணைந்து பாடினார் பி.சுசீலா அவர்கள். இதே வருடம் “ஒளியம்புகள்” என்ற மலையாள படத்துக்கும் இசை அமைத்தார் எம்.எஸ்.வி அவர்கள். இதில் பி.சுசீலாவுடன் இணைந்து "Vishukkili Vilichatheninu enne"  என்ற பாடலை பாடியவர் மலையாள பின்னணி பாடகரான எம்.ஜி.ஸ்ரீகுமார் அவர்கள். அவர் பி.சுசீலாவுடன் இணைந்து பாடிய ஒரே டூயட் இது தான்.
    1991-ல் “இனி ஒரு வசந்தம்” படத்தில் “கண்ணன் எங்கள் பிள்ளை” என்ற பாடலையும் ஞானப்பறவை படத்தில் “நீயும் நானுமா ஆச்சி” என்ற பாடலையும் பாடினார் பி.சுசீலா அவர்கள். அதற்குப்பின் 2009-ல் மீண்டும் “வாலிபன் சுற்றும் உலகம்” படத்தில் டி.எம்.எஸ் மற்றும் பி.சுசீலா இணைந்து எம்.எஸ்.வி இசையில் “தாட்டு பூட்டு தஞ்சாவூரு” என்ற பாடலை பாடினார்கள்.
      இவை தவிர நிறைய பக்திப்பாடல்களையும், தனிப்பாடல்களையும் கூட எம்.எஸ்.வி இசையில் பாடி இருக்கிறார்.  “கிருஷ்ண கானம்” தொகுப்பில் “குருவாயூருக்கு வாருங்கள்”, “கோகுலத்தில் ஒரு நாள் ராதை, “பிருந்தாவனம் என்ன வெகு தூரமா” பாடல்களை பாடல்களை எப்படி மறக்க முடியுமா? அதே போல் “வெங்கட்ரமணா நமோ நமோ” என்ற இசை தொகுப்பிலும் எம்.எஸ்.வி இசையில் பி.சுசீலா சில பாடல்களை பாடினார்.
    அதே போல் வேளாங்கண்ணி மாதா கோயிலுக்காக “வேளாங்கண்ணி வீணை” என்ற இசை தொகுப்பையும் வெளியிட்டார் எம்.எஸ்.வி அவர்கள். இவை தவிர புகழாஞ்சலி என்ற ஆல்பத்தில் “நெஞ்சமெல்லாம் இனிக்குதைய்யா” என்ற பாடலையும் தங்க நிலவே என்ற ஆல்பத்தில் “நான் உன் பாதம் தேடினேன்” என்ற பாடலையும் பாடினார் பி.சுசீலா அவர்கள்.  எம்.எஸ்.வி அவர்கள் இன்னும் சில பக்தி ஆல்பங்களுக்கு இசை அமைத்து அதில் பி.சுசீலா பாடி இருக்கிறார்.


     
     
         
    
                     

     
   
    


     

    எம்.எஸ்.வி அவர்கள் பி.சுசீலாவுக்கு அளித்த பெரும்பாலான பாடல்கள் மிக நல்ல பாடல்கள் என்பதை மொத்த தொகுப்பையும் படித்தால் புரியும்.. சில பாடல்களே சுமார் வகை பாடல்கள் என்ற வகையில் இருந்தது,. ஆனாலும் ஆபாச பாடல்களையோ, தரம் குறைந்த பாடல்களையோ பாட வைக்காமல் ஒரு ராணியைப்போல் அவர் மரியாதை குறையாத வகையில் பாடல்களை கம்போஸ் செய்து பாட வைத்தார்.  சில படங்களில் ஒரே பாடலாக இருந்தாலும் கூட, அது நல்ல பாடலாக அமைந்தது. திரை துறையில் அவ்வப்போது மாற்றங்கள் வந்து கொண்டே இருந்த போது. அதற்கேற்றாற்போல் தங்கள் பாணிகளையும் கொஞ்சம் மாற்றிக்கொண்டாலும் தரத்தில் அவர்கள் கீழே இறங்கவே இல்லை. 
மொத்தத்தில் எம்.எஸ்.வி இசையில் பி.சுசீலா பாடிய பாடல்கள் ரசிகர்களுக்கு திகட்டாத இசை விருந்து தான். இப்படி ஒரு கூட்டணி தமிழ் சினிமா இசை சரித்திரத்தில் இனி வருமா என்பது சந்தகமே..

List of Songs ... 


YearLanguageMovieSongs
1981Tamilamara kaviyamvaaya raajaa vaasal 
1981Tamilanbulla athanaazhakkadal neenthi 
1981Tamilanbulla athanpaavai malar mottu
1981Tamildeivath thirumanagalvirutham
1981Tamildeivath thirumanangalvaanamum bhoomiyjum 
1981Tamildevi darisanamnaan thaandi nee
1981Tamildevi dharisanamsamayapura thaayE
1981Teluguoorikichina maataaadinthi ooru paadinthi
1981Teluguoorikichina maatachoppullu kuttesi
1981Teluguoorikichina maatakodikoosa kothe kothu
1981Teluguoorikichina maatapaidagaali paida
1981Tamilenga oor kannagi (D)idha thaan romba 
1981Tamilkal thoonsingaara chittuthaan
1981Tamilkeezhvanam sivakkumkan kanda deivame 
1981Tamilkodeeswaran magalsujatha I love u sujatha
1981Tamilkodeeswaran magalullathil oru oonjal adhil 
1981Tamilmaadi veetu ezhaipadagu veedugalil pachai
1981Tamilmaadi veetu ezhaianbu ennum nalla 
1981Tamilpaadi parantha kuyilAvanukku than theriyum 
1981Tamilpaadi parantha kuyilNaan oru ragasiyathi 
1981Tamilpattam pathaviVaanathai Paarthirunthen
1981Tamilraanimoongil kaatril
1981Tamilsathiya sundarammy name is sundaramoorthy
1981Tamilsathiya sundaramoorukku nallathoru
1981Tamilsavaaltheriyum theriyum
1981Teluguseethalumatakari ammayi
1981Tamilthanneer thanneerkannana poo magane
1981Telugutholi kodi koosindhiyepudo yedho choosi
1982Tamilagni satchiadiye kannamma amaithi ennamma
1982Tamilagni satchivanakkam muthal variyai
1982Malayalamankuramthakkili thakkili
1982Malayalamankuramthuyilunaru kudilukale
1982Telugubhagya lakshmikanne thanamlone
1982Telugubhagya lakshmiKrishna sashtri kavithala 
1982Telugubhagya lakshmiMurali krishna rara(sad)
1982Telugubhagya lakshmiMurali krishna rara(happy)
1982Telugubhagya lakshmimuvvalu palikenura
1982Tamildeviyin thiruvilayaadalkanna pura ooratha
1982KannadaEradu rekegalunavarathri sanjayalli
1982Tamilgaruda sowkiyama?chandhana malarin sundhara 
1982Tamilhitler umanathnambikkaye manithanathu
1982Tamilmuraipponnuunna nenechi nenachi 
1982Tamilnaan kudithukkonde iruppenanthivelai vantha
1982Tamilnaayakkarin magalaadal paadal oodal [1]
1982Telugunijam chepithe nerammaAndhalaa rayudubaava
1982Telugunijam chepithe nerammaee subha velalo
1982Telugunijam chepithe nerammaphadadhada gundedhada
1982Teluguo adadi o magaduo adadi o magadu
1982Tamiloorukku oru pillaimuthumani chirippirukka[2]
1982Tamiloorukku oru pillaipuriyaadha vellaadu 
1982Malayalampancha paandavar [U]thirayude chilangakal
1982Tamilpareetchaikku neramachumalligai poocharammanjalin
1982TeluguParvathi malli puttindiparijatha kusumoulaka
1982Telugupellidu pillalucheyyetthi jai kottu
1982Telugupellidu pillalumusi musi navvula
1982Telugupellidu pillalupadhaharu prayam
1982Telugupellidu pillaluparuvapu valapula
1982Telugupellidu pillaluvundi vundi gunde 
1982Telugupellidu pillaluvayase velluvaga
1982Tamilpokkiri rajaVidiya Vidiya solli 
1982Teluguprema naksahtrammaasama meghaa maasama
1982Teluguprema naksahtramswargam sukham
1982Teluguprema nakshatramaakali kannula
1982Teluguprema nakshatramjivvu mandi jeevitham
1982Telugusita deviinnella naa tapasu
1982Telugusita deviteluguvandi
1982Tamilsumathisingaara manimuthu(haapy)
1982Tamilsumathisingaara manimuthu(sad)
1982Tamilthyagimullai poovena naan 
1982Tamilthyagithottil kattum yogam 
1982Tamilvaa kanna vaakanna manivanna
1982Tamilvaa kanna vaakannirendil mai ezhuthi
1982Tamilvaa kanna vaaPushpangal paal pazhangal
1983Telugudaham dahammanasaina maradalinee
1983Telugudaham dahamthattaku bommarinta
1983Tamilival oru thamizhachineeyo manikuyil muzhakkam
1983Tamilival oru thamizhachipodee pogattum podee
1983TelugukokilammaKomma meedha kokilamma
1983TelugukokilammaNeelo valapula sughandan
1983TelugukokilammaPonee pothe ponee
1983Tamilmirudanga chkaravarthyadi vannakiliye ingu
1983Tamilnalu perukku nantriEn ithayarani thegam
1983Tamiloru inthiya kanavuodakarayiloru pulia maram
1983Tamilsanthippusolappur raja kolapur rani
1983Tamilsanthippuaanandham vilayaadum 
1983Tamilyaamirukka bayamenkoopitta kuralukku
1983Tamilyaamirukka bayamenvandhen
1983Tamilyaamirukka bayamenyaamirukka bayamen
1983Tamilyuddha gandamyudha gaandam ventrathu
1984Tamildharmam engedharmam enge nyayam
1984Tamiliru medhaigalNee oru kaditham
1984Tamiliru medhaigalambuttukittaru
1984Tamilkrishna gaanambrindavanam enna 
1984Tamilkrishna gaanamGokulathil oru nAL rAdhai 
1984Tamilkrishna gaanamGuruvAyoorukku vArungal 
1984Telugumaanasa veenaevvaridhiee
1984Telugumanasa veenanee neeli nayanala
1984Telugumanasa veenaokanoka thotalo
1984Telugumanasa veenaYevaridhi Ee pilipu
1984Tamilnenjathai allithaakoyil muzhuvadhum 
1984Malayalamthennal thedunna poovuore oru thottathil
1984Tamilthiruppamraagangal en jeevithangal
1985Tamilaval sumangali thanponmani poomagal vanna
1985MalayalamIda Nilangal vayanadan manjalinu
1985Tamiljananimannikka maattaaya un 
1985TamilmookankayiruThalaiva nee ingu vara
1985Tamilnermaiethanai iniya kudumbam
1985Tamilpaartha njyabagam illayoKalla sirippu kattazhagu
1985Tamilsugamana ragangalaathakadkka venum 
1985Tamilsugamana ragangalmoonaam pirayapOla 
1986Tamilaanandha kanneeramma nee vaazhga
1986Telugudisco samratkanne vayasu
1986Telugudisco samratlokham oogenule
1986Kannadamamadeya madileede baditha
1986Tamilmeendum pallavibhoomi neranjirukku ponna
1986Tamilmeendum pallavisugantham manakkintra
1986Tamilmella thiranthathu kathavuDil dil dil manathail
1986Telugumuddula papa (D)chandamama raavey
1986Telugumuddula papa (D)chandamama-sad
1986Telugumuddula papa (D)swathantra bharatha
1986Tamilnilave malaremannil vantha nilave
1986Tamilnilave malaremannil vantha nilave(sad)
1986Tamilnilave malaresuthanthira naatin 
1986MalayalamPriyamvadakkoru Pranayageethammannil vennilave
1986MalayalamPriyamvadakkoru Pranayageethammannil vennilave-sad
1986Teluguradhamma kapuramandindi uttaram
1986Teluguradhamma kapuramchallani radhamma
1986Teluguradhamma kapuramnaa kadupu pantaki
1986Tamilvasantha ragamnaan ulladhai sollattumaa 
1987Teluguagni pushpamgo mahalakshmi laali
1987TamilDeiva magalaarao petreduthar pillai
1987TamilDeiva magalUn neela vizhiyada
1987TamilDeiva magaleppozhthum un ninaive
1987TamilDeiva magalunnai ontru ketkavo
1987Tamilkaalam maaruthuYaamarintha mozhigalile
1987Tamilkadhai kadhayam karanamamen gnjabagam
1987Tamilkoottu puzhukkalintha malligai poovukku 
1987Tamilmupperum deviyarthirumaal azhaga thirumagal 
1987Tamilkaalam maaruthuThamizhe thamizhe ennuyir
1987Tamilsattam oru vilayattuoru brindhavanam engal 
1987Tamilthaali thanamEnakku neeyum unakku
1987Tamilthaali thanamoru pullankuzhal ennai 
1987Tamilvelundu vinayillaimuthukkumaranai
1988Tamilponmana chemmalukku anjaliveenai arunthathamma
1988Telugudevi vijayamlaksminatha
1988Telugudevi vijayamslokam
1988Telugulailagagana sakshiga
1989Telugulailasrustiki moolam prema
1988Kannadasuper boy 3Dhoovey neenu
1988Tamilsuper boy 3Dunnai thedi thendral 
1988Telugusuper boy 3Dvelugai nuvvu
1988Tamilthiriloga sundhari(D)then kinname sel vannamE
1988Teluguthriloka sundarinee andhame
1988Teluguthriloka sundarivalapula veena
1989Tamilen arumai manaivimuthu muthai putharisi
1989Telugumadhura meenakshipaadalankaaraala
1989Telugumadhura meenakshisivananda peeyusha
1989TamilVarammaganE maganE kann urangu
1989TamilVarammagane magane -sad
1990Tamilgnayangal jeyikaatumaanai kaati poradikkum
1990Malayalamoliyambukalvishukkili vilichathenthinenne
1991Tamilgnanaparavaineeyum naanuma achi
1991Tamilini oru vasanthamkannan engal pillai
1991TamilUlavum thenrdal koovamal koovum (resung)
1992Tamilthanga nilave naan un paatham thedinen
1993TamilpughazhanjaliNenjamellam inikkuthamma
1995Tamilarul maarimanjal kungumam
1998Teluguvenkatramana namo namoneeroopu choosinanura
1998Teluguvenkatramana namo namosri venkatesha sevinchu
1998Teluguvenkatramana namo namotere teeyava
2002Tamilmagamaayi thirisooliambikaye Durgaye
2009Tamilvaaliban sutrum ulagamthaattu poottu thanjavooru


நிறைவு பெற்றது ..
நன்றி .,, 

( Part 9 ) (Part 1)