பின்பற்றுபவர்கள்

வெள்ளி, 30 ஆகஸ்ட், 2013

பி.சுசீலா பாடிய கிறிஸ்துவ பாடல்கள்


     கிறிஸ்தவ மதத்தில் Catholic  and Protestant என இரு பிரிவுகளை பெரும்பாலான கிறிஸ்துவர்கள்  பின்பற்றுகிறார்கள். இரு சாராரின்  கடவுளும், பைபிளும் ஒன்று தான் என்றாலும் வழிபடும் முறைகளில் சில வேறுபாடுகள் இருக்கும். கத்தோலிக்க ஆலயங்களில் இயேசு, மேரி மாதா, கிறிஸ்துவின் சீடர்கள், மற்றும் புனிதர்களின் சிலைகள் இருக்கும். Protestant ஆலயங்களில் சிலைகள் இருக்காது. கத்தோலிக்க ஆலயங்களில் பூஜை, தூபம். தீபம் என பல வழிபடும்  முறைகள் உண்டு. Protestant ஆலயங்களில் அவை இருக்காது. இயேசுவை மட்டுமே வணங்குபவர்கள் Protestants என்றால் இயேசுவை வணங்கும் போது கூடவே மாதாவே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் என்றும், புனிதர்களே எங்களுக்காக வேண்டிக்கொள்ளுங்கள் என வேண்டுவது கத்தோலிக்கர்களின் வழிபடும் முறை. இது போல் சில பழக்கங்கள்  மட்டுமே இரண்டையும் வித்தியாசப்படுத்தி காட்டுகிறது.


 ஒரு முறை நான் வேளாங்கண்ணி சென்றிருந்த போது ஒரு ஆர்வத்தில் அங்கிருக்கும் கேசட் கடைகளில் அதிகம் விற்பனை ஆகும் பாடல்கள் பற்றி கேட்டேன். அப்போது அவர்கள், ஜிக்கி, பி.சுசீலா பாடல்களின் கேசட் அதிகம் விற்பனை ஆகும் என்றார்கள். இத்தனை ஆண்டுகள் கழித்தும் அந்த பாடல்களை மக்கள் ரசிக்கிறார்களே என  சந்தோஷமாக இருந்தது. நான் அங்கு சென்ற போது கூட பி.சுசீலா பாடிய அலைகடலின்ஓசையிலேபாடல் ஆலயத்தில் இருந்து ஒலித்துக்கொண்டு இருந்தது. 

                    பி.சுசீலா அவர்கள் நூற்றுக்கும் அதிகமான கிறிஸ்தவ பாடல்களை பாடி இருக்கிறார்கள். 60-களின் துவக்கத்தில் கொலம்பியா ரிகார்டிங் கம்பனி ஒரு கிறிஸ்தவ கீர்த்தனைகள் அடங்கிய ஆல்பத்தை வெளியிட்டது. அதில் அன்றைய எல்லா பிரபல பாடகர்களும் பாடி இருந்தார்கள். கிறிஸ்தவ மக்கள் இடையே எல்லா பாடல்களும் மிக பிரபலம். அதில் பி.சுசீலா பாடிய பாடல்களை இப்போதும் கிறிஸ்தவ ஆலயங்களில் கேட்கலாம். அவை..

ஸ்தோத்திரம் செய்வேனே 

      தொடர்ந்து வந்த இன்னொரு ரெகார்டில் பாடிய எல்லா  பாடல்களும் மக்களால் விரும்பி கேட்கப்படும் பாடல்களாக அமைந்தன. கிறிஸ்துவர்களுக்கு முக்கியமான பண்டிகையான கிறிஸ்துமஸ் காலங்களில் பெரும்பாலான ஆலயங்களில் ஒலிபரப்பாகும் பாடல்கள் இவை.

    மாதா கோயில்களில் பாடப்படும் பல அருமையான பாடல்களை பி.சுசீலா பாடி இருக்கிறார். தினமும் காலை வேளைகளிலும், பிரார்த்தனை நடக்கும் முன்பும். பிரார்த்தனை முடிந்த பின்பும் இப்பாடல்கள் ஒளிபரப்பாகும். 


             ( வேளாங்கண்ணி மாதா கோயிலில் )


   திரைப்படங்களில் கூட கிறிஸ்துவ பாடல்களை பாடி இருக்கிறார். அவை பெரும்பாலும் பிரபலமானவை தான்.
     
1969 சத்திய முத்திரை  கண்ணே பாப்பா  M.S.V
1971 கருணை மழையே  அன்னை வேளாங்கண்ணி  G. Devarajan
1984 செல்வமே தெய்வீக  குழந்தை ஏசு  shyam
1978 அன்னை மேரி உன்னை  பாவத்தின் சம்பளம்  Shankar Ganesh
1983 மாதா தேவநாயகி  வில்லியனூர் மாதா  G. Devarajan




தமிழகத்தில் கிறிஸ்துவம் பரவ ஆரம்பித்த காலங்களில் பாடல்களும் 
தென்னக பாரம்பரியத்தை தழுவியே இயற்றப்பட்டன. ப்ரோட்டஸ்ட்டன்ட் கிறிஸ்தவர்கள் ஆலயத்தில் பாடும் பாடல் புத்தகத்தில், மேற்கத்திய  இசை சார்ந்த பாடல்களும், நமது பாரம்பரிய இசை சார்ந்த பாடல்களும் இடம் பெற்றன. அவை பாடல் புத்தகத்தில் கீர்த்தனைகள் என ராகம், தாளத்துடன் குறிப்பிட பட்டிருக்கும். இவை மிக எளிதாக பாடப்படும்  வகையில் கொஞ்சம் இலகுவாகவே டியூன் செய்யப்பட்டு இருக்கும்.  தஞ்சையை சேர்ந்த வேதநாயகம் சாஸ்திரி என்பவரும், பாளயம்கோட்டையை சேர்ந்த கிருஷ்ண பிள்ளை என்பவரும்  நிறைய கிறிஸ்தவ கீர்த்தனைகளை  எழுதி இருக்கிறார்கள்.  அவற்றை பெரும்பாலும் இசைத்தட்டில் பாடியவர்கள் நடராஜ முதலியார் மற்றும்  ஜிக்கி அவர்கள். சில பாடல்களை பி.சுசீலா அவர்களும் பாடி இருக்கிறார். பி.சுசீலா பாடிய கீர்த்தனைகளை, அது கம்போஸ் செய்யப்பட்ட ஒரிஜினல்  ராகத்துடன் வரிசைப்படுத்தி இருக்கிறேன். 80-க்கு பிறகு வந்த பாடல்களில் பல பாடல்கள் மேற்கத்திய  இசை படித்த சிலரின் கைகளில் சிக்கி அதன் அசல் தன்மை இழந்து என்னவோ போல் ஒலிக்கிறது. 


Year ஆல்பம்  பாடல்  ராகம் /தாளம் 
1963 கிறிஸ்டியன் சாங்க்ஸ்  விந்தை கிறிஸ்தேசு ராஜா  பைரவி /ரூபகம் 
1963 கிறிஸ்டியன் சாங்க்ஸ்  தேன் இனிமையிலும் ஏசுவின்  ஹரி காம்போதி 
1963 கிறிஸ்டியன் சாங்க்ஸ்  தந்தானை  துதிப்போமே  பியாகு 
1963 கிறிஸ்டியன் சாங்க்ஸ்  வந்தனம் வந்தனமே  சங்கராபரணம்
1963 கிறிஸ்டியன் சாங்க்ஸ்  துதி தங்கிய பரமண்டல  சுர்யகாந்தம் /ரூபகம்
1963 தட்டுங்கள் திறக்கப்படும்  தாசரே இத்தரணியை  சங்கராபரணம்
1963 தட்டுங்கள் திறக்கப்படும்  ஓசன்னா பாடுவோம்  சங்கராபரணம்
0 போற்றுவோம் தேவனே  ஸ்தோத்திரம் செய்வேனே  பைரவி 
0 கண்டேன் என் கண்குளிர  ஆகமங்கள் புகழ்  சங்கராபரணம்
0 கண்டேன் என் கண்குளிர  ஏசுவையே துதி செய்  யதுகுல காம்போதி 
0 கண்டேன் என் கண்குளிர  சீர் இயேசு நாதனுக்கு  சுருட்டி 
0 கண்டேன் என் கண்குளிர  பாடித்துதி மனமே  காம்போதி 
1996 தேவபிதா  ஆத்துமமே என் முழு  ஆனந்த பைரவி 
1996 தேவபிதா  கதிரவன் தோன்றும் காலை  பூபாளம் /சாப்பு 
1996 தேவபிதா  தேவபிதா எந்தம் மேய்ப்பன்  ஹரி காம்போதி 
1996 தேவபிதா  அன்பே பிரதானம் சகோதர  கமாஸ் /ஜாவளி 
1996 தேவபிதா  என்ன என் ஆனந்தம்  சங்கராபரணம்
1996 தேவபிதா  சர்வலோகதிபா நமஸ்காரம்  சங்கராபரணம்
1996 தேவபிதா  வாருமையா போதகரே  சங்கராபரணம்
1996 தேவபிதா  தந்தானை துதிப்போமே  பியாகு
0 கல்யாண பாடல்கள்  அதி மங்கள காரணனே  சங்கராபரணம் 
0 கல்யாண பாடல்கள்  இந்த மங்களம் சிறக்கவே  துஜாவந்தி 





( "இந்த  மங்களம் செழிக்கவே" என்ற பாடலும் "தேவனே நான் உமதண்டையில்" என்ற பாடலும் ஒரே டியூன் தான். இளையராஜா இசையில், "எங்கேயோ கேட்ட குரல்" படத்தில் வரும் "தாயும் நானே தங்க இளமானே" பாடலின் டியூன் கூட இதே தான். )






        கிறிஸ்தவ மதத்தில் அதிக பண்டிகைகள் இல்லை. அதனால் கிறிஸ்து பிறப்பு   பெரிய பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. தவிர இயேசு உயிர்த்தெழுந்த நாள் (ஈஸ்டர்) சிறப்பாக கொண்டாடப்படுகிறது.  சில ஆலயங்கள் சிறப்பு தன்மை கொண்டதாக நம்பப்படுகிறது. உதாரணமாக வேளாங்கண்ணி மாதா ஆலயம், பூண்டி மாதா ஆலயம், குழந்தை இயேசு ஆலயம் (பெங்களூர்), வில்லியனூர் மாதா (பாண்டிச்சேரி) போல பல ஆலயங்களை சொல்லலாம். திருமணம் போன்ற நிகழ்ச்சிகள் ஆலயத்தில் வைத்து தான் நடத்தப்படும். 

    பி.சுசீலா அவர்களின் குரல், கிறிஸ்தவர்களின் வாழ்விலும் ஒவ்வொரு கட்டங்களிலும் கூடவே பயணித்திருக்கிறது. பக்தி, பண்டிகைகள், ஆலய விசேஷங்கள், புது வருடம், திருமணம் என எல்லா நிகழ்ச்சிகளிலும்  அவர் குரலை  கேட்க முடிகிறது. இவர் தான் பாடி இருக்கிறார் என தெரியாமலேயே நிறைய கிறிஸ்தவர்களின் வாழ்க்கையோடு அவர் பாடிய பாடல்களும்  பயணித்திருக்கிறது. "தேன் இனிமையிலும்" பாடல் கேட்காத Protestant
"இடை விடா சகாயமாதா" கேட்காத கத்தோலிக்கர், "செல்வமே தெய்வீக மலரே" கேட்காத குழந்தை  இயேசு பக்தர் இருப்பார்களா என்பது சந்தேகம் , "ஓசன்னா பாடுவோம் இயேசுவின் தாசரே" என "Palm Sunday" வில் கூட அவர் பாடல் ஒலிக்கிறது. . அத்தனை பிரபலம் இந்த பாடல்கள். 

     இன்னுமோர் விந்தையான விஷயம் என்னவென்றால், கிறிஸ்தவரான எல்.ஆர்.ஈஸ்வரி பாடிய அம்மன் பக்தி பாடல்கள் மிக பிரபலம். ஹிந்துவான ஜிக்கி பாடிய கிறிஸ்தவ பாடல்கள் மிக பிரபலம்.  (சுசீலா அவர்கள் பாடிய எல்லா ஹிந்து, கிறிஸ்தவ,   பக்தி பாடல்களும் பிரபலம்.). 

பி.சுசீலா பாடிய மொத்த கிறிஸ்தவ பாடல்களின் தொகுப்பு கீழே.


Year Album Song Music Category
1996 தேவபிதா  சத்திய வேதம் பக்தரின்  Bible
? கிறிஸ்துமஸ் கீதங்கள்  தந்தை நம்மை  christmas
? கிறிஸ்துமஸ் கீதங்கள்  வந்தார் பூமிதனில்  christmas
? கிறிஸ்துமஸ் கீதங்கள்  தேவாதி தேவனே  christmas
? கிறிஸ்துமஸ் கீதங்கள்  மகிழ்வுடன் ஒரு இனிய  christmas
2011 சங்கீத தீபம்  சங்கீத தீபம் ஏற்றுவோம்  shyam christmas
? தட்டுங்கள் திறக்கப்படும்  ஐயய்யா நான் வந்தேன்  christmas
? தட்டுங்கள் திறக்கப்படும்  பெத்தலையில் பிறந்தவரை  Soho.Richard, vijay christmas
? தட்டுங்கள் திறக்கப்படும்  கண்டேன் என் கண்குளிர  christmas 
1968 கிறிஸ்டியன் இன்டெரெஸ்ட் கல்வாரி சிலுவையில்  V. Kumar Easter
? கீதமே சங்கீதமே  குழந்தை எசுவை  prabhu sreenivos infant Jesus 
? குழந்தை இயேசு  செல்வமே தெய்வீக மலரே  shyam infant Jesus 
? அன்பரே கூடுங்கள்  அன்பான பரனே  Jesus
? அன்பரே கூடுங்கள்  என்றைக்கு காண்பேனோ  Jesus
? சின்ன சின்ன பூக்களே  ஆனந்த ராகாம் நான் பாடி  U.Thyagarajan Jesus
? சின்ன சின்ன பூக்களே  ஊருறங்கும் இந்த வேளையிலே  U.Thyagarajan Jesus
1968 கிறிஸ்டியன் இன்டெரெஸ்ட் ஏசுவே இங்கு மானிடராய்  V. Kumar Jesus
? என்ன இனிமை  நீனே திராட்சை செடி  Jesus
? கீதமே சங்கீதமே  கீதம் சங்கீதமே  prabhu sreenivos Jesus
? கீதமே சங்கீதமே  கண்ணே தாலேலோ  prabhu sreenivos Jesus
? இறைவன் வேண்டுமம்மா  ஆண்டவனின் தோட்டம்  Jesus
? இறைவன் வேண்டுமம்மா  இறைவா எனக்கு நீ  Jesus
? இறைவன் வேண்டுமம்மா  இறைவன் வேண்டுமம்மா  Jesus
? இறைவன் வேண்டுமம்மா  நெஞ்சே நீ ஆண்டவரை  Jesus
? இசை அருவி  இருகரம் கூப்பி இறையுனை  Amaladas Jesus
? இசை அருவி  மலரென மனதினை  Amaladas Jesus
? ஜீவனுள்ள தேவனே  எண்ணில் அடங்கா ஸ்தோத்திரம்  Richard vijay Jesus
? ஜீவனுள்ள தேவனே  எந்தன் நாவில் புதுப்பாட்டு  Richard vijay Jesus
? ஜீவனுள்ள தேவனே  ஜீவனுள்ள தேவனே வாரும்  Richard vijay Jesus
? ஜீவனுள்ள தேவனே  சோர்ந்து போகாதே மனமே  Richard vijay Jesus
? ஜீவனுள்ள தேவனே  துதி கீதங்களால் புகழ்வேன்  Richard vijay Jesus
? ஜீவனுள்ள தேவனே  ஏசுபிரான் எங்கள் ஏசுபிரான்  Richard vijay Jesus
? ஜீவனுள்ள தேவனே  எனக்கொத்தாசை வரும்  Richard vijay Jesus
1980 காவிரி நாதம்  அருளாளர் ஏசு நம்  R. Ramanujam Jesus
1980 காவிரி நாதம்  உன்னை தொழுதிடும் ஒருநாள்  R.Ramanujam Jesus
? மாசில்லா இயேசு  நான் காணமல் போன   Jesus
1990 மீட்பரின் கீதங்கள்  ஆ தினம் குளிர் நேரத்தில்  kalaikaviri Jesus
1990 மீட்பரின் கீதங்கள்  நாற்பதில் ஓன்று  Jesus
? போற்றுவோம் தேவனே  எனது நெஞ்சே  Jesus
1992 தங்க நிலவே  நான் உன் பாதம் தேடினேன்  Jesus
? தேனினும் இனிய தேவகானம்  வேதத்திலே ஒரு பொருளை  Jesus
? உமது கரங்களில்  கோதுமை மணிகள்  Jesus
? உமது கரங்களில்  இரு விழிகள்  Jesus
? உமக்காக புகழ் கீதம்  சின்ன பிள்ளை  M.J.Devid Jesus
? உமக்காக புகழ் கீதம்  உனது எழில் ஒளியினிலே  M.J.Devid Jesus
? விடிவெள்ளி  ஏசுவின் நாம் இனிய  Jesus
1992 விடிவெள்ளி  ஆர்ப்பரித்தென்றும் Jesus
? கர்த்தர்  அன்பரே கூடுங்கள்  Richard vijay Jesus
? கர்த்தர்  எங்கும் புகழ் இயேசு  Richard vijay Jesus
? கர்த்தர்  இரங்கும் இரங்கும் கருணை  Richard vijay Jesus
? மாசில்லா கன்னியே  கண்டேன் ஏசுநாதரை  Jesus
? போற்றுவோம் தேவனே  ஸ்தோத்திரம் செய்வேனே  Jesus
1963 கிறிஸ்டியன் சாங்க்ஸ்  விந்தை கிறிஸ்தேசு ராஜா  Jesus
? கண்டேன் என் கண்குளிர  ஆகமங்கள் புகழ்  Jesus
? கண்டேன் என் கண்குளிர  ஏசுவையே துதி செய்  Jesus
? கர்த்தர்  ஆ வாரும் நாம் எல்லாரும்  shyam Jesus
? கிறிஸ்துவ கானம்  ஆரிவராராரோ இந்த  A. Duraisamy Jesus
? கிறிஸ்துவ கானம்  சீர்திரி ஏகவஸதே நமோ  A. Duraisamy Jesus
? கிறிஸ்துவ கானம்  பயந்து கர்த்தரின்  A. Duraisamy Jesus
? கிறிஸ்துவ கானம்  விண்மணி பொன்மணி  A. Duraisamy Jesus
? கிறிஸ்துவ கானம்  திருமுதல் திரு  A. Duraisamy Jesus
1996 தேவபிதா  ஆத்துமமே என் முழு  Jesus
1996 தேவபிதா  கதிரவன் தோன்றும் காலை  Jesus
? கண்டேன் என் கண்குளிர  சீர் இயேசு நாதனுக்கு  Jesus
1963 கிறிஸ்டியன் சாங்க்ஸ்  தேன் இனிமையிலும் ஏசுவின்  Jesus
1996 தேவபிதா  தேவபிதா எந்தம் மேய்ப்பன்  Jesus
1996 தேவபிதா  அன்பே பிரதானம் சகோதர  Jesus
? கண்டேன் என் கண்குளிர  பாடித்துதி மனமே  Jesus
1963 கிறிஸ்டியன் சாங்க்ஸ்  தந்தானை  துதிப்போமே  Jesus
1963 கிறிஸ்டியன் சாங்க்ஸ்  வந்தனம் வந்தனமே  Jesus
1996 தேவபிதா  என்ன என் ஆனந்தம்  Jesus
1996 தேவபிதா  சர்வலோகதிபா நமஸ்காரம்  Jesus
1996 தேவபிதா  வாருமையா போதகரே  Jesus
? தட்டுங்கள் திறக்கப்படும்  தாசரே இத்தரணியை  Jesus
? தட்டுங்கள் திறக்கப்படும்  ஓசன்னா பாடுவோம்  palm sunday
1963 கிறிஸ்டியன் சாங்க்ஸ்  துதி தங்கிய பரமண்டல  Jesus
? கல்யாண பாடல்கள்  அதி மங்கள காரணனே  marriage
? கல்யாண பாடல்கள்  இந்த மங்களம் சிறக்கவே  marriage
? அம்மா மரியே  ஆரோக்ய தாயே ஆதாரம்  Mother Mary
? அம்மா மரியே  எந்த ஆத்மா ஆண்டவரை  Mother Mary
? அன்னை மேரி திருவருள்  அன்னை மேரி திருவருள்  Mother Mary
2009 அன்னையின் அரவணைக்கும் கரங்கள்  நம் வாழ்வில் சந்தோஷமே  Mother Mary
2009 அன்னையின் அரவணைக்கும் கரங்கள்  அன்னை மேரி அன்னை  Mother Mary
2009 அன்னையின் அரவணைக்கும் கரங்கள்  ஜெபமாலை கொண்டு உனை  Mother Mary
2009 அன்னையின் அரவணைக்கும் கரங்கள்  மேரிமாதா மேரிமாதா  Mother Mary
2009 அன்னையின் அரவணைக்கும் கரங்கள்  வேளாங்கண்ணி மாதா என்  Mother Mary
2009 அன்னையின் அரவணைக்கும் கரங்கள்  அலை கடலோரம் கருணை  Mother Mary
2009 அன்னையின் அரவணைக்கும் கரங்கள்  ஆதி உருவே தேவ திருவே  Mother Mary
2009 அன்னையின் அரவணைக்கும் கரங்கள்  நீல கடலின் அலைகள்  Mother Mary
2009 அன்னையின் அரவணைக்கும் கரங்கள்  வாழ்வெனும் சோலை  Mother Mary
? மன்றாட்டு மாலை  ஆரோக்யமாதா மன்றாட்டு மாலை  Mother Mary
? புகழ் மாலை  ஆரோக்யமாதா புகழ்  மாலை  Mother Mary
1980 காவிரி நாதம் மாதா நீயே அருள்வெள்ளமே  R.Ramanujam Mother Mary
1979 காவிரி நாதம் அன்னை மேரி திருவருள்  R. Ramanujam Mother Mary
? மாசில்லா கன்னியே  மாசில்லா கன்னியே மாதவே  Mother Mary
? மாதா புகழ்மாலை  அன்பே வாழ்வின் தெய்வமாம்  Mother Mary
? மாதா புகழ்மாலை  மாதா அருள் நிறைந்த மாதா  Mother Mary
? புகழாஞ்சலி  நெஞ்சமெல்லாம் இனிக்குது  MSV Mother Mary
1991 புனித வேளாங்கண்ணி  ஆரோக்ய மாதாவே  kanmani raja Mother Mary
1991 புனித வேளாங்கண்ணி  அருள் வான் மழையே  kanmani raja Mother Mary
1991 புனித வேளாங்கண்ணி  ஆகாய வீதியிலே  kanmani raja Mother Mary
1991 புனித வேளாங்கண்ணி  மாமறை புகழும்  kanmani raja Mother Mary
? தட்டுங்கள் திறக்கப்படும்  இடைவிடா சகாயமாதா  Mother Mary
? வேளாங்கண்ணி  அலைகடலின் ஓசையிலே  MSV Mother Mary
? வேளாங்கண்ணி  அம்மா தேவனின் தாயே  MSV Mother Mary
1983 வேளாங்கண்ணி வீணை  ஆரோக்ய மாதாவே அம்மா      M.Louis Mother Mary
1983 வேளாங்கண்ணி வீணை  கத்தும் அலைகடல் ஓரத்திலே M.Louis Mother Mary
1983 வேளாங்கண்ணி வீணை  மண்ணில் காலடி வைத்ததும்  M.Louis Mother Mary
1991 விடிவெள்ளி  இந்த புதிய ஆண்டிலே New year

பி.சுசீலா பாடிய மலையாள கிறிஸ்தவ பாடல்கள் 

திரைப்பாடல்கள் :

         மலையாளத்தில் நிறைய கிறிஸ்தவ பக்தி படங்களும், கிறிஸ்தவர்களின் வாழ்க்கை முறையை சித்தரிக்கும் சமூக படங்களும் நிறைய வெளிவந்தன. அதில் சில குறிப்பிட்ட நல்ல பாடல்களை பி.சுசீலா அவர்களும் பாடி இருக்கிறார்.   சில பாடல்களையாவது  குறிப்பிட்டு சொல்வது அவசியம் என் நினைக்கிறேன்.


 1. ஆகாஷங்களில் இருக்கும் ஞங்கடே அனஸ்வரனாய பிதாவே:  

                        இயேசுவிடம் அவர் சீடர்கள் சென்று நாங்கள் எப்படி பிரார்த்திக்க வேண்டும் என கேட்டார்கள். அப்போது அவர் கற்பித்த ஜெபம் தான் "பரமண்டலங்களில் இருக்கும் எங்கள் பிதாவே". அதை பாடல் ஆகினார் மலையாள கவி "வயலார் ரவிவர்மா". ஜி.தேவராஜன் இசையில் பி,சுசீலா பக்தியுடன் பாடி இருப்பதை திரையில் நடித்து காண்பித்தவர் ஷீலா. மிக பிரபலமான பக்தி பாடல் இது .

2. பாவாய்க்கும் புத்ரனும் பரிசுத்த ரூஹாய்ககும் ஸ்துதியாயிரிக்கட்டே :

                           சர்ச்சில் எப்போதும் ஜெபத்தின் முடிவில்  , "We pray in the name of Father, Son and the Holy Spirit, Amen" என முடிப்பார்கள். ஒருவரை ஒருவர் ஆசீர்வதிக்கும் போது கூட இதை உபயோகிப்பார்கள். பாதிரியார்கள் மற்றவர்களுக்காக பிரார்த்திக்கும் போது கூட இப்படி பிரார்த்திப்பார்கள்.. இறைவனை துதிக்கும் வரிகளை  பாடலாக்கினார் கவி வயலார். மீண்டும் அதே கூட்டணியில் வந்த இன்னொரு பிரபலமான பாடல் இது. 

3. காலிதொழுத்தில் பிறந்தவனே :  

                             சாயூஜ்யம் படத்தில் கே.ஜே.ஜாய் இசையில் பி.சுசீலா பாடிய  மிக பிரபலமான இன்னொரு பாடல் . (அர்த்தம்: மாட்டுத்தொழுவத்தில் பிறந்தவனே கருணை நிறைந்தவனே)  கிறிஸ்துமஸ் காலங்களில் கேட்கும் தவறாமல் பாடல் இது.  பின்னாளில் சித்ரா, சுஜாதா போன்ற பலரும் இந்த பாடலை வேறு ஆல்பங்களில் பாடி இருக்கிறார்கள். 

4. நீ என்றே வெளிச்சம் ஜீவன்றே தெளிச்சம் :

                                 மிஸ் மேரி என்ற திரைப்படத்தில் ஆர்.கே.சேகர் (ஏ.ஆர்.ரகுமானின் தந்தை) இசையில் பி.சுசீலா பாடிய இப்பாடலை, அப்படி அனுபவித்து பாடி இருப்பார் சுசீலா.  "அபமானத்தின் அக்னியில் எரியும் இடைய கன்யக ஞான்"  எனற வரி வரும் போது கேளுங்கள் பி.சுசீலாவின் குரலில் உள்ளத்தை உருக்கும் வலி  தெரியும். 

5. ஓமன கையில் ஒலீவில கொம்புமாய் ஓசன்னா பெருநாளு வந்நு :

                  பண்டொக்கே ஞங்ஙள் ஒரு குட கீழிலே பள்ளியில் போகாருண்டு. எந்து பறஞ்சாலும் எத்ற கரஞ்ஞஜாலும் இந்நு பிணக்கமே ஒள்ளு". என்ன யதார்த்தமான வரிகள்.!! "பரிஷுத்த கன்யா மறியமே" என பி.சுசீலா கரையும் போது மனசு கரையும் .  பி.சுசீலாவுக்கு பெரும் பெயர் பெற்று தந்த "பார்யா" படத்தில் தான் இந்த பாடல் இடம் பெற்றது. 
   பாடல்களை வரிசைப்படுத்தி இருக்கிறேன். கேட்டு ரசியுங்கள். 

 
Year Movie Song Music
1967
Naadan Pennu
G.Devarajan
1971
makane ninakku vendi
G.Devarajan
1979
sayujyam
k.J. Joy
1976
raajankanam
M.k. Arjunan
1972
miss mary
R.K.Sekhar
1962
Bharya
G.Devarajan
1973
nakhangal
G.Devarajan
1974
Chukku
G.Devarajan
1972
mayilaadum kunnu
G.Devarajan
1971
aranaazhika neram
G.Devarajan
1962
Bharya
G.Devarajan
1964
althaaRa
M.B. sreenivasan
1977
agninakshatram
G.Devarajan
1971
agrajan
yeshu makesha
G.Devarajan
1962
Bharya
G.Devarajan
1965
InaPiravukal
v.Dakshinamurthy
1983
Lourde Mathavu
G.Devarajan
1971
makane ninakku vendi
G.Devarajan
1970
Nikkatha chalanangal
G.Devarajan
1970
Nikkatha chalanangal
G.Devarajan




1964
Thanga kudam
Baburaj
1971
veilankanni mathavu 
G.Devarajan




2. Malayalam Christian Albums : 

Year Album Song Music
1975 christian devotional kaalvari kunnil thyagamekiya K.P.Udhayabanu
1977 christian devotional karal niranju nilpu M.J.Thomas
1979 praise ye the lord bharatha bhoomiye Jim 
1979 christian songs deva nin thiru naama M.J.Thomas
1979 praise ye the lord sathya deivame ninakku  Jim 
1980 suvisesha geetham deepame deepame baby john
1980 suvisesha geetham snehapithave nee baby john
1981 glories devine aapadhachoodam Vincent
1981 christian devotional atiravile tirusannidhi Jacob john
1981 glories devine chinmaya roopa chiranjeeva Joy thottan
1981 christian devotional parisudha parane sthuthi Jacob john
1999 swarga rajyam sarva vyaapiyaga K.A.Jose
? divyasandhesam deivaputhranu kaazhcha markose olikkal
? swarga rajyam ekanda thaaram vidarnnu K.J.Joy
? swarga rajyam galiliia kadal pole K.A.Jose
? Prapanchadeepam punyabhoomiyil pular ?
? divyasandhesam rakshakane en rhshakane thomas edayil
? geetham sangeetham sarva vyabiyam ?
? pavanam ullam nonthu kaikoopunne ( Suseela Live ) ?
? christian devotional yesu nallavan ?
1975 christian devotional yesuve en jeeva nadha Joy thottan
? christian devotional yesuve ninte roopame ?

Christian Songs in Telugu :

Songs from Movies :
Song Album Music
rajyamu balamu rajadhi raju K.V.Mahadevan
karunamayive mary mary matha  G.Devarajan
divyame nee padha bala yesu Shyam
aalichi paalinchi brova mulla kireetam (1967) S. Rajeshwara Rao


Private Albums:


Song Album Music
nene maragamu satyamu old christian songs
idhi subhodayam old christian songs
ennullu elelo old christian songs ?
hrudayame nee old christian songs ?
prabhu maharaja old christian songs ?
siluvapai vrelaade old christian songs ?
prabhuvaa deva christava gaanamu M.J.dhyriam
jeevaahaaramu kraistava bhakthi ranjani veerabadra rao
nee charanamu kraistava bhakthi ranjani veerabadra rao
nee naamamu kraistava bhakthi ranjani veerabadra rao
nammadagina devudu kraisthava bhakthi geethalu ?
prabhuvu yesu paata kraisthava bhakthi geethalu ?
priyamaina snehithula kraisthava bhakthi geethalu ?
raa raa jeevadhara kraisthava bhakthi geethalu ?
sreerasthu kristhuni kraisthava bhakthi geethalu ?
aadhiyu anthamaya christava gaanamu M.J.dhyriam
daya chesi andhala nakshathram ?
ee udhayamlo andhala nakshathram ?
ammallara christian songs ?
divinelu oh raja christian songs ?
laali naa kanna thandri christian songs ?
naa yesu naa deva christian songs ?
o peddanna christian songs ?
prakasamaanamainadi christian songs ?
ede ede subhodayam ede ede subhodayam ?
bhavana deevana neeve edhe subhodayam
navajeevana padhamulo edhi subhodayam
nikhilalola daivama edhi subhodayam
prabhu mora vinava edhi subhodayam
prema raju yesu edhi subhodayam
saswathama ee deham edhi subhodayam
satyana baathaku edhi subhodayam
thandri kumara parisuddha  edhi subhodayam
devude mana yashayamu god is our refuge rev.zachariah
yesu prabhuvu acchenu god is our refuge rev.zachariah
kiss me kiss me christmas laali laali yesayyakke laali ?
nee mahima teliya laali laali yesayyakke laali ?
yesu kristhu puttina roju laali laali yesayyakke laali ?
premaye navajeevanamu prema daivam Y.P. vincent
paademu laali satya suvartha sumaalu
sukthi sudhamaya kristhu songs on jesus ?
yesayya votchaadu songs on jesus ?
lechenu lechenu suvaartha gantalu Ch.Moses
sareera dharayi suvaartha gantalu Ch.Moses
chakkani chukkalu the true christmas pandu
prema idi kristhu the true christmas pandu

 நன்றி.....

13 கருத்துகள்:

  1. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  2. இவ்வளவு அற்புதமான, இதுவரை பலரும் கேள்விப்படாத பல விஷயங்களைத் தொகுத்திருக்கிறீர்கள். ஆனால் எவரும் கருத்துரைக்காமல் இருப்பது ஆச்சரியம் தருகிறது. பலரிடமும் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்களும், பிரார்த்தனைகளும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி.. பி.சுசீலாவின் பங்களிப்பு பலரையும் சென்றைடைய வேண்டும் என்பதே எனது நோக்கம்.

      நீக்கு
  3. இன்றும் பழைய தமிழ் முறை படி கிருஷ்துவ பாடல்கள் பாடபடுகின்றது. musicminds நிறுவனத்தால் வெளி இடப்படும் பாடல்கள் தமிழ் முறை படி இருக்கும். குறிப்பாக வேதநாயகம் சாஸ்திரியார் பாடல்களை அவர்களின் வாரிசுகள் கர்நாடக சங்கீதத்தில் பாடியுள்ளனர். album name:Golden hits vedanayaga sastriyar. "அருபியே அருபசொருபியே" என்ற கீர்த்தனை பாடலை கேளுங்கள்

    பதிலளிநீக்கு
  4. Good Blog. This blog is very Useful for all and especially All Kinds of Christians... Need More From You. Congratulations for your wonderful research. God Bless You.

    பதிலளிநீக்கு
  5. தகவல்களுக்கு நன்றி இப்பாடலகளின் கலப்படமில்லாத ஒறிஐினல் ஒலிப்பதிவை எங்கு பெறலாம்? மீள்பதிவு
    அல்ல

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதிலேயே Youtube லிங்க் கொடுத்திருக்கிறேன். அதில் பெரும்பாலும் ஒரிஜினல் பாடல்கள் தான் . கேட்டு தரமானதை பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.

      நீக்கு
  6. அருமையான பகிர்வு! வாழ்த்துக்கள்!!

    பதிலளிநீக்கு