பின்பற்றுபவர்கள்

செவ்வாய், 2 ஏப்ரல், 2013

மலையாளத்திரை உலகில் பி.சுசீலா - பாகம் 2


1970-ல் தேவராஜன் இசையில் மிண்டா பெண்ணு, நில்காத்த சலனங்ஙள், நிங்ஙள் என்னே கம்யுனிஸ்ட் ஆக்கி, நிஷாகந்தி, நிழலாட்டம், ஒத்தனென்டே மகன், ஸ்வப்னங்ஙள், தாரா, திரிவேணி, வாழ்வே மாயம், விவாஹிதா போன்ற படங்களிலும், தட்சிணாமூர்த்தி இசையில் ஸ்திரீ, சபரிமலா ஸ்ரீ ஐயப்பன், பளுங்கு பாத்ரம், அபயம், குற்றவாளி படங்களிலும், பாபுராஜ் இசையில் விவாஹம் சொர்கத்தில், அனாதா. பீகர நிமிஷங்ஙள் படங்களிலும்,  ஏ.எம்.ராஜா இசை அமைத்த “அம்மையெந்ந ஸ்திரீ” படத்திலும், MSV இசையில் “பணி தீராத்த வீடு” படங்களிலும் பாடினார்.. நிங்ஙள் என்னே கம்யுனிஸ்ட் ஆக்கி” படத்தில் வரும் “பல்லணையாறின் தீரத்தில்”, “எல்லாரும் பாடத்துசொர்ணம் விதச்சு” பாடல்களும், நிழலாட்டம் படத்தில் வரும் யக்ஷ கானம் முழங்கி பாடலும், ஒத்தனென்டே மகன் படத்தில்."கதளி வனங்ஙள்"; "யாமினி யாமினி" பாடல்களும், த்ரிவேணி படத்தில் வரும் “பாமரம் பளுங்கு கொண்டு” பாடலும், வாழ்வே மாயம் படத்தில் வரும் “சீதாதேவி ஸ்வயம்வரம் செய்தொரு”. “கல்யாண சௌகந்திக”, பணி தீராத்த வீடு படத்தில் “அனியம் மனியம்”, விவாஹிதா படத்தில் “பச்ச மலையில், பவிழ மலையில்”  பச்சமலயில் (sad)பாடல்களும் எவர்க்ரீன் பாடல்களாக இருக்கின்றன. 

   1971-ல் தேவராஜன் இசையில் “ஆ சித்ரஸலபம் பறஞ்ஞோட்டே”, அஃரஜன், அர நாழிக நேரம், அவள் அல்ப்பம் வைகிப்போயி, கங்கா சங்கமம், கரகாணா கடல், மகனே நினக்கு வேண்டி, ஒரு பெண்ணின்றே கதா, ஒரு சுந்தரியுடே கதா, பஞ்சவன் காடு, சிக்ஷா, தபஸ்வினி, தெற்று, வேளாங்கண்ணி மாதாவு என பல படங்களிலும், பாபுராஜ் இசையில் புள்ளிமான் படத்திலும், A.T.உம்மர் இசையில் “ஆபிஜாத்யம்” படத்திலும். ஜோசப் கிருஷ்ணா இசையில் போபனும் மோளியும் படங்களில் பாடினார். ஒரு பெண்ணின்றே கதா படத்தில் “பூந்தேனருவி பொன்முடி புழையுடே” பாடலை பாடியதற்காக மாநில விருது பெற்றார். ஆபிஜாத்யம் படத்தில் பாடிய “வ்ரிஸ்சிக ராத்ரிதன்”, கரகாணா கடல் படத்தில் பாடிய “காற்று வந்நு கள்ளனே போலே”, பஞ்சவன்காடு படத்தில் பாடிய “ராஜஷில்ப்பி நீஎனிக்கொரு”, ஒரு பெண்ணின்றே கதா படத்தில் பாடிய “ஷ்ராவண சந்த்ரிக பூச்சூடிச்சு”, ஒரு சுந்தரியுடே கதா படத்தில் “நவமி மகாநவமி”, “சீதப்பக்ஷி”  போல பல மறக்க முடியாத பாடல்களை இந்த வருடத்தில் பாடினார்.

1972-ல் தேவராஜன் இசையில் “ஆரோமலுண்ணி, அச்சனும் பாப்பயும். கந்தர்வ ஷேத்ரம், தேவி, மரம், மயிலாடும் குந்நு,  கே.ராகவன் இசையில் அனந்தசயனம் படத்திலும், பாபுராஜ் இசையில் ஆராதிகா படத்திலும், M.K.அர்ஜுனன் இசையில் புஷ்பாஞ்சலி, அன்வேஷனம் படங்களிலும், தட்சிணாமூர்த்தி இசையில் பிரமமச்சாரி, மனுஷ்ய பந்தங்ஙள், நாடன் ப்ரேமம், ஷக்தி, ஸ்ரீ குருவாயூரப்பன் படங்களிலும், R.K.சேகர் இசையில் மிஸ் மேரி படத்திலும், A.T.உம்மர் இசையில் தீர்த்தயாத்ரா படத்திலும் பாடினார். ஆரோமலுண்ணி படத்தில் பாடிய “உதயகிரிகோட்டையிலே சித்ரலேகே”, முல்ல பூத்து முளவிரிஞ்சு, புத்தூரம் வீட்டில்ஜெனிச்சொரேல்லாம், அன்வேஷனம் படத்தில் பாடிய “சந்த்ர ரஷ்மி தன்”, அச்சனும் பாப்பயும் படத்தில் பாடிய , “கண்ணினும் கண்ணடிக்கும்”, தேவி படத்தில் பாடிய “சந்திரகிரணம் சாலிச்செடுத்தொரு”, கந்தர்வ ஷேத்ரம் படத்தில் பாடிய “யகஷி அம்பலம் அடச்சு”, மரம் படத்தில் பாடிய “கல்லாயி புழயொரு மணவாட்டி”, மயிலாடும் குந்நு படத்தில் பாடிய “மணிச்சிக்காற்றே”, மிஸ் மேரி படத்தில் பாடிய “மணிவர்ணன் இல்லாத்த வ்ருந்தாவனம்”, “நீ என்றே வெளிச்சம்”, புஷ்பாஞ்சலி படத்தில் பாடிய  “நக்ஷத்ர கின்னரன்மார்”, சதி படத்தில் பாடிய “பிரத்யுஷ புஷ்பமே”, ஷக்தி படத்தில் பாடிய “பூக்கள் எனிக்கிஷ்டமாணு பூக்கள்” பாடல்கள் இன்றும் விரும்பி கேட்கப்படும் பாடல்கள்.

    1973-இல் அச்சாணி, ஆத்யத்தே கதா, அழகுள்ள சலீனா, தர்ம யுத்தம், ஃபுட்பால் சேம்பியன், இன்டர்வியு, ஜீசஸ், காடு, காலச்சக்ரம், கவிதா, லேடீஸ் ஹாஸ்டல், நகங்ஙள், பாவங்ஙள் பெண்ணுங்ஙள், பஞ்சவடி, பொன்னபுரம் கோட்டா, போஸ்ட்மேனே காணாறில்லா, சௌந்தர்ய பூஜா, ஸ்வர்ண மெடல், தெக்கன்காற்று, தொட்டாவாடி, ஊர்வஷி பாரதி, வீண்டும் ப்ரபாதம், யாமினி என பல படங்களில் பாடினார். அச்சாணி படத்தில் பாடிய “சமயமாம் நதி" தர்மயுத்தம் படத்தில் பாடிய “ஸ்மரிக்கான் படிப்பிச்ச மனசே” காடு படத்தில் “எழிலம் பால பூத்து”, “என் சுண்டில் ராக மந்தாரம்” பாடல்களும், பொன்னபுரம் கோட்டா படத்தில் “நளசரிதத்திலே நாயகனோ”, சௌந்தர்யபூஜா படத்தில் அம்பலகுன்னிலே பெண்ணொருத்தி, தொட்டாவாடியில் “வீணே வீணே வீணே வீணப்பெண்ணே” ஊர்வஷி பாரதியில் “உத்யான பாலகா” வீண்டும் ப்ரபாததில் “ஊஞ்ஞாலா ஊஞ்ஞாலா”, யாமினி படத்தில் “புஞ்சிரி பூவுமாய்” போன்ற பல ஹிட் பாடல்களை பாடினார். யேசுதாஸ் இசையமைப்பாளராக அறிமுகமான “அழகுள்ள சலீனா” படத்தில் “தாஜ்மஹல் நிர்மிச்ச ராஜஷில்ப்பி” என்ற பாடலை பி.சுசீலாவை பாட வைத்தார்.

  1974-இல் தேவராஜன் இசையில் பூமிதேவி புஷ்பிணியாயி, சக்ரவாஹம், சுக்கு, தேவி கன்யாகுமாரி, துர்கா, தும்போலார்ச்சா படங்களிலும், MSV இசையில் பாபுமோன் (ராமு ரீமேக்), ஜீவிக்கான் மறந்நு போய ஸ்திரீ படத்திலும், தட்சிணாமூர்த்தி இசையில் “அர கள்ளன் முக்கா கள்ளன்”, அஸ்வதி, செறுப்பக்கார் ஸுஷிக்குகா, சத்யமேவ ஜெயதே, நைட் டூட்டி படங்களிலும், அர்ஜுனன் இசையில் சஞ்சலா, பூகோளம் திரியுந்நு, சேது பந்தனம் படத்திலும், R.K.சேகர் இசையில் பட்டாபிஷேகம், நடிநடன்மாரே அவஸ்யமுண்டு படங்களிலும், சலில் சவுத்ரி இசையில் “நெல்லு”. ராசலீலா படங்களிலும் ஷ்யாமின் இசையில் மான்யஸ்ரீ விஸ்வாமித்ரன் படங்களிலும் பாடினார். பாபுமோனில் “பத்மதீர்த்த கரையில்”, வள்ளுவ நாட்டிலே ” பாடல்களும், பூமிதேவி புஷ்பிணியாயி படத்தில் “பாதிரா தணுப்பு வீணு”, சக்ரவாகம் படத்தில் “பம்பா நதியிலே பொன்னினு போகும்”, சுக்கு படத்தில் “காதம்பரி புஷ்பசதஸ்ஸில்”, துர்கா படத்தில் “சபரி மலையுடே தாழ்வறையில்” நெல்லு படத்தில் “காடுகுளிரிணு கூடு குளிரிணு”, ராசலீலா படத்தில் “நீயும் விதவயோ”, நைட் டூட்டி படத்தில் “புஷ்பசாயகா நின் திரு நடயில்”, தும்போலார்ச்சா படத்தில். பகவானே, ஆகாஷம் முங்ங்ய பால்புழையில்கனனாம் தளிர் , மஞ்சபளுங்கன் பாடல்களும் ஹிட் ஆனவை.
   ஏற்கனவே இருந்த ஜி.தேவராஜன்-பி.சுசீலா-மாதுரி, பாபுராஜ்-எஸ்,ஜானகி கூட்டணியுடன் இன்னொரு கூட்டணி பிரபலம் ஆகியது. அது எம்.கே.அர்ஜுனன் – வாணி ஜெயராம் கூட்டணி. 1975 முதல் மலையாளத்தில் வாணி ஜெயராமின் பங்களிப்பும் ஆரம்பம் ஆகியது.

     1975-இல் தேவராஜன் இசையில் சீன வல, சுவந்ந ஸந்த்யகள், மனிஷதா படங்களிலும் அர்ஜுனன் இசையில் அஷ்டமி ரோஹிணி, ஹலோ டார்லிங், ஓமனகுஞ்ஞ, சிந்து, சூர்யவம்சம் படங்களிலும், MSV இசையில் அவள் ஒரு துடர்கதா, அஜயனும் விஜயனும், தர்மஷேத்ரே குருஷேத்ரே, உல்லாச யாத்ரா படங்களிலும், சலில் சௌத்ரி இசையில் ராகம், நீல பொன்மான், உம்மர் இசையில் அபிமானம், கல்யாண பந்தல் படங்களிலும், ஷ்யாம் இசையில் காமம் குரோதம் மோகம் படத்திலும், R.K.சேகர் இசையில் வெளிச்சம் அகலே, குட்டிச்சாத்தன், ப்ரியே நினக்கு வேண்டி படங்களிலும், தட்சிணாமுர்த்தி இசையில் மற்றொரு சீதா, சத்யத்தின்றே நிழலில் படங்களிலும் பாடினார். அஷ்டமி ரோஹிணி படத்தில் “ராரிரம் பாடுந்நு ராக்கிளிகள்,  சுவந்ந சந்த்யகள் படத்தில்  “பூவுகள்க்கு புண்யகாலம்”, ஹலோ டார்லிங் படத்தில் “த்வாரகே த்வாரகே”, நீல போன்மானில் “தைய்யம்தைய்யம் தாரே”, ராகம் படத்தில் “ஓமன திங்கள் பக்ஷி”, “அம்பாடி பூங்குயிலே”, சிந்து படத்தில் “ஜீவனில் துக்கத்தின் ஆறாட்டு”, சூர்யவம்சம் படத்தில் “மல்லிசாயகா” மிகவும் ரசிக்கப்பட்ட பாடல்கள். சுவந்ந ஸந்த்யகள் படத்தில் “பூவுகள்க்கு புண்யகாலம்” பாட்டுக்காக இரண்டாவது மாநில விருதினை பெற்றார்.  
                        
1976-ல் அம்மு, ஆயிரம் ஜென்மங்கள், அக்னிபுஷ்பம். அம்பா அம்பிகா அம்பாலிகா, அம்மா, அனவரணம், அப்பூப்பன், பந்தங்கள் பந்தனங்கள், சிரிக்குடுக்கா, சோட்டணிக்கர அம்மா, தத்துபுத்ரன், த்வீபு, ஹோமகுண்டம், கடுவயே பிடிச்ச கிடாவு, காமதேனு, கன்யாதனம், குற்றவும் சிக்ஷயும், மானச வீணா, மல்லனும் மாதேவனும், மிஸ்ஸி, பஞ்சமி, பனிநீர் மழா, பொன்னி, ப்ரியம்வதா, ராஜாங்கணம், ராஜயோகம், ஸம்ஸயா, சீமந்த புத்ரன், தீக்கனல், தெம்மாடி வேலப்பன், யக்ஷ கானம் போன்ற படங்களில் பாடினார். தத்துபுத்ரன் படத்தில் பாடிய “துறந்நிட்ட ஜாலகங்கள்”, “தீராத்த துக்கத்தின்”, சோட்டணிக்கர அம்மா படத்தில் “மனஸ்ஸு மனஸ்ஸின்றே காதில்”, த்வீபு படத்தில் “கண்ணீரின் மழயத்தும்”,  குற்றவும் சிக்ஷயும் படத்தில் “கண்ணனாம் உண்ணி”, ராஜாங்கணம் படத்தில் “ஒர்சலேமின் நாயகா” குறிப்பிட தக்க பாடல்கள்.

1977-இல் ஆனந்தம் பரமானந்தம், அபிநிவேசம், அச்சாரம் அம்மிணி ஒசாரம் ஓமனா, அடுக்களா, அக்னி நக்ஷத்ரம், அக்ஷய பாத்ரம், அம்மாயி அம்மா, அம்மே அனுபமே, அந்தர்தாஹம், அனுக்ரஹம், அபராஜிதா, அஷ்டமங்கல்யம், அவள் ஒரு தேவாலயம், பார்யா விஜயம், சந்தனச்சோலா, தீரஸமீரே யமுனாதீரே, இவனென்றே ப்ரியபுத்ரன், ஹ்ரிதயமே சாக்ஷி, லக்ஷ்மி, கண்ணப்பனுண்ணி,  மகம் பிறந்ந மங்கா, மந்த்ரக்கோடி, நிறகுடம், ஊஞ்ஞால், ஒரு ஜாதி ஒரு மதம், பஞ்சாமிர்தம், ப்ரிவர்த்தனம், பூஜக்கெடுக்காத்த பூக்கள், ரவுடி ராஜம்மா, சாந்தா ஒரு தேவதா, ஸரிதா, ஸ்நேக யமுனா, ஸ்ரீமுருகன், ஸ்ரீதேவி, ஸ்ரீமத் பகவத் கீதா, தாலப்போலி, துருப்புகுலான், தோல்க்கான் எனிக்கு மனசில்லா, வீடு ஒரு ஸ்வர்கம், வேழாம்பல், விஷுக்கணி, யதீம் படங்களில் பாடினார். யதீம் படத்தில் பண்டுபண்டொரு பாதுஷாவின், ரகுபதி ராகவ ராஜாராம் (வேழாம்பல்), ராப்பாடி பாடுந்ந (விஷுக்கணி), விலாசலோலுபயாயி (ஸ்ரீமத் பகவத் கீதா), பக்த ஜனப்ரியே(ஸ்ரீதேவி), பூவெயில் மயங்கும் (சரிதா), மானத்தே மழைமுகில் மாலகளே, வனவேடன்  (கண்ணப்பனுண்ணி), ராஜமல்லி பூவிரிக்கும் (இவனென்றே ப்ரியபுத்ரன்), பிந்து நீ ஆனந்த பிந்துவோ (சந்தனச்சோலா) , கதிர்மண்டபம் (மந்த்ரக்கொடி)  போன்றவை குறிப்பிடத்தக்க பாடல்கள்.

எனக்கு எப்போதும் ஆச்சரியம் தரும் ஒரு விஷயம். மலையாளத்தில் இத்தனை பெரிதாய் பேசப்படும் பாபுராஜ் இசை அமைத்த படங்கள் 100-ஐ கூட எட்டவில்லை. வி.தட்சிணாமூர்த்தி இசை அமைத்த படங்கள் 150-ஐ தாண்டவில்லை. ஜி.தேவராஜன் அவர்கள் தான் அதிகமான படங்கள் இசை அமைத்திருக்கிறார்கள். இசை அமைத்தவை கிட்டத்தட்ட 350 படங்கள். ஆனால் தமிழில் MSV 700 படங்களுக்கு மேலாகவும், இளையராஜா 900 படங்களுக்கு மேலாகவும், சங்கர் கணேஷ் 600 படங்களுக்கு மேலாகவும், கே.வி.எம் 500 படங்களுக்கு மேலாகவும் இசை அமைத்தவர்கள். தேவா 400 படங்களுக்கு இசை அமைத்து இருக்கிறார், கங்கை அமரன் கூட 160  படங்களுக்கு இசை அமைத்து இருக்கிறார். 1950-இல் இருந்து இசை அமைக்கும் தட்சிணாமூர்த்தி சுவாமிகள் 150 படங்கள் கூட இசை அமைக்கவில்லை என்பது பெரிய ஆச்சரியமாய் இருந்தது எனக்கு. இனி அடுத்த வருட படங்களை பார்ப்போம்.

1978-ல் ஆனப்பச்சன், ஆழி, அக்னி, அலாவுதீனும் அற்புத விளக்கும், அமர்ஷம், அனுபூதிகளுடே நிமிஷம், பலபரீக்ஷனம், பீனா, பார்யயும் காமுகியும், சக்ராயுதம், ஈட்டா, ஹேமந்த ராத்ரி, கடத்தநாட்டு மகம், கைதப்பூ, கனல் கட்டகள், கன்யகா, குடும்பம் நமக்கு ஸ்ரீகோயில், லிஸா, மதலசா, மதுரிக்குந்ந ராத்ரி, மண்ணு, மற்றொரு கர்ணன், முத்ரமோதிரம், முக்குவனே ஸ்நேகிச்ச பூதம், நாலுமணி பூக்கள், ஞான் ஞான் மாத்ரம், ஒர்க்குக வல்லப்போழும், பாதசரம், பாவடக்காரி, ப்ரார்த்தனா, ரகுவம்சம், ஸமயமாயில்லாப்போலும், சத்திரத்தில் ஒரு ராத்ரி, ஸ்நேகத்தின்றே முகங்ஙள், ஸ்நேகிக்கான் சமயமில்லா, ஸ்நேகிக்கான் ஒரு பெண்ணு, சுந்தரிமாருடே ஸ்வப்னங்கள், தச்சோளி அம்பு, தம்புராட்டி, உதயம் கிழக்கு தன்னே, வயநாடன் தம்பான், விஸ்வரூபம், யாகஸ்வம் (பாபுராஜ் இசை அமைத்த கடைசி படம்) போன்ற படங்களில் பாடினார். “தச்சோளி அம்பு”, மலையாளத்தில் முதல் சினிமாஸ்கோப் படம். அதை  ஹெலிகாப்டரில் இருந்து நோட்டிஸ் வீசி விளம்பரம் செய்தார்கள். அதில் சிவாஜியும் நடித்திருந்தார். “சுல்தான்றே கொட்டாரத்தில் (அக்னி), ஒரு ஸ்வப்னத்தின் (பீனா), மலையாற்றூர் மலஞ்செரிவிலே(ஈட்டா), ஆனந்த நடனம் (கடத்தநாட்டு மகம்) மானசேஸ்வரா (கன்யகா), ராதாகீதகோவிந்த ராதா (லிஸா), தேவி பகவதி (மண்ணு), மோஹவீணதன் (பாதசரம்), ஒண்ணாம் தும்பிநீ ஓடி வா (ஸமயமாயில்லாப்போலும்), நாணம் குணுங்கிகளே, மகரமாச பௌர்ணமியில் , தச்சோளி வீட்டிலே (தச்சோளி அம்பு), த்ரிக்காக்கரே , மணிச்சிலங்கே (யாகஸ்வம்) பாடல்கள் குரிப்பிடப்படதக்கவை.

  1979-ல் அக்னி பர்வதம், அக்ஞாத தீரங்ஙள், அம்ருத சும்பனம், அனுபவங்களே நந்நி ,  அனுபல்லவி, அவள் நிரபராதி, செந்நாய் வளர்த்திய குட்டி, காலேஜ் பியுட்டி, என்றே நீலாகாசம், ஏழாம் கடலினக்கரே, ஹ்ரிதயதின்றே நிறங்கள் (நானும் ஒரு பெண் ரீமேக்), இரும்பழிகள், இஷ்ட பிராணேஸ்வரி, இவிடே காற்றினு சுகந்தம், காலம் காத்திரிக்குந்நில்லா,  கதிர்மண்டபம், க்ருஷ்ணபருந்து, லஜ்ஜாவதி, மோஹம் எந்ந  பக்ஷி, ஓர்மையில் நீ மாத்ரம், பதிவ்ரதா, பிச்சாத்தி குட்டப்பன், பொன்னில் குளிச்ச ராத்ரி, புதிய வெளிச்சம், ராக தீபம், சரபஞ்சரம், சர்ப்பம், சாயுஜ்யம், சூர்யதாகம், ஸ்வப்னதீரம், தேன்துள்ளி, வெள்ளையான பறந்நு, போன்ற படங்களில் பாடினார். அச்சன்றே ஸ்வப்னம் (அக்னி பர்வதம்), அஷ்டமங்கல்ய (செந்நாய் வளர்த்திய குட்டி), என்றே நீலாகாசம் (என்றே நீலாகாசம்), கண்ணா கார்முகில்  (கண்ணா கருமை நிற கண்ணா), ஜ்வாலமுகி (மோஹம் எந்ந பக்ஷி,), ஜில் ஜில்ஜில் சிலம்பலங்கி, சுவந்ந பொட்டும் (புதிய வெளிச்சம்), வாடக வீடொழிஞ்ஞ்சுஸ்வர்ணமீனின்றே செலோத்த (சர்ப்பம்), காலித்தொழுத்தில் பிறந்நவனே” ஆகியவை குறிப்பிடதக்க பாடல்கள்.

   1980-ல் அக்னி ஷேத்ரம். அங்காடி, பக்த ஹனுமான், தீபம். ஏதேன் தோட்டம். காயலும் கரயும், லாரி, லவ் இன் சிங்கப்பூர், முத்துச்சிப்பிகள், பாலாட்டு குஞ்ஞிகண்ணன், பப்பு, சீதா, ஸ்ரீதேவி தர்சனம், தீக்கடல், திரக்கில் எழுதிய கவிதா என சில படங்களில் பாடினார். மஞ்ச பளுங்கில் (அக்னி ஷேத்ரம் ), கன்னிப்பளுங்கே (அங்காடி) , ஆனந்த நடனம் & சரித்திர நாயகா (பக்தஹனுமான்),  துளுநாடின்  பட்டுடுத்த ப்ரேமகாயகா (பாலாட்டு குஞ்ஞிக்கண்ணன்), பொன்னுருக்கி தட்டண (தீக்கடல்),  இளநீல மானம் (காயலும் கரயும்) குறிப்படதக்க பாடல்கள் .

(தொடரும்... )   PART-1   PART-3

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக