பின்பற்றுபவர்கள்

செவ்வாய், 2 ஏப்ரல், 2013

மலையாளத்திரை உலகில் பி.சுசீலா -பாகம் 3

   1980-2008 வரை கிட்டதட்ட 150 பாடல்களுக்கு மேல்  பாடி இருக்கிறார். குறிப்பிடத்தக்க சில பாடல்கள், “அளிவேணிஎந்து செய்வு, அத்ரி சுதாவர (கானம்), ஈ பாட்டினு சிறகுகள் (க்ரிஹலக்ஷ்மி), களகளமொழி (பிரேம கீதங்ஙள்) , ஆலோலம் பூமுத்தே (தாராட்டு), ஃகுருவினே தேடி (எனிக்கும் ஒரு திவசம்), ஒரு குடுக்க பொன்னு தராம் (இரட்டி மதுரம்), கன்னி மலரே (ஜஸ்டிஸ் ராஜா), தெய்வமொண்ணு (கேணி), மனஸ்ஸின்றே மோஹம் (football),  புஷ்யராக தேரில் (காளியாமர்தனம்) , ஸ்வர்க சங்கல்பத்தின் (வெள்ளம்), தேவதாரு பூத்து  (எங்கினே ஞான் மறக்கும்), ஆக்ரஹம் ஒரே (ஆக்ரஹம்), ஒண்ணானாம் ஊஞ்ஞால் (((ஆள்கூட்டத்தில் தனியே), கல்யாணி முல்லே (ஆழி), அம்பாடி கண்ணா (இரட்டி மதுரம்), நீ என்றே ஜீவனாணு ஓமலே(இவிடே துடங்குந்நு), ஸங்கல்ப  நந்தன (விகடகவி), ஸ்வப்ன ஸதங்கள் (கடமட்டத்தச்சன்), குங்குமதும்பிகள் (வெப்ராளம், தாஹத்ரயாணு ஞான் (நிஷேதி), மக்கத்து சந்திரக போலொரு ((திரக்கில் அல்ப சமயம்), பண்டொரு காட்டிலோர் (சந்நர்பம்), ஸ்வரங்ஙளே ஷப்த (ஸ்வர்ண கோபுரம்),அகிலேண்ட மண்டலம் (அனுபந்தம்), குஞ்ஞிளம் சுண்டில் (காயத்ரிதேவி என்றே அம்மா), ஈபாதம் (மயூரி), கண்ணில் கதிர்மணி (நேரம் புலரும்போள்), ஆரோமல் குஞ்ஞுறங்கு (என்றே என்றது மாத்ரம்), மண்ணில் வெண்ணிலவே (ப்ரியம்வதக்கொரு ப்ரனயகானம்), கொல்லம்கோட்டு (குடும்ப விசேஷம்), ஜானகி ஜானே, அனுராக லோல (த்வனி), ஸ்வந்தவரே (சங்கீத சங்கமம்-with unni menon), என் நீலாகாசம் தேடி (ரெண்டாம் வரவு), புலரி வந்நு (குறுப்பின்றே கணக்கு புஸ்தகம்), விஷுக்கிளி விளிச்சது (ஒளியம்புகள் –with M.G.Srikumar). மதனன் அருளிய செஷகம் (with Venugopal –ராகவீணா), ஆலாபனம் தேடும் (என்றே சூர்யபுத்ரிக்கு-with chitra), ஹ்ருதய கீதமாய் (அம்மக்கிளிக்கூடு).

   த்வனி படத்துக்கு  வட இந்திய இசை மேதை  நவ்ஷாத் அலி இசை அமைத்தார். படம் ஒப்பந்தம் செய்யும் போதே பி.சுசீலா பாடுவதாக இருந்தால் மட்டுமே இசை அமைப்பதாக ஒப்பந்தம் செய்து அதைப்போல் பி.சுசீலாவையே பாட வைத்தார். 

    பி.சுசீலா பாடிய மலையாள பாடல்களின் எண்ணிக்கை எவ்வளவு இருக்கும்?. இது வரை நான் சேகரித்தது 950 பாடல்கள். என் அனுமானப்படி 1000-1200 பாடல்கள் வரை இருக்கலாம். தெலுங்கில் இருந்து வரும் டப்பிங் படங்கள், ஆல்பங்கள், பக்தி பாடல்கள் எல்லாம் சேர்த்து தான் இந்த கணக்கை சொல்கிறேன்.

   நான் முன்னே சொன்ன மாதிரி உதயா ஸ்டுடியோஸ் தான் கேரளாவின் பெரிய ஸ்டுடியோ. அவர்கள் எடுத்த எல்லா படங்களிலும் பி.சுசீலாவையே பாட வைத்தார்கள். டைரக்டர் குஞ்சாக்கோ (உதயா ஸ்டுடியோஸ் ஓனர் அப்பச்சனின் மகன்)  அவர் டைரக்ட் செய்த படங்களிலும் கூட பி.சுசீலாவையே பாட வைத்தார். அவர்கள் எடுத்த படங்களில், எந்த இசை அமைப்பாளராக இருந்தாலும் பி.சுசீலாவை தான் பாட  வைத்தார்கள். தவிர மஞ்சிலாஸ், நீலா போன்ற பெரிய தயாரிப்பு நிறுவனங்களிலும் பி.சுசீலாவே பாடினார். 1980-க்கு பிறகு மலயாளத்திரை உலகு புதியவர்களின் கையில் சென்றது. பி,சுசீலா போன்றவர்கள் வழி விட்டு விலகி கொண்டார்கள்.

மலையாளத்தில் பல வித்யாசமான பாடலகள் பாடினார். அளிவேணி (க்ளாசிகல்-மோஹினி ஆட்டம்), ஆனந்த நடனம் (செமி க்ளாசிகல்), கேரளாவை பற்றிய பாடல்கள் (கைரளி கைரளி), கம்யுனிச பாடல்கள் (பல்லணையாறின் தீரத்தில்), நாடன் பாட்டுக்கள் (வீணே வீணே  வீணப்பெண்ணே), மாப்பிள்ள பாட்டுக்கள் (கன்னிப்பளுங்கே), வடக்கன் பாட்டுக்கள் (மானத்தே மழமுகில் மாலகளே), காமடி பாடல்கள் (சுல்தான்றே கொட்டாரத்தில்), தோணி  பாடல்கள் (பாமரம் பளுங்கு கொண்டு), மலை காடு சார்ந்த பாடல்கள் (தைய்யம் தைய்யம் தாரே), வயல் சார்ந்த பாடல்கள் (எல்லோரும் பாடத்து), கிறிஸ்தவ பாடல்கள் (ஆகாஷங்களில் இரிக்கும்), வெஸ்டர்ன் பாடல்கள் (குங்குமதும்பிகள்) என கேரளாவின் பன்முக கலாச்சாரத்தை விளக்கும் பாடல்களையும் பாடி இருக்கிறார். தவிர கேரளாவின் பண்டிகையான  ஓணம் ( "ஒண்ணாம் பொன்னோண பூக்களம்", "மாவேலி வாணொரு காலம்", புஷ்யராக கம்மல் அணிஞ்சு" ) போன்ற பாடல்களையும் பாடி இருக்கிறார். 

    தேவராஜன் இசையில் பி.சுசீலா 300 பாடல்களுக்கு மேல் பாடி இருக்கிறார். (ஆனால் அவரிடம் எஸ்.ஜானகி 50 பாடல்கள் மட்டுமே பாடி இருப்பது ஆச்சரியம்.) வயலார் எழுதிய 300-க்கும் அதிகமான பாடல்களை பி.சுசீலா பாடி இருக்கிறார். தேவராஜனிடம் பணி புரிந்த அர்ஜுனன் மாஸ்டர் (45 பாடல்கள்). R.K.சேகர் (25 பாடல்கள்), கே.ஜே.ஜாய்((35 பாடல்கள்), ஜான்சன் போன்றோரிடமும் பாடி இருக்கிறார். பாபுராஜை பொறுத்த வரை எஸ்.ஜானகி தான் ஆஸ்தான பாடகி. அவர் இசையில் எஸ்.ஜானகி 130 பாடல்களை பாடி இருக்கிறார். பி.சுசீலா 50 பாடல்களுக்கு மேல் பாடி இருக்கிறார். தட்சினாமுர்த்தி இசையில் 75 பாடல்கள் பாடி இருக்கிறார். கே.ராகவன் இசையில் 60 பாடல்களை பாடி இருக்கிறார். இரண்டாம் நிலையில் இருந்த MBS, உம்மர், ஷ்யாம், சிதம்பரநாதன் போன்றோரும் சிறு படக்கம்பெனிகளும் மற்ற பாடகிகளை அதிக அளவில் உபயோகித்து கொண்டார்கள்.

   1960 முதல் 1978 வரை எஸ்.ஜானகிக்கும் பி.சுசீலாவுக்கும் இடையில் பாடல்களின் எண்ணிக்கையில் பெரிய வித்தியாசம் இல்லை. அத்தனை பிசியாக இருந்தும் ஓரளவு நல்ல பேனர், பெரிய இசை அமைப்பாளர்கள், பெரிய  இயக்குனர்களின் படங்களில் பாடி முன்னிலையிலேயே இருந்திருக்கிறார். ஆனால் 80-களில் கிட்டத்தட்ட 400 பாடல்கள் அதிகமாக எஸ்,ஜானகி பாடி இருக்கிறார்.  அதிக பாடல்கள் பாடிய பெண் பாடகிகளில் சித்ரா முதல் இடத்திலும் (2500 பாடல்களுக்கு மேல்), இரண்டாவது எஸ்.ஜானகியும் (1400 பாடல்களுக்கு மேல்). மூன்றாவது பி.சுசீலாவும் (1000 பாடல்களுக்கு மேல்) இருக்கிறார்கள். பி.லீலா, சுஜாதா பாடியது இவர்களை விட குறைந்த அளவில் தான். 

 மலையாளதிரை உலகினரின் கருத்துக்கள் சில:
ஜி. தேவராஜன்:    என்னிடம் பாடிய பாடகிகளிலேயே எனக்கு பிடித்த பாடகி பி.சுசீலா. நான் எதிர்பார்த்த அளவுக்கு பாடலை புரிந்து கொண்டு அழகாக பாடி விடுவார்.
கே.ராகவன்: ஒரு பாடலை புரிந்து, அதன் பாவத்தை உள்வாங்கி சரியாக பாடுபவர் என்றால் அது பி.சுசீலா தான்.
கே,ஜே.யேசுதாஸ்: எனக்கு மட்டும் அல்ல, என் குடும்பத்துக்கே பிடித்த பாடகி பி.சுசீலா தான். அவர் பாடும் விதத்தில் இருந்து கற்றுக்கொள்ள நிறைய விஷயங்கள் இருக்கின்றன.
பி.ஜெயச்சந்திரன்: எனக்கு பிடித்த பாடகி பி.சுசீலா தான். இந்தியாவில் மட்டும் இல்லை, உலகிலேயே பி.சுசீலாவுக்கு இணையான பாடகிகள் இல்லை.
நடிகர் சித்திக்: எனக்கு பிடித்த பாடகி பி.சுசீலாவை போல் மலையாளத்தை தெளிவாக உச்சரித்தவர் இல்லை. அவர் பாடும் பொது, ஒவ்வொரு வரியும், எழுத்தும் தெளிவாக கேட்கும். அவர் பாடல்களை கேட்டு (ஸ்புடதா) பாட கற்றுக்கொள்ளுங்கள்.
நடிகர் ஜெயராம்: எனக்கு பிடித்த பாடகி ப.சுசீலாம்மா தான்.
நெடுமுடி வேணு: பாடகின்னா அது சுசீலா தான். “துறந்நிட்ட ஜாலகங்கள்” பாடல் ஒன்று போதாதா ?
நடிகை ஷீலா: எனக்கு பிடித்த பாடகி சுசீலா தான். எனக்கு அதிகமாக பின்னணி பாடியதும் அவர் தான். நசீர் என்றால் யேசுதாஸ் குரலும், ஷீலா என்றால் சுசீலா குரலும் தான் பொருத்தம்.
நடிகை அம்பிகா: என்னுடைய அபிமான பாடகி பி.சுசீலா தான். அவர் பாடிய நிறைய பாடல்களை சேர்த்து வைத்திருக்கிறேன்.


PART-1       PART-2

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக