ஆந்திர ரசிகர்கள் சொல்லும் ஒரு வார்த்தை. வீண பாட்டண்டே சுசீலாகாரு, ஜோள
பாட்டண்டே சுசீலாகாரு. ( வீணைப்பாட்டு என்றால் சுசீலா தான், தாலாட்டு பாட்டு
என்றாலும் சுசீலா தான்). வைரமுத்து அவர்கள் “காலைத்தென்றல் பாட்டைப்பற்றி எழுதும்
போது, “பி.சுசீலா என்னும் தாய் வீணையில் இருந்து தவழ்ந்து வந்த பாட்டு” என
எழுதினார். தாய்மை இழையோடும் பல பாடல்களை பி.சுசீலா பாடி இருக்கிறார். காட்சி
அமைப்புகளுக்கு ஏற்றவாறு தாய்மை, கனிவு, சாந்தம், சோகம் என பல வகையான உணர்வுகளின்
பிரதிபலிப்பாக இருந்தன அந்த பாடல்கள். உதாரணமாக சொல்ல வேண்டுமானால் மகிழ்ச்சியான
ஒரு தாயின் தாலாட்டு (சொல்லடா வாய் திறந்து), தண்ணீருக்காய் தவிக்கும் மக்களின்
சோகத்தை சொல்லும் தாலாட்டு (கண்ணான பூமகனே). மரணத்தின் விளிம்பில் இருக்கும் தாய்,
தன மகளுக்கு பாடும் தாலாட்டு (கண்ணே ராஜா), வீரத்தாலாட்டு என பல வகையான தாலாட்டுகள் திரைப்படங்களில்
வந்ததுண்டு. பி.சுசீலா பாடிய சில தாலாட்டுகளையும் குழந்தைகளுக்காக பாடிய சில பாடல்களையும் வரிசைப்படுத்துகிறேன்
அன்பில்மலர்ந்த நல்ரோஜா (கணவனே கண்கண்ட தெய்வம்).
கண்ணன்வருவான் கதை சொல்லுவான் (பஞ்சவர்ணக்கிளி)
செல்லக்கிளியே மெல்லப்பேசு (பெற்றால் தான் பிள்ளையா)
சொல்லடா வாய் திறந்து (நீல வானம் )
பச்சை மரம் ஒன்று (ராமு)
நீ தான் செல்வம் நீ தான் அமுதம் (பொம்மை)
நான் பாடும் பாட்டிலே (பவானி)
பூஞ்சிட்டு கன்னங்கள் (துலாபாரம்)
நிலவும் தாரையும் நீயம்மா (அழகர் மலை கள்வன்)
(கவிஞர் வாலி எழுதிய முதல் பாடல். ஒரு விழாவில் வாலி இப்படி குறிப்பிட்டார். "என்னுடைய முதல் பாடலை பாடியது பி.சுசீலா அவர்கள். தவிர, எனக்கு வாழ்வளித்த எம்.ஜி.ஆர் படத்துக்கு நான் எழுதிய பாடலை பாடியவர் பி.சுசீலா அவர்கள், அவர்கள் பாடிய ராசி இன்று வரை நான் திரை உலகில் இருக்கிறேன்"...... 1988-இல் திரை உலகில் தன் முப்பதாவது வருடத்தை நிறைவு செய்தார் வாலி. அன்று அவர் இளையராஜாவிடம், "இன்று என் பாடலை பி.சுசீலா அவர்கள் பாட வேண்டும்" என விரும்பி கேட்டுக்கொண்டார். இளையராஜாவும் பி.சுசீலாவை அழைத்து "தென்றல் சுடும்" படத்துக்காக "தூரி தூரி தும்மக்க தூரி" என்ற பாடலை பாட வைத்தார்.
இளையராஜாவுக்காக வாலி எழுதிய முதல் பாடலை பாடியவரும் பி.சுசீலா தான். (கண்ணன் ஒரு கைக்குழந்தை))

சின்ன அரும்பு மலரும் (பங்காளிகள்)
முத்தான முத்தல்லவோ (நெஞ்சில் ஓர் ஆலயம்)
கண்ணே பாப்பா என் கணிமுத்து (கண்ணே பாப்பா)
கொஞ்சி கொஞ்சி பேசி (கைதி கண்ணாயிரம்)
என் ராஜாவின் ரோஜா முகம் (சிவகாமியின் செல்வன்)
சின்ன சின்ன பாப்பா (ராணி யார் குழந்தை)
சின்னபாப்பா (வண்ணக்கிளி)
சின்னபாப்பா (வண்ணக்கிளி)
நீரோடும்வைகையிலே (பார் மகளே பார்)
ஏனடாகண்ணா இந்த (அன்பு ரோஜா)
தை மாதமேகம் (குழந்தைக்காக)
சொல்லவா கதை சொல்லவா (நவராத்திரி)
பாபு மணிபாபு (பிள்ளை செல்வம்)
அன்னைஎன்று ஆகும் முன்னே –தாய்க்கு தலைமகன்
ஐயிரண்டு திங்களிலே (அன்னபூரணி)
ஏனடாகண்ணா இந்த (அன்பு ரோஜா)
தை மாதமேகம் (குழந்தைக்காக)
சொல்லவா கதை சொல்லவா (நவராத்திரி)
பாபு மணிபாபு (பிள்ளை செல்வம்)
அன்னைஎன்று ஆகும் முன்னே –தாய்க்கு தலைமகன்
அச்சம்விட்டு நாணம் விட்டு – தெய்வ சங்கல்பம்
ஐயிரண்டு திங்களிலே (அன்னபூரணி)
தமிழே
பிள்ளைத்தமிழே (அப்பா டாட்டா)
கண்மணி கண்மணி (குலமகள் ராதை)
சின்ன
சின்ன நடை நடந்து (காவேரியின் கணவன்)
சின்ன
சின்ன பூவே (கடவுளின் குழந்தை)
சிங்காரசிட்டுதான் (கல்தூண்)
பிள்ளைக்கலி
தீர (குலமா குணமா)
தாய்
பாடும் தாலாட்டு (நாம் பிறந்த மண்)
மாதம்
ஒரு பூமலரும் (நீல மலர்கள்)
யாரோதவமிருது (பெற்றால் தான் பிள்ளையா)
மீட்டாத
வீணை இது – தென்றல் வீசும்
எண்பதுகளில்
வந்த சில தாலாட்டு பாடல்கள் :
வரம்தந்த சாமிக்கு (சிப்பிக்குள் முத்து)
கற்பூரபொம்மை ஒன்று (கேளடி கண்மணி)
மண்ணில்வந்த நிலவே (நிலவே மலரே)
சுட்டும்விழிச்சுடர் தான் (மலர்களே மலருங்கள்)
மகனே
மகனே கண்ணுறங்கு (வரம்)
பூமுகம்சிவக்க (அம்மா)
ஏலேஇளங்கிளியே (நினைவு சின்னம்)
பேர்சொல்ல வந்த பிள்ளை நீயே (மகனே மகனே)
ஆராரோ
பாட வந்தேனே (பொறுத்தது போதும்)
பொன்னே
பூவம்மா – பொண்டாட்டி சொன்னா கேட்டுக்கணும்
தாலாட்டு
– சோகம் :
மலர்ந்தும் மலராத (பாசமலர்)
காலமிது காலமிது (சித்தி)
சின்னஞ்சிறு கண்மலர் (பதி பக்தி)
அன்னமிட்ட கைகளுக்கு (இரு மலர்கள்)
கண்ணே ராஜா கவலை வேண்டாம் (பாக்ய லக்ஷ்மி)
கண்ணான பூமகனே (தண்ணீர் தண்ணீர் )
பூமரத்துநிழலும் உண்டு (குழந்தை உள்ளம்)
ராஜா சின்ன ராஜா (பூந்தளிர்)
தூரிதூரி தும்மக்க தூரி (தென்றல் சுடும்)
அரும்பருமா சரம் தொடுத்த (சின்னத்தாயி)
எனக்கு உள்ள கவலையை மறக்க வைத்து புத்துணர்வு அளிப்பது பழைய பாடல்கள்தான். அதில் பி. சுசீலாவின் பாட்டுகளுக்கு பெரும் பங்கு உள்ளது. மேலே உள்ள பாட்டுக்கள் அடங்கிய குறுந்தகடுகள் கிடைத்தால் நல்லது. தற்சமயம் முரசு தொலைக்காட்சியில் வரும் பாடல்கள் ஆறுதல் அளிக்கின்றன
பதிலளிநீக்கு