பின்பற்றுபவர்கள்

செவ்வாய், 26 மார்ச், 2013

12 மொழிகளில் பாடிய பி.சுசீலா


 தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி, சமஸ்கிருதம், ஒரியா, துளு, படுகு, பெங்காலி, பஞ்சாபி மற்றும் சிங்கள மொழிகளில் பி.சுசீலா அவர்கள் பாடி இருக்கிறார்கள். அந்தந்த மொழிகளில் பாடிய முதல் பாடல்களைப்பற்றி எனக்கு தெரிந்த  தகவல்களை சொல்கிறேன்.

தமிழ் : ஏதுக்கு அழைத்தாய் ஏதுக்கு (பெற்ற தாய் -1952)
               1950-இல் ரேடியோவில் பாப்பா மலர் நிகழ்ச்சியில் பாடிக்கொண்டிருந்தார்  பி.சுசீலா. அந்நேரத்தில் புதிய குரலை தேடிக்கொண்டிருந்த பெண்டியாலா நாகேஸ்வர ராவ் அவர்கள் பி.சுசீலாவின் குரலை கேட்டு அவரை பின்னணி பாடகியாக அறிமுகம் செய்தார். . 1952-ஆம் வருடம் இந்த பாடல் ஒலிப்பதிவு செய்யப்பட்டது. இந்த பாடலை ஏ.எம்.ராஜாவுடன் இணைந்து பாடினார்.

தெலுகு: ஜெய ஜெய (அதிர்ஷ்ட தீபுடு -1950)
        அதிர்ஷ்ட தீபுடு படத்துக்காக ஏ.வி.சரஸ்வதியுடன் இணைந்து கொலம்பியா ரிக்கார்டிங் கம்பெனியில் அதேபள்ளி ராமராவ் இசையில் பாடிய பாடல். 

     பிரபல இசை அமைப்பாளர் வி.தட்சிணாமூர்த்தி அவர்கள் பி.சுசீலா அவர்களை மலையாளத்தில் அறிமுகம் செய்து வைத்தார்கள். இப்படத்தில் இரு பாடல்களை பி.சுசீலா பாடினார்கள். (இன்னொரு பாடல் : veene paaduka) இன்றும் மலையாளிகளுக்கு பிடித்த தாலாட்டு இது. மலையாளத்தில் 1000-1200 பாடல்கள் பாடி இருக்கலாம். 

கன்னடம் : லாலனே ( ஜாதகபலம் -1953)
   ஏவிஎம் தயாரித்த ஜாதக பலம் படத்தில் பாடி இருக்கிறார்கள். அந்த படத்தில் இதை தவிர வேறு பாடல்கள் பாடி இருக்கிறார்களா என தெரியவில்லை. கன்னடத்தில் ஆயிரம் பாடல்கள் வரை பாடி இருக்கலாம்.

ஹிந்தி :  Bade Tum Veer Sahi Baat  - gul-e-bakavali (1956).
    (இந்த பாடல் என்னிடம் இல்லை. i am sharing , singhasan movie songs : "tere liye maine"  and "takatu taka tai" (with kishore kumar)

சமஸ்கிருதம் : celestial songs of Upanishad (1978)
             சாதாரணமாக உபநிஷத்துகள் பெண்கள் பாடுவதில்லை என கேள்விப்பட்டு இருக்கிறேன். உண்மையா என தெரியாது. இந்த ஆல்பத்தில் யாரை பாட வைப்பது என முடிவு செய்ய முடியாமல் திருவுளச்சீட்டு போடப்பட்டதாம். அதில் பி.சுசீலா பெயர் வந்ததால், தினமும் அவர் வீட்டுக்கு சென்று உபநிஷத்துகளை எப்படி உச்சரிப்பது என கற்றுக்கொடுத்து பாட வைத்தார்களாம். மிக சிறந்த ஆல்பம்.

சிங்களம் : thaayam maayam  (dosthara -1957)
    ஏவிஎம் முதன் முதலாக எடுத்த சிங்களப்படம் தான் doctor (அதன் சிங்களப்பெயர் dosthara) . இந்த பாடல் தமிழில் வந்த “ஏரு பூட்டி போவாயே அண்ணே சின்னண்ணே” என்ற பாடலின் சசிங்கள வடிவம். சிங்களத்தில் பத்து பாடல்களுக்கு மேல் பாடி இருக்கிறார்.

ஒரியா : aasa pura kamini  (krushna sudama -1967)
பெங்காலி :  first song not known (it is for All india radio-bengal)
துளு : yer malthi thappida fala (yer malthina thappu (1974)
படுகு   : Nethiya Barey (Nethiya Barey –album -1993) அந்த பாடல் என்னிடம் இல்லை. வேறொரு பாடல். "eeswara pada sevaya"

பஞ்சாபி :  kattinthu kalyaathE (from a tamil movie uravukku kai koduppom -1975)
உறவுக்கு கைகொடுப்போம் என்ற படத்தில் வரும் பஞ்சாபி பாடல் இது. பி.பி.எஸ்ஸும், பி.சுசீலாவும் பாடி இருக்கிறார்கள்

திங்கள், 25 மார்ச், 2013

தெலுங்கு பட உலகில் பி.சுசீலாவின் பங்களிப்பு

     பி,சுசீலா அவர்களின் முதல் திரைப்பாடல் பாடல் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் ஒலிப்பதிவு செய்யப்பட்டது. படத்தின் பெயர் கன்னதல்லி (தமிழில் பெற்ற தாய்). பாடல்எந்துக்கு பிலிச்சாவெந்துக்கு’. அப்போது ஜிக்கி, பி.லீலா, எம்.எல்.வி, ஜமுனாராணி, .பி.கோமளா, பாலசரஸ்வதி தேவி, பெரியநாயகி, எம்.எஸ்.ராஜேஸ்வரி. டி.எஸ்.பகவதி, கே.ராணி  என பல திறமையான பாடகிகள் இருந்தார்கள். அந்நிலையில் .வி.எம் அவர்கள் பி.சுசீலா அவர்களை .வி.எம்மின் கம்பெனி பாடகியாக நான்கு வருடங்களுக்கு ஒப்பந்தம் செய்து கொண்டார். பகவதி, ராஜேஸ்வரி ஆகியோரும் .வி.எம்மில் மாத சம்பளம் வாங்கும் பாடகிகளே. அதை தொடர்ந்து .வி.எம்மின் எல்லா படங்களிலும் பி.சுசீலா பாடத்துவங்கினார். சங்கம், பெண், வாழ்க்கை, செல்லப்பிள்ளை, பூகைலாஸ், பக்த ராவணா, சகோதரி,  எங்க குடும்பம் பெரிசு என தொடர்ந்தது அது

அதே நேரம் மற்ற பட நிறுவனங்களிலும் பாடிக் கொண்டிருந்தார்அதில் நடிகை அஞ்சலி தேவி நடித்தகணவனே கண்கண்ட தெய்வம்”(1954) படம்  பெரிய வெற்றியை பெற்றதோடு நல்ல பெயரையும் வாங்கிக்கொடுத்தது. அதைப்போலவே மிஸ்ஸியம்மா படமும் அவருக்கு பெரிய அந்தஸ்தை பெற்றுக்கொடுத்தது. தவிர பக்கின்டி அம்மாயி, பங்காரு பாப்பா, வதினா, அனார்கலி, தொங்க ராமுடு, பக்த மார்கண்டேயா, சரணதாசி, சிந்தாமணி, இளவேல்பு,  போன்ற பல படங்கள் நல்ல பாடகி  என்ற பெயரை பெற்றுக்கொடுத்தன.  "தொங்க ராமுடு" படத்தில் வரும் "அனுராகமு விரிசென ஈ " எனற பாடல் பல இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் கவனத்தை ஈர்த்தது. அதுவரை சின்ன ஹீரோயின்ஸ்க்கு பாடிக்கொண்டிருந்த அவரை சாவித்ரி போன்ற நடிகைகளுக்கு பாடும் வாய்ப்பை அந்த பாடல் தேடிக்கொடுத்தது. அதை தொடர்ந்து பெரிய கதாநாயகிகளான சாவித்ரி, ஜமுனா. அஞ்சலிதேவி என வாய்ப்புகள் குவிந்தன. அஞ்சலி தேவியின் கணவரான, இசை அமைப்பாளர் ஆதி நாராயணராவ் அவர் இசை அமைத்த படங்களில் எல்லாம் நிறைய வாய்ப்பு கொடுத்தார். 1956-இல் வெளிவந்த படங்களான நாகுல சாவிதி, ஸ்வர்ண மஞ்சரி, முத்துபிட்டா, குலதெய்வம், தெனாலி ராமகிருஷ்ணா போன்ற படங்கள் அவரை புகழின் படியில் மேலும் ஒருபடி ஏற்றின. 1957-இல் ஆடபிட்டனு , அக்கா செல்லலு, அலாவுதீனும் அற்புத விளக்கும், பாக்யரேகா, பலே பாவா, பலே அம்மாயிலு, பூகைலாஸ், மகாதேவி, மாங்கல்ய பலம், மாயாபஜார், MLA, நாகமோகினி, பெத்தரிகாளு, பாண்டுரங்க மகாத்யம், ரத்னகிரி ரகஸ்யம், சதி அனுசுயா, சதி சாவித்ரி, தோடி கோடல்லு, விநாயக சாவிதி என தொடர் ஹிட் கொடுத்து முதல் இடத்தில் கம்பீரமாக அமர்ந்து கொண்டார். அதற்கு பிறகு அவர் பாடாத படங்களே இல்லை என்ற நிலை கிட்டதட்ட 1990 வரை தெலுங்கு திரைப்படங்களில் இருந்தது.
           50-களில் இருபதுக்கும் மேற்பட்ட இசை அமைப்பாளர்கள் இருந்தார்கள். எல்லோருக்கும் வாய்ப்பு இருந்தது. ஒவ்வொருவரும் தனித்துவமான இசையை அளித்தார்கள். ஆதி நாராயண ராவ், S.ராஜேஸ்வர ராவ் போன்றோர் ஹிந்துஸ்தானி இசையை திறம்பட கையாண்டவர்கள். கே,வி.எம் கர்நாடக இசை மற்றும் நாட்டுப்புற இசையை திறமையாக கையாண்டவர். பெண்டியாலா மிக கஷ்டமான பாடல்களை கம்போஸ் செய்பவர். ஜி.ராமநாதன் கர்நாடக இசையின் அழகை அவ்வளவு அழகாய் வெளிக்கொண்டு வந்த மேதை. அந்த கால கட்டங்களில் பி.சுசீலாவின் குரலை இவர்களின் இசை மெருகேற்றியது. தவிர .வி.எம்மின் ஆஸ்தான இசை அமைப்பாளர் ஆர்.சுதர்சனம், எஸ்.எம்.சுப்பையாநாயுடு, டி.ஜி.லிங்கப்பா, s.தக்ஷிணாமூர்த்தி, வேணு, கண்டசாலா, அஸ்வத்தமா, ரமேஷ் நாயுடு  போன்றார் பல நல்ல பாடல்களை பாட வைத்து குரலை மெருகேற்ற உதவினர்... இயல்பிலேயே இனிமையான குரலை பெற்ற சுசீலாவிற்கு இந்த பயிற்சியும் கடின உழைப்பும் குரலை உரமேற்ற உதவி செய்தது. ஒரு பக்கம் தென்னக ஜாம்பவான்களான பி.லீலா , ஜிக்கி, எம்.எல்.வி போன்றோரின் தரத்துக்கு ஈடு கொடுக்க வேண்டும். இன்னொரு பக்கம் ஹிந்தியில் லதா, மற்றும் ஆஷா பாடும் பாடல்களின் தரமும் இருக்க வேண்டும்.. இதன் மூலம்  கர்நாடக இசை தழுவிய பாடல்களையும். ஹிந்துஸ்தானி இசை தழுவிய பாடல்களையும் கையாளும் விதத்தை தெளிவாக கற்றுக்கொண்டார் அதே கால கட்டங்களில் western இசை சார்ந்தஈனா மீனா டீக்காபோல rock and roll பாடல்களையும் பாடினார் பி.சுசீலா.  இந்நிலையில் 50-களின் இறுதியில் ஒரு மெல்லிசை புரட்சி நடந்தது. தென்னிந்திய, வடஇந்திய மற்றும் வெஸ்டர்ன் பாடல்களை அதன் இனிமை கெடாமல் எளிமைப்படுத்தும் ஒரு Golden era உருவானது. மெல்லிசை மன்னர்கள், கே.வி.எம் கண்ணதாசன், டி.எம்.எஸ் மற்றும் சுசீலா அதன் பாகங்களானார்கள். மெல்லிசையும், இன்னிசையும் இணைந்து நடமாடிய கால கட்டம்தான் தென்னிந்திய திரை இசையின் பொற்காலம் என்று கூறலாம்.
            தெலுங்கை பொருத்த வரை S.ராஜேஷ்வர ராவ், கே.வி.மகாதேவன்,  கோதண்டபாணி என பல இசை அமைப்பாளர்கள் மெல்லிசையை அளித்து வந்தார்கள். கிட்டத்தட்ட  20 வருடங்கள் அந்த இசை பாணியிலேயே  பாடல்கள் அமைந்தன. நிறைய பக்தி, சரித்திர, புராண மற்றும் சமூக படங்கள் வெளி வந்தன.  அப்படங்களில் பெரும்பாலான பாடல்களை பி.சுசீலாவே பாடினார். பி,சுசீலாவின் கால்ஷீட்டுக்காக குறைந்தது இரண்டு, மூன்று வாரங்களாவது காத்திருக்க வேண்டிய நிலை அன்று இருந்தது. எல்லா கதாநாயகிகளும் சுசீலா தான் அவர்களுக்கு பாட வேண்டும் என கேட்க ஆரம்பித்தார்கள், (உதாரணம்: கந்தன் கருணை படம். சாவித்ரி, கே.ஆர்.விஜயா, ஜெயலலிதா என மூன்று கதாநாயகிகளுக்கும் சுசீலாவே பாடினார். உற்றுக்கேட்டால் குரலில் சின்ன வித்தியாசம்  தெரியும்). ஒரு சின்ன நிகழ்ச்சியை சொல்கிறேன். எதிர் நீச்சல் படம் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டது. அதில் வரும்ஆடி அடங்கும் வாழ்க்கையடாபாட்டு வேறு ட்யூனில் ஒலிப்பதிவு செய்யப்பட்டது, அப்போது வேறு ஒலிப்பதிவுக்கு சென்ற சுசீலா அவர்கள், “ட்யுன் நன்றாக இருக்கிறதே. எனக்கு இல்லையாஎன சும்மா கேட்டு விட்டு சென்றிருக்கிறார்கள். ஆனால், தயாரிப்பாளர் அந்த வார்த்தைக்காக ஒரு சிச்சுவேஷன் புதுதாக க்ரியேட் செய்து, அந்த பாடலை (மாமா சந்தமாமா வினராவா) பி,சுசீலாவை பாட வைத்தார். அது தான் ஒரு பாடகிக்கு கிடைத்த மரியாதை. ஐம்பது மற்றும் அறுபதின் கதாநாயகிகளான சாவித்ரி, தேவிகா, கிருஷ்ணகுமாரி, அஞ்சலிதேவி, ஜெயலலிதா, ஜமுனா, வைஜயந்திமாலா, சரோஜாதேவி, பத்மினி போன்றோருக்கு சுசீலாவின் குரல் அருமையாக பொருந்தியது.
      கண்டசாலா நிறைய சங்கதிகள் போட்டு பாடும் திறன் படைத்த அருமையான பாடகர். டி.எம்.எஸ்ஸின் குரலில் கம்பீரம் இருக்கும். பி.பி.எஸ்-இன் குரலில் மென்மை இருக்கும். .எம்.ராஜாவின் குரல் வெண்ணை போல் வழுக்கி செல்லும். சீர்காழி கணீர். டி.ஆர்.மகாலிங்கம் ஹை-பிட்சிலும் அருமையாக சங்கதி போடக்கூடியவர். ஜெயராமன் கனமான குரலுக்கு சொந்தக்காரர், பாலமுரளி கிருஷ்ணா கர்நாடக இசையில் கைதேர்ந்தவர்.. இப்படி பலதரப்பட்ட குரல் படைத்த பாடகர்கள் இருந்தார்கள். இவர்கள் எல்லோருடனும் பி.சுசீலாவின் குரல், அவரவர்  குரலுக்கு ஏற்ற மாதிரியே blend ஆகி வளையும், குழையும், கம்பீரமாகும். இந்த கால கட்டத்தில் தான் பி.சுசீலாவின் குரலில் பல முத்துக்களும் மாணிக்கங்களும் பாடல்களாய் வெளிவந்தன. இசை அமைப்பாளரின் கற்பனையில் இருப்பதை புரிந்து கொண்டு அதை குரலில் கொண்டுவரும் வித்தை அவருக்கு தெரிந்து இருந்தது.
     ஆந்திர ரசிகர்களை பொருத்த வரை அவர்களால் எதையும் ரசிக்க முடியும். சங்கராபரணம் வந்தாலும் ஓடும். ஜிங்கு ஜக்கா என்று டான்ஸ் ஆடினாலும் ஓடும். எந்த வகை இசை ஆனாலும் அவர்கள் ஏற்றுக்கொள்வார்கள். டிஸ்கோ, ராப், ஜாஸ் என எந்த இசை புதிதாக வந்தாலும் அப்படியே தெலுங்கு படத்தில் வந்து விடும். அது மலையாள, கன்னட, தமிழ், ஹிந்தி, ஒரிய பாடல்களாக இருந்தாலும் அதை அப்படியே உபயோகப்படுத்துவார்கள். கிட்டத்தட்ட தமிழும் அப்படித்தான். அதனால், பல வகையான இசை வடிவங்களை ஒவ்வொரு கால கட்டங்களிலும் பாடும் வாய்ப்பு பாடகர்களுக்கு கிடைத்தது. அதனால  தான் பி.சுசீலா அவர்கள் அத்தனை வித்தியாசமான பாடல்களை பாடி இருக்கிறார்.
                        அதைப்போல் எழுபதின் கதாநாயகிகளான, வாணிஸ்ரீ, சாரதா, ஜெயசுதா, விஜயலலிதா, விஜயலட்சுமி போன்றோருக்கும் சுசீலாவின் குரல் அருமையாக பொருந்தியது. நடிகை வாணிஸ்ரீக்கு மட்டும் 500 பாடல்களுக்கு மேல் பாடி இருக்கிறார்.. பி.சுசீலா 1976 இல் தனது வெள்ளி விழா ஆண்டை  நிறைவு செய்தார். அதை ஒட்டி ஆந்திராவிலும், தமிழ் நாட்டிலும் விழா எடுத்து கொண்டாடினர். அதில் மொத்த திரை உலகமும் கலந்து கொண்டது.கவர்னர் "சங்கீத சரஸ்வதி" என்ற பட்டம் அளித்தார்.  தெலுங்கு நடிகர் கிருஷ்ணாவின் பட நிறுவனமான பத்மாலயா எல்லா படங்களிலும், ( அவர்கள் எடுத்த சில ஹிந்திப்படங்களிலும் ) பி.சுசீலாவையே பாட வைத்தார்கள். நடிகர் நாகேஸ்வரராவின்  நிறுவனமான அன்னபூர்ணா ஸ்டுடியோஸ் கூட 1990  வரை எடுத்த எல்லா படங்களிலும் பி.சுசீலாவையே பாட வைத்தார்கள். 

 1974-இல் அறிமுகமான வாணி ஜெயராம் நல்ல பாடகி என பெயர் பெற்றார். அதனால் ஓரளவு வாய்ப்புகள் அவருக்கும் சென்றது. இளையராஜாவின் அறிமுகத்திற்கு பின் எஸ்.ஜானகியும் வாய்ப்புகளை பெற ஆரம்பித்தார். ஆனால் இவை எதுவும் தெலுங்கு பட உலகில் சுசீலாவின் வாய்ப்புகளை குறைக்கவில்லை. ஆனால்  சங்காரபரணம் வெற்றி பெற்ற போது அதில் பி.சுசீலா பாடி இருக்கவில்லை. (சுசீலாவிடம் கால்ஷீட் வாங்கி இருந்தார்கள். ஆனால், சிலர் செய்த பாலிடிக்ஸ் அதை வேறு பாடகர்கள் பாடும் படி ஆயிற்று).  ஆனாலும் தொடர்ந்த படங்களில் பி.சுசீலாவே பாடினார்1977-இல் வெளிவந்த சிரிசிரிமுவ்வா என்ற தெலுகு படத்துக்காக மூன்றாவது தேசீய விருதை பெற்றார். தொடர்ந்து 1982 (மேக சந்தேசம்), 1983 (MLA ஏடுகொண்டலு) படங்களுக்காகவும் தேசிய விருது தேடி வந்தது). 1977 -ஆம் வருடம் முதல் ஆந்திர மாநில விருது (நந்தி விருது) வழங்கப்படுகிறது. முதல் இரண்டு மாநில விருதுகளையும் பி.சுசீலா பெற்றுக்கொண்டார். அதை தொடர்ந்தும் விருதுகள் தேடி வந்தது. மொத்தம் ஆறு மாநில விருதுகள் கிடைத்தது. 

                 80-களின் நாயகிகளான ஸ்ரீதேவி, ஜெயப்ரதா, ராதிகா, ராதா, சுகாசினி, மாதவி, விஜயசாந்தி, சுலக்ஷ்னா, பானுப்ப்ரியா, கவுதமி முதல் குஷ்பூ வரை தெலுங்கில் பி,சுசீலாவே பின்னணி பாடினார்.
தமிழை பொறுத்த வரை இளையாராஜாவின் வெற்றிக்கு பின் தமிழ் ரசிகர்களுக்கு வேறு  பாணியில் இசை கிடைத்தது. கிட்டத்தட்ட 1980 வரை பி.சுசீலா தான் அதிகமான படங்களில் பாடி இருக்கிறார். அதற்கு பின் கொஞ்சம் கொஞ்சமாக வாய்ப்புகள் குறைய துவங்கின. ஆனாலும் 1980 முதல் 1990 வரை கிட்டத்தட்ட 800 பாடல்கள் தமிழில் பாடி இருக்கிறார். சராசரியாக வருடத்திற்கு  80 பாடல்கள்).  தெலுங்கை பொறுத்த வரை 1990 வரை பி.சுசீலாவே முதல் இடத்தில் இருந்தார். சக்ரவர்த்தி என்ற இசை அமைப்பாளர் முதல் நிலையில்  இருந்தார். அவரும் கிட்டத்தட்ட 800 படங்களுக்கு மேல் இசை அமைத்தவர். தமிழில் இழப்பே தெரியாத அளவுக்கு தெலுங்கில் பெரும்பாலான பாடல்களை பி.சுசீலா அவர்கள் பாடினார்கள். சக்ரவர்த்தியின் இசையில் மட்டுமே பி.சுசீலா அவர்கள் 2000 பாடல்களுக்கு மேல் பாடி இருக்கிறார்கள். தெலுங்கில் நிறைய டூயட்டுகள் இருக்கும். அதனால் படத்துக்கு ஐந்து முதல் 8 பாடல்கள் வரை பாட வேண்டியது வரும். முன்னணி இசை அமைப்பாளர்களான கே.வி.மகாதேவன், சத்யம், J.R.ராகவுலு,  ராஜன்-நாகேந்திரா என பல இசை அமைப்பாளர்களும் பி.சுசீலாவையே தெலுங்கில் பாட வைத்தார்கள். அதில் சிறப்பு என்னவென்றால், அந்த காலகட்டத்தில் நிறைய படங்கள் தயாரிக்கப்பட்டன. தமிழில் நேரடி படங்களே 150-க்கு மேல் வந்ததுண்டு. அதனால்  எல்லா பாடகிகளும் பிசியாக இருந்தார்கள். ஜானகி தமிழிலும், பி.சுசீலா தெலுங்கிலும், வாணி ஜெயராம் கன்னடத்திலும் முதன்மை நிலையில் இருந்தார்கள். எல்லோருக்கும் வாய்ப்பு இருந்தது. தவிர ஷைலஜா, ஜென்சி, சசிரேகா, உமாரமணன் என எல்லோருக்கும் வாய்ப்பு கிடைத்தது. சித்ராவின் வரவிற்கு பிறகு எல்லோருடைய வாய்ப்புகளும் மங்க துவங்கியது. 80-களின் இறுதியில் சென்னையில் இயங்கி வந்த தெலுங்கு  திரைப்பட உலகம் ஆந்திராவுக்கு பெயர்ந்தது. சுசீலாவையும் அங்கு அழைத்தார்கள். வாழ்வளித்த தமிழ் நாட்டை விட்டு போக விரும்பாத சுசீலா சென்னையிலேயே தங்கி விட்டார். அதன் பிறகு  தெலுங்கு  வாய்ப்புகளும் குறையத் துவங்கியது. பின்னர் பக்திப்பாடல்களும், தனிப்பாடல்களும். கச்சேரிகளும் நிறைய பாடினார். இப்போது பாடுகிறார். 1990-க்கு பிறகும் கூட 200 பாடல்களுக்கு மேல் பாடி இருக்கிறார். 
    தெலுங்கு மொழியில் மொத்தமாக  கிட்டத்தட்ட 10,000 முதல் 12,000 வரை பாடல்கள் பாடி இருக்க வேண்டும். இன்று கின்னசில் இடம் பிடித்திருக்கும் ஆஷா போஸ்லே அவர்கள் 11,000 பாடல்களை ஆதாராமாய் காண்பித்திருக்கிறார். பி,சுசீலா தெலுங்கில் மட்டுமே அதற்கு  மேல் பாடி இருப்பார்.  இந்த 62 வருட பின்னணிப்பாடகி வாழ்க்கையில், கிட்டத்தட்ட 35 வருடங்கள் நம்பர் ஒன் இடத்தில் இருந்திருக்கிறார். சக்ரவர்த்தி, கே.வி.எம் போன்ற இசை அமைப்பாளர்களுக்கு தலா 2000 பாடல்களுக்கு மேல் பாடி இருக்கிறார்எஸ்.பி,பியுடன் அதிகமான டுயட்ஸ் பாடி இருக்கிறார். ஐந்து தலைமுறை கதாநாயகிகளுக்கு பாடி இருக்கிறார்