பின்பற்றுபவர்கள்

வெள்ளி, 8 மார்ச், 2013

இளையராஜாவின் இசையில் பி.சுசீலா


இளையராஜாவின் இசையில் பின்னணிப்பாடகி திருமதி.பி.சுசீலா அவர்கள் 400 பாடல்களுக்கு மேல் பாடி இருக்கிறார்கள். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம். ஹிந்தி என ஐந்து மொழிகளில் குரல் கொடுத்து இருக்கிறார்கள்.

1.      . இளையராஜா வாத்தியக் கலைஞராக பணியாற்றிய கன்னட பட பாடலை பாடியவர் பி.சுசீலா.அந்த வகையில் முதலில் பணியாற்றிய ரெக்கார்டிங் அதுவே.
2.      . இளையராஜா எம்.எஸ்.வியிடம் வாத்தியக்கலைஞராக முதலில் பணியாற்றிய படம் "அவளுக்கென்று ஓர் மனம்". அதில் பி.சுசீலா பாடிய "மலர் எது என் கண்கள் தானென்று சொல்வேனடி" என்ற பாடல் தான் அவர் முதலில் MSV இடம் பணி ஆற்றிய பாடல்.
3.      இளையராஜா படங்களுக்கென்று முதலில் இசை அமைத்த பாடல் வெளிவரவில்லை. அந்த பாடலை பாடியவர்கள் SPB மற்றும் பி.சுசீலா. இளையராஜாவின் முதல் பாடலை பாடியவர்கள் SPB மற்றும் பி.சுசீலா.
4.      இளையராஜா முதலில் இசை அமைத்து வெளிவந்த திரைப்படம் அன்னக்கிளி. அதில் "சொந்தமில்லை,பந்தமில்லை" என்ற பாடலை பி.சுசீலா அவர்கள் பாடி இருக்கிறார்கள்.
5.      இளையராஜா தெலுங்கில் இசை அமைத்த முதல் படம் பத்ரகாளி. அந்த படத்தில் "சின்னி சின்னி கன்னையா" (கண்ணன் ஒரு கைக்குழந்தை பாடல்) உட்பட மூன்று பாடல்களை பாடி இருக்கிறார்.

6. இளையராஜா கன்னடத்தில் இசை அமைத்த முதல் படம் "மாத்து தப்பத மகா". அதில் "மறயத ஹருஷத" என்ற பாடலை பாடி இருக்கிறார்.
7.      இளையராஜா முதல் முதல் டூயட் பாடலை பாடியது பி.சுசீலாவுடன் தான். லக்ஷ்மி படத்தில் வரும் "தென்னமரத்துல தென்றல் அடிக்குது" என்ற பாடல் தான் அது.
8.      இளையராஜாவின் இசையில் அரண்மனைக்கிளி படத்தில் வரும் "நட்டு வச்ச ரோசாச்செடி மாமா மாமா" வுக்கு பிறகு இன்று வரை அவர் இசையில் பி.சுசீலா பாடவில்லை .
9.      இளையராஜாவின் திருவாசகம் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு வாழ்த்தினார் பி.சுசீலா.
10.      இளையராஜாவின் மகன் கார்த்திக் ராஜா இசையில் பாடி இருக்கிறார். படம் மாணிக்கம். பாடல் "உனக்கென ராசா நான்தானே"
11.  திரை உலகுக்கு வருவதற்கு முன் பி.சுசீலாவின் படத்தை வீட்டில் ப்ரேம் செய்து வைத்திருந்ததாக அடிக்கடி கூறுவார் இளையராஜா.
பாடல்களின் தொகுப்பு:: (நிறைவு பெறவில்லை)

வருடம் : 1976

படம்: அன்னக்கிளி
படம் : பத்ரகாளி

படம்:பாலூட்டி வளர்த்த கிளி
ஆத்திரத்தில் சாத்திரத்தை 

வருடம் : 1977

படம்: ஆளுக்கொரு ஆசை

படம்: அவர் எனக்கே சொந்தம்
படம்: துர்காதேவி
படம்: காயத்ரி

படம்: கவிக்குயில்

படம் : பதினாறு வயதினிலே

படம் : பெண் ஜென்மம்

படம்: சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு

படம் : துணை இருப்பாள் மீனாட்சி

பத்ரகாளி (தெலுகு)

சின்னி சின்னிகன்னையா (கண்ணன் ஒரு கைக்குழந்தை பாடலின் தெலுங்கு வடிவம் . )
அடிகாவே அக்கடா (" கேட்டேளே அங்கே " பாடலின் தெலுங்கு வடிவம் )
மகிஷாசுர சம்ஹாரம்கதா ( இது தமிழில் எம்.ஆர்.விஜயா பாடிய கதாகாலட்சேபம். தெலுங்கில் பி.சுசீலா பாடி இருக்கிறார் )

படம் : பஞ்சபூதாலு (தெலுகு)
("மாஞ்சோலை கிளிதானோ, மான்தானோ என்ற டியூன் தான் இது. தமிழில் பி.ஜெயச்சந்திரன் பாடி இருப்பார். தெலுங்கில் spb யும் பி.சுசீலாவும் பாடி இருக்கிறார்கள் )

வருடம் : 1978  

படம்: அச்சாணி


படம்: சிட்டுக்குருவி
என் கண்மணி உன் காதலி

படம்: கண்ணன் ஒரு கைக்குழந்தை

படம்: மாரியம்மன் திருவிழா

படம்: ப்ரியா

படம்: அஜேயுடு (தெலுகு-ப்ரியா டப்பிங்)

படம்: சட்டம் என் கையில்

படம்: திருக்கல்யாணம்
படம்: வாழ நினைத்தால் வாழலாம்
படம்: முள்ளு புவ்வு (முள்ளும் மலரும் டப்பிங்)
(தமிழ் முள்ளும் மலரும் படத்தில் பி.சுசீலா பாடவில்லை. அதை தெலுங்கில் டப் செய்த போது இரு பாடல்களை பாடி இருக்கிறார்)
ஜீவன சங்க்ரமமுலோ உதயம்

படம் : வயசு பிலிச்சிந்தி (இளமை ஊஞ்சலாடுகிறது ரீமேக்)  
இலாஃகே இலாஃகேசராகமாடிதே (தமிழ் "இளமை ஊஞ்சலாடுகிறது படத்தில் பி.சுசீலா பாடவில்லை. அதே தெலுங்கில் ரீமேக் செய்த பொது "ஒரே நாள் உன்னை நான்" பாடலை "இலாகே இலாகே" என பி.சுசீலா + SPB பாடினர். ) 

படம்: மாத்து தப்பத மகா  (கன்னடா -இந்த படத்தில் ரஜினிகாந்த் கதாநாயகனாக நடித்திருப்பார்)

வருடம் : 1979 

படம் :அன்னை ஓர் ஆலயம்

படம்: அம்மா எவரிக்கெய்னம்மா(தெலுகு- அன்னை ஓர் ஆலயம் டப்பிங்)
நாயகா விநாயகா (அப்பனே அப்பனே)
ஈ வேளா இதேமிட்டோ (நதியோரம் நாணல் ஒன்று)

படம் : லக்ஷ்மி
தென்னமரத்துல தென்றலடிக்குது (இந்த பாடல் இளையராஜாவின் முதல் டூயட். இதை இளையராஜாவே ஒரு இசை கச்சேரியில் சொல்லி இருக்கிறார்)

படம்: முதல் இரவு

படம்: முகத்தில் முகம் பார்க்கலாம்

படம் : நான் வாழ வைப்பேன்
படம் : நல்லதொரு குடும்பம்

படம் : பட்டாக்கத்தி பைரவன்

படம்: பூந்தளிர்

படம் : தொங்கா தொரா
ஒகே நிஸம் ஷனக் ஷணம் (ஒரே இடம் நிரந்தரம்)

படம் : கல்யாண ராமுடு (கல்யாணராமன் டப்பிங். தமிழில் பி.சுசீலா பாடவில்லை. அதை தெலுங்கில் டப் செய்த போது "மலர்களில் ஆடும் இளமை" பாடலை பாடினார்.
மனுசுனு ரேகி தீப்பி (மலர்களில் ஆடும் இளமை)

வருடம் : 1980

படம் : பஞ்சமி
உதய காலமே நனைந்தமேகமே  (அருமையான பாடல். படம் வெளிவந்ததா என தெரியாது. இந்த பாடலை எழுதிய வைரமுத்து என்ன சொல்கிறார். படியுங்கள்)

படம் : அதிகாரம்

படம் : அன்புக்கு நான் அடிமை

படம்: காளி

படம்: காளி (தெலுகு - காளி பட டப்பிங்)

கண்ணில் தெரியும் கதைகள்
படம்: முரட்டுக்காளை
கோடானு கோடி கொண்ட(கொட்டுவோம் கொட்டுவோம்)


படம்: ஊரிக்கி ஒக்கடு  (முரட்டுக்காளை டப்பிங்)
அந்தாலு சிந்தேவேளா 



நதியை தேடி வந்த கடல்
எங்கேயோ ஏதோ பாட்டொன்று கேட்டேன்
படம்: நெஞ்சத்தை கிள்ளாதே

படம்: ஒரே முத்தம்

படம்: ரிஷிமூலம்

படம்: ருசி கண்ட பூனை

படம்: காளராத்ரி (தெலுகு) ( "ஒரு இரவு ஒரு பறவை " டப்பிங் )
ஒரைய்யோ சாலைய்யோ
பாலகுவ்வா (தங்க குடமே )

படம் கொத்த ஜீவிதலு (தெலுகு -புதிய வார்ப்புகள் ரீமேக். தமிழில் பி.சுசீலா பாடவில்லை. "இதயம் போகுதே" பாடலை தமிழில் ஜென்சி பாடினார்,  அதை தெலுங்கில் பி.சுசீலா பாடினார். தம்தன தம்தன பாடலை  தமிழில் ஜென்சியும், வசந்தாவும் பாடினர். தெலுங்கில் பபிசுசீலாவும், எஸ்.ஜானகியும் பாடினர். இது தான் சுஹாசினியின் முதல் தெலுங்கு படம் )
மனசே வெள்ளனே (இதயம் போகுதே )
தம்தன நம்தனதாளமுலோ (தம்தன தம்தன தாளம் வரும்)

படம்: மாயாதாரி கிருஷ்ணுடு (தெலுகுஅன்புக்கு நான் அடிமை டப்பிங்)
செங்காவி பஞ்சேகட்டி (காத்தோடு பூவுரச)
ஃகுடிவாடா ஃகும்மாட்டம் (வயலூரு மானாட்டம்)
ஒகரிக்கோ ஒகரிலா (ஒன்றோடு ஒன்றானோம்)

 படம்:நா பேரு ஜானி (தெலுகு ஜானிடப்பிங். தமிழில் பி,சுசீலா பாடவில்லை, தெலுங்கில் ஜென்சி பாடிய "என் வானிலே" பாடலையும், சுஜாதா பாடிய "ஒரு இனிய மனது" பாடலையும் பி.சுசீலா பாடினார்)
ஈ வேளலோ ஒகே வேடுகா (என் வானிலே ஒரே )
ஒக கன்னே மனசு (ஒரு இனிய மனது இசையை)

படம் பஸிடி மொஃகலு (தெலுகு- அழகியே கண்ணே டப்பிங்)
பெள்ளியிந்தம்மோ (கல்யாணம் பாரு)
     ( தமிழில் பாடியவர் எஸ்.பி.சைலஜா)

 படம்: ஜன்ம ஜன்மதா அனுபந்தா (கன்னடா)
ஃகண்டாகி நானு

 படம்: சின்னாரி சிட்டிபாபு (தெலுகு) - 
     பூந்தளிர் படம் டப் செய்யப்பட்டது. தமிழில் "ராஜா சின்ன ராஜா" பாடல் மட்டும் தான் பி.சுசீலாவின் குரலில் ஒலித்தது. தெலுங்கில் மூன்று பாடல்களை பாடினார்)
ஆ கன்னுலலோ ஏ அம்ருத
  ( வா பொன்மயிலே நெஞ்சம் ஏக்கத்தில் தவிக்குது )
ரா ரா நா பாபு
    ( ராஜா சின்ன ராஜா, பூந்தளிரே இன்பக்கனியே)
ஏவோ ஃகுஸ ஃகுஸலு
    ( "ஞான் ஞான் பாடணம்" - தமிழில் பாடியவர் ஜென்சி)

வருடம் : 1981

படம் : பால நாகம்மா
நீர் கொடுக்க பிறந்ததம்மா ஓடை

 படம் : பால நாகம்மா (மலையாளம் -டப்பிங்)
நீரோழுக்கான் வந்நதல்லே

படம் : பால நாகம்மா (தெலுகு -டப்பிங்)
நா எதலோ விரிசேனம்மா டோலா

 படம் : இன்று போய் நாளை வா
பல நாள் ஆசை திருநாள்ஆச்சு

 படம்: கடல் மீன்கள்
மானே மணி மங்கலசிப்பி உன் தாயே
மதனி மதனி மச்சான் இல்லியா?

 படம் :ரங்கூன் ராஜா (தெலுகு) (கடல் மீன்கள் டப்பிங் - இதன் தமிழ் வடிவத்தில் பி.சுசீலா இரண்டு பாடல்கள் பாடினார். தெலுங்கு படத்தில் "தாலாட்டுதே வானம்" பாடலின் தெலுங்கு வடிவத்தையும் பாடினார்)
ஆகாசமே பாடே (தாலாட்டுதே வானம்)
பில்லா பில்லா (மதனி மதனி)
வின்ட்டே ஒக மாட்டா( மானே மணி மங்கல)

 படம்: கரை எல்லாம் செண்பகப்பூ
ஏரு புடிச்சவரே ஏச்சுப்புட்ட வல்லவரே

 படம் : கோயில் புறா
அமுதே தமிழே அழகிய மொழியே

படம்: நெற்றிக்கண்
மாப்பிள்ளைக்கு மாமன் மனசு

படம் : ஒரு இரவு ஒரு பறவை
கண்ணாடி ராமையா
போதும் போதும்
தங்க குடமே

 படம்: புதிய அடிமைகள்
ழைப்பூ உன்னை தேடுதே
மகிழம் பூவே உன்னை பார்த்தேன்

 படம் : ராம் லக்ஷ்மன்.
விழியில் உன்விழியில் ஒரு

 படம்: சிலிப்பி மொகுடு (தெலுகு -மீண்டும் கோகிலா -டப்பிங். தமிழ் படத்தில் பி.சுசீலா பாடவில்லை. தெலுங்கு படத்தில் ஜானகி பாடிய "ராதா ராதா நீ எங்கே" பாடலை பி.சுசீலா பாடினார்.)
ராதா ராதா ரா ராதா (ராதா ராதா நீ எங்கே)

 மதுர ஃகீதம் (தெலுகு- பன்னீர் புஷ்பங்கள் -டப்பிங். தமிழில் உமா ரமணன் பாடிய "ஆனந்த ராகம் கேட்கும் காலம்" பாடலின் தெலுங்கு வடிவம்.
ஆனந்த ராகம் ( ஆனந்த ராகம் கேட்கும் காலம்)

மவுன கீதம் (தெலுகு)
நா ராஃகமே (ஏ தென்றலே இனி நீயும் )

படம்: சீதக்கொக்க சிலக்கா (தெலுகு ரீமேக். தமிழ் அலைகள் ஓய்வதில்லை படத்தில் பி.சுசீலா பாடவில்லை. காதல் ஓவியம் பாடலுக்கான situation-இல் வேறு ட்யூன் போடப்பட்டு பி.சுசீலா+SPB பாடினர் )
சாகர சங்கமமே ப்ரணய

ஆராதனை படம் தெலுங்கில் டப் செய்யப்பட்டது. அந்த படத்தில் "தலபுல பிலுபுல காலம்" என்ற பாடலை பி.சுசீலா பாடினார்.  அது தமிழில் "இளம் பனி துளிர் விழும் நேரம்" என்ற பாடல் ஆகும்.

 வருடம் : 1982
படம்: அர்ச்சனை பூக்கள்
பார்த்தா பச்சப்பாப்பா

 படம்: கோபுரங்கள் சாய்வதில்லை
வாடி சமஞ்சபுள்ள

 படம் : கண்ணே ராதா
வாலை பருவத்திலே

படம்: கவிதை மலர்
நீரெல்லாம்பன்னீரம்மா

 படம்: கேள்வியும் நானே பதிலும் நானே
நினைத்து நினைத்து வரைந்த

படம்: மகனே மகனே
மகனே இளம் மகனே நானழுதேன்
பேர் சொல்ல வந்த பிள்ளை நீயே

 படம்: மஞ்சள் நிலா :
பூந்தென்றல் காற்றேவா

 படம் : நினைவெல்லாம் நித்யா
கன்னிப்பொண்ணு கைமேல

படம் : ராணித்தேனி.
என்ன சொல்லி நான்எழுத

படம்: தாய் மூகாம்பிகை
சீனத்து பட்டு மேனி இளஞ்சிட்டு மேனி
இசையரசி எந்நாளும்நானே
கற்றது கைமண் அளவு

படம் : தேவி மூகாம்பிகா (தெலுகு -தாய் மூகாம்பிகை -டப்பிங்)
? (சீனத்து பட்டு மேனி)
ஸரிலேனே (இசையரசி எந்நாளும்)
? (கற்றது கைமண் அளவு)

படம் : பிரம்மா விஷ்ணு மகேஷ்(ஹிந்தி தாய் மூகாம்பிகை -டப்பிங்)
? (சீனத்து பட்டு மேனி)
? (இசையரசி எந்நாளும்)
? கற்றது கைமண் அளவு
Pahadon ki main hoon wasi

 படம்: வாலிபமே வா வா
அழகே உன்னை கொஞ்சம் (டுயட்)
அழகே உன்னை கொஞ்சம்(சோலோ)

ஈதாரம் இல்லாளு :     தெலுகு- புதுமைப்பெண் -ரீமேக் -தமிழ் படத்தில் பி.சுசீலா பாடவில்லை. உமா ரமணன் பாடிய "கஸ்தூரி மானே", சுனந்தா பாடிய "காதல் மயக்கம்" பாடலையும் பி.சுசீலா பாடினார். தவிர முள்ளும் மலரும் படத்தில் ஜென்சி பாடிய "அடி பெண்ணே" பாடலின் டியுனும் இந்த படத்தில் சேர்க்கப்பட்டது, அதையும் பி.சுசீலாவே பாடினார் )

அனுராகம் (அடி பெண்ணே பொன்னூஞ்சல் ஆடும் இளமை)
ராகம் மதுரம் (காதல் மயக்கம், அழகிய கண்கள்)
சிரிமல்லே பூலா (கஸ்தூரி மானே கல்யாண தேனே)


கலாருத்ருடு : கொம்பேறி மூக்கன் தெலுகு டப்பிங். . தமிழில் பி,சுசீலா பாடவில்லை. தெலுங்கில் மூன்று பாடல்களை பாடினார்.
ரோஜு முத்து ( ரோஜா ஒன்று முத்தம் கேட்கும் நேரம் )
கல கல நவ்வுல
நெலவங்கை தினம் தினம்  ( ஊஞ்சல் மனம் உலா வரும் நேரம்)

 படம்: கிரமகாஷலு (தனிக்காட்டு ராஜா -டப்பிங். தமிழில் எஸ்.பி.சைலஜா பாடிய "ராசாவே உன்ன நான் எண்ணித்தான்" பாடலை தெலுங்கில் பி.சுசீலா பாடினார்).
சிருநவ்வே ஒலிகிஞ்சே (ராசாவே உன்ன நான்)

 படம்: பல்லெட்டூரி சிம்ஹம் (தெலுகு - சகலகலா வல்லவன்)
இலா காஹனி ( நிலா காயுது )
நின்ன ராத்திரி யம்மா (நேத்து ராத்திரி யம்மா)

 படம்: பிரேம சங்கமம் (தெலுகு -நினைவெல்லாம் நித்யா டப்பிங். இதான் தமிழ் வடிவத்தில் "கன்னிப்பொண்ணு கைமேல" பாடலை பி.சுசீலா பாடினார். தெலுங்கில் "ரோஜாவை தாலாட்டும் தென்றல்" பாடலையும் பி.சுசீலாவே பாடினார்.
சூஸாவா அந்தாலமைனா (ரோஜாவை தாலாட்டும் தென்றல்)
சூஸாவா அந்தாலமைனா (சோகம்) (கானல் நீர் போல் எந்தன் )
குந்தலக்கடி (கன்னிப்பொண்ணு கைமேல )

படம் : ஹிமபிந்து ( ஆராதனை படம் தெலுங்கில் ஹிமபிந்து என்ற பெயரில் டப் செய்யப்பட்டது. அதில் இரு பாடல்களை பி.சுசீலா பாடினார் )
தலப்புல பிலுப்புல காலம் ( இளம் பனி துளிர் விடும் நேரம் )
ஒக்க  புன்னைமி சஷிபிம்பம் ( ஒரு குங்கும செங்கமலம் )

 வருடம் : 1983

 படம்: ஆயிரம் நிலவே வா
கங்கை ஆற்றில் நின்றுகொண்டு

படம்: அடுத்த வாரிசு
பேசக்கூடாது வெறும் பேச்சில் சுகம்

படம் :அவள் ஒரு தனி ரகம்
நிலவாகி வந்ததொரு பெண்ணே
ஏழைகளை வாழ வைக்கும்

 படம்: என்னைப்பார் என் அழகைப்பார்

அம்மாடியோவ் போதும் போதும்
பெங்களூரு தக்காளி
என் தேகம் பாய்கின்ற நீரோடை
தொட்டுப்பார் தொட்டுப்பார்

படம் : இளமை இதோ இதோ
அள்ளி வச்ச மல்லிகையே

 படம்: இளமை காலங்கள்
ராகவனே ரமணா ரகுநாதா
பாட வந்ததோ கானம்

 படம்: மலர்கள் நனைகின்றன
ஆசை இதழ் ஓசை

 படம் : முத்து எங்கள் சொத்து
யார் யாரு என்னான்னு தான்


படம்: பாயும் புலி
பொத்துக்கிட்டு ஊத்துதடி வானம்
ஆப்பக்கட அன்னக்கிளிஆடிவரும்

 படம் :சூரக்கோட்டை சிங்கக்குட்டி
காளிதாசன் கண்ணதாசன்

 படம்: உறங்காத நினைவுகள்
பாடுபட்டு சேர்த்த துட்ட

 படம் : யுக தர்மம்
உருக்கு மனசு மேல எனக்கு

படம் : பல்லவி அனுபல்லவி (தெலுகு – மணிரத்னம் முதலில் டைரக்ட் செய்த கன்னட படம் இது. தெலுங்கில் டப் செய்யப்பட்ட போது இந்த பாடலை பி.சுசீலா பாடினார்)
இதி தீயனி தீரனி பந்தம்

படம் : அர்தராத்ரி ஆடதி (தெலுகு)

ஸ்ருதுலே  ஜதலை
கலலு கன்னாமு
தெலதெலவாரெனு        


வருடம் : 1984

 படம் : அம்பிகை நேரில் வந்தாள்
அன்னை தாலாட்டு பாட

 படம் : அன்புள்ள மலரே.
காதல் தேகங்கள் பொன்னூஞ்சல்

 படம் : எனக்குள் ஒருவன்
தேர் கொண்டு சென்றவன்

 படம் : இங்கேயும் ஒரு கங்கை
சோலை புஷ்பங்களே என் சோகம்
தெக்கு தெரு மச்சானே

 படம் : கை கொடுக்கும் கை
கண்ணுக்குள்ளே யாரோ

படம் : மகுடி
தெனமும் கல்யாணம்

 படம்: முடிவல்ல ஆரம்பம்
தென்னங்கீற்றும் தென்னங்காற்றும்

 படம்: நேரம் நல்ல நேரம்
பவள மணித்தேர் மேலே பவனி வருவோம்

 படம்: ஓ மானே மானே
அபிராமியே அன்னையே துணை நீயே

படம்: தங்கமடி தங்கம்
த்த மக தங்கத்துக்கு என்ன மயக்கம்
காலம் இளமை காலம்
ரோட்டோரம் சேரியில

படம்: வாழ்க்கை
மெல்ல மெல்ல என்னைத்தொட்டு

படம்: வைதேகி காத்திருந்தாள்
ராசாவே உன்ன காணாதநெஞ்சு

படம்: அம்மாயிலு பிரேமநிஞ்சண்டி(தெலுகு)
மேகம் சிறுஜல்லை (வானம் நிறம் மாறும்)

படம் : ப்ரியமைன ரஜினிகாந்த் (தெலுகு- அன்புள்ள ரஜினிகாந்த் டப்பிங். தமிழில் லதா ரஜினிகாந்த் பாடிய “கடவுள் உள்ளமே” பாடலை பி.சுசீலா பாடி இருக்கிறார். தென் பூவே பூவே வா பாடலை தமிழில்  எஸ்.ஜானகியும், தெலுங்கில் பி.சுசீலாவும் பாடி இருக்கிறார்கள்)
தய்வ நிலயமே ஓ (கடவுள் உள்ளமே)
நா புவ்வை புவ்வை (தேன் பூவே பூவே வா )

படம்: ராக பந்தம் (தெலுகு -மகுடி -டப்பிங்)
நித்யம் கல்யாணம் (தினமும் கல்யாணம்)

 படம் : ராஜ்குமார் (தெலுகு)
அர்தராத்ரி ஸத்து மணிகே
ஜானகி கலகனலேது

படம்: ?? (இங்கேயும் ஒரு கங்கை-dubbed)
ஏதி ஆ வென்னேலா (சோலை புஷ்பங்களே)
???? - (தெக்கு தெரு மச்சானே)

 படம்: 24 ஃகண்டலு (24 மணி நேரம்)
ஒக்க மஞ்சகா மனசு (குளிக்கும் போதிலே)

படம் : நாகர மஹிமே (கன்னடா)
கன்னடதே ஜோதியா

வருடம் : 1985

 படம்: அமுதகானம்

படம் : அன்பின் முகவரி

படம் : காக்கி சட்டை :
படம்: நானே ராஜா நானே மந்திரி

 படம்: நீதியின் மறுபக்கம்

படம் : பகல் நிலவு
பூவிலே மேடை நான் போடவா 

புதிய தீர்ப்பு :

ஸ்வாதிமுத்யம். (தெலுகு)

படம்: சிப்புக்குள் முத்து

படம்: உயர்ந்த மனிதன்

சிந்து பைரவி (தெலுகு டப்பிங். சிந்து பைரவி படத்துக்காக சித்ரா தேசிய விருது பெற்றார். அதில் வரும் "நானொரு சிந்து" பாடலை தெலுங்கில் பி.சுசீலா பாடினார்)   
நேனொக்க சிந்து (நானொரு சிந்து ) 

படம்: உதய கீதம் (தெலுகு டப்பிங் . உதயகீதம் படத்தில் வரும் “தேனே தென்பாண்டி மீனே” பாட்டை தமிழில் எஸ்.ஜானகியும், தெலுங்கில் பி.சுசீலாவும் பாடினர்.)
லாலி நா பாப்பா வெள்ளி (தேனே தென்பாண்டி மீனே)

இத்தரு கைதீலு : ( அன்பின் முகவரி டப்பிங் ) . தமிழில் "பொன்வானிலே எழில் வெண்மேகமே" என்ற பாடலை ஜேசுதாசுடன் பாடினார் பி.சுசீலா. தெலுங்கில் மூன்று பாடல்களை பாடும் வாய்ப்பு கிடைத்தது )
முத்ரிஞ்சின ( பொன்வானிலே எழில் வெண் மேகமே)
ஓஹோ கோரிங்கா 
ஸ்வாகதமனி 

மொண்டி மொகுடு ( என் செல்வமே -டப்பிங் ). 
ப்ரேம தய்வம் ( அன்பே தெய்வம் என்றே )
காலம் சேஸின ஃகாரடிலோ ( காலம் நேரம் கனிந்து வரும் )

பிள்ளை நிலா படம் தெலுங்கில் "அர்த ராத்ரி" என்ற பெயரில் டப் செய்யப்பட்டது. அதில் "கலிசே கனுலே ஏமன்னதி" என்ற பாடலை எஸ்.பி.பியுடன் பாடினார். அதா பாடல் தமிழில் "அழகே அழகே" என்ற பெயரில் மலேஷியா மற்றும் எஸ்.ஜானகி குரலில் ஒலித்தது. 

வருடம் : 1986

படம்: தர்ம பத்தினி

படம்: கண்ண தொறக்கணும் சாமி

படம்: நானும் ஒரு தொழிலாளி

படம்: சூர்யோதயம் (தெலுகு -நானும் ஒரு தொழிலாளி -டப்பிங்)

படம்: நட்பு
உன்னைக்காண துடித்தேன்

படம்: ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா

படம்: ஆகர்ஷனா ( என் ஜீவன் பாடுது டப்பிங். தமிழில் லதா மங்கேஷ்கர் பாடிய "எங்கிருந்தோ அழைக்கும் உன் கீதம்" பாடலை பி.சுசீலா பாடினார்.
நா எதலோ கதிலே ஈ கீதம்  (எங்கிருந்தோ அழைக்கும் உன் கீதம்)
நா எதலோ கதிலே ஈ கீதம் ( with ராஜ் சீதாராமன்)
கலல வீதிலோ (காதல் வானிலே ஓடும் மேகமே - தமிழில் எஸ்.ஜானகி பாடியது )

 ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா மகாத்யம்
கொடாம சிம்ஹம் : ( ரஜினி, அம்பிகா நடித்த டப்பிங் )

ஹே மைனா னா மைனா
கொண்டே வயசே சுருக்குமண்டே
மத்துமண்டே சல்லேவே

வருடம் : 1987

 படம்: காதல் பரிசு

படம் : கிருஷ்ணன் வந்தான்

படம்: நாயகன்

படம்: நாயகன் (தெலுகு)
ஸந்தே பொத்து மேகம்  (அந்தி மழை மேகம்)

படம்: ரெட்டைவால்குருவி

 படம்: சூர சம்ஹாரம்

படம் : கைதி நம்பர் 79 (ஜல்லிக்கட்டு டப்பிங்)
கன்னே சிலக்கா (காதல் கிளியே)

 படம் : நந்தினி (தெலுகு -மனதில் உறுதி வேண்டும் படத்தில் வரும் கண்ணா வருவாயா, கண்ணின் மணியே பாடல்களை தமிழில் சித்ராவும், தெலுங்கில் பி,சுசீலாவும் பாடினர் )
கிருஷ்ணா ரா வேளா மீரா (கண்ணா வருவாயா) 

படம் : ப்ரியுராலு
ஈநாட்டி அனுராக பந்தம் (எங்கெங்கு நீ சென்ற போதும்)
ஈநாட்டி அனுராக (sad)

 படம்: தென்றல் சுடும்

வருடம் : 1988

படம்: தர்மத்தின் தலைவன்

படம் : எங்க ஊரு காவக்காரன்

படம்: மணமகளே வா

 படம்: பாடாத தேனீக்கள்

படம்: பூந்தோட்ட காவல்காரன்

படம்: ராசாவே உன்னை நம்பி

படம்: தாயம் ஒண்ணு
 மனதிலே ஒரு பாட்டு(sad)

படம் : சிலிப்பி தொங்கா (தெலுகு -தாயம் ஒண்ணு டப்பிங்)
மனசுலோ ஒக்க பாட்டா (மனதிலே ஒரு பாட்டு )
மனசுலோ ஒக்க பாட்டா(sad)

படம் : ஆஸ்துலு அந்தஸ்துலு (தெலுகு - முதல் வசந்தம் டப்பிங். இதில் வரும் "ஆறும் அது ஆழமில்ல" பாடலை தமிழில் உமா ரமணனும் தெலுங்கில் பி.சுசீலாவும் பாடினர்)
எகிஸி படே கெரட்டானிவி

 படம் : மரண மிருதங்கம் (தெலுகு)
கரிகிப்போயானு கற்பூரவேனலா

 படம்: ரக்தாபிஷேகம்
லவ் அன்டே லவ்

படம் : சத்யா (தெலுகு - சத்யா டப்பிங். லதா மங்கேஷ்கர் தமிழில் பாடிய “வளையோசை கலகலவென கவிதைகள் படிக்குது” பாடலை பி.சுசீலா தெலுங்கில் பாடினார்.)

 படம் :ஸ்வர்ண கமலம் (தெலுகு)
ஃகல்லு ஃகல்லு ஃகல்லுமன்டே
கொலுவை உன்னாடே
சிவ பூஜக்கு

படம்: ஒத்தன்டே பெள்ளி ( தெலுகு-முந்தானை முடிச்சு. முந்தானை முடிச்சு தெலுங்கு வடிவத்தில் தமிழில் எஸ்.ஜானகி பாடிய ஐந்து பாடல்களையும் தெலுங்கில் பி.சுசீலா பாடினார் )
சின்னி சின்னி கன்னா சின்னாரி  (சின்னஞ்சிறு கிளியே)
கடசாரி நா மாவா   (வெளக்கு வச்ச நேரத்துல)
ராவோயி நா மோகுடே  (நான் புடிக்கும் மாப்பிள்ள தான்)
தலப்புல ராகம் வலப்புல  (அந்தி வரும் நேரம்)
லாலி ஜோ கள்ள தொரவரோ  (கண்ண தொறக்கணும் சாமி)

படம் : வரசுடொச்சாடு (தெலுகு)
செம்படெப்ப அம்மாயி
ஜிஞ்சனக்கு ஜனக்கு  எங்க ஊரு பாட்டுக்காரன் படத்தில் வரும் "ஜிஞ்சனக்கு ஜனக்கு” பாடலின் ட்யுன் இந்த படத்திலும் உபயோகிக்க பட்டது )

வருடம் : 1989

படம் : சின்னப்பதாஸ்.
மஞ்சக்குருவிமஞ்சக்குருவி

படம் : என் புருஷன்தான் எனக்கு மட்டும்தான்
மனதில் ஒரே ஒரு பூபூத்தது  

படம்: என்னப்பெத்த ராசா

படம்: நினைவு சின்னம்

 படம் : பொங்கி வரும் காவேரி

படம் : பொறுத்தது போதும்

 படம் : ராஜாதி ராஜா

 படம் : வருஷம்-16

 படம் : பிரேமாஞ்சலி (தெலுகு - வருஷம்-16 டப்பிங்)
கூத்தக்கு வச்சேனு  (பொங்கலு பொங்கலு வைக்க)
ஹேய்.. சிட்டி நானா (ஹே அய்யாசாமி)

 படம் : இந்த்ருடு சந்த்ருடு
காலேஜ் ஏஜிலோ

படம்: ஸ்வாதி சினுக்குலு
மா கண்டி பாப்பா நீவே 
மா கண்டி பாப்பா(sad)

வருடம் : 1990

 படம்: அன்பு சின்னம்
கத்துது கத்துதுகோயில்புறா

 படம்: கேளடி கண்மணி
கற்பூர பொம்மை ஒன்று

 படம் : ஓ பாப்பா லாலி (தெலுகு -கேளடி கண்மணி டப்பிங்)
கற்பூர பொம்மவு நுவ்வே (கற்பூர பொம்மை ஒன்று)


படம்: மல்லு வெட்டி மைனர்
காத்திருந்த மல்லிமல்லி

 படம்: கண்ணுக்கொரு வண்ணக்கிளி
துளி துளி மழையா

வருடம் : 1991

படம்: என்றே ஸுர்யபுத்ரிக்கு (மலையாளம்)
ஆலாபனம் பாடும் தாய்மனம்
பூந்தேன்னலோ கண்ணீர் தும்பியோ

படம் :கற்பூர முல்லை
பூங்காவியம் பேசும் ஓவியம்
பூங்காவியம் பேசும்(சோலோ)

 படம்: சார் ஐ லவ் யூ.
இங்கே இறைவன் எனும்

 படம் :தாலாட்டு கேக்குதம்மா
சொன்ன பேச்ச கேக்கமாட்டோம்

படம் : அனுபந்தாலு (தெலுகு)
பச்சனி பந்திரிலோனா

படம் : கூலி நம்பர் 1
கலயா நிஜமா
( இது இளையராஜாவும் பி.சுசீலாவும் பாடிய தெலுகு டுயட்.. )


படம் : தள்பதி (தெலுகு)
ஆட ஜன்மக்கி என்னி (சின்னத்தாயவள் தந்த ராசாவே)
தமிழில் எஸ்.ஜானகி பாடிய “சின்னத்தாயவள் தந்த ராசாவே" பாடலை தெலுங்கில் பி.சுசீலா பாடினார்.

வருடம் : 1992

படம் : சின்ன கவுண்டர்
முத்து மணி மால

 படம் :சின்னத்தாயி
அரும்பரும்பா சரம்தொடுத்த

படம் : நாடோடி பாட்டுக்காரன்
வனமெல்லாம் செண்பகப்பூ

 படம் : பொண்ணுக்கேத்த புருஷன்
சாரங்கதாரா சங்கீதஹாரா

வருடம் : 1993

படம் : அரண்மனைக்கிளி
நட்டு வச்ச ரோசாச்செடி மாமா

 படம் : குந்திபுத்ருடு (மலையாளத்தில் வந்த தேவாசுரம் படத்தின் ரீமேக்)
கும்மாலு தொம்மிடி
கும்மாலு தொம்மிடி(sad)

 படம் : சூர்யோதயா (கன்னடா)
ஹாடோ கொம்பே

படம் : ரேப்பட்டி ரவுடி
என்னட்டிதோ பந்தமுரா நானா

1994 :
பங்காரு பாப்பா 
தாரா தாரா மத்யலோ (சின்ன சின்ன பூங்கொடி )
தாரா தாரா மத்யலோ (ver2 ) 
    ( கார்த்திக் நடித்த "சின்ன கண்ணம்மா" படம் தெலுங்கில் "பங்காரு பாப்பா" என்ற பெயரில் மொழி மாற்றம் செய்யப்பட்டது. அதில் எஸ்.ஜானகி, மின்மினி இணைந்து பாடிய சின்ன சின்ன பூங்கொடி பாடலை தெலுங்கில் பி.சுசீலாவும், கல்பனாவும் இணைந்து பாடினர். இதன் இன்னொரு வடிவத்தை "பி.சுசீலா, எஸ்.பி.சைலஜா மற்றும் கல்பனா" பாடினர் )

அந்தரில புட்டலாடே -?


இவை தவிர இளையராஜா இசையில் பி.சுசீலா பாடி இருக்கும் படங்கள்

  1. Paga Battina Puli Biddalu (Telugu - 1984)-nalla naal –dubbing
  1. Chilipi Donga (Telugu - 1989)-karthik, ramya Krishnan
  1. Ranadheerudu (Telugu - 1986)-arjun-nalini –rama narayan
  1. Iddaru Khydeelu (Telugu - 1982)- mohan , viji, -mani vannan
  1. Takkari Donga (Telugu - 1984) –rajini, sridevi
  1. Illali Sapadham (Telugu - 1985) –viajykanth,urvashi,nalini
  1. Tiger Rajani (Telugu - 1984) – puthu kavithai dubbing
  1. Siva Bakthi Naga Sakthi (Telugu - 1985) –nagiah, gowri
  1. Anthagathela Sawal (Telugu - 1984)
  1. Adavi Bebbuli (Telugu - 1990) –vijayakanth, nalini, viji

வேறு இசை அமைப்பாளர்கள் உபயோகித்த இளையராஜாவின் இசை. (பாடியவர் பி.சுசீலா )

ஸ்ரீவாரி செலிமி -அபராதி
       ( "பொன்மாலை பொழுது" பாடலின் ட்டின். J.V.ராகவுலு அபராதி படத்துக்காக உபயோகித்து கொண்டார். தமிழில் பாடியவர் SPB )

ஏம் வானோ (naari naari naduma muraari)
    (" நான் தேடும் செவ்வந்தி பூவிது " டியுனை கே.வி.எம் வேறு situation-இல் கொஞ்சம் மாற்றி உபயோகித்தார். )

ப்ரேம ப்ருந்தாவனம் ( ப்ரேம கனுக்கா)
     ("வான் மேகங்களே வாழ்த்துங்கள் பாடுங்கள்" பாடலின் ட்யுனை இந்த படத்தில் உபயோகித்தார் சக்கரவர்த்தி)


நன்றி ... 


5 கருத்துகள்: