பி.சுசீலா - சில குறிப்புகள்
1. 65 வருடங்களாக பாடிக்கொண்டிருக்கிறார். ஏதாவது ஒரு மொழியில், ஒவ்வொரு வருடமும் திரைப்பாடல் பாடிக்கொண்டே இருக்கிறார். இவை தவிர மேடைக்கச்சேரிகள், பக்திப்பாடல்கள் நிறைய பாடுகிறார்.
2. அதிகமான பாடல்கள் பாடிய பெண்குரல். ஆதாரமாக 20,000 பாடல்கள் உள்ளன. இன்னும் இருக்கும்.
3. தமிழிலும் தெலுங்கிலும் அதிகமான பாடல்கள் பாடிய பாடகி.
4. போர்க்காலத்தில் ஜவான்களை ஊக்குவிப்பதற்காக சிவாஜி தலைமையில் சென்ற குழுவில் பங்கேற்று ஜலந்தருக்கு சென்று பாடல்கள் பாடி வீரர்களை உற்சாகப்படுத்தினார்.
5. பாடகிகளுக்கான முதல் தேசீய விருதை பெற்றவர்.
6. பக்தி பாடல்களுக்கு இசை அமைத்திருக்கிறார்.
7. சிறு வயதில் கர்நாடக இசை கச்சேரிகள் செய்திருக்கிறார்.
8.. மனதை திருடி விட்டாய் படத்தில் பி.சுசீலாவாகவே நடித்திருக்கிறார்.
9. திரை இசை வரலாற்றிலேயே ஒரு பாடகிக்கு தேசீய விருது பெற்றதற்காக பெரிய விழா எடுத்தது இவருக்கு தான். இவரது வெள்ளி விழா, பொன்விழா, வைரவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டது
10 .பி.சுசீலாவின் பெயரால் ஒவ்வொரு வருடமும் பி.சுசீலா விருது வழங்கப்படுகிறது.
11. பி.சுசீலா ட்ரஸ்ட் என்ற அமைப்பின் மூலமாக, நலிந்த இசை இசைக் கலைஞர்களுக்கு உதவியும், மாத பென்ஷனும் அளித்து வருகிறார்.
12. தமிழ்தாய் வாழ்த்து பாடியவர் (நீராடுங்கடலுத்த )
13. அரசியல் கட்சிகளுக்கான கொள்கைப்பாடல்கள் (Congress, DMK, ADMK ) பாடி இருக்கிறார்.
14. அரசியல் தலைவர்கள் மறைந்த போது இரங்கல் பாடல்கள் பாடி இருக்கிறார். (நேரு, இந்திரா, அண்ணா, காமராஜர், எம்,ஜி,ஆர் )
15. அரசியல் தலைவர்களைப்பற்றி பாடி இருக்கிறார். ( நேரு, காமராஜர், இந்திரா, அண்ணா, கருணாநிதி, எம்,ஜி,ஆர், ஜெயலலிதா)
16. மத பாகுபாடின்றி எல்லா மதங்களின் பாடல்களும் பாடி இருக்கிறார். (ஹிந்து, முஸ்லிம் அண்ட் கிறிஸ்துவம்)
17. ஒரே இசை அமைப்பாளரின் இசையில் 2000 பாடல்களுக்கு மேல் பாடி இருக்கிறார். (சக்ரவர்த்தி, கே.வி.எம்)
18. சில நடிகைகளுக்கு 500 பாடல்களுக்கு மேல் குரல் கொடுத்திருக்கிறார். (வாணிஸ்ரீ, ஜெயப்ரதா, சரோஜாதேவி, ஜமுனா, ஜெயசுதா, கே,ஆர்,விஜயா)
19. வட இந்திய இசை அமைப்பாளர்களான நவ்ஷாத் அலி, ஒ.பி.நய்யார், சி.ராமச்சந்திரா, சலில்சவுத்ரி, ஷங்கர்-ஜெய்கிஷன். மதன் மோகன், ஆர்.டி. பர்மன், சித்ரகுப்தா, லக்ஷ்மிகாந்த்-ப்யாரேலால், பப்பிலஹரி போன்றோருடன் பணி புரிந்திருக்கிறார்.
20. வட இந்திய பாடகர்களான முஹம்மது ரஃபி, ஆஷா போன்ஸ்லே, கிஷோர் குமார், மெஹ்மூத், தலத் முஹம்மத் ஆகியோருடன் பாடி இருக்கிறார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக