பி.சுசீலா :: பல்வகைப்பாடல்கள்
கர்நாடக இசை சார்ந்த பாடல்கள் :
கர்நாடக சங்கீதம் முறையாக கற்றுத்தேர்ந்தவர் பி.சுசீலா. அதில் டிப்ளமா பெற்றிருக்கிறார். சினிமாவுக்கு வருவதற்கு முன்பு கச்சேரிகளும் செய்திருக்கிறார். சினிமாவில் க்ளாசிகல் பாடல்களும், செமி-க்ளாசிகல் பாடல்களும் நிறைய பாடி இருக்கிறார். சிலவற்றை வரிசைப்படுத்துகிறேன்.
க்ளாசிகல் :
அளிவேணி எந்து செய்வு - ஃகானம் (மலையாளம்)
ப்ரளய பயோதி ஜலே ( ஜெயதேவ அஷ்டபதி) - பக்கிண்டி அம்மாயி
எங்கோ பிறந்தவராம் எங்கோ வளர்ந்தவராம் - பொம்மை
நெஞ்சிருக்கும் வரைக்கும் நினைவிருக்கும் - ராணி சம்யுக்தா
அறியா பருவமடா - மிஸ்ஸியம்மா
தேவி விஜயபாவானி - சித்தூர் ராணி பத்மினி
ஹரிவிக (சந்தன சர்ச்சித) - தெனாலி ராமகிருஷ்ணா
பால கோபாலா - தொங்கராமுடு (தெலுகு)
மக்குவ தீர்ச்சர முவ்வ கோபாலா - லேத மனசுலு (தெலுகு)
நீ தய ராதா ராமா - பூஜா
|
|
|
செமி-க்ளாசிகல்
மன்னவன் வந்தானடி -திருவருட்செல்வர்
மறைந்திருந்து பார்க்கும் மர்மம் - தில்லானா மோகனாம்பாள்
பழமுதிர் சோலையிலே தோழி - குழந்தையும் தெய்வமும்
பக்தி பாடல்கள்:
தேவியர் இருவர் முருகனுக்கு - கலைக்கோயில்
செந்தூர் முருகன் கோயிலிலே - சாந்தி
கோமாதா எங்கள குலமாதா
வடஇந்திய இசை சார்ந்த பாடல்கள் :
ஹிந்துஸ்தானி இசைப்பாடல்களுக்கும் மிக அழகாக பொருந்தும் குரல் இனிமை பி,சுசீலாவிற்கு அமைந்த வரம். கர்நாடக இசைக்கு தேவையான உரமும், கம்பீரமும் அவர் குரலில் இருந்ததை போலவே, ஹிந்துஸ்தானி இசைக்கு தேவையான நளினமும், நெளிவு சுளிவுகளும் அவர் குரலில் வட இந்திய பாடகர்களைப்போலவே அழகாய் வந்தது. சில உதாரணங்கள்:
ஹிந்துஸ்தானி செமி-க்ளாசிகல்ஸ்
தேசுலாவுதே தேன்மலராலே - மணாளனே மங்கையின் பாக்கியம்
ஜகமந்தட்டா நாதமயம் ( சங்கீத லக்ஷ்மி - தெலுகு)
இதவே வாழ்வின் ஆனந்தமே - மங்கையர் உள்ளம் மங்காத செல்வம்
ஜல்ஜல்ஜல் சலங்கை ஜாதி - மங்கையர் உள்ளம் மங்காத செல்வம்
மதுரமைய்ன ஃகுருஜீவனா - ஸ்வர்ண மஞ்சரி (தெலுகு)
தீயநைன ஊஹலா - மோகினி பஷ்மாசுரா (தெலுகு)
மதன மோஹனுடே - அக்பர் சலீம் அனார்கலி. (தெலுகு)
விஜயமிதிகோ - மோகினி பஷ்மாசுரா (தெலுகு)
என்னுயிர் தோழி -கர்ணன்
ஜானகி ஜானே - த்வனி (மலையாளம்
கனவு கண்ட காதல் -அக்பர்
வடஇந்திய பாடல் வகைகளான ஃகஸல், கவாலி, மார்வாரி, முஜ்ரா போன்ற வகை பாடல்களையும் நிறைய பாடி இருக்கிறார். சில உதாரணங்கள்
என் வானத்தில் ஆயிரம் வெள்ளி நிலவு - காவியத்தலைவி
ஆயிரம் பெண்மை மலரட்டுமே - வாழ்க்கைப்படகு
படகு படகு ஆசைப்படகு - உத்தமன்
நீயாக எனைத்தேடி வருகின்ற நேரம் - எதிரிகள் ஜாக்கிரதை - கவாலி
பாரடி கண்ணே கொஞ்சம் - வல்லவனுக்கு வல்லவன் -கவாலி
ஆடல் பாடல் ஊடல் கூடல் - நாயக்கரின் மகள் - கவாலி
உன்னழகை கன்னியர்கள் - உத்தம புத்திரன் -மார்வாரி
நீலவண்ண கண்ணனே - மல்லிகா -மார்வாரி
எந்த ஊரு என்ன பேரு - வஞ்சிக்கோட்டை வாலிபன் -மார்வாரி
பெண் பார்த்த மாப்பிளைக்கு - காவியத்தலைவி - முஜ்ரா
கவிதையில் எழுதிய காவிய தலைவி - முஜ்ரா
காதல் கொண்டாலே பயம் என்ன -அக்பர்
ஆற்றின் கரைதனிலே - அக்பர்
ஹாய் பாவுராய் நெட்டிமீதா - லம்பாடி ஸ்டைல்- லம்போதர ராமதாசு
|
|
|
வெஸ்டெர்ன் இசை பாடல்கள்:
க்ளாசிகல் இசை எப்படி கைவந்ததோ அதைப்போல் மெல்லிசையும் எளிதாக வந்தது பி.சுசீலா அவர்கள் குரலில். வெஸ்டெர்ன் இசைக்கு தேவையான அந்த ரேஞ்ச், குரல் வலிமை அவர் குரலில் இருந்தது. மிக அருமையான பாடல்களை பாடி இருக்கிறார். சில உதாரணங்கள்:
பார்த்த ஞாபகம் இல்லையோ - புதிய பறவை
தேடினேன் வந்தது - ஊட்டி வரை உறவு
ஒரு நாள் யாரோ - மேஜர் சந்திரகாந்த்
லவ் லவ் எத்தனை அழகு இருபது வயதினிலே - அதே கண்கள்
ஓராயிரம் நாடகம் ஆடினாள் - சுமதி என் சுந்தரி
அன்பே அன்பே அன்பே -பாடும் வானம்பாடி
நிலவு நேரம் இரவு காயும் - அன்னை ஓர் ஆலயம்
என்னென்னவோ நான் நினைத்தேன் ( அதே கண்கள்)
அந்தமுலன்னி நீக்கே (ராஜா மலயசிம்ஹா). (நடுவில் ஒரு "Opera" bit வரும். தவறாமல் கேளுங்கள். )
|
கிராமியப்பாடல்கள் :
"ஆத்துல மீன்பிடிச்சி ஆண்டவனே உன்னை எண்ணி" எனப்பாடும் குரல். "பருத்தி எடுக்கையிலே உன்னை பல நாளும் பாத்த மச்சான்" என கிராமத்துக்காரியின் குரலாய் பல பாடல்களில் பி.சுசீலா மின்னியிருக்கிறார்.
ஆடிப்பாடி வேலை செஞ்சா அலுப்பிருக்காது - மங்கையர் திலகம்
சின்ன சின்ன இழை பின்னிபின்னி வரும் -புதையல்
எங்களுக்கும் காலம் வரும் - பாசமலர்
வண்டி உருண்டோட அச்சாணி தேவை - வண்ணக்கிளி
இந்த வகைப்பாடல்களை வேறு யாரும் இவ்வளவு அழகாய், நளினமாய் பாடிக்கேட்டதில்லை.
அடுத்தாத்து அம்புஜத்தை பாத்தேளா - எதிர் நீச்சல்
பாலக்காட்டு பக்கத்திலே - வியட்நாம் வீடு
அட அபிஷ்டு நேக்கும் நோக்குமா - சதுரங்கம்
கேட்டேளே அங்கே -பத்ரகாளி (தெலுகு)
ஒரு அசடாட்டம் ( தனிக்குடித்தனம்)
நோக்கும் நேக்கும் என்னடா தெரியும் (தனிக்குடித்தனம்)
ஆடலுடன் பாடலை கேட்டு - குடியிருந்த கோயில்
சென்னை தமிழ் :
ஆனாக்க அந்த மடம் ( ஆயிரம் ரூபாய்)
கோவைத்தமிழ் :
சிங்கார சிட்டு தான் எண்ட புள்ள
வாரே வாரே சும் சும் வாப்பாரே - தெலுகு படம்
மஞ்சப்பளுங்கில் கடஞ்ஞேடுத்த - அஞ்சு சுந்தரிகள் (மலையாளம்)
மாப்பிள்ள பாட்டுக்கள் :
கன்னிப்பளுங்கே பொன்னும் கினாரே - அங்காடி
மக்கத்தே சந்த்ரிக போலொரு - திரக்கில் அல்ப ஸமயம்
கதாகாலட்சேபம் :
வண்ணக்கருங்குழல் வள்ளிக்குறமகன் -பெண் ஜென்மம்
மகிஷாசுர மர்த்தினி : பத்ரகாளி
காவடியாட்டம் :
பத்து திருமலை முத்துக்குமரனை - வருவான் வடிவேலன்
தெருக்கூத்து :
ராஜாதி ராஜன் மகாராஜா - நவராத்திரி
டப்பாங்குத்து :
பூம் பூம் பூம் மாட்டஊக்காரன் - அதே கண்கள்
பொய்க்கால் குதிரை பாட்டு :
ராஜாத்தி காத்திருந்தா
குறவன் குறத்தி :
நாங்க புதுசா கட்டிக்கிட்ட - ஒளிவிளக்கு
குறத்தி வாடி என் சுப்பி ( குறத்தி மகன்)
பாம்பு நடனம் :
நெடுநாள் வாழ்க - பால பாரதம்
குறி சொல்லும் பெண்:
வெள்ளிமலை பொதிகை மலை - கந்தன் கருணை
வடக்கன் பாட்டுக்கள்:
புத்தூரம் வீட்டில் ஜெனிச்சொரேல்லாம் - ஆரோமலுண்ணி
(மலையாள நாட்டுப்புற பாடல்கள்)
கடல் சார்ந்த பாட்டுக்கள் :
என்னை எடுத்து தன்னைக்கொடுத்து - படகோட்டி
நீலச்சேலை கட்டிக்கொண்ட - திருவிளையாடல்
வலை ஏந்தி கொள்வோம் - தூரத்து இடி முழக்கம்
படகு / ஓடம் பாடல்கள்
ஆத்தக்கடக்க வேணும் - சுகமான ராகங்கள்
ஆக்குலோ ஆக்குனை (மேக சந்தேசம் )
தைய்யம் தைய்யம் தாரே - நீலப்பொன்மான்
வயல் சார்ந்த பாட்டுக்கள் :
தென்பாண்டி சீமை தெம்மாங்கு பாட்டு
பந்தே பருத்தாவ காலா ( கன்னட கிராமிய பாடல்)
இவா யாவா ஊரின மாவா ( காடு குதிரே) -Dharwad style Singing.
அந்தி மழை மேகம் ( நாயகன்)
Banjara Banjara holi ( Lambodolla Ramdasu)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக