பின்பற்றுபவர்கள்

புதன், 13 மார்ச், 2013

சிறப்பு பாடல்கள் - பி.சுசீலா



jana gana mana -ver1  :: National Anthem -தமிழக பள்ளிகளிலும், அரசு விழாக்களிலும்  இப்போதும் ஒலிக்கும் பாடல். TMS மற்றும் பி.சுசீலா பாடி சிறப்பித்து இருக்கிறார்கள். 
jana gana mana -ver2  :: ஆந்திர மாநில பள்ளிகளிலும், அரசு விழாக்களிலும்                ஒலிக்கும் பாடல்
jana gana mana -new :: 2011 -இல் இந்தியாவின் 36 பாடகர்களை வைத்து தயாரிக்கப்பட்ட ஆல்பம். பி.சுசீலாவும் பாடி இருக்கிறார்.

vande maataram :: தேச  ஒற்றுமைக்கான பாடல். இந்தியாவில் பலர் இப்பாடலை பாடி இருக்கிறார்கள். பி,சுசீலாவின் குரலிலும் கேளுங்களேன். ஆந்திராவில் இப்பாடல் பிரபலம்.

Neeraadum kadaludatha : கலைஞரின் ஆட்சியில், தமிழக அரசு தமிழ்தாய்க்கென்று ஒரு பாடலை வெளியிட முடிவு செய்து , மனோன்மணீயம் சுந்தரானார் எழுதிய "நீராடும் கடலுடுத்த"  என்ற பாடலை தேர்ந்தெடுத்தது.  அப்போதிருந்த அரசியல் சூழ்நிலைகளால் பலரும் பாட மறுத்து விட்டனர். இருந்தாலும், தமிழர் செய்த பாக்கியம், மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி இசையில் அது ஒலிப்பதிவானது. ஏழிசை வேந்தர் டி.எம்.எஸ் அவர்களும். இசை அரசி பி.சுசீலா அவர்களும் தமிழ்த்தாய்க்கு தேனால் அபிஷேகம் செய்திருப்பார்கள். MSV's writeup

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்  :: தமிழ்மொழி செம்மொழியாக அறிவிக்கப்பட்டதை ஒட்டி  2011-இல் நடந்த மாநாட்டுக்கென கலைஞர் எழுதிய  பாடல் இது .  ஏ.ஆர்.ரகுமான் இசையில் வந்த இந்த பாடலை  பி.சுசீலாவும் பாடி இருக்கிறார்.

raghupathi raghava rajaram : மிக பிரபலமான பஜன் இது. இதை பலர் பாடி இருக்கிறார்கள். பி.சுசீலாவின் குரலிலும் கேளுங்களேன். ( Video )

maa telugu talliki :: இந்த பாடல் ஆந்திர மாதாவை போற்றும் பாடல். இதை எழுதியவர் Sankarambadi Sundaracharya. ஆந்திராவின் எல்லா விழாக்களிலும், பள்ளிகளிலும் இப்பாடல் ஒலிக்கும்



திங்கள் மாலை வெண்குடையான் ::  கிட்டத்தட்ட 2000 வருடங்கள் பழமையான இலக்கியம் "சிலப்பதிகாரம்". அது ஆறு அதிகாரங்களாக பிரிக்கப்பட்டு உள்ளது. அதில் ஒன்று கானல்வரி. இப்பாடல் அதில் இருந்து எடுக்கப்பட்டது. இதான் சிறப்பு என்னவென்றால், ஒரு பழந்தமிழ் இலக்கிய பாடலுக்கு சலில் சவுத்ரி என்ற பெங்காலி இசை அமைப்பாளர் இசை அமைக்க, ராமு கரியத் என்ற மலையாளி அதை இயக்க, பி.சுசீலா என்ற தெலுங்குப்பெண்  பாடுகிறார். தேச ஒற்றுமைக்கு இப்பாடல் ஒரு சான்று.


ஜானகி ஜானே ராமா ::: இந்தப்பாடல் "த்வனி" என்ற மலையாளப்படத்தில் இடம் பெற்றது. ஒரு ஊமைப்பெண்ணின் உள்ள வலி மெல்லியதாய் இழையோடும் பாடல். இது காவிய நாயகன் ராமரைப்பற்றி பாடும் பாடல். இந்த பாடலின் சிறப்பு என்னவென்றால், ஒரு ஹிந்து கடவுளான ராமரைப்பற்றி யூசுப் அலி கெச்சேரி என்ற முஸ்லிம் கவிஞர் எழுத, நவ்ஷாத் அலி என்ற முஸ்லிம் இசை அமைக்க . யேசுதாஸ் என்ற கிறிஸ்துவரும், பி.சுசீலா என்ற ஹிந்துவும் பாடுகிறார்கள். இந்த பாடல் இந்திய மத இறையாண்மைக்கு சான்று. இன்னொரு வழியில் பார்த்தால், ஒரு சமஸ்கிருத பாடலை , ஒரு மலையாளி எழுதி, வட  இந்தியர் இசை அமைத்து, தெலுங்கு பெண் பாடுகிறார். இதுவும் இதான் சிறப்பே. 
     இந்த பட ஒப்பந்ததில் கையெழுத்து இடும் போதே பி.சுசீலா இந்த பாடலை பாடினால் தான் கையெழுத்து இடுவேன் என நவ்ஷாத் அவர்கள் கூறினார்களாம். ஏற்கெனவே பி.சுசீலா அவர்கள் அக்பர் (Mughal-E-Azam -இன் தமிழ் வடிவம்) படத்தில் அவர் இசையில் ஆறு பாடல்கள் பாடி இருக்கிறார்கள். அந்த பாடல்களை பி.சுசீலா பாடிய விதம் கண்டு மகிழ்ந்து, அவர் வீட்டுக்கு வரவழைத்து தன துணைவியார் கையால் பரிமாறி உபசரித்தாராம். 

பால்போலவே வான்மீதிலே :: முதன் முதலில் பாடகிகளுக்காக தேசிய விருது அறிவிக்கப்பட்ட போது  அந்த விருது பி.சுசீலாவை வந்து சேர்ந்தது. எம்.எஸ்.வி இசையில் ஒலித்த அந்த பாடல் இன்றும் மேடைகளில் பாடப்படுகிறது. 

இறைவா உன் மாளிகையில்:: படத்தில் எம்.ஜி.ஆர் உயிருக்கு போராடிக்கொண்டிருக்க, அவர் உயிரை காப்பாற்ற சவுகார் பாடும் பாடல் இது. நிஜத்தில் எம்.ஜி.ஆர் உயிருக்கு போராடும் நேரத்தில் தமிழகத்தின் குரலாய் ஒலித்தது இந்த பாடல். தியேட்டர், டீக்கடை என வித்தியாசம் பாராமல், எல்லா  இடங்களிலும் தமிழ் மக்களின் உணர்வாய் ஒலித்தது, பி,சுசீலாவின் குரல். எம்.ஜிஆரும் பிழைத்து எழுந்து வந்து தமிழகத்தை ஆண்டார். 

இந்த படங்களில் வேறு குரல் இல்லை 
            கற்பகம் -1964 -(ஆறு பாடல்கள்), கோமாதா என குலமாதா -1973 (நான்கு பாடல்கள்) ஆனந்த தாண்டவம் -1986 -(22 பாடல்கள் ) போன்ற படங்களில் பி.சுசீலா ஒருவரின் குரலிலேயே பாடல்கள் ஒலித்தன. வேறு ஆண்குரலோ பெண்குரலோ இல்லை. ஆனந்த தாண்டவம் படம், எல். வைத்தியநாதன் இசையில், 72 மேளகர்த்தா ராகங்களையும் உள்ளடக்கிய ஒரு அபூர்வமான ஆல்பம். இதை  ஐந்து மொழிகளில்  தயாரித்தார்கள். ஒரே படத்துக்காக 110 பாடல்களை, அதுவும் ஒருவரே பாடுவதென்றால் சிறப்பு தானே. 

தமிழுக்கும் அமுதென்று பேர் :: பஞ்சவர்ணக்கிளி படத்தில் இடம் பெற்ற பாடல். பாரதிதாசன் வரிகளை, எம்.எஸ்.வி இசை அமைக்க, பி,சுசீலா பாட, கே.ஆர்.விஜயா நடிக்க, கண்ணுக்கும் காதுக்கும் விருந்தளித்த இனிய  பாடல். இந்த பாடலின் தரம் தமிழைப்போல் உயர்தரம். இனிமை, அழகான வரிகள், தெளிவான உச்சரிப்பு, செவியில் இனிக்கும் இசை என எல்லாவற்றிலும் தரம். 

சங்கே முழங்கு :: கலங்கரை விளக்கம் படத்தில் இடம் பெற்ற பாடல். உலகெங்கும் பரவி நிற்கும் தமிழர்களின் ஒற்றுமையை, உணர்வை பிரதிபலிக்கும் பாடல். எத்தனையோ மேடைகளில். தமிழர்களின் சந்தோஷமாய், வலியாய் இந்த பாடல் இப்போதும் ஒலிக்கிறது. 

Mori laagi latak guru charanuki :: 1976-இல் பி,சுசீலா அவர்கள் திரை உலகில் தனது 25-ஆண்டை நிறைவு செய்தார்.  அவர் சில்வர் ஜூபிலிக்காக  ஒரு பெரிய விழா எடுக்கப்பட்டது.  ஆந்திராவில் நடந்த விழாவிலும் கவர்னர், முதல்வர் , சக பாடக, பாடகியர்கள், முன்னணி இசை அமைப்பாளர்கள், நடிகர் நடிகைகள் கலந்து கொண்டு அதற்கு விழா மலரும் வெளியிடப்பட்டது. பாடகர் பி.பி.ஸ்ரீநிவாஸ் அவர்கள் பி.சுசீலாவை கவுரவப்படுத்தும் விதமாக "மீரா பஜன்ஸ்" என்ற ஹிந்தி இசைத்தட்டை வெளியிட்டார். அதில் உள்ள அருமையான பாடல் இது .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக