பி.சுசீலாவை இசை
உலகின் உச்சத்தில் தூக்கி நிறுத்திய பாடல்களில் ஓன்று “அமுதை பொழியும் நிலவே”
என்பது எல்லா ரசிகர்களுக்கும் தெரிந்த உண்மை. அப்பாடல் இடம் பெற்ற தங்கமலை ரகசியம்
படத்துக்கு இசை அமைத்தவர் T.G.லிங்கப்பா ( திருச்சிராப்பள்ளி கோவிந்தராஜுலு லிங்கப்பா ) அவர்கள்.
திருச்சியில், ஒரு இசை குடும்பத்தில்
பிறந்து வளர்ந்த இவரின் தந்தை “கோவிந்தராஜுலு நாயுடு”வும் ஒரு மாபெரும் இசை கலைஞர். அவரும் “பாக்தாத்
திருடன்”, “மாய மனிதன்”, “ராஜபக்தி”. “கள்வனின் காதலி” போல பல படங்களுக்கு இசை
அமைத்தவர். அவர் இசை அமைப்பிலும் பி.சுசீலா அவர்கள் பல பாடல்களை பாடி இருக்கிறார்.
T.G.லிங்கப்பா
அவர்கள் தமிழ், கன்னடம் மற்றும் தெலுங்கு மொழிகளில் இசை அமைத்து இருக்கிறார்.
கன்னடத்தில் மட்டுமே இவர் இசை அமைத்த படங்களின் எண்ணிக்கை 60-ஐ தாண்டும். B.R.பந்துலு
தயாரித்து டைரக்ட் செய்த பல கன்னட படங்களுக்கும் இவரே இசை அமைத்து வந்தார்.
இத்தொகுப்பில்
பி.சுசீலா அவர்கள் T.G.லிங்கப்பா அவர்கள் இசையில் பாடிய பாடல்களை பற்றி பார்ப்போம். முதல்
முதலில் இவர் இசையில் பி.சுசீலா பாடிய பாடல் “அமுதை பொழியும் நிலவே” தான் என
நினைக்கிறேன். அப்படத்தில் பல பாடல்கள் இருந்தாலும் ஒரே ஒரு பாடலை மட்டுமே
பி.சுசீலாவை பாட வைத்தார் T.G.லிங்கப்பா அவர்கள். அது படத்தின் மொத்த பாடல்களையும் விட பாப்புலர்
ஆகி பி.சுசீலாவுக்கு பெரும் புகழை தேடி தந்தது. “அமுதை பொழியும் நிலவே” பாடல்
படத்தில் இரு முறை இரு வெவ்வேறான சூழ்நிலையில் ஒலிக்கும். இப்படம் கன்னடத்தில் B.R.பந்துலு தயாரிப்பில்
“ரத்னகிரி ரஹஸ்யா” என்ற பெயரில் உதயகுமார். ஜமுனா நடிப்பில் வெளியானது.
அப்படத்திலும் “அமுதை பொழியும் நிலவே” பாடல் “அமரா மதுரா ப்ரேமா” என
பி.சுசீலாவின் குரலிலேயே ஒலித்தது. அப்பாடல் கன்னடத்திலும் சூப்பர் ஹிட் ஆகி
பி.சுசீலாவுக்கு நல்ல பேரை பெற்று தந்தது. பின்னர் தெலுங்கிலும் அது “Ratnagiri
Rahasyam” என்ற பெயரில் மொழி மாற்றம் செய்யப்பட்டது. அதில் பி.சுசீலா பாடிய
நான்கு பாடல்கள் என் தொகுப்பில் இருக்கிறது. அமுதை பொழியும் நிலவே பாடல் “Yamune mukhamum kanave” என
தெலுங்கில் பி.சுசீலாவின் குரலில் ஒலித்தது. T.M.S-பி.லீலா பாடிய “இக லோகமே
இனிதாகுமே” என்ற இனிமையான காதல் பாடல் தெலுங்கில் கண்டசாலா-பி.சுசீலா குரல்களில் “Ika lokame edhi Gaanme” என ஒலித்தது. T.M.S-பி.லீலா பாடிய
இன்னொரு அருமையான பாடலான “கல்யாணம் நம் கல்யாணம்” என்ற பாடலும் “Kalyanam
mana kalyanam” என கண்டசாலா-பி.சுசீலா குரல்களில் ஒலித்தது. இத்திரைப்படம் ஹிந்தியிலும்
தயாரிக்க பட்டது. அதில் “அமுதை பொழியும் நிலவே” பாடலின் டியூன் உபயோகிக்க பட்டு
அதை ஆஷா போன்ஸ்லே பாடினார் என கேள்விப்பட்டு இருக்கிறேன்.
அமுதை பொழியும் நிலவே-sad | அமுதை பொழியும் நிலவே |
Amara Madhura Prema ( kannada ) | Amara Madhura Prema (Sad) |
Ihalokhame idhi Gaaname ( Telugu ) |
1958-இல் வெளியான “சபாஷ் மீனா” படத்துக்கு T.G.லிங்கப்பா அவர்களே
இசை அமைத்தார்கள். அதில் சிவாஜியும் , மாலினியும் மழையில் நனைந்து கொண்டே பாடும் “காணா இன்பம் கனிந்ததேனோ” என்ற பாடலை T.A.மோதியும் பி.சுசீலாவும் இணைந்து பாடி இருப்பார்கள். அப்பாடலை பற்றி
அன்றைய விமர்சகர் ஒருவர் இப்படி எழுதி
இருந்தார். “T.A.மோதியும். பி.சுசீலாவும்” மழையில் நனைந்து கொண்டே பாடினார்களோ?!.. மிக
கஷ்டமான சங்கதிகள் இருந்தாலும் அதிலேயே ஒரு சிலிர்ப்பை கொண்டு வந்திருப்பார்கள்
பாடகர்கள் இருவரும். கேட்காதவர்கள் ஒரு முறையாவது கேட்க வேண்டிய பாடல் என்பது என்
எண்ணம். T.A.மோதி அவர்கள் வட இந்தியாவை சேர்ந்தவர்கள் என்றாலும் அது வரை தமிழில்
கேட்காத ஒரு வித்தியாசமான குரல் வேண்டும் என்பதற்காக அவரை அழைத்து வந்து பாட
வைத்ததாக கேள்விப்பட்டு இருக்கிறேன். “கன்னல் மொழியே மின்னல் எல்லாம் விண்ணில் வாண
வேடிக்கையோ” என பாடகர் பாட அதோடு சேர்ந்து பி.சுசீலாவின் குரலில் ஒரு நீளமான
ஹம்மிங் வருமே .. இனிமையோ இனிமை...
காணா இன்பம் கனிந்ததேனோ
| ஆணாக பிறந்ததெல்லாம் |
சபாஷ் மீனா படத்தில்
சரோஜாதேவியும் நடித்திருந்தார். அதில் “ஏறுங்கம்மா சும்மா ஏறுங்கம்மா”
என துவங்கும் ஒரு நகைச்சுவை ததும்பும் பாடல் “பி.சுசீலா, T.G.லிங்கப்பா மற்றும் சந்திர
பாபு” ஆகியோர் குரல்களில் இடம் பெற்றது. இதே படத்தில் பி.சுசீலாவும்.
ஜமுனாராணியும் சேர்ந்து பாடிய “ஆணாக பிறந்ததெல்லாம்” பாடலும் இனிமையான பாடல்களில்
ஓன்று. சபாஷ் மீனா திரைப்படம் தெலுங்கில் “Sabash Pilla” என்ற
பெயரில் “மொழி மாற்றம் செய்து வெளியிட பட்டது”. அதிலும் தமிழில் பாடிய அதே
பாடல்களை தெலுங்கில் பி.சுசீலாவே பாடினார்.
1958-இல் B.R.பந்துலு
தயாரித்து, T.G.லிங்கப்பா இசையில் வெளியான
கன்னட திரைப்படம் “ஸ்கூல் மாஸ்டர்”. இத்திரைப்படத்தில் சிவாஜி அவர்களும்
கவுரவ வேடத்தில் நடித்திருந்தார். இதில் இடம் பெற்ற “ராதா மாதவ வினோத ஹாசா” என்ற இனிமையான
காதல் பாடல் மிகவும் பிரபலமாகியது. இப்பாடலை தவிர “Sompada sanje vela” என்ற
பாடலும் மிகவும் இனிமையாக இருக்கும். இப்பாடல்களை பி.சுசீலாவுடன் இணைந்து பாடியவர்
T.B.லிங்கப்பா என்பது தான் இதன் சிறப்பு. தமிழில் சபாஷ் மீனா மீனா
படத்தில் ஒரு பாடலை ஏற்கனவே பி.சுசீலாவுடன் இணைந்து இவர் பாடி இருக்கிறார் என்பது
குறிப்பிட படத்தக்கது. ஸ்கூல் மாஸ்டர் திரைப்படம் “Badi Banthulu” என்ற
பெயரில் தெலுங்கிலும் மொழி மாற்றம் செய்யப்பட்டது. “Radha madhava vinoda hasa”, “undala
sampadana:” என தெலுங்கிலும் இதே பாடல்கள் ஒலித்தன. தமிழில் இத்திரைப்படம் “எங்க
குடும்பம் பெரிசு” என்ற பெயரில் வெளியானது. “ராதா மாதவ வினோத ராஜா” என TMS.
P.சுசீலா குரல்களில் இப்பாடல் ஒலித்தது. மூன்று மொழிகளிலுமே ஹிட் ஆனா
பாடல்கள் இவை.. அதே போல் TMS. P.சுசீலா குரல்களில் ஒலித்த “சுகமான அந்தி வேளை” பாடலும் இனிமையான
பாடலே..
1958-இல் வெளிவந்த திருமணம் என்ற திரைப்படம் S.M.சுப்பையா நாயுடு
மற்றும் T.G.லிங்கப்பா இசையில் வெளி வந்தது. அதில் “துள்ளி வர போறேன்”. “எங்கள்
நாடு ஆந்திர நாடு” என சியல் பாடல்கள் பி.சுசீலாவின் குரலில் ஒலித்தன. அதே வருடம்
வெளிவந்த “புதுமைப்பெண்” என்ற படத்தில் இடம் பெற்ற “மாறாத காதலாலே மனம் ஒன்றாய்ஆனதாலே” என்ற மெல்லிய காதல் பாடலும் “நெனச்சதை முடிச்சிடுவா பொம்பள தங்கம்”. என்ற இளமையான
பாடலும் குறிப்பிட படதக்கவை.
தேடி வந்த செல்வம் படத்திலும் “பங்குனி போய்சித்திரை வந்தா” என்ற கிராமிய பாடல் TMS. பி.சுசீலா குரலில் ஒலித்தது. “ஜல்லிக்கட்டு காளை தொட்டா
துள்ளி விழும் மேலே” என்ற பாடலும் TMS. பி.சுசீலா
குரல்களிலேயே ஒலித்தது. அதை தவிர “தங்கமே தங்கம் யாரு அந்த
மாப்பிள்ளை சிங்கம்” என்ற பாடல் A.P.கோமளா
மற்றும் பி.சுசீலா குரல்களில் ஒலித்தது.
1960-ஆம் வருடம் வெளிவந்த “எல்லோரும் இந்நாட்டு மன்னர்கள்” திரைப்படத்தில்
ஏ.எம.ராஜாவும் பி.சுசீலாவும் இனைந்து பாடிய “மனம் என்னும் வானிலே” பாடல் ஹிட் ஆன
பாடல்.
1960-ல் வெளிவந்த “makkala
Rajya” என்ற கன்னட திரைப்படத்தில் இடம்
பெற்ற “Malaye
Suridubabaa” பாடல் இனிமையான
பாடல். அதே படம் “குழந்தைகள் கண்ட குடியரசு” என தமிழிலும் வெளியானது.
அத்திரைப்படதிலும் “அமுதே ஓடி வா” என்ற பாடலை பாடினர் பி.சுசீலா அவர்கள்.
Malaye Suridubaa | |
1960-ல் வெளிவந்த சங்கிலி தேவன் படத்தில் "சரச கலையில் இவள் ராணி" என்ற பாடல் குறிப்பிட பட தக்கது..
( பாகம் 2 )
தொடரும்...
( பாகம் 2 )
தொடரும்...