பின்பற்றுபவர்கள்

வெள்ளி, 7 ஏப்ரல், 2017

எஸ்.பி.பி - பி.சுசீலா இணைந்து பாடிய பாடல்கள் - 3





1972-ஆம் ஆண்டு எஸ்.பி.பி மற்றும் பி.சுசீலா குரல்களில் வெளிவந்த ஜோடிப்படல்களை கீழே காணுங்கள்..

“திக்கு தெரியாத காட்டில்” படத்தில் “எம்.எஸ்.வி” இசையில் முத்துராமன் ஜெயலலிதா நடிப்பில் எஸ்.பி.பி-பி.சுசீலா பாடிய “கேட்டதெல்லாம் நான் தருவேன் எனை நீ மறக்காதே”. பாடல் தவறாமல் கேட்க வேண்டிய அழகான டூயட்.
                   ( கேட்டதெல்லாம் நான் தருவேன் )

     வி.குமார் இசையில் மாப்பிள்ளை அழைப்பு படத்தில் இடம் பெற்ற அருமையான வரிகள்.. “உள்ளத்தில் நூறு நினைத்தேன் உன்னிடம் சொல்ல தவித்தேன்”. 
                  ( உள்ளத்தில் நூறு நினைத்தேன் )


எம்.எஸ்.வி இசை அமைப்பில் கெளரவம் படத்தில் இடம் பெற்ற “யமுனா நதி இங்கே ராதை முகம் இங்கே” என்ற பாடலும் மிகவும் பிரபலம் ஆன பாடல்.



     ஷ்யாம் இசையில் வெளிவந்த “கருந்தேள் கண்ணாயிரம்” படத்தில் “நேற்று வரை விண்ணில் இருந்தாளோ, இன்று எந்தன் கண்ணில் விழுந்தாளோ” போல இனிமையான வரிகள் இடம் பிடித்தன.
                  ( நேற்று வரை விண்ணில் இருந்தாளோ) 

இவ்வருடமும் எம்.எஸ்.வி.இசையில் எம்.ஜி.ஆர் நடித்த  “சங்கே முழங்கு” படத்தில் “இரண்டு கிளிகள் பேசும் மொழியில் ” என்ற பாடலை எஸ்.பி.பி-பி.சுசீலா பாடினர்.
  


எம்.எஸ்.வி இசையில் Mr.சம்பத் படத்தில் இடம் பெற்ற “ஆரம்பம் யாரிடம் உன்னிடம் தான்” பாடலும் மக்கள் மனம் கவர்ந்த பாடல்.


தாய்க்கு ஒரு பிள்ளை படத்தில் “கல்யாண ராமன் கோலம் கொண்டான்”. “நான் காதல் கிளி செம்மாங்கனி” என இரு இனிமையான டூயட்டுகள் இடம் பிடித்தன.

அவள் படத்தில் “கீதா ஒரு நாள் பழகும் உறவல்ல” என்ற பாடலும் குறிப்பிட படத்தக்கது.

இவை தவிர “அம்பிகை நேரில் வந்தாள்”. ( இதோ எந்தன் தெய்வம் ), எந்தன் தேவனின் பாடல் என்ன ( பொன்மகள் வந்தாள் ), கனி முத்தம் பதிந்தது எதனாலே ( யார் ஜம்புலிங்கம் ), ராதா ராதா ராதா கொஞ்சம் நில்லு ( குல கெளரவம் ) போன்ற பாடல்களும் குறிப்பிட படத்தக்கவை.


      1973-ஆம் வருடம் எஸ்.பி.பி-பி.சுசீலா பாடிய டூயட்டுகள்..

சங்கர் கணேஷ் இசையில் வெளிவந்த ராதா படத்தில் “கடவுள் மீது ஆணை உன்னை கைவிட மாட்டேன்” பாடல் கேட்க கேட்க சலிக்காத பாடல்.

     ஊடலும் கூடலுமாக காதலர் விளையாடும் விளையாட்டை  “நீ நினைத்த நேரமெல்லாம் வர வேண்டுமோ. நீ எது கேட்டாலும் தர வேண்டுமோ” என அழகாக எழுதி இருப்பார் கவிஞர். பெண்ணை நம்புங்கள் படத்தில் வி.குமார் இசையில் இடம் பெற்ற இப்பாடலை  பி.சுசிலாவும் எஸ்.பி.பியும் அதை அனுபவித்து பாடி இருப்பார்கள். அதே படத்தில் “காதலிக்க எனக்கு கற்றுத்தந்த உனக்கு காணிக்கை என்ன தரவோ” என்ற பாடலும் இனிமையான பாடலே.

     
     கண்டசாலா கடைசியாக பாடிய தமிழ் படம் “அன்பு சகோதரர்கள்”. அதில் முத்துக்கு முத்தாக சொத்துக்கு சொத்தாக” என்ற  பாடல் மிகவும் பிரபலம் ஆனது. அதே படத்தில் கே.வி.எம் இசையில் எஸ்.பி.பி-பி.சுசீலா பாடிய “எதிர் பார்தேதேன் உன்னை எதிர்பார்த்தேன்” என்ற பாடலும் ரசிகர்கள் மனம் கவர்ந்த பாடலே.

                                         ( எதிர் பார்த்தேன் உன்னை )                    


பாலச்சந்தர் இயக்கி வி.குமார் இசை அமைத்த “அரங்கேற்றம்” படத்தில் இடம் பெற்ற “ஆரம்ப காலத்தில் அது இருக்கும்” என்ற பாடலும் குறிப்பிடத்தக்க பாடலே...



இவை தவிர  “ஒன்றே ஓன்று நீ தர வேண்டும்” ( அம்மன் அருள் )., “அழகே உன் பெயர் தானோ, அமுதே உன் மொழி தானோ” (இறைவன் இருக்கின்றான்) போன்ற பாடல்களும் சிறந்த பாடல்களே.  

      
  1974-ல் எஸ்.பி.பி, கபி.சுசீலா குரல்களில் ஒலித்த ஜோடிப்பாடல்கள்

       வி.குமார் இசையில் ராஜ நாகம் படத்துக்காக எஸ்.பி.பி, பி.சுசீலா குரல்களில் ஒலித்த அருமையான பாடலில் ஓன்று  “தேவன் வேதமும்  கண்ணன் கீதையும் ஒரு பாதையில் இங்கு சங்கமம்”. தவறாமல் கேட்க வேண்டிய பாடல்களில் ஓன்று என்பது என் கருத்து.


         வி.குமார் இசையில் “ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணு” படத்துக்காக பி.சுசீலா, எஸ்.பி.பி இணைந்து பாடிய “பால் மனம் பூ மனம் பாவை மனம்” பாடலும் பழைய வானொலி ரசிகர்களின் விருப்ப பாடல்களில் ஓன்று.

                                                                          

    எம்.எஸ்.வி இசை அமைத்த கண்மணி ராஜா படத்தில் இடம் பெற்ற “காதல் விளையாட கட்டிலிடு கண்ணே”, “ஓடம் கடலோடும் அது சொல்லும் பொருள் என்ன” என்ற இரு அருமையான டூயட்டுகள் இடம் பிடித்தன.


     எம்.எஸ்.வி இசை அமைத்த திருமாங்கல்யம் படத்தில் “பொன்னான மனம் எங்கு போகின்றது?” என்ற பாடலும் மனதை கவரும் பாடல்களில் ஓன்று. இத்திரைப்படம் ஜெயலலிதாவின் 100-ஆவது படம் என நினைக்கிறேன்.


எம்.எஸ்.வி இசை அமைத்த திருடி படத்தில் “நிலவு வந்து வானத்தையே திருடி கொண்டது” என்ற பாடலும் மிக இனிமையான பாடல்.




கே.வி.எம் இசை அமைத்த வாணி ராணி படத்தில் “முல்லைப்பூ பல்லக்கு போவதெங்கே”. “ பூமியில் தென்றல் பொன்னாடை போர்த்துது” ஆகிய பாடல்களும் குறிப்பிட படத்தக்கவை.
                  ( முல்லைப்பூ பல்லக்கு போவதெங்கே )

இவை தவிர விஜயபாஸ்கர் இசையில் “வா இளமை அழைக்கிறது” (எங்கம்மா சபதம்), சங்கர் கணேஷ் இசையில் “டேய் வாடா ராஜா” ( கை நிறைய காசு ), எம்.எஸ்.வி இசையில் “யாருமில்லை இங்கே "(பணத்துக்காக). காத்திருந்தேன் கட்டி அணைக்க ( பெண்ணொன்று கண்டேன் ), “ஆனந்த மயக்கம் அருகில் வந்த நெருக்கம்" ( ரோஷக்காரி) போன்ற பாடல்களும் ஹிட் பாடல்களே.. 

1975-இல் எஸ்.பி.பி - பி,சுசீலா பாடிய டூயட்டுகள்..

விஜய பாஸ்கர்தொ இசையில் "தொட்டதெல்லாம் பொன்னாகும்" படத்தில் இடம் பெற்ற "பனிமலை மேகங்கள் பொழிகின்ற குளிரினில்" பாடல் மிகவும் பிரபலாமான பாடல்களில் ஓன்று.. எனக்கு  மிகவும் பிடித்த பாடல்களில் இதுவும் ஓன்று. 

                  ( பனி மலை மேகங்கள் )

அதே திரைப்படதில் இடம் பெற்ற இன்னொரு அருமையான டூயட் "ஆவணி மலரே ஐப்பசி மழையே" ..

                  ( ஆவணி மலரே ஐப்பசி மழையே )

காரோட்டி கண்ணன் படத்தில் இடம் பெற்ற "பொட்டழகு கொஞ்ச கொஞ்ச " குறிப்பிட தகுந்த ஒரு பாடல்.


தீர்க்க சுமங்கலி படத்தில் இடம் பெற்ற இன்னொரு அருமையான பாடல்..
" ஆயிரம் ஆயிரம் ஆண்டின் முன்னே "


இவை தவிர "பசி எடுக்கிற நேரம் வந்தா" ( பட்டாம்பூச்சி). "முத்துக்கள் சிந்தி தித்திக்கும் மொழியில்" ( யாருக்கு மாப்பிள்ளை யாரோ). "கொட்டி கிடக்குது கனியிரண்டு" ( வாழ்ந்து காட்டுகிறேன்), முன்னிரவு நேரம் ( எங்களுக்கும் காதல் வரும்), வார்த்தைகள் என் நெஞ்சில் ( அவளும் பெண்தானே), "என்னை கேளு என்னை கேளு" (அவளுக்கு ஆயிரம் கண்கள்) போல பல நல்ல பாடல்களை பி.சுசீலா- எஸ்.பி.பி இணைந்து பாடி இருந்தார்கள். 

( தொடரும் )

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக