பின்பற்றுபவர்கள்

வியாழன், 6 ஏப்ரல், 2017

எஸ்.பி.பி - பி.சுசீலா இணைந்து பாடிய பாடல்கள் --1





       உலக அளவில் அதிக டூயட்டுகள் பாடிய ஜோடிபாடகர்கள் யாராக இருக்கும்? கட்டாயமாக அது இந்தியர்கள் தான். வேறு நாடுகளில் டூயட் பாடும் பழக்கம் இருக்கிறதா என தெரியாது.. வட இந்தியாவில் பிரபலமான ரஃபி – லதா ஜோடி பாடிய பாடல்கள் 500-ஐ தாண்டவில்லை. ரஃபி-ஆஷா ஜோடி  கூட ஆயிரத்தை தாண்டவில்லை. 

  சரி தென்னகத்தை பார்த்தால் TMS-பி.சுசீலா ஜோடியும் 1000 பாடல்களை தாண்டவில்லை. கண்டசாலா-பி.சுசீலா ஜோடியும் ஆயிரத்தை தாண்டவில்லை. இதற்கு காரணம் TMS தமிழில் மட்டுமே பிரபலம் ஆக இருந்தார். அதே போல் கண்டசாலாவும் தெலுங்கில் மட்டுமே பிரபலம் ஆக இருந்தார். அதே போல் ஜேசுதாசும் மலையாளத்தில் மட்டுமே அதிகம் கவனம் செலுத்தினார். அவ்வப்போதும் வேறு மொழிகளில் பாடினாலும் பெருமளவில் ஒரே மொழியில் தான் அதிகம் கவனம் செலுத்தினார்கள்.
      பி.சுசீலா, எஸ்.ஜானகி, எஸ்..பி.பி. வாணி ஜெயராம், சித்ரா  என ஒரு சிலரே எல்லா தென்னிந்திய மொழிகளிலும் அதிகமாக பாடி சாதித்திருக்கிறார்கள்..  நீண்ட காலம் திரைத்துறையில பணியாற்றியவர்கள்  என்பதால் இப்போது இரண்டே ரெண்டு ஜோடிகள் தான்  நேரடி போட்டியில் இருக்கிறது.. ஓன்று எஸ்.பி.பி – பி.சுசீலா மற்றும் எஸ்.பி.பி- எஸ்.ஜானகி ஜோடிகள். எஸ்,பி,பி - எஸ்.ஜானகி ஜோடி தமிழ், கன்னட மொழிகளில் மிகவும் பிரபலமான ஜோடி. தெலுங்கிலும் ஓரளவு ஜோடிப்பாடல்கள் பாடி இருக்கிறார்கள். இவர்கள் எத்தனை டூயட்டுகள் பாடி இருக்கிறார்கள் என ஆதாரபூர்வமான் கணக்கு என்னிடம் இல்லை.  இருந்தாலும் இந்த ஜோடி ரெண்டாயிரம் டூயட்டுக்களை தாண்டி இருக்காது என்பது என் கணக்கு. அவர்களின்  ரசிகர்கள் ஆதார பூர்வமாக கணக்கு தெரிவித்தால் அதை ஏற்றுக்கொள்ளலாம். 


       எஸ்.பி.பி – பி.சுசீலா பாடிய பாடல்களை பெருமளவில் நான் சேகரித்து விட்டேன். என்னிடம் இருக்கும் ஆதாரங்களின் படி எஸ்.பி.பி-பி.சுசீலா ஜோடி பாடிய பாடல்கள் 3000-தை தாண்டுகிறது. இதில் தெலுங்கில் மட்டுமே 2400 பாடல்களுக்கு மேல் பாடி இருப்பது மிக பெரிய சாதனை. ஒரே மொழியில் 1000 பாடல்களுக்கு மேல் எந்த ஜோடியும் டூயட் பாடியிராத நிலையில் ஒரே மொழியில் 2400  பாடல்களுக்கு மேல் பாடி இருப்பது இன்னொரு உலக சாதனை. என்னிடம் முழுமையான கணக்கு இல்லை என்றாலும் ஓரளவு மற்றவர்கள் பாடிய பாடல்களையும் குறித்துக்கொண்டே தான் வந்தேன். என்னுடைய கணக்கின் படி பார்த்தால் எஸ்.பி.பி-பி.சுசீலா ஜோடி தான் உலக அளவில் அதிகமான பாடல்களை பாடிய ஜோடியாக இருக்கும். இதை விட வேறு எந்த ஜோடியாவது பாடி இருக்கிறது என்ற ஆதாரம் வேறு யாரிடம்  இருந்தாலும் அனுப்பலாம். அதை ஏற்றுக்கொள்கிறேன்.  
       எஸ்.பி.பியிடம் கற்றுக்கொள்ள வேண்டிய ஒரு விஷயம் அவர் பழகும் முறை தான்.. . ஒருவர்  எல்லோருக்கும் செல்லப்பிள்ளையாக இருப்பது எப்படி சாத்தியம் ஆகும் ?!! அவர்  எம்.எஸ்.விக்கும் செல்லப்பிள்ளை. கே.வி.எம்முக்கும் செல்லப்பிள்ளை, அடுத்த ஜெனரேஷனில் இளையராஜாவிற்கும் , சங்கர் கணேஷுக்கும் நெருக்கமானவர், தெலுங்கில் சக்ரவர்த்திக்கும்,  சத்தியத்துக்கும் நெருக்கமானவர். கன்னடத்தில் ராஜன் நாகேந்திராவுக்கும் ஹம்சலேகாவுக்கும் பிடித்தமானவர். அடுத்த தலைமுறை ரஹ்மான் ஆகட்டும். கீரவாணி எல்லோருக்கும் பிடித்தவர், பாடகர்களில் இது இவருக்கு மட்டுமே சாத்தியம் ஆயிற்று என்பது ஆச்சரியமான விஷயம்.! 
     வேகமாக  கற்றுக்கொள்ளும் இவரது புத்திக்கூர்மையை  பல இசை அமைப்பாளர்களும் சிலாகிப்பதுண்டு.

·          * எஸ்.பி.பியும் பி.சுசீலாவும் இணைந்து தமிழ், தெலுங்கு, கன்னடம். மலையாளம் ஆகிய மொழிகளில் பாடி இருப்பதை கேட்டு இருக்கிறேன். இவர்கள் தூர்தர்ஷனுக்காக :
Tere Seene me bhi dil he"  entra  ஒரு ஹிந்தி டூயட் கூட பாடி இருக்கிறார்கள். சமஸ்கிருத்தில் கூட பாடி இருக்கலாம்.


·       *  எஸ்.பி.பி முதலில் பாடிய திரைப்பாடல் எஸ்.பி.கோதண்டபாணி இசை அமைப்பில் உருவான  “Sri Sri Sri Maryatha Ramanna” என்ற படத்துக்காக பாடிய Emi ee Vintha Mohamஎன்ற பாடல் தான். இப்பாடலை இவர் ப.சுசீலா, PBS, ரகுராமய்யா ஆகியோருடன் பாடினார். 

·        *  எஸ்.பி.பியின் முதல் கன்னட திரைப்பாடல் “Nakkare Adhe Swarga” படத்தில் இடம் பெற்ற Kanasido Nanasidoஎன்ற திரைப்பாடல். அப்பாடலையும் அவருடன் இணைந்து பாடியவர் பி.சுசீலா அவர்கள்.  



                               **      எஸ்.பி.பியின் முதில் தமிழ் டூயட் எது என்பதில் எப்போதும் எனக்கு சின்ன குழப்பம் உண்டு. எஸ்.பி.பி அவர்கள் தனது முதல் பாடலை  “ஹோட்டல் ரம்பா” படத்தில் எல்.ஆர்.ஈஸ்வரியுடன் இணைந்து பாடியதாக குறிப்பிட்டு இருக்கிறார். அப்படம் வெளியாகவில்லை என  நினைக்கிறேன். சிவகுமாருடன் நடந்த நேர் காணலில் பால்குடம் படத்தில் இடம் பெற்ற “மல்லிகைப்பூ வாங்கி வந்தேன்” பாடலை தனது முதல் பாடலாக குறிப்பிட்டு இருக்கிறார். சில பேட்டிகளில் ஆயிரம் நிலவே வா, மற்றும்  "இயற்கை என்னும் இளையகன்னி" பாடல்களையும் முதல் பாடலாக குறிப்பிட்டு இருக்கிறார். இந்த மூன்று  எந்த பாடல் முதலில் வெளியானதாக இருந்தாலும் அவருடன் அப்பாடலை இணைந்து பாடியவர் பி.சுசீலா என்பது விசேஷம். ஆக தமிழ். தெலுங்கு, கன்னட மொழிகளில் பி.சுசீலா தான் இவரது Lucky Mascot என அவர் பெரும்பாலான மேடைகளில் குறிப்பிடுவதுண்டு. ஹிந்தி மலையாளத்திலும் அப்படி அமைந்திருந்தால் அங்கும் முதல் இடத்தை பிடித்திருப்பாரோ என்னவோ !!!! 
   

·       *  பி.சுசீலாவுக்கு மரியாதை செய்யும் விதமாக திரை உலகினரால் அவருக்கு நடத்தப்பட்ட வெள்ளி விழா, பொன்விழா, வைரவிழா மற்றும் அவரது 80-ஆம் வருட பிறந்த நாள் விழாவிலும் கலந்து கொண்டு வாழ்த்தினார். அது போல் பி.சுசீலாவும் எஸ்.பி.பிக்கு  நடத்தப்பட்ட பாராட்டு விழாக்களில் கலந்து கொண்டு வாழ்த்தி இருக்கிறார்.

·        *  பி.சுசீலா விருது இவருக்கு வழங்கப்பட்டு இருக்கிறது.

 * பி.சுசீலாவும் எஸ்.பி.பியும்  இணைந்து கடைசியாக பாடிய பாடல் கபீர்தாஸ் என்ற தெலுங்கு படத்தில் இடம்பெற்ற NenuVarana Neevi Asi  என்ற பாடலாக இருக்கலாம் என நினைக்கிறேன். இது தான் கே.வி.மகாதேவன் இசை அமைத்த கடைசி திரைப்படம் ஆகும். இத்திரைப்படம் வெளியான வருடம் 2002 என நினைக்கிறேன். அப்படி பார்த்தால் கிட்டத்தட்ட 36 வருடங்கள் இவர்கள் இணைந்து சினிமாவில் பாடி இருக்கிறார்கள்.
                      ( Nenu Varana Nuvvu Asi )
   *  எஸ்.பி.பி இசை அமைத்த பல திரைப்படங்களில் பி.சுசீலா பாடி இருக்கிறார். அவர் முதன் முதலாக இசை அமைத்த “கன்யாகுமாரி” என்ற தெலுங்கு படத்தில் பி.சுசீலாவே பின்னணி பாடினார். அப்பட்த்திலேயே "tholi Sandyaku", "rahasyam teeyani rahasyam" என சில பாடல்களை பாடினார் பி.சுசீலா அவர்கள்.  அதே போல் பி.சுசீலா இசை அமைத்த சில பக்தி ஆல்பங்களில் எஸ்.பிபியையும் பாட வைத்திருக்கிறார்.

                ( Tholi Sandyaku - Kanyakumari -SPB's Music )

· *   ரியாலிட்டி ஷோக்களில் பி.சுசீலாவை வெள்ளைக்குயில் என குறிப்பிடுவார் எஸ்.பி.பி

( ( தொடரும் .... ) 




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக