1980-ஆம் வருடம் எஸ்.பி.பி – பி.சுசீலா இணைந்து பாடிய பாடல்கள்.:
இளையராஜா இசையில் “ரஜினி – ரதி ” நடிப்பில் வெளியான “அன்புக்கு நான் அடிமை”
படத்தில் இடம் பெற்ற “காத்தோடு பூவுரச பூவோடு
வண்டுரச” பாடல் ஹிட் பாடல்களில் ஓன்று. ஜெயலலிதா கடைசியாக கதாநாயகியாக நடித்த “நதியை
தேடி வந்த கடல்” படத்தில் SPB-பி.சுசீலா
பாடிய “எங்கேயோ ஏதோ
பாட்டொன்று கேட்டேன்” பாடலும் ஹிட் ஆனது. படத்தில்
ஃபடாஃபட் க்கு பின்னணி பாடினார் பி.சுசீலா.
வட இந்தியாவில் மிகவும் பிரபலமாக இருந்த “சலில் சௌத்ரி” இசையில்
விஜயகாந்த் – பூர்ணிமா நடிப்பில் வெளியான படம் தான் “தூரத்து இடி முழக்கம்”. இதில்
“வலை ஏந்தி கொள்வோம்”
என்ற பாடலும் குறிப்பிட படத்தக்க பாடல்.
எம்.எஸ்.வி இசையில் பாக்யராஜ்-அஸ்வினி நடித்த “ஒரு கை ஓசை” படத்தில்
இடம் பெற்ற “முத்து தாரகை
வான வீதி வர” பாடலும் இனிமையான பாடலே. எம்.எஸ்.வி இசையில் “மேகத்துக்கும்
தாகமுண்டு” படத்தில் “மரகத
மேகம் சிந்தும்” என்ற பாடலும் குறிப்பிட் தக்க பாடல்.
ராஜன் நாகேந்திரா இசை அமைத்த “இரு நிலவுகள்” படத்தில் “அன்புள்ள கண்ணனோ அணைத்தாள
வந்தானோ உன்னை” என்ற பாடலும் இனிமையான பாடலில் ஓன்று. இதே பாடல் “aa ponna needalo” என தெலுங்கிலும்
SPB- பி.சுசீலா குரல்களில் ஒலித்தது.
விஜயபாஸ்கர் இசையில் ஸ்ரீப்ரியா நடித்த “சௌந்தர்யமே வருக வருக”
படத்தில் “இரவில் இரண்டு
பறவைகள்” என்ற பாடல் குறிப்பிட தக்க பாடல்.
இதே வருடம் ஏ.எல்.ராகவன் அவர்கள் சொந்தமாக தயாரித்த படம் தான் “கண்ணில்
தெரியும் கதைகள்”. இதில் ஐந்து இசை அமைப்பாளர்கள் பணி ஆற்றினார்கள். இளையராஜா இசை
அமைத்து எஸ்.பி.பி - பி.சுசீலா - எஸ்.ஜானகி பாடிய “நான் ஒரு
பொன்னோவியம் கண்டேன்” என்ற பாடல் மிகவும் பிரபலம் ஆன பாடல்களில் ஓன்று.
சக்ரவர்த்தி இசையில் “மழை விழுந்தது காட்டிலே”.
“ஆத்தோரம் பூத்த மல்லி”,
“நாடக சங்கீத நடமாடடி”.
“பூ மொட்டு பொண்ணு இது
பெண்ணல்ல” என SPB-பி.சுசீலா குரல்களில் நான்கு டூயட்டுகள் இடம் பிடித்தன. “மழை
விழுந்தது காட்டிலே” பாடல் அடிக்கடி ரேடியோவில் ஒலித்த பாடல்.
இவ்வருடத்தில் வெளிவந்த இன்னும் சில பாடல்கள்
எனக்கு
பிடித்த ரோஜாப்பூவை எடுத்துக்கொள்ளலாமா ( பணம் பகை பாசம்)
பொன்னாங்கண்ணி
பூத்து வந்ததோ ( நட்சத்திரம் )
கையகல பொட்டுக்காரி ( நீர் நிலம் நெருப்பு)
கண்ணா காதல்
நதி ஓன்று ( இணைந்த துருவங்கள் )
கல்யாண மாலை
கொண்டாடும் வேளை ( ராமன் பரசுராமன்)
எவண்டா எனக்கு ஈடு ( ராமன் பரசுராமன்)
வண்ணத்து பூச்சி சிரிக்குது ( குருவிக்கூடு )
எ கனகம் நீ என்கிட்டே வைக்காதே ( அதிகாரம் )
மனம் ஒரு வீணை ( திரிலோக சுந்தரி )
மார்கழி மாசமடி ( தேன் சிட்டுக்கள்)
சொந்தங்கள் திரும்ப ( அழைத்தால் வருவேன் )
கண்ணம்மா சின்னம்மா ( மதன மஞ்சரி )
மன்மத ரதங்கள் (மன்மத ரதங்கள் )
1981-ஆம் ஆண்டில் SPB - பி.சுசீலா இணைந்து பாடிய பாடல்கள்.
எம,எஸ்,வி இசையில் கமல் – ஸ்ரீப்ரியா நடிப்பில உருவான சவால் படத்தில்
இடம் பெற்ற “தெரியும்
தெரியும் விஷயம் தெரியும்” பாடல் ஓரளவு பிரபலமான பாடல்.
MSV இசை அமைத்த கோடீஸ்வரன் மகள் படத்தில் இடம் பெற்ற “சுஜாதா ஐ லவ் யூ சுஜாதா”
என்ற பாடலும் ஹிட் ஆன பாடல். அதை தவிர "உள்ளத்தில் ஒரு ஊஞ்சல்”
என்ற பாடலும் குறிப்பிட பட தக்க பாடல்.
MSV இசை அமைத்த “பாடி பறந்த குயில்” படத்தில் “ அவனுக்கு தான் தெரியும்”
என்ற பாடலும் இனிமையான பாடலே. அதைப்போல் பட்டம் பதவி படத்தில் இடம் பெற்ற “வானத்தை பார்த்திருந்தேன்”
பாடலும் குறிப்பிட படத்தக்க பாடல். அதைப்போல் சிவாஜி நடிப்பில் வெளியான “மாடி
வீட்டு ஏழை” படத்தில் “படகு
வீடுகளில் பச்சைக்கிளிகள்” என்ற பாடலும் தரமான பாடலே. எங்க ஊர் கண்ணகி படத்தில் இடம் பெற்ற “இதை தான் ரொம்ப ரசிச்சேன்”
பாடலும் அக்கால கட்டத்தில் ஓரளவு பிரபலமான பாடல்.
இளையராஜா இசையில் கமல் – ஸ்ரீப்ரியா நடித்து வெளியான “ராம் லக்ஷ்மன்”
படத்தில் இடம் பெற்ற “விழியில்
என் விழியில் ஒரு பூ பூத்ததோ” பாடல் ஹிட் ஆன பாடல்.
இவை தவிர பல படங்களில் இந்த
ஜோடி பாடிய பாடல்கள் இடம் பெற்றன.
நீ இன்றி நானோ
நான் இன்றி நீயோ ( மகரந்தம் )
ஜனகன்
பொன்மானே ( பெண்ணின் வாழ்க்கை )
பனியே வா பஞ்சு
மழையே வா ( சலனம் )
ஆறு இரண்டு
பனிரெண்டு ( நீதி தேவன் மயக்கம் )
ஒத்திகையில்
தானே இப்படி ஆனால் ( நீதி தேவன் மயக்கம் )
மஞ்சளும்
மாலையும் வருமோ ( உதயமாகிறது )
நான் உன்னை
மன்றாடினேன் ( உதயமாகிறது )
என்னை
ஏமாற்றும் கண்ணா ( ஆராதனை )
1982-இல் SPB – பி.சுசீலா இணைந்து பாடிய பாடல்கள்
எம்.எஸ்.வி இசையில் சிவகுமார் – சரிதா நடித்த “அக்னி சாட்சி” படத்தில்
கடிதம் எழுதுவது போல் கவிதை நடையில் அமைந்த “வணக்கம் முதல் வரியை”
என்ற பாடலை அனுபவித்து பாடி இருப்பார்கள்..
எம்.எஸ்.வி இசையில் ரஜினி – ஸ்ரீதேவி நடிப்பில் உருவான “போக்கரி ராஜா”
திரைப்படத்தில் “விடிய
விடிய சொல்லி தருவேன்” என்ற பாடல் மக்கள் மனம் கவர்ந்த பாடல்.
சந்திரபோஸ் இசையில் விஜயகாந்த்-ஸ்ரீப்ரியா நடித்த “பார்வையின்
மறுபக்கம்” படத்தில் “ம்..ம்..ம்..ம்
.. சந்தோஷ நேரங்கள் சங்கீதம் கேளுங்கள்” பாடல் அடிக்கடி வானொலியில் ஒலிக்கும்
பாடல்.
கே.வி மகாதேவன் இசையில் மோகன் – சுலக்ஷனா நடிப்பில் உருவான “அந்த ராத்திரிக்கு சாட்சி
இல்லை” படத்தில் “சுமை
தாங்கி ஏன் இன்று விழுகின்றது” என்ற சோகமான டூயட் இடம் பெற்றது.
சக்ரவர்த்தி இசையில் கமல்-ஸ்ரீப்ரியா நடித்த “பகடை பனிரெண்டு”
படத்தில் “வர வேண்டும்
மகாராஜன் தர வேண்டும் சுகராகம்” என்ற பாடலும் குறிப்பிட பட தக்க பாடல்.
இவ்வருடம் SPB-பி.சுசீலா குரல்களில் ஒலித்த பாடல்களில் சில ...
சிறு மழை சாரல் ( நான்கு தூண்கள் ஆட்டம் )
சந்தன மலரின்
சுந்தர வடிவில் ( கருடா சௌக்கியமா)
முத்துமணி
சிரிப்பிருக்க ( ஊருக்கு ஒரு பிள்ளை )
முல்லைப்பூ போல நான் பெற்ற பிள்ளை ( தியாகி )
நீர் எல்லாம் பன்னீர் அம்மா ( கவிதை மலர் )
உன்ன தொட்டா
தோஷமில்ல ( நான் உன்ன நெனச்சேன் )
.. 1983-இல் SPB – பி.சுசீலா இணைந்து
பாடிய பாடல்கள் :
இளையராஜா இசையில் ரஜினி – ஸ்ரீதேவி- சில்க் நடித்த அடுத்த வாரிசு
படத்தில் இடம் பெற்ற “பேசக்கூடாது
வெறும் பேச்சில் சுகம்” இப்போதும் கூட அடிக்கடி ஒளிபரப்பப்படும் பாடலில்
ஒன்று.
எம்.எஸ்.வி இசையில் மோகன் – பூர்ணிமா ஜெயராம் நடித்த நாலு பேருக்கு
நன்றி படத்தில் இடம் பெற்ற “என்
இதயராணி தேகம்” என்ற பாடலும் குறிப்பிட தக்க பாடல். எம்.எஸ்.வி இசையில் சரிதா நடித்த “இவள்
ஒரு தமிழச்சி” படத்தில் இடம் பெற்ற “நீயோ மணிக்குயில் முழக்கம்” பாடல் தரமான்
பாடல்.
சங்கர் கணேஷ் இசையில் கார்த்திக் – ஸ்ரீப்ரியா நடிப்பில் உருவான “கோயில் தெய்வம் நீ தென்றல் நீ”
பாடலும் குறிப்பிட தக்க பாடல்.
1984-இல் SPB-பி.சுசீலா இணைந்து பாடிய பாடல்கள்:
வி.எஸ்.நரசிம்மன் முதல் இசை அமைத்த திரைப்படம் “அச்சமில்லை அச்சமில்லை”.
படமும் பாடல்களும் பெரிய ஹிட்ட ஆகின. அதில் எஸ்.பி.பி – பி.சுசீலா பாடிய “ஆவாரம்பூவு ஆறேழு நாளா”
பாடல் மிகப்பெரிய ஹிட்.
இவ்வருடம் வெளிவந்த மற்ற பாடல்கள்
நீ ஒரு கடிதம்
( இரு மேதைகள் )
மை வச்ச கண்ணம்மா ( ஸ்ரீதேவி )
வாசமுள்ள சந்தனமே ( ஸ்ரீதேவி )
காலம் இளமை
காலம் ( தங்கமடி தங்கம் )
மலரிது மலராது ( மன்மதா என்னை தேடி வா )
வெள்ளி முத்துக்கள் ( மீண்டும் வருவேன் )
மலர துடிக்கும் ( நினைவுகள் மறைவதில்லை )
1985-இல் SPB-பி.சுசீலா இணைந்து பாடிய பாடல்கள்
இளையராஜா இசை அமைத்து கமல் – அம்பிகா நடிப்பில் வெளிவந்த “காக்கி
சட்டை” படத்தில் இடம் பெற்ற “பட்டுக்கன்னம் தொட்டு கொள்ள” பாடல் ஒரு ஹிட் பாடல்.
எம்.எஸ்.வி இசையில் சிவகுமார், சரிதா நடிப்பில் வெளியான “சுகமான
ராகங்கள்” படத்தில் இடம் பெற்ற “ஆத்தக்கடக்க வேணும்”
பாடல் குறிப்பிட படத்தக்க பாடல்.
சங்கர் கணேஷ் இசையில் மோகன்-ராதிகா-ஊர்வசி நடித்த “தெய்வப்பிறவி”
படத்தில் “பூவை ஒரு பூ
என்று யார் கிள்ளினாரோ”, “நில் நில் நில் இளம் தென்றலே”,
“பானையிலே
பாலிருக்கு” “மௌனம் என்னும்
ராகம்” போன்ற பாடல்கள் குறிப்பிட பட தகுந்த பாடல்கள்.
இளையராஜா இசையில் மோகன் விஜி நடித்த அன்பின் முகவரி படத்தில் “பொன்வானிலே எழில் வெண்மேகமே”
என்ற பாடலும் குறிப்பிட தக்க பாடல்.
சந்திரபோஸ் இசையில் வெளிவந்த “அவளுக்குள் ஒரு ரகசியம்” படத்தில் “ராஜ ராஜேஸ்வரி அருகில் ராஜ ராஜேஸ்வரன்” என்ற பாடலும் இந்த கூட்டணியில் தவறாமல் கேட்க வேண்டிய பாடல்.
சங்கர் கணேஷ் இசையில் சிவாஜி, பிரபு. ராதா நடிப்பில் வெளிவந்த “நீதியின்
நிழல்” படத்தில் இடம் பெற்ற “ஹே மந்தார பூவோ மஞ்சள் நிலாவோ”
பாடலும் பிரபலமான பாடல்.
இவ்வருடம் SPB- பி.சுசீலா குரல்களில் ஒலித்த வேறு பாடல்கள்..
பூங்கொடியே கை வீசு ( ஊஞ்சலாடும் உறவுகள் )
எத்தனை இனிய குடும்பம் ( நேர்மை )
கண்ணே வானம் உன் வீடு ( யுத்தம் )
கள்ள சிரிப்பு கட்டழகு ( பார்த்த ஞாபகம் இல்லையோ )
ஓ ராதா ராதா ஏனோ
என் மேல் கோபம் கூடாது ( ராஜா யுவராஜா )
ராஜாத்தி நீ
தான் ரோஜாப்பூவே ( ராஜா யுவராஜா )
மேகங்களே வாருங்களே ( சந்தோஷ கனவுகள் )
கன்னி தென்றல்
வீசும் ( ராமன் ஸ்ரீராமன் )
ஒரு தேவதை ( நான் உங்கள் ரசிகன் )
தொடரும் ....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக