பின்பற்றுபவர்கள்

ஞாயிறு, 2 ஏப்ரல், 2017

சங்கர் கணேஷ் இசையில் பி.சுசீலா பாடிய பாடல்கள் - 7



சங்கர் கணேஷ் அவர்களுடன் பி.சுசீலாவின் இசை பயணம்
      சங்கர் கணேஷிடம் ஒரு நல்ல குணம் உண்டு. எந்த விழாவானாலும், யார் விருது பெற்றாலும் நேரில் சென்று வாழ்த்தும் குணம் தான் அது.. பி.சுசீலா கின்னஸ் சாதனை படைத்த செய்தி கேட்டதும் நேரில் வந்து வாழ்த்தியவர்களில் அவரும் ஒருவர். பி.சுசீலாவுடன் பணி புரிந்த பலரும் போனில் கூட வாழ்த்து சொல்ல தயங்கிய நிலையில் நேரில் வந்து பாராட்டிய இவரது குணம் இவரை பல படி மேலே உயர்த்தி விட்டது. அதைப்போல் திரை உலகில் யார் இயற்கை எய்தினாலும் அந்த இடத்தில் நேரில் சென்று துக்கம் விசாரித்து அவரைப்பற்றி தன நினைவுகளை பகிர்ந்து கொள்ளும் குணம் படைத்தவர். சற்றும் தலைக்கனம் இல்லாமல் எல்லோரையும் அனுசரித்து செல்லும் குணம் உடைய இவர் பாராட்டுக்குரியவரே. 
  
   இத்தொடரில் 1981-இல் இருந்து சங்கர் கணேஷ் இசை அமைத்த படங்களில்  பி.சுசீலா பாடிய பாடல்களை [பார்க்கலாம்.
    1981-ல் சங்கர் கணேஷ் இசை அமைத்த “சிவப்பு மல்லி” “அஞ்சாத நெஞ்சங்கள்”, “ஜாதிக்கொரு நீதி”. “குப்பத்து பொண்ணு”, “மகரந்தம்”. நீதி தேவன் மயக்கம் போன்ற படங்களில் பாடினார் பி,சுசீலா அவர்கள். சிவப்பு மல்லி படத்தில் “ரெண்டு கன்னம் சந்தன கிண்ணம்” பாடல் பிரபலம் ஆன பாடல். சமூக ஏற்றத்தாழ்வுகளை சித்தரிக்கும் கம்யுனிசம்  சார்ந்த படங்கள் அவ்வப்போது வெளி வந்து  கொண்டு இருந்தன. அதில் இதுவும் ஓன்று. “அவன்தொடாத பூக்கள்” என்ற ஒரு வித்தியாசமான  பாடல் இடம் பெற்றது. ஏனோ பாப்புலர் ஆகவில்லை. அதைப்போல் தெரு நாடக வடிவில் “ஊருக்குள்ளே நான் தான் மகாராஜா” என்ற பாடலும் TMS, சுசீலா குரல்களில் இடம் பெற்றது.

                  ( ரெண்டு கன்னம் சந்தன கிண்ணம் )

     இதை தவிர “தன்னத்தான தானத்தனா தத்தி தத்திஆடத்தனா” ( அஞ்சாத நெஞ்சங்கள் - இப்பாடலில் சமீபத்தில் மறைந்த நடிகை நிஷாவுக்கு பி.சுசீலா பின்னணி பாடி இருக்கிறார்), நீ இன்றி நானோ ( மகரந்தம்), “காத்தடிச்சது ராமாயி (குப்பத்து பொண்ணு),  எத்தமடி ஏத்தம் (ஜாதிக்கொரு நீதி), "ஒத்திகையில் தானே இப்படி", " ஆறிரண்டு பனிரெண்டு" ( நேதி தேவன் மயக்கம்) போன்ற பாடல்கள் குறிப்பிட பட தக்கவை.
                  ( நீ இன்றி நானோ நானின்றி நீயோ )

          1982-ஆம் வருடம் சங்கர் கணேஷ் இசை அமைத்த “அம்மா”, “ரங்கா”. “துணை”, “பூம் பூம் மாடு”. சக்கரங்கள் நிற்பதில்லை. மருமகளே வாழ்க, நான் உன்ன நெனச்சேன். நலந்தானா, நெஞ்சங்கள், ஊரும் உறவும் போன்ற படங்களில் பி.சுசீலா பாடி இருந்தார். அம்மாவே தெய்வம், பூமுகம் சிவக்க ( அம்மா), “தீபங்கள் ஆயிரம் தேவியர் ஏற்றும் தீபாவளி”, “மங்கல மேடை அதில் மல்லிகை வாடை  ( மருமகளே வாழ்க), அழகானபட்டாம்பூச்சி ஆடை கொண்டது ( ரங்கா) போன்ற பாடல்கள் குறிப்பிட படதக்கவை.
                  ( பூமுகம் சிவக்க சோகமென்ன )

      1983-ஆம் வருடம் சங்கர் கணேஷ் இசை அமைத்த “சாட்சி”, “சஷ்டி விரதம்”, “சீறும் சிங்கங்கள்”, “நினைவுகள்”, “அவள் ஒரு தனி ரகம்”, வளர்த்த கடா போன்ற படங்களில் பி.சுசீலா பாடி இருந்தார். சாட்சி படத்தில் “ஆகாயம் பூப்பூக்கும் நேரம்”, “தென்னமரத்துல தேளு கொட்ட” போன்ற பாடல்கள் குறிப்பிட படத்தக்கவை. எண்பதுகளில் பி.சுசீலாவின் வாய்ப்புகளை குறைக்க சிலர் திட்டமிட்டு செயல் ஆற்றினார். ஆனாலும் சிலர் பி.சுசீலா தங்கள் படத்தில் இருந்தே ஆக வேண்டும் என்பதில் தீர்மானமாக இருந்தனர். அதில் ஒருவர் எஸ்.ஏ.சந்திர சேகரன் அவர்கள். அவரது பெரும்பாலான படங்களில் பி.சுசீலாவின் பாடல்கள் இருக்கும். எஸ்.ஏ.சி அவர்கள் ஒரே இசை அமைப்பாளரை நம்பி இருப்பதும் கிடையாது. பட்ஜெட்டுக்கு ஏற்றாற்போல் இசை அமைப்பாளரும் மாறிக்கொண்டே இருப்பார்கள். எஸ்.ஏ.சி இயக்கிய படங்களில் சாட்சி படமும் ஓன்று.
                      ( ஆகாயம் பூப்பூக்கும் நேரம் )

     தேவர் பிலிம்ஸ் தயாரித்த சஷ்டி விரதம் படத்தில்  “மயில் வாகனம் மலருடன் மன மோகனம் “, “யாருக்கு முருகா உன் சோதனை”, "சஷ்டி விரதம் இது கந்த சஷ்டி விரதம்" போன்ற பாடல்கள் பக்தி மணத்துடன் இருக்கும்.


                    (  கடவுள் கண்ணோடு கண்ணீரை )
      
    நினைவுகள் படத்தில் “கோயில் தெய்வம் நீதென்றல் நீ”, “கடவுள் கண்ணோடு கண்ணீரை” ஆகிய பாடல்கள் குறிப்பிட படத்தக்கவை.
    இதே வருடம் வெளிவந்த “சீறும் சிங்கங்கள்” படத்திலும் மூன்று பாடல்களை பி.சுசீலா பாடினார். அதில் “தண்ணிக்குள் நிக்குது தாவணி தாமரை” ஓரளவு பிரபலம் ஆனது. கொஞ்சம் “ஆயிரம் தாமரை மொட்டுக்களே” பாடலின் சாயல் இருந்ததை தவிர்க்க முடியவில்லை. ஆயிரம் தாமரை மொட்டுக்களே பாடலிலும் பழைய கிராமிய பாடல் சாயல் இருந்தது உண்மை.

                  ( தண்ணிக்குள் நிக்குது )
     1984-ல் சங்கர் கணேஷ் இசையில் :இதயம் தேடும் உதயம்”, :”இது உங்க சட்டம்”. “நன்றி, “ஒரு திசை”, “ திருட்டு ராஜாக்கள்”, “வாய் பந்தல்”, “வீட்டுக்கு ஒரு கண்ணகி”, “வேங்கையின் மைந்தன்” போன்ற படங்களில் பி.சுசீலா பாடினார்.
     நன்றி படத்தில் “தாய் செய்த பாவம் தரை மீது வந்தேன்” என நளினி பாடுவது போல் ஒரு சோகப்பாட்டு இடம் பெற்றது. நல்ல பாடல் தான் என்றாலும் அதிகம் கேட்கப்படாமல் போனது.

    வீட்டுக்கு ஒரு கண்ணகி படத்தில் பெண்ணியம் பேசும் பாடலாக “கல்லல்லடா மண்ணல்லடா பெண்ணல்லடா சொல்லுங்கடா” என்ற பாடல் இடம் பெற்றது.     வேங்கையின் மைந்தன் படத்தில் “கண்ணா வா மன்னா வா காலம் முழுதும் ஒண்ணா வா” என்று குழந்தைகளுக்கான பாடல் இடம் பெற்றது. “இதயம் தேடும் உதயம்” படத்தில் “விடியும் காலை உதய நேரம்” என்ற பாடல் இனிமையாக இருக்கும். மோகன் ஊர்வசி ஜோடியாக நடித்த “வாய் பந்தல்” படத்தில் “பட்டு சட்டை போட்டுக்கொண்டு” என்ற பாடல் குறிப்பிட பட தக்கது.      
          
                                         (  கண்ணா வா கண்ணா வா )

         1985-ல் சங்கர் கணேஷ் இசையில் “தெய்வப்பிறவி”, “நாகம்”, “ பாடும் வானம்பாடி”. “நீதியின் நிழல்”. “பெருமை”, “திறமை”. “வேலி”. யுத்தம். கடிவாளம், ஜிகு ஜிகு ரெயில், “சிவப்பு நிலா” “எங்கிருந்தாலும் வாழ்க போன்ற படங்களில் பாடினார் பி.சுசீலா அவர்கள். இதில் “தெய்வ பிறவி” படம் தேவதா என்ற தெலுங்கு படத்தின் ரீமேக். தெலுங்கில் மிக பெரிய வெற்றி பெற்ற இப்படத்தை மோகன், ராதிகா, ஊர்வசியை வைத்து தமிழில் தயார்த்தார்கள். தமிழில் போதிய வெற்றியை பெறவில்லை என்றாலும் பாடல்கள் சிறப்பாக அமைந்தன. “பூவை ஒரு பூ என்று யார் கிள்ளினாரோ”. “பானையிலேபாலிருக்கு”. “நில் நில் நில் இளம் தென்றலே”. “மௌனம் என்னும் ராகம் ”. “மாராப்பு போட்ட பொண்ணு” என எல்லா பாடல்களுமே இனிமையாக அமைந்தன. அன்றைய ராஜா அலையில் இப்பாடல்கள் காணமல் போய் விட்டது.


                   ( மௌனம் என்னும் ராகம் )
      பாடும் வானம்பாடி படத்தில் “அன்பே அன்பே அன்பே பாடும் பாடல் எங்கே” என்ற பாடல் மிகவும் பிரபலமான “aaja aaja aaja” பாடலின் தமிழ் வடிவம். பி.சுசீலாவின் அனுபவம் இப்பாடலை பல மடங்கு தரமானதாக ஆக்கி இருந்தது. என்றாலும் போதிய அளவில் ரீச் ஆகவில்லை  என்றே சொல்ல வேண்டும். ஒரு வேளை அதை படமாக்கிய விதம் கூட காரணமாக இருக்கலாம்.

    நாகம் படத்தில் “தேனாண்டாள் கோயிலுக்கு”. “நீதியின் நிழல்” படத்தில் “ஹே மந்தார பூவோ”, வேலி படத்தில் “கண்ணான கண்மணிக்கு கண்ணாடி வளையல்”, சிவப்பு நிலா படத்தில் “கேளடி கேளடி தங்கச்சி, திறமை படத்தில் “பொன்மானே பூமானே தாலேலோ” கடிவாளம் படத்தில் “அழகே அமுதே ஆடி வா”, பெருமை படத்தில் “நூறாண்டு வாழ்க எந்தன் கண்மணி” போன்ற பாடல்கள் குறிப்பிட பட தக்க நல்ல பாடல்கள்

   1986 ஆம் வருடம் சங்கர் கணேஷ் இசை அமைத்த “சம்சாரம் அது மின்சாரம்”. “ ஆயிரம் கண்ணுடையாள்”. “மௌனம் கலைகிறது”. “மச்சக்காரன்”, “ கோயில் யானை”, நண்பன் போன்ற படங்களில் பி.சுசீலா பாடி இருந்தார். “அழகிய அண்ணி அனுபவம் எண்ணி”. கண்ணன்யாருக்கு சொந்தம், அம்மா தாயே மஹாமாயே பாடல்கள் குறிப்பிட படத்தக்கவை.

                                         ( கண்ணன் யாருக்கு சொந்தம் )


     1987- ஆம் வருடம் சங்கர் கணேஷ் இசை அமைத்த ஜகதல பிரதாபன், உண்மைக்கே வெற்றி, சிறகொடிந்த பறவைகள் போன்ற படங்களில் பி.சுசீலா பாடி இருந்தார். “பெண் பிறந்தேனே பெருமைகள் செய்ய “, “வாடியம்மா மாரியம்மா” போன்ற பாடல்கள் குறிப்பிட பட தக்கவை.
      
  1988- ஆம் வருடம் சங்கர் கணேஷ் இசை அமைத்த “இளமை ஒரு பூங்காற்று”, “கை கொடுப்பாள் கற்பகாம்பாள்”, “கல்யாண வளையோசை” படங்களில் பி.சுசீலா பாடினார். மயிலிறகால் மெல்லமெல்ல”. “ தேரடி தான் கிழக்கிலே” போன்ற பாடல்கள் குறிப்பிட பட தக்கவை.


    1989 ஆம் வருடம் சங்கர் கணேஷ் இசை அமைத்த “தர்ம தேவன்”, “மீனாட்சி திருவிளையாடல்”, “ நியாய தராசு” போன்ற படங்களில் பாடினார் பி.சுசீலா அவர்கள். இதில் நியாய தராசு படம் மலையாளத்தில் டிரன்ட் செட்டர் படமான “பஞ்ஜாக்னி” படத்தின் தமிழ் வடிவம். iஇதற்கு கலைஞர் வசனம் எழுதி இருந்தார். ஆனால் தமிழில் ரொம்ப சுமாராக போனது. பி.சுசீலா பாடிய “தொடுவானம் ரொம்ப தூரம் தான்”. “யாருக்கு ஆறுதல் யாரோ” பாடல்கள் நல்ல தரமான பாடல்கள் என்றாலும் போதிய அளவில் ரீச் ஆகவில்லை. இப்போது கேட்டு பாருங்கள். நீங்களே உணர்ந்து கொள்வீர்கள்.

                  ( தொடுவானம் ரொம்ப தூரம் )

    1990 ஆம் வருடம் சங்கர் கணேஷ் இசை அமைத்தஇதய தாமரை”. “பட்டணம் தான் போகலாமடி”, “பெண்கள் வீட்டின் கண்கள்”, “சக்தி பராசக்தி”, “சத்தியம் சிவம் சுந்தரம்”, தாயா தாரமா போன்ற படங்களில் பாடினார் பி.சுசீலா.
   இதய தாமரை படத்தில் இடம் பெற்ற “உன்னை ஏன் சந்தித்தேன் ஊமை நான் சிந்தித்தேன்” பாடலும் கூட படத்தின் சுமாரான வெற்றியால் காணமல் போன பாடலில் ஓன்று. இன்று இப்பாடலை கேட்கும் பலரும் “என்ன ஒரு பாடல் !! என சிலாகிப்பதை கேட்க முடிகிறது.

    "பெண்கள் வீட்டின் கண்கள்" படத்தில் பல பெண்களை பெற்ற தாய் தன குழந்தைகள் சோர்ந்து இருக்கும் போது அவர்களை ஊக்குவிக்கும் விதமாக பாடும் பாடல் தான், “பெண்கள் வீட்டின் கண்கள் அந்த கண்கள் கலங்குமா”. பட்டணம் தான் போகலாமடி படத்தில் “எங்க மக தான் தங்க மக தான்”  என்ற வளைகாப்பு பாடலை பாடி இருந்தார் பி.சுசீலா அவர்கள். சக்தி பராசக்தி படத்தில் “நாவினில் இருக்க வச்சான்”, “சத்தியம் சிவம் சுந்தரம்” படத்தில் பத்திரிக்கைகளின் பெயரை வைத்து எழுதிய “கண்ணே உன் இதழ் குங்குமம்” போன்ற பாடல்கள் குறிப்பிட படத்தக்கவை.
                   ( நாவினில் இருக்க வச்சான்)

       இக்கால கட்டத்தில் சங்கர் கணேஷுக்கும் சரி, பி.சுசீலாவுக்கும் சரி போதிய வாய்ப்புகள் இருக்கவில்லை. இருந்தாலும் அவ்வப்போது கிடைக்கும் வாய்ப்புகளில் சில பாடல்களை பாடும் வாய்ப்புகள் கிடைத்தன. “ ஆஞ்சநேயனே” ( ஈஸ்வரி ), பேர் உலகம் ( தெய்வ குழந்தை), “சிங்க குட்டி நீயே ( காவல்  நிலையம் ), “சின்ன சின்ன மகாராசா ( பாரம்பரியம் ), “உலகாளும் காம்ட்சியே” ( அம்மன் காட்டிய வழி), கல்யாண மேளதாளங்கள் ( கங்கை அவள் கண்ணுக்குள்) போன்ற பாடல்கள் குறிப்பிட பட தகுந்த பாடல்கள்.

    பெரும்பாலும் பெரிய கம்பெனி படங்களில் சங்கர் கணேஷ் இசை சிறப்பாகவே அமைந்திருக்கின்றது. ஆனால் அவர்கள் சின்ன பட்ஜெட் படங்களுக்கு அதிகம் இசை அமைத்ததால் தான் என்னவோ பல நல்ல  பாடல்கள் கேட்க படாமலே போயிருக்கின்றன. இது வரை நாம் பார்த்த பாடல்களில் பல பாடல்கள் மனதை கவர்ந்த பாடல்களே என்பது என் எண்ணம். ஆனால் பலருக்கும் இது சங்கர் கணேஷ் இசை அமைத்த பாடல்கள் என்று கூட தெரிந்திருக்காது. அதே போல் எண்பதுகளில் பி.சுசீலா நிறைய பாடி இருந்தாலும் பல பாடலகள் இந்த மாதிரி வீழலுக்கு இறைத்த நீராக சென்றிருப்பது கொஞ்சம் வேதனையான விஷயம் தான் என்றாலும் இப்போது கேட்கும் போது கூட அதன் தரம் கெடாமல் இருப்பது பி.சுசீலாவின் வெற்றி என்றே சொல்லலாம்.


   பி.சுசீலா அவர்கள் சங்கர் கணேஷ் இசையில் பாடிய வேற்று மொழி பாடல்களை அடுத்த தொடரில் பார்க்கலாம்.  

List of songs from 1981


1981Tamilanjaatha nenjangalthananthana thalmthana
1981Tamiljaathikkoru nedhiyethamadi yetham idhu 
1981Tamilkuppaththu ponnukaathadichathu raamaayi
1981Tamilmakaranthamnee intri naano naan
1981Tamilmakaranthamkanne en karpagame
1981Tamilneedhidevan mayakkamaaru irandu pannirendu
1981Tamilneedhidevan mayakkamothikayil thaane ippadi aanaal
1981TamilSivappu malliavan thodatha pookkal
1981Tamilsivappu mallioorukkulle-drama
1981Tamilsivappu mallirendu kannam chandana 
1981TamilSivappu mallirendukannam-sad
1982Tamiladhisaya piravigalponnu paaka porEngale
1982Tamilammaammave deivam
1982Tamilammapoo mugam sivakka
1982Tamilboom boom maduthithippanathu mutham
1982Tamilchakkarangal nirpathaillaithen nilavu kaathirukku
1982Tamilmarumagale vaazhgadeepangal aayiram 
1982Tamilmarumagale vaazhgaMangala medai
1982Tamilnaan unna nenachenunnai thotta thoshamilla
1982Tamilnaayakkarin magalaattathil mangal nangaL0
1982Tamilnalanthaanaenthan kannaal
1982Tamilnenjangalachchappadum anbuk kiLi
1982Tamiloorum uravumnalla padikkanum
1982Tamilrangaazaghana apattampoochi
1982Tamilthunailife is a game
1983Tamilaval oru thani ragamnilavaagi vandhathoru
1983Tamilaval oru thani ragamyezhaigalai vaazha vaikkum
1983Tamilninaivugalkadavul kannodu
1983Tamilninaivugalkoyil deivam nee thendral 
1983Tamilsaatchiaagayam poo pookum
1983Tamilsaatchithenna marathula 
1983Tamilseerum singangalpallakkai thookki paarkkka
1983Tamilseerum singangalkoomutte kozhimutte
1983Tamilseerum singangalthannikkul nikkuthu thaavani
1983Tamilshashti virathamkantha shasti 
1983Tamilshashti virathammayil vaaganam malarudal
1983Tamilshashti virathamyaarukku muruga un sothanai 
1983TamilValartha kadaezhettu naalaga thaan rosave
1984Tamilidhayam thedum udhayamvidiyum kaalai
1984Tamilidhu unga sattamanachukka atha itha
1984Tamilnantrithaai seitha paavam
1984Tamiloru thisainathiyodu pOnaal
1984Tamilthiruttu raajaakkalmeena meena
1984Tamilvaai pandhalpattu chattai pottu kondu
1984Tamilvaanga maapillai vaangaIdho uruvam irandu
1984Tamilveetukku oru kannagiKallallada mannallada
1984Tamilvenkayin maindhankanna vaa kanna vaa-sad
1984Tamilvenkayin maindhankanna vaa manna vaa kaalam
1985Tamildeivapiravinill nill nill ilam thendrale
1985Tamildeivapiravipoovai oru poo entru
1985Tamildeivapiravimaarappu potta
1985Tamildeivapiravimounam ennum
1985Tamildeivapiravipaanayile paalikku
1985Tamilengirunthaalum vaazhgaaathoram maama
1985Tamiljigu jigu railsollaadhe yaarukkum 
1985Tamilkadivalamazhage amuthe adi va
1985TamilnaagamthEnaandaal kOyilukku
1985Tamilneedhiyin nizhalhey manthaara poovo
1985Tamilpaadum vanampadianbe anbe anbe paadum 
1985TamilperumaiMogham vandhu mutham
1985Tamilperumainoorandu vazhga
1985Tamilsivappu nilakeladi keladi thangachi
1985Tamilthiramaiem paatu nee ketu
1985Tamilthiramaiponmaane ponmaane thaalelO
1985Tamilvelikannaana kanmanikku 
1985Tamilyuddhamkanne vaanam un veedu
1986Tamilaayiram kannudayaalAmma thaaye magamaaye
1986Tamilkoyil yaanaichinna chinna bandthangala
1986Tamilmachakkaranyaar kandathu
1986Tamilmounam kalaigirathukannan yaarukku sondham
1986Tamilnanbanidhu adithadi
1986Tamilsamsaram athu minsaramazhagiya anni anubhavam
1987Tamiljagathala prathapan(new)vaadiyamma maariyamma
1987Tamilsiragodintha paravaigalpenn piranthome
1987Tamilunmaikke vetrikannurangu
1988Tamililamai oru poonkatruthennankuruthattam
1988Tamilkai koduppaal karpagambaalmayiragal mella mella
1988Tamilkai koduppaal karpagambaaltheradi than kizhakile
1988Tamilkalyaana valayosaikattiya kottai
1989Tamildharma devanmadura pakkam
1989Tamilmeenatchi thiruvilayaadalmalagalal anaithitta
1989Tamilnyaya tharasuThoduvaanam romba
1989Tamilnyaya tharasuyaarukku aaruthal
1990Tamilidhaya thaamraiunnai yEn sandithEn oomai 
1990Tamilpattanam than pogalamadiEnga maga thaan thanga -sad
1990Tamilpattanam than pogalamadiEnga maga thaan thanga 
1990Tamilpengal veetin kangalpengal vetin kangal antha 
1990Tamilpengal veetin kangalsalayila rendu maaddu
1990Tamilsakthi parasakthinaavinil irukka vachaan
1990Tamilsathiyam sivam sundharamkanne un ithazh kungumam
1990Tamilsathiyam sivam sundharamkuppam huppam nochikkuppam
1990Tamilthaayaa thaaramaaaagaayam engengum
1990Tamilthaayaa thaaramaaadi aathAdi pudhir podavo
1991TamileashwariAnjaneyane
1992Tamildeiva kuzhanthaiper ulagam
1992Tamilkaaval nilayam singakutty neeye 
1992Tamilpurushan enakku arasanthoranthathu thoranthathu
1993Tamilpaarambariyamchinna chinna maharasa
1995TamilAmman katyiya vazhiulagalum kamatchiye
1996Tamilgangai aval kannukkulkalyaana melathaalangal
2013Tamilhindu devotionalgopala gopala
2015TamilSwamy Ayyappanenna solli paduvathu
?Tamilkarunayinal allaennennavo enni

( தொடரும் )

2 கருத்துகள்:

  1. ஆயிரம் படங்களுக்கு மேல் இசை அமைத்தாலும் அலட்டல் இன்றி அமைதியான நிறைகுடம் திரு சங்கர்கணேஷ் அவர்கள் இசையில் நான் பாடும் பாடல் நலமாக வேண்டும் என்ற பாடலை கேட்க கேட்க மனம்லயித்துபோகும் என்றும்அவர் ரசிகன் மாலி (எ) மகாலிங்கம் வேலூர்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. There is no adequate proofs for sankar Ganesh's 1000 movies claim. As per my guess it may be around 500 to 600 movies. He was the saviour for small budget movies.

      நீக்கு