பின்பற்றுபவர்கள்

புதன், 19 ஏப்ரல், 2017

பி.சுசீலாவும் ஜமுனா ராணியும் இணைந்து பாடிய பாடல்கள்




          பி.சுசீலாவிற்கு இசை உலகில் தோழி யார் என்று கேட்டால் அதற்கு சரியான பதில் .. அவரது சக  பாடகிகள் எல்லாரும் தோழிகள்  தான்.  யாருடனும் எந்த கருத்து வேறுபாடும் இல்லாமல் இத்தனை வருடங்கள் திரை உலகில் நிலைத்திருப்பது ஒரு பெரிய சாதனை. அதை பின்பற்றி மற்ற பாடகிகள் கூட ஒருவருக்கொருவர் சுமுகமாகவே பழகி வருகிறார்கள்.. தென்னகத்தில் பாடகிகளுக்குள் பெரிய  சண்டையோ, புழுதி வாரி தூற்றிக்கொள்வதோ இல்லாமல் நீண்ட வருடங்கள் திரை உலகில் பயணம் செய்திருக்கிறார்கள். பி.சுசீலா போன்றவர்கள் பாடுவதில் மட்டுமல்ல, சக கலைஞர்களுடன் பண்புடன் பழகுவதிலும் கூட மற்றவர்களுக்கு வழிகாட்டியாக இருக்கிறார்கள் என்றால் மிகை இல்லை.

                                            ( P.Susheela, Jikki and Jamuna Rani )
       
            இருந்தாலும் பி.சுசீலாவுக்கு நெருக்கமான ஒரு தோழி இருக்கிறார் என்றால் அது பின்னணி பாடகி "ஜமுனா ராணி " அவர்கள் தான். "மாமா மாமா மாமா", "காளை வயசு கட்டான சைசு",  "பாட்டொன்று கேட்டேன்", "காவிரி தாயே காவிரி தாயே",  "செந்தமிழ் தேன் மொழியாள்", "தாரா தாரா வந்தாரா:, "பக்கத்திலே கன்னி பொண்ணிருக்கு", "யாரடி நீ மோகினி",  "குங்கும பூவே கொஞ்சு புறாவே", "நெஞ்சில் குடியிருக்கும்",  "ஆதி மனிதன் காதலுக்கு பின்". "சித்திரத்தில் பெண் எழுதி", "காமுகர் நெஞ்சில் நீதியில்லை"  என  பல ஹிட்ஸ் நினைவில் வந்து போகிறதா?   ஜமுனாராணி வயதில் பி.சுசீலாவை விட சிறியவர் என்றாலும் பி.சுசீலா  திரை உலகில் அறிமுகம் ஆவதற்கு முன்னாலேயே திரை உலகில் அறிமுகமானவர். ஐம்பதுகளில் நிறைய இசை அமைப்பாளர்கள் திரை உலகை ஆக்கிரமித்து இருந்தார்கள். அதைப்போல் நிறைய பாடகிகளும் இருந்தார்கள். எல்லோருக்கும் ஒரு தனித்துவம் இருந்ததால் வாய்ப்புகளும் நிறைய இருந்தது. அந்த  கால கட்டத்தில் ஜமுனாராணி நிறைய ஹிட்ஸ் கொடுத்தார்.


       ஜமுனாராணி பி.சுசீலாவுக்கு நெருக்கமானவர் என்பதால் அடிக்கடி பி.சுசீலாவை சந்திப்பதுண்டு. அவர் பி.சுசீலா டிரஸ்டில் ஒரு டிரஸ்டீ எனபது  பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்ப்பில்லை. பி.சுசீலாவுடன் அமெரிக்கா போன்ற நாடுகளில் இசை நிகழ்ச்சியும் நடத்தி இருக்கிறார்.

 

  இவர்கள் தமிழ், தெலுங்கு, கன்னட மொழிகளில்  இணைந்து பாடி இருக்கிறார்கள்.
   
   பி.சுசீலாவும் ஜமுனா ராணியும் இணைந்து பாடிய பாடல்கள் என்றால் முதன் முதலில் நினைவுக்கு வருவது "புன்னகை மன்னன் பூவிழி கண்ணன்" பாடல் தான். அவ்வளவு பாப்புலர் அந்த பாடல் என்றால் மிகை இல்லை.




என்னிடம் இருக்கும் தகவல்களின் படி  இவர்கள்   இணைந்து பாடிய முதல் பாடல் கே.வி.மகாதேவன் இசையில் வெளிவந்த பொம்மை கல்யாணம் படத்தில் இடம் பெற்ற "நில்லு நில்லு மேகமே" பாடல் தான். இத்திரைப்படம் வெளியான வருடம் 1958 ஆகும். இவர்கள் இருவரும் ஐம்பதுகளின் ஆரம்பத்திலேயே அறிமுகமாகி விட்டதால்,  இதற்கு முன்னாலேயே இணைந்து பாடி இருக்க வாய்ப்பு இருக்கிறது.


 பலே பாண்டியா படத்தில் கவிஞர் கண்ணதாசனின் ஈடு செய்ய முடியாத வரிகளில் "அத்திக்காய் காய் காய் ஆலங்காய் வெண்ணிலவே" பாடலையும் TMS, PBS. பி.சுசீலா, ஜமுனாராணி இணைந்து அசத்தி இருப்பார்கள். காலத்தால் அழியாத பாடல்களில் இதுவும் ஓன்று.



இரு கதாநாயகிகளும், ஒரு கதாநாயகனும் நடிக்கும் முக்கோண காதல் கதைகளில் மூவரின் நிலைமையையும் சொல்லும் சோக காதல் பாடல்கள் இடம் பெறுவதுண்டு. அப்படி ஒரு காதல் பாடல் தான் மன்னாதி மன்னன் படத்தில் பி.பி.எஸ், பி.சுசீலா, ஜமுனாராணி பாடிய "நீயோ நானோ யார் நிலவே" என்ற பாடல். பத்மினிக்காக பி.சுசீலாவும், அஞ்சலி தேவிக்காக ஜமுனா ராணியும் பாடிய பாடல் அவ்வளவு அருமையாக இருக்கும். கேட்காதவர்கள் ஒரு முறையாவது கேட்டு ரசியுங்கள்.



அதே போல் சித்ராங்கி படத்திலும் "நெஞ்சினிலே நினைவு முகம்"  என்ற பாடலும் முக்கோண காதலை சொல்லும் அழகான பாடல்.


A.M.ராஜா இசை அமைத்த மாபெரும்க வெற்றிப்படமான ல்யாண பரிசு படத்தில் " அக்காவுக்கு வளைகாப்பு அத்தான் முகத்திலே புன்சிரிப்பு" பாடலும் இனிமையான பாடல்.



T.G.லிங்கப்பா இசை அமைத்து பெரும் வெற்றி பெற்ற "சபாஷ் மீனா" படத்தில்  இடம் பெற்ற "ஆணாக பிறந்ததெல்லாம் அழகென்று தெரிந்த பின்னும்" என்ற பாடலும் பி.சுசீலா மற்றும் ஜமுனாராணி குரல்களில் ஒலித்த இளமையான பாடல்.



             இரு கோடுகள் படம்  தெலுங்கில் "Collector Janaki" என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. அதில் புன்னகை மன்னன் பூவிழி கண்ணன் பாடல் "Neevannadi Nenanukkunnadi" என ஒலித்தது. சௌகாரின் வேடத்தில் ஜமுனா நடித்திருந்தார்.


1987-இல் வெளிவந்த நாயகன் படத்தில் இளையராஜா இசையில் "நான் சிரித்தால் தீபாவளி"  என்ற பாடலை எம்.எஸ்.ராஜேஸ்வரியும். ஜமுனாராணியும் இணைந்து பாடி இருந்தார்கள். அதே பாடலை "Naa Navve Deepavali" என தெலுங்கில் பி.சுசீலாவும். ஜமுனாராணியும் இணைந்து பாடினர்.



YearLanguageMovieSong
1958Tamilsabaash meenaaanaaga piranthathellam
1958Tamilbommai kalyanamnillu nillu megame
1958TeluguBommala pellininne ninne megama
1959Tamilamudhavallikanngal rendum vandu
1959Tamilbhagya devathai illara poonkaavil
1959Tamilkalyaana parisumangayar mugathile konji
1959Tamilponnu vilayum boomiangila nagarigam
1959Telugusabhash pillaaadala maggala

1960Tamilmannadhi mannanneeyo naano yaar nilave
1960Tamilontru pattal undu vazhvuenga vazhkayile ulla
1960Tamilpadikkatha medhaiinba malargal poothu 
1960Kannadasahasra sirachedaanuraagake kannilyenulla
1962Tamilazhagu nilaAttam AdAthO
1962Tamilbhale pandiyaAthikkai kai kai alankai
1962Tamilkavithapaarkka paarkka 
1963Tamilaasai alaigalalli alli kodutha
1963Tamilkadavulai kandenanna anna sughamthana 
1963Tamilpenn manampaar paar
1964TamilchithranginenjinilE nilavu mugham
1964Telugunavaraathripremaku - aantakshari song
1965Tamilvaazhkai vaazhvatharkeaada kaanbadhu kanniyar
1965Telugukanne manasuluammalaganna
1965Telugukanne manasulusukkalaanti sinnodu
1968Tamildelli mapillaimalai mudiyil pani azhagu
1968Tamiledhir neechalSethi ketto sethi ketto
1968Tamiliru kodugalnavraathriyil kolu
1969TamilniraikudamazhaikintrEn Deva
1972Telugucollector janakineevannadi neevanukunnadi
1987TelugunaayakuduNaa navve deepavali
0Teluguunknownnenu paaduthu unde



Thanks...


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக