பின்பற்றுபவர்கள்

சனி, 1 ஏப்ரல், 2017

சங்கர் கணேஷ் இசையில் பி.சுசீலா பாடிய பாடல்கள் - 6



சங்கர் கணேஷ் அவர்களுடன் பி.சுசீலாவின் இசை பயணம்

      1976 -இல் Christian Songs என்ற ரிக்கார்ட் சங்கர் கணேஷ் இசையில் வெளிவந்தது. அதில் இரு பாடல்களை பி.சுசீலா பாடி இருந்தார். கிறிஸ்தவர்கள் மத்தியில் “நான் காணாமல் போன ஆடல்லவா” என்ற பாடல் மிகவும் பிரபலம் ஆனது.


                                      " நான் காணமல் போன ஆடல்லவா "

    1976-இல் சங்கர் கணேஷ் இசை அமைத்த இன்ஸ்பெக்டர் மனைவி. கடமை நெஞ்சம். கணவன் ஒரு குழந்தை. கராத்தே கமலா, மனமார வாழ்த்துங்கள், நீ ஒரு மகாராணி. ஒரே தந்தை. தாயில்லா குழந்தை போன்ற படங்களில் பி.சுசீலா பாடி இருந்தார். இன்ஸ்பெக்டர் மனைவி படத்தில் ஜேசுதாசுடன் பாடிய “இளமையில் இணைவது என்ன சுகம்”, எஸ்.பி.பியுடன்  பாடிய “நான் ராதை தான்” பாடல்கள் குறிப்பிட படத்தக்கவை. “பூம் பூம் மாட்டுக்காரன்” பாடல் சாயலில் “ஜப்பான் நாட்டு கப்பலேறி” பாடல் அமைந்தது. கடமை நெஞ்சம் படத்தில் “nighu queenஎன்ற ஒரு க்ளப் டான்ஸ் பாடல் ஒன்றை வித்தியாசமாக பாடி இருந்தார் பி.சுசீலா அவர்கள். கணவன் ஒரு கைக்குழந்தை படத்தில் “சின்ன பொண்ண இருக்கையிலே ஆனா” என்றார் பாடல் “அன்று ஊமை பெண்ணல்லோ” பாடலை நினைவு படுத்துகிறது. 
                     நான் ராதை தான் ..

    நீ ஒரு மகாராணி படத்தில் எஸ்.பி.பியுடன் இணைந்து பாடிய “அவள் ஒரு பச்சை குழந்தை பாடும்” பாடலும், ஜேசுதாசுடன் பாடிய  “நீ ஒரு மகாராணி” பாடலும் ஹிட் ஆனவை. ஒரு பிறந்த  நாள் விழா பாடலாக “பல்லாண்டு காலம் நீ வாழ வேண்டும்” என்ற பாடல் அமைந்தது. அந்த பாடல் காட்சியில்  வயது சங்கர் கணேஷ் சிறப்பு தோற்றத்தில் வருவது சிறப்பு என்றால், கணேஷ் இப்பாடலில் பி.சுசீலாவுடன் இணைந்து ஹம்மிங் செய்வது இன்னொரு சிறப்பு.  
                                          ( பல்லாண்டு காலம் நீ வாழ வேண்டும் )

   1977-இல் வெளிவந்த “ஆட்டுக்கார அலமேலு” திரைப்படம் சங்கர் கணேஷுக்கு பெரிய திருப்புமுனையாக அமைந்த திரைப்படம். எல்லா பாடல்களுமே ஹிட். கிராமிய இசையில் கலக்கு கலக்கு என்று கலக்கி இருப்பார்கள் சங்கர் கணேஷ் அவர்கள். “ஆத்துல மீன் பிடிச்சி
ஆண்டவனே உன்னை எண்ணி”, “பருத்தி எடுக்கையிலே என்ன பலநாளும் பாத்த மச்சான்”,. “தாகம் தீர்ந்ததடி அன்னமே” போன்ற கிராமிய பாடல்களுடன். “தேன் கூட நல்ல தேன்கூடு” .என்ற கமர்ஷியல் பாடலும் பெருமளவில் மக்களை சென்றடைந்தது. ஸ்ரீப்ரியாவுக்கு பி.சுசீலாவின் குரல் மிகவும் அருமையாக பொருந்தியது. அந்த தைரியமான கதாபாத்திரத்துக்கு ஏற்ற குரலாக கணீர் என பாடி இருப்பார் பி.சுசீலா அவர்கள்.
                  ( ஆத்துல மீன் பிடிச்சு ) 

       இவ்வருடம் சங்கர் கணேஷ் இசையில் வெளிவந்த ஆசை மனைவி, அன்று சிந்திய ரத்தம். நல்லதுக்கு காலமில்லை. பஞ்சாமிர்தம். ரகுபதி ராகவா ராஜாராம். ரவுடி ராக்கம்மா. சொர்க்கம் நரகம். உனக்கும் வாழ்வு வரும், உன்னை சுற்றும் உலகம் போன்ற படங்களில் பி.சுசீலா பாடி இருந்தார், தங்க தேரோடும் அழகினிலே ( ரகுபதி ராகவ ராஜாராம்), “வானிலவே வா நிலவே வழியில் ஒரு மேகம் இல்லை” ( பஞ்சாமிர்தம் ), பிருந்தாவனம் யமுனாநதி விளையாடினானே”. “இது நான் அறியாத மயக்கம் “ (அன்று சிந்திய ரத்தம்) “பூவும் போட்டும் இங்கே”, “மல்லு வேட்டி மடிச்சி கட்டும்”, “இரண்டு கிளிகள் சேர்ந்து நடத்தும்” ( சொர்க்கம் நரகம் ), “நன்றி சொல்ல வார்த்தை இல்லை கண்ணனே, “நான் மெதுவாக தொடுகின்ற போது” ( உனக்கும் வாழ்வு வரும் ) சீதாவை தேடி ஸ்ரீராமன் வந்தான் ( உன்னை சுற்றும் உலகம் ) போன்ற பாடல்கள் இனிமையான பாடல்கள்.
                   ( பிருந்தாவனம் யமுனா நதி )

       1978-ல் சங்கர் கணேஷ் இசை அமைத்த “தாய் மீது சத்தியம்”.  “அதை விட ரகசியம்”, “காமாட்சியின் கருணை”, “புண்ணிய பூமி”., “கை பிடித்தவள்”. இரவு மணி 12,  “பாவத்தின் சம்பளம்”. “புலி வருது புலி”. “சக்க போடு போடு ராஜா” போன்ற படங்களில் பி.சுசீலா பாடினார்.
தாய் மீது சத்தியம் தேவர் பிலிம்ஸ் தயாரித்த படம் என்பதால் எல்லா பாடல்களும் பி.சுசீலாவின் குரலிலேயே ஒலித்தன, “நேரம் வந்தாச்சு நல்ல யோகம் வந்தாச்சு”, “ பாபு பாபு பாபு இங்கே” ஆகிய பாடல்கள் ஹிட் ஆன பாடல்கள். “நீயும் நானும் இங்கு வாழும்  வாழ்க்கை” என்ற ஒரு கவ்வாலி ஸ்டைல் பாடலும் படத்தில் இடம் பெற்றது.
    

அதை விட ரகசியம் படத்தில் “எந்த கடை சேலை இந்த பொண்ணு உடல் மேல” என ஹாஸ்டலில் பெண்கள் ஆடிப்பாடும் பாடல் இடம் பெற்றது. “முதலில்  வந்தவள் தெய்வானை” என பி.சுசீலாவும், வாணியும் இணைந்து பாடிய பாடல் ஒன்று இனிமையாக இருக்கும். இதை தவிர “ஹரே கோபாலா ஸ்ரீஹரி மாதவா” என்ற பாடல் மிகவும் அருமையாக இருக்கும். பாவத்தின் சம்பளம் படத்தில் “அன்னை மேரி உன்னை அன்றி ஆறுதலை யார் தருவார்” என்ற கிறிஸ்தவ பக்தி பாடல் இடம் பெற்றது. மிகவும் அருமையான பாடல்.
                  ( ஹரே கோபால ஸ்ரீஹரி மாதவா )

     சிவாஜி வாணிஸ்ரீ நடித்த புண்ணிய பூமி படத்தில் “புகுந்த வீடு இனிமையான மல்லிகை பந்தல்” என்ற மங்களகரமான பாடல் இனிமையாக இருக்கும். அதை தவிர “அடி மஞ்சப்பட்டு வேப்பிலை குங்குமமிட்டு”  என மாரியம்மன் கோயில்திருவிழா பாடல் ஒன்றும் டி.எம்.எஸ்-பி.சுசீலா குரல்களில் வித்தியாசமாக ஒலித்தது.

                  ( புகுந்த வீடு இனிமையான மல்லிகை )

    1979-இல் சங்கர் கணேஷ் இசை அமைத்த “நீயா?”, “தாயில்லாமல் நானில்லை”, “நெஞ்சுக்கு நீதி”, “அடுக்கு மல்லி”. “மாம்பழத்து வண்டு”, “மேற்கே உதிக்கும் சூரியன்”, “பால்காரி”, “நீ சிரித்தால் நான் சிரிப்பேன்”  போன்ற படங்களில் பி.சுசீலா பாடினார். நீயா படம் சூப்பர் டூப்பர் ஹிட் படம். அப்படத்தில் பி.சுசீலா  பாடிய “நான் கட்டில் மேலே கண்டேன் வெண்ணிலா” பாடலும் “உன்னை எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பதில்லை” பாடலும் மிகவும் பிரபலம் ஆகின.


                  ( நான் கட்டிலே மேலே கண்டேன் )

    இவ்வருடம் கமல், ஸ்ரீதேவி நடிப்பில் “தாயில்லாமல் நானில்லை” படத்தை தயாரித்தனர் தேவர் பிலிம்ஸ். அதிலும் எல்லா பாடல்களுமே பி.சுசீலாவின் குரலிலியே ஒலித்தது. “வடிவேலன் மனசு வச்சான் பாடல் மிகவும் பிரபலம் ஆனது. ஒரு நாடகம் ( “அல்லி தர்பார்” ) பாடலாக டி.எம்.எஸ் பி.சுசீலா குரல்களில் ஒலித்தது. "சல் மோகன ரங்கா" என பி.சுசீலா பாடும் போதே குரல் களை கட்டி விடும். TMS. பி.சுசீலா இருவரும் கலக்கி இருப்பார்கள்.  “ஈனா மீனா எனது விழி மானா மீனா” பாடல் கொஞ்சம் வித்தியாசமான மயக்கும் பாடல்.
                  ( வடிவேலன் மனசு வச்சான் )
                   
  இவை தவிர “எனக்கொரு கதை சொல்லு கண்ணே” ( நெஞ்சுக்கு நீதி ), தாஜ்மஹாலும் ஏது ஒரு மும்தாஜ் இல்லாது (மாம்பழத்து வண்டு) கடவுள் தந்த கண்ணீருக்கு ( நீ சிரித்தால் நான் சிரிப்பேன்) போன்ற பாடல்கள் குறிப்பிட பட தகுந்தவை..
                  ( தாஜ்மஹாலும் ஏது ஒரு மும்தாஜ் )
   

      1980 –ஆம் வருடம் சங்கர் கணேஷ் இசை அமைத்த “நட்சத்திரம்”. “ “எதிர் வீட்டு ஜன்னல்”. “பணம் பெண் பாசம்” “ஒளி பிறந்தது”. “ காமன் பண்டிகை” “ புதிய தோரணங்கள்”. “ரசிகன்”, “சரோஜா”. “சிரிசிரி மாமா”. “நீர் நிலம் நெருப்பு”. “ஜம்பு”,. “காடு”, “சக்கரங்கள் நிற்பதில்லை” போல பல படங்களில் பி.சுசீலா பாடினார். நட்சத்திரம் படம் ஸ்ரீபிரியாவின் சொந்த படம். 1978-இல் தெலுங்கில் மாபெரும் வெற்றி பெற்ற “சிவரஞ்சனி” என்ற தெலுங்கு படத்தில் உரிமையை ஸ்ரீப்ரியா வாங்கி அதை தமிழில் தயாரித்தார். தெலுங்கில் அது ஒரு மியுசிகல் ஹிட். “ஜோருமீதுன்னாவு தும்மேதா” என்றார் பாடல் இப்போதும் கூட அடிக்கடி ரியாலிட்டி ஷோக்களில் பாடப்படும் பாடல். அதில் ஒன்றிரண்டு டியூன் தவிர மீதி எல்லா டியுன்களையும் சங்கர் கணேஷ் மாற்றினார்கள். தெலுங்கு பாடல்களின் தரத்துக்கு ஈடு கொடுக்கவில்லை இப்பாடல்கள் என்பது என் கருத்து. இப்படத்தில் “பொன்னாங்கண்ணி பூத்து வந்ததோ என்ற ஒரு பாடலை பாடினார் பி.சுசீலா அவர்கள்.
                  ( ஏன் இந்த மயக்கம் ஏனடி ராதா )

   இவ்வருடம் வந்த படங்களில் “எனக்கு பிடித்த ரோஜா பூவை” ( பணம் பகை பாசம் ), “ஏனிந்த மயக்கம் ஏனடி ராதா ( ஜம்பு )ஏரிக்கரை தோட்டத்திலே ஏழை வச்ச வாழக்கண்ணு” ( ஒளி பிறந்தது), ஆத்தங்கரையினிலே தென்னங்காத்து வரையினிலே ( எதிர் வீட்டு ஜன்னல் ), அன்போடும் பண்போடும் ( பணம் பெண் பாசம் ), சந்திர குலத்தவன் ( சிரிசிரி மாமா), ஓடுவது ஓடமல்ல ( சரோஜா) போன்ற பாடல்கள் குறிப்பிட பட தக்கது.

                                         ( அன்போடும் பண்போடும் )
                               
List of songs from 1976 to 1980

1976Tamilchristian songsen uyirinum
1976Tamilchristian songsNaan kaanamal pOna Adallava
1976Tamilinspector manaiviilamayin uravile
1976Tamilinspector manaivijapan naatu kappaleri oruthi
1976Tamilinspector manaivinaan radhai thaan
1976Tamilkadamai nenjamnight queen
1976Tamilkadamai nenjamthala thala meni
1976Tamilkanavan oru kuzhanthaichinnapponna irukkaiyile
1976Tamilkanavan oru kuzhanthaimanamaara vaazhthungal
1976Tamilkarate kamalathen aruvi adhil oru kuruvi
1976Tamilnee oru maharaniAval Oru PachaiKuzhanthai
1976Tamilnee oru maharaninee oru maharaani
1976Tamilnee oru maharanipallaandu kalam nee (SG hum)
1976Tamilore thanthaimaanikkath ther ontru
1976Tamilthaayilla kuzhanthaiidhu oru thiruppam
1976Tamilthaayilla kuzhanthainee oru
1976Tamilthaayilla kuzhanthaivellikkizhamai idhu 
1977Tamilaasai manaivimeenaksi kovil konda
1977Tamilaattukkaara alameluthEn koodu nalla thEn koodu
1977Tamilaattukkaara alameluathule meen pidikka 
1977Tamilaattukkaara alameludhaagam theernthathadi 
1977Tamilaattukkaara alameluparuthi edukkayile 
1977Tamilantru sinthiya rathamidhu naan ariyatha mayakkam
1977Tamilantru sinthiya rathamBrindavanam yamuna 
1977Tamilnallathukku kaalamillaiachacho parithabam
1977Tamilodi vilayadu thaththaOldellam goldu 
1977Tamilpanjamirthamvaannilavae vaa 
1977Tamilragupathi rakava rajaramthanga therodum azakinilE
1977Tamilrowdy rakkammaneenga urutti vittaal
1977Tamilrowdy rakkammavaraverpu varaverpu 
1977Tamilsorgam naragamirandu kiligal sErnthu 
1977Tamilsorgam naragammallu vEti madichi kattum
1977Tamilsorgam naragampoovum pottum ingE 
1977Tamilunakkum vaazhvu varumnantri solla 
1977Tamilunakkum vaazhvu varumnaan medhuvaaga 
1977Tamilunnai sutrum ulagamseethavai thEdi 
1977Tamilunnai sutrum ulagamseethavai thEdi(sad)
1978Tamiladhai vida rahasiyamentha kada selai
1978Tamiladhai vida rahasiyammudhalil vandhaval
1978Tamiladhai vida rahasiyamhare gopala srihari
1978Tamilidhu eppadi irukkuthinam thinam
1978Tamiliravu mani pannirenduvegam migunda kalayare
1978Tamilkai pidithavalIlam vayadhu vanthaal
1978Tamilkai pidithavalvaarungal vilayaaduvom
1978Tamilkamatchiyin karunaikannanukku thottil kattum
1978Tamilkamatchiyin karunainee ariyadhadenna
1978Tamilpaavathin sambalamannai mary unnai antri
1978Tamilpuli varuthu pulikonju mozhai vanji mayil kolam
1978Tamilpunniya bhoomimanja pattu vepillai
1978Tamilpunniya bhoomipugunda veedu
1978Tamilsakka podu podu rajakulirkalam nathiyoram
1978Tamilsakka podu podu rajamanaikka ther
1978Tamilthaai meedhu sathiyambabu babu babu enge
1978Tamilthaai meedhu sathiyamneram vanthachu nalla yogham
1979Tamiladukku mallikaakaye neeti muzhakku
1979Tamiladukku mallimunnaalil nadanthadhu 
1979Tamilmaampazhathu vandutajmahaalum edhu
1979Tamilmearke uthikkum sooriyanmaharaani theerile maharaajan
1979Tamilnee siriththaal naan sirippenkadavul thantha kannirukku
1979Tamilneeyanaan kattil mele kanden
1979Tamilneeyaunai ethanai murai
1979Tamilnenjukku neethienakkoru kadhai
1979Tamilnenjukku neethipoovattam vanna therattam
1979Tamilpaalkkaariariyaatha sirupillai
1979Tamilthaayillaamal naanillaikadal ellam kondal
1979Tamilthaayillaamal naanillaiEenaa mEna unadhu mozhi 
1979Tamilthaayillaamal naanillaivadivElan manasu vachaan
1979Tamilthaayillaamal naanillaivanakkam vanakkam
1980Tamilchakkarangal nirapadhillaiun paadal paadhi en paadal
1980Tamiledhir veetu jannalaathankarayile
1980Tamilidhaya rojanathikkarai pazha thottam
1980Tamilidhaya rojaindira villinil
1980TamiljambuEnindha mayakkam Enadi 
1980Tamilkaaduaruviyile kuruvi
1980Tamilkaaman pandigaimohana ponchitiram
1980TamilmaanavankaalayilE sEvalaippOl 
1980Tamilnatchathiramponnankanni poothu 
1980Tamilnatchathiramradha krishna gokulabala
1980Tamilneer nilam neruppukaiyagal pottukkari (kannula)
1980Tamiloli piranthathuyerikkarai thottathile
1980Tamilpanam paghai paasamenakku piditha roja 
1980Tamilpanam penn paasamanbodum panbodum 
1980Tamilpudhiya thoranangalAthai maghan muthazhagan
1980Tamilrasiganazhagu sirikkuthu ilamai
1980Tamilsarojaaaduvathu odamillai(happy)
1980Tamilsarojaaaduvathu odamillai(sad)
1980Tamilsiri siri mamachandira kulathavan


தொடரும்... 

2 கருத்துகள்:

  1. அருமையான வலைத்தளம்
    உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  2. புண்ணிய பூமி படத்திற்கு இசையமைத்தவர் மெல்லிசை மன்னர்

    பதிலளிநீக்கு