இத்தொடரில் 1976-இல் இருந்து 1979-வரை எஸ்.பி.பி - பி.சுசீலா இணைந்து பாடிய பாடல்களை பார்க்கலாம்..
1976-ஆம் வருடம் எஸ்.பி.பி- பி.சுசீலா இணைந்து பாடிய பாடல்கள் :
எம்.எஸ்.வி இசை இமைத்த மேயர் மீனாட்சி படத்தில் எஸ்.பி.பி – பி.சுசீலா
குரல்களில் இடம் பெற்ற இன்னொரு டூயட் “ கண்டேன் கல்யாண பெண் போன்ற மேகம்”
எம்.எஸ்.வி இசை அமைத்து கமல்ஹாசன் நடித்த “மன்மத லீலை” படத்திலும் “சுகம்தானா சொல்லு கண்ணே” என்ற அழகான் டூயட்டை பி.சுசீலாவும் எஸ்.பி.பியும் இணைந்து
பாடினார்கள். இதே பாடல் தெலுங்கிலும் “kusalamena kurradana” என இதே
குரல்களில் ஒலித்தது.
கே.வி.எம் இசையில் கமல் நடித்த சத்தியம் படத்தில் “கல்யாண கோயிலின்தெய்வீக கலசம்” பாடலும் பிரபலமான பாடலில் ஓன்று. அதே திரைப்படத்தில் “அழகாம் கொடி சிறிது” என்ற இனிமையான பாடலும் இதே குரல்களில் ஒலித்தது.
கே.வி.எம் இசை அமைத்து சிவாஜி நடிப்பில் வெளியான “உத்தமன்” படத்திலும்
“ படகு படகு ஆசை படகு” என கவ்வாலி ஸ்டைல் பாடலை பாடினர் எஸ்.பி.பி மற்றும்
பி.சுசீலா அவர்கள்.
சங்கர் கணேஷ் இசை அமைத்த “நீ ஒரு மகாராணி” படத்தில் “அவள் ஒரு பச்சைக்குழந்தை பாடும் “ என்ற பாடலும் மக்கள் மனதை கவர்ந்த பாடலே..
இவை தவிர வி.குமார் இசையில் “நினைத்ததை முடிப்பது கிடைத்ததை
ரசிப்பது” ( ஆயிரத்தில் ஒருத்தி)., சங்கர் கணேஷ் இசையில் “நான் ராதை தான் நீ கண்ணன்
தான்” ( இன்ஸ்பெக்டர் மனைவி), இளையராஜா இசையில் “ வாடியம்மா பொன்மகளே ”
என்ற காமடி பாடலும் இவர்கள் குரலில் ஒலித்த மறக்க முடியாத பாடல்கள்.
1977-இல் எஸ்.பி.பி- பி.சுசீலா இணைந்து பாடிய பாடல்கள் :
வி.குமார் இசையில் நடிகை லக்ஷ்மியும் அவர் கணவர் மோகனும் இணைந்து
நடித்த “தூண்டில் மீன்” படத்தில் இடம் பெற்ற “வாழ்வில் சௌபாக்கியம் வந்தது”
என்ற பாடல் குறிப்பிட படத்தக்க பாடல்.
சங்கர் கணேஷ் இசை அமைத்த “ரகுபதி ராகவ ராஜாராம்”
படத்தில் இடம் பெற்ற “தங்க
தேரோடும் அழகினிலே” என்ற பாடல் பிரபலமான பாடல்.
எம்.எஸ்.சி இசை அமைத்து விஜயகுமார், சுஜாதா நடித்த “ என்ன தவம் செய்தேன் “ படத்தில் “ஏதோ ஒரு நதியில் நான்
இறங்குவதை போலே” என்ற பாடலும் இனிமையான பாடலே.
கே.வி.மகாதேவன் இசையில் முத்துராமன், சாரதா இணைந்து நடித்த “மழைமேகம்”
படத்தில் “ஆகாய கங்கை
ஓன்று மண்ணில் வந்தது” என்ற பாடலையும் மறக்க முடியாது.
இளையராஜா இசையில் சிவகுமார் நடித்த “சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு” என்ற
படத்தில் இடம் பெற்ற “ஒரு
காதல் தேவதை இரு கண்கள் பூமழை” பாடலும் சிறந்த பாடல்களில் ஓன்று.
இவை தவிர “இது
நான் அறியாத மயக்கம்” (அன்று
சிந்திய ரத்தம்), “கண்ணன்
எங்கே கண்ணன் எங்கே ராதை மனம் ஏங்குதம்மா” ( மதுர கீதம்), “பச்சைக்கிளி அங்கம்மா
இச்சைக்கிளி இங்கம்மா” ( ஒருவனுக்கு ஒருத்தி). “எங்கேயோ சில மணிகள்”, “பால் பொங்குது பால்” (
சொன்னதை செய்வேன்). “ஒரு புஷ்பம் மலர்ந்தது” ( பருவம் ஒரு பாடம்) போன்ற
பாடல்கள் குறிப்பிட படத்தக்கவை.
1978-ஆம் ஆண்டு எஸ்.பி.பி - பி.சுசீலா இணைந்து பாடிய பாடல்கள்
இளையராஜா இசை அமைத்து சிவகுமார்-மீரா-சுமித்ரா நடிப்பில் உருவான சிட்டுக்குருவி
படத்தில் இடம் பெற்ற “என் கண்மணி உன் காதலி” என்ற பாடல் இன்று வரை ராஜா
ரசிகர்களால் ரசிக்கப்படும் ஒரு பாடல். இரு ஆண்களும், இரு பெண்களும் பாடினார்களோ என்று
நினைக்கும் வண்ணம் வித்தியாசமான மிக்ஸிங் கூட இப்பாடலின் வெற்றிக்கு ஒரு காரணம்.
சத்யம் இசை நடித்த அமைத்து ஜெய்ஷங்கர், தீபா நடித்த “முடிசூடா மன்னன் “படத்தில் எஸ்.பி.பி-பி.சுசீலா
பாடிய “தொடங்கும் தொடரும் புது இரவு” என்ற பாடல் ஹிட் ஆனது. அதே படத்தில் “நான்
சொன்னால் போதும்” என்ற டூயட் கூட இதே குரல்களில் இடம் பெற்றது.
எம்.எஸ்.வி இசை அமைத்து சிவகுமார் – லக்ஷ்மி நடிப்பில் வெளிவந்த “சீர்வரிசை”
படத்தில் “கண்ணனை நினைக்காத நாளில்லையே”. “பஞ்சாங்கம் பார்த்து சொல்லவோ” ஆகிய
பாடலகள் அடிக்கடி கேட்க தூண்டும் பாடல்கள்.
இளையராஜா இசையில் சிவகுமார் – சுமித்ரா நடிப்பில் வெளிவந்த கண்ணன் ஒரு
கைக்குழந்தை படத்தில் இடம் பெற்ற “மேகமே தூதாக வா” என்ற பாடலும் ஹிட் பாடல்களில் ஓன்று.
இளையராஜா இசை அமைத்து முத்துராமன் லக்ஷ்மி நடிப்பில் வெளி வந்த
அச்சாணி படத்தில் இடம் பெற்ற “தாலாட்டு பிள்ளை ஒன்றை தாலாட்டு” பாடலும் குறிப்பட
தக்க பாடல்களில் ஓன்று.. "தாலாட்டு பிள்ளை என்னை" பாடல் சோகப்பாடலாகவும் இதே குரல்களில் ஒலித்தது.
இவை தவிர ராமானுஜம் இசையில் “சிரித்தாள் அந்த சிரிப்பில்”
( ஆனந்த பைரவி ). வி.குமார் இசையில் “இரவில் பார்த்தேன் இரண்டு
நிலவு” ( கண்ணாமூச்சி ), எம்.எஸ்.வி
இசையில் “வந்தாளே ஒரு மகராசி”
( சங்கர் சலீம் சைமன்). “ஜாய்ஃபுல்
சிங்கப்பூர், கலர்ஃபுல் மலேஷியா” ( வருவான் வடிவேலன்). விஜயபாஸ்கர் இசையில் “அடி கண்மணி வண்ண பைங்கிளி”
( அவள் ஒரு அதிசயம்), சங்கர் கணேஷ் இசையில் “வாருங்கள் விளையாடுவோம்” ( கை பிடித்தவள்)
குளிர்காலம் நதியோரம் (
சக்க போடு போடு ராஜா) கண்ணனுக்கு தொட்டில் கட்டும் ( காமாட்சியின் கருணை), ரமேஷ்
நாயுடு இசையில் “எனது
விலாசம் மன்மத லோகம்” ( மேள தாளங்கள் ). சக்ரவர்த்தி இசையில் “உன் கண்களிலோ கனிகள்”,
(
வாழ்க்கை அலைகள் ) , விஜயா கிருஷ்ணமூர்த்தி இசையில் “காதல் அலைகள் மேலே” ( ஜகன்
மோகினி) போன்ற பாடல்கள் குறிப்பிட படத்தக்கவை ..
1979-ஆம் வருடம் பி.சுசீலா – எஸ்.பி.பி இணைந்து பாடிய பாடல்கள்
இவ்வருடம் மிகப்பெரிய மியுசிகல் ஹிட் என்றால் அது “நினைத்தாலே இனிக்கும்”
பட பாடல்கள் தான். கொஞ்சம் சோர்ந்திருந்த எம்.எஸ்.வி எடுத்த விஸ்வரூபம் தான்
நினைத்தாலே இனிக்கும் பட பாடல்கள். எம்.எஸ்.வியுடன் இணைந்து எஸ்.பி.பியும் எடுத்த
இன்னொரு விஸ்வரூபம் அது என்றாலும் மிகை இல்லை. அதில் “யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்ற பாடல்
எஸ்.பி.பி- பி.சுசீலா குரல்களில் ஹிட் ஆனது.
ராஜன் நாகேந்திரா இசையில் வெளிவந்த “வீட்டுக்கு வீடு வாசப்படி”
படத்தில் இடம் பெற்ற “வீட்டுக்கு வீடு வாசப்படி” என்ற பாடல் அந்த கால கட்டத்தில்
மிக பெரிய ஹிட். இதே பாடல் தெலுங்கிலும் “intinti Ramayanam” என
ஒலித்தது..
கே.வி.மகாதேவன் இசையில் சிவகுமார் – ஷோபா நடிப்பில் வெளிவந்து மாபெரும்
வெற்றியை பெற்ற படம் தான் “ஏணிப்படிகள்”. இதில் இடம் பெற்ற “ஏனுங்க மாப்பிள்ளேஎன்ன நெனப்பு” பாடலும் மிக பெரிய ஹிட். இதில் இடம் பெற்ற “பூந்தேனில் கலந்து”
பாடலும் எஸ்.பி.யின் குரலிலும் பி.சுசீலாவின் குரலிலும் தனித்தனியாக ஒலித்தது.
இப்படம் தெலுங்கில் “Seethammalakshmi” என்ற பெயரில் பெரும் வெற்றியை பெற்றது.
கே.ஜே.ஜாய் இசை அமைப்பில் ஸ்ரீகாந்த்-ஸ்ரீப்ரியா நடிப்பில் வெளியான “யாருக்கு யார் காவல்”
திரைப்படத்தில் இடம் பெற்ற “சிப்பியில்
உள்ளே முத்தாடும் சேதி” பாடலும் பிரபலமான பாடலில் ஓன்று. கே.ஜே.ஜாய்
மலையாளத்தில் பெரிய இசை அமைப்பாளர். அவர் தமிழில் இசை அமைத்த ஒரு சில படங்களில்
இதுவும் ஓன்று.
சங்கர் கணேஷ் இசை அமைத்த நீயா படத்தில் “நான் கட்டில் மேலே கண்டேன்வெண்ணிலா”. “ உன்னை எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பதில்லை” ஆகிய இரு டூயட்டுகளும்
எஸ்.பி.பி-பி.சுசீலா குரல்களில் ஒலித்தன.
முன்னேறி வந்து கொண்டிருந்த இளையராஜா அப்போது பெரிய தயாரிப்பு
நிறுவனமான தேவர் பிலிம்ஸுக்கு இசை அமைத்த முதல் படம் “அன்னை ஓர் ஆலயம்”. ரஜினி ,
ஸ்ரீபிரியா நடித்த இப்படத்தில் இடம் பெற்ற “நதியோரம் நாணல் ஓன்று”, “அப்பனே அப்பனே பிள்ளையாரப்பனே” ஆகிய இரு அருமையான டூயட்டுகள்
ஹிட் பாடல்களாக அமைந்தன. அதே போல்
இளையராஜா இசை அமைப்பில் வெளிவந்த ‘நான் வாழ வைப்பேன்” படத்திலும் “திருத்தேரில்வரும் சிலையோ” பாடல் ஹிட் ஆனது. அதே போல் பட்டாக்கத்தி பைரவன் படத்தில் இடம் பெற்ற
“வருவாய் கண்ணா நீராட” பாடலும் குறிப்பிட பட தகுந்த பாடல்.
இவை தவிர “சொர்கத்திலே நாம் அடி எடுத்தோம்” ( ஒரே வானம் ஒரே பூமி),
“எனக்கொரு கதை சொல்லு கண்ணே” (நெஞ்சுக்கு நீதி), கட்டழகை கொஞ்ச கொஞ்ச ( நீச்சல்
குளம்), “முத்து முத்து புன்னகையே” ( ஒரு கோயில் இரு தீபங்கள் ), ஜும்மென்று நாதம் மற்றும்
உள்ளத்து அன்பு உரைக்கின்ற
பண்பு ( சிரிக்கும் சலங்கை ), “கண்ணா காதல் நதி ஓன்று கரைகளை
மீறுது” ( கேளுங்கள் கொடுக்கப்படும் ), கடவுள் தந்த கண் இருக்கு (
நீ சிரித்தால் நான் சிரிப்பேன்), சுகமா தலைவா சுவைநீர் தரவா
( நினைவில் ஒரு மலர் ), மகாராணி தேரிலே
மகாராஜன் ( மேற்கே உதிக்கும் சூரியன்), அந்தி மல்லி செண்டாட (நான் நன்றி சொல்வேன்
), “ கம்பன் கையாண்ட தமிழ்” ( நான் ஒரு கை பார்க்கிறேன் ), “ ரம்யம் ராகம் அங்கம்
நாட்டியம் “ ( கந்தர்வ கன்னி ), காக்கையே நீட்டி முழக்கு ( அடுக்குமல்லி ) போல
நிறைய பாடல்களை பி.சுசீலா, எஸ்.பி.பி இணைந்து பாடினார்கள்.
( ஜம்மென்று நாதம் )
எஸ்.பி.பி இக்கால கட்டத்தில் கிட்டத்தட்ட முதல் இடத்தை பிடித்து
விட்டார் என்றே சொல்ல வேண்டும். 1966-இல் அறிமுகம் ஆகி, 1969-இல் தமிழில் பாட துவங்கி படிப்படியாக முன்னேறி அடுத்த நிலைக்கு செல்ல
தன்னை தயார் படுத்திக்கொண்டார் என்றே சொல்ல வேண்டும். சில எம்.ஜி.ஆர் பட பாடல்கள்,
சில சிவாஜி பாடலகள் கிடைத்தன என்றாலும் அவர் அதிகமாக ரெண்டாம் நிலை
கதாநாயகர்களுக்கே பாடி இருப்பது புரிகிறது. எண்பதுகளில் அவரின் முழுமையான
ஆளுகைக்கு எழுபதுகளின் பயிற்சி அவருக்கு கை கொடுத்தது என்ற சொல்ல வேண்டும்.
இந்த தொடரை எழுத துவங்கும் போது எஸ்.பி.பி - பி.சுசீலா ஜோடி எழுபதுகளில் முடிவு வரை அங்கொன்றும் இங்கொன்றுமாக 50 பாடல்கள் வரை பாடி இருக்கலாம் என நினைத்தேன். தொகுத்த போது எழுபதுகளின் முடிவில் கிட்டத்தட்ட 150 பாடல்களுக்கு மேல் பாடி இருப்பது ஆச்சரியமாக இருந்தது. அதிலும் பெரும்பாலானவை அருமையான பாடலகள். இவற்றில் பெரும்பாலான பாடல்களை மீடியா போதிய அளவு ஒளிபரப்புவதே இல்லை என்றே கூறலாம். எண்பதுகளின் பாடல்களை ஊக்குவிக்கும் ரெடியோயோக்கள் இப்பாடல்கள் மேலும் கொஞ்சம் கவனம் செலுத்த வேண்டும் என்பது என் வேண்டுகோள்..
( தொடரும் )
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக